கம்யூனிஸ்டுகளாய் விவாதிக்க-3

நேற்றைய விவாதம் கற்று தந்த பாடத்திலிருந்து தொடர்ச்சியாக....

விஞ்ஞான சோசலிசம்: கோட்பாட்டு வளர்ச்சியும் புரட்சிகர நடைமுறைகளும்

இந்தக் கட்டுரை மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் அதன் தற்காலச் சவால்கள் குறித்து விரிவாக விளக்குகிறது. உற்பத்தி சாதனங்களைச் சமூகவுடைமையாக்குதல் மற்றும் முன்னேறிய நாடுகளில் மட்டுமே புரட்சி சாத்தியம் என்ற மார்க்சின் ஆரம்பகாலக் கருத்துகளைத் தாண்டி, லெனின் தனி ஒரு நாட்டிலும் புரட்சி சாத்தியம் என்பதைப் பறைசாற்றியதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய சூழலில் கம்யூனிச இயக்கங்களில் காணப்படும் திருத்தல்வாதம், குறுங்குழுவாதம் மற்றும் சுயவிமர்சனமின்மை போன்ற பலவீனங்களைச் சாடும் ஆசிரியர், இவை புரட்சிகரப் பாதையைச் சிதைப்பதாகக் கவலை தெரிவிக்கிறார். ஸ்டாலின் வலியுறுத்திய நேர்மையான சுயவிமர்சனத்தின் அவசியத்தை முன்வைத்து, இந்தியச் சூழலில் வெறும் முழக்கங்களாக இல்லாமல் உண்மையான புரட்சிகரக் கட்சியை உருவாக்க வேண்டியதன் தேவையை இப்பாடம் வலியுறுத்துகிறது. இறுதியில், உலகளாவிய சோசலிச முகாம்களின் வீழ்ச்சியையும் சீனாவின் தற்போதைய நிலைப்பாட்டையும் விமர்சிக்கும் இக்கட்டுரை, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் மற்றும் உண்மையான மார்க்சிய இலக்கை நோக்கி நகர்வதே தீர்வாகும் என முடிக்கிறது.

சற்று இதனை பற்றி புரிந்துக் கொள்ள முயலுவோம்.

இந்த கட்டுரையை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

விஞ்ஞான சோசலிச சமூகத்தின்‌ அரசியல்‌, பொருளாதாரம்‌ ஆகியவை பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தையும்‌ சோசலிசப்‌ புரட்சி நடைபெறவிருக்கும்‌ சாத்தியமுள்ள நாடுகள்‌ பற்றிய கருதுகோள்‌களையும்‌ மார்க்சும்‌ ஏங்கெல்சும்‌ விளக்கினர்‌.

பல்வேறுவகைப்பட்ட சோசலிசங்கள்‌ பற்றிய, கருத்துகள்‌ நிலவிய-சூழலில்‌, பாட்டாளி வர்க்க சோசலிசம்‌ பற்றிய கருத்தை நிறுவி, சோசலிசம்‌ என்பது :பொதுவுடைமைக்கு மாறிச்‌செல்லும்‌ இடைக்கட்டம்‌ என்றும்‌ பொதுவுடைமையின்‌ முதல்‌கட்டம்‌ என்றும்‌ விளக்கியதே மார்க்சின்‌ பங்களிப்பில்‌ முதன்மை வாய்ந்ததாகும்‌. 1845 முதற்‌ கொண்டு வெளிவந்த மார்க்சியப்‌ படைப்புகளில்‌ காணக்‌கிடைக்கும்‌ குறிப்புகளை வைத்து பின்வருமாறு தொகுக்கலாம்‌.

சோசலிசக்‌ கோட்பாட்டு உருவாக்கம்‌


1.
பொருளாதாரம்

அ) உற்பத்தி சாதனங்களின்‌ சமூகவுடைமை, இவற்‌றின்‌ மீதான தனியுடைமையை ஒழித்தல்‌.மூலதன இயல்பிலிருந்து இவற்றை விடுவித்தல்‌.

ஆ) திறமைக்கு ஏற்ப உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற‌ ஊதியம்‌. இதனால்‌ சமத்துவமற்ற நிலை ஒழிக்கப்பட்டு சமத்துவ நிலை தொடரும்

2. அரசியல்‌

அ) வர்க்கங்கள்‌ நீடிப்பதால்‌ அரசு தேவைப்‌படுகிறது. இதன்‌ வடிவம்‌ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்‌.

ஆ) புரட்சிக்குப்பின்‌ அரசை ஒழிக்க வேண்டும்‌ என்பது அராஜக அபத்தம்‌. முதலாளி வர்க்கஎதிரிகளை அமுக்கி வைக்க பாட்டாளி வர்க்க அரசு இல்லையெனில்‌ மொத்த வெற்றியுமேதோல்வியில்‌ போய்‌ முடியும்‌.

3. கருதுகோள்‌

இத்தகைய சோசலிசப்புரட்சி, மிகவும்‌ முன்னேறிய நாடுகளில்‌--குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி , பிரான்சு ஆகியவற்றில்‌--ஏற்படும்‌. முன்னேறிய நாடுகள்‌ அனைத்தும்‌ ஒரே நேரத்தில்‌ தாக்கப்படலாம்‌. ஒரு தனி நாட்டில்‌ சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை. - மார்க்சியக்‌ கோட்பாடு உருவாக்கமும்‌ கருதுகோளும்‌ உதித்த சூழல்‌ முக்கியமானது. முதலாளிகட்கு இடையில்‌ சுதந்திரமான போட்டி இருந்த காலம்‌.

19ஆம்‌ நூற்றாண்டு இறுதி முதல்‌ உள்ள இந்த நிலைகளை ஆராய்ந்து இந்த சகாப்தத்திலும்‌ "சோசலிசப்புரட்சி சாத்தியம்‌ என லெனின்‌ கருதுககோளை உருவாக்கினார்‌. போட்டி என்பது இப்போது முதிலாளிகட்கு இடையில்‌ இல்லாமல்‌ ஏகபோகங்களுக்கு இடையிலானதாக மாறிவிட்டது என்றும்‌ உலகநாடுகள்‌ உலகப்பொருளாதாரச்‌ சங்கிலியின்‌ கண்ணிகளாக மாறி, சமனற்ற வளர்ச்சி நிலையில்‌ உள்ளன. என்றும்‌ லெனின்‌ முடிவுகண்டார்‌. இந்தப்‌ பொதுவான ” அரசியல்‌ பொருளாதார சூழலில்‌ சோசலிசப்‌ புரட்சியின்‌ சாத்தியம்‌ குறித்து லெனின்‌ தம்‌ கருதுகோள்களை முன்‌ வைத்தார்‌.

அவை:1. முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான்‌ சோசலிசப்புரட்சி ஏற்படும்‌ என்பதில்லை. பின்னடைந்த நாடுகவிலும்‌-பலவீனமான கண்ணியைப்‌ பொறுத்து ஏற்படலாம்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர்ச்சி அடையாமல்‌ முதலாளி- தொழிலாளி என்று சமூதசக்திகள்‌ (துல்லியமாகஅமையாமல்‌ இருப்பினும்‌) புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப்‌ புரட்சியின்‌ ஊடே சோசலிசப்‌ புரட்சி சாத்தியமாகும்‌.

2. வெவ்வேறு நாட்டிலும்‌ வெவ்வேறு காலங்களிலும்‌ சோசலிசப்புரட்சி சாத்தியம்‌. உலகில்‌ முழுமையும்‌ அல்லது ஒரு சில நாடுகளில்‌ முழுமையும்ஒரே நேரத்தில்‌ சோசலிசப்‌ புரட்சி நடந்தாக வேண்டியதில்லை. தனி ஒரு நாட்டிலும்‌ சோசலிசப்‌ புரட்சி சாத்தியம்‌. இந்த மார்க்சிய -லெனினியக்‌ கருதுகோள்கள்‌, இதற்கு முந்தைய மார்க்சியக்‌ கருதுகோள்களை நிராகரித்து அல்ல முன்னேறிய தன்மையுடையது... இந்த நிராகரிப்பின்றி வளர்ச்சி இல்லை. சோசலிசம்‌ குறித்த மார்க்சியக்‌ கோட்பாடுகளை நிராகரிக்க முயன்ற முதலாளியஅறிவாளிகள்‌முன்னிலையில்‌, மார்க்சியக்‌ கருதுகோள்‌களை வளர்சியடைந்த விஞ்ஞான சோசலிசக்‌ கோட்பாடாக லெனின்‌ உயர்த்திப்பிடித்தார்‌. இவை ஏகாதிபத்தியமும் உலக‌ சோசலிசப்‌ புரட்சிகளும்‌ கொண்ட லெனினிய சகாப்தத்தின்‌ கருதுகோள்களாகும்‌. (சாரம் முனைவர் கோ.கேசவனின் சோசலிச வீழ்ச்சி முன்னுரையிலிருந்து).

இந்த மார்க்சிய லெனினியக்‌ கருதுகோள்கள்‌ இருபதாம்‌ நூற்றாண்டில்‌ நிரூபிக்கப்பட்டு, அரசியல்‌ யதார்த்தமாயின . சோசலிசத்தை வரலாற்றுப்பிழை என நிரூபிக்க முயன்‌ற முதலாளிய அறிவாளிகள்‌ , மீண்டும்‌ ஒருமுறை தோற்றுப்‌ போயினர்‌. ரசியா, சீன, கிழக்கு ஐரோப்பிய நாடுகள்‌ இந்த வரையறையின்படி சோசலிச நாடுகளாயின இன்றைக்கும்‌ உலகம்‌ லெனின வரையறையில்‌ ஏகாதிபத்திய சகாப்தத்தில்‌ இயங்குவதால்‌ உலகில்‌ சோசலிசப்‌ புரட்சிகள்‌ சாத்தியம்‌ என்பதைக்‌ கோட்பாட்டு அளவில்‌ மறுக்க இயலாது...

ஆக மார்க்சியத்தின் வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்ளாத மார்க்சியவாதிகள் எப்படி மார்க்சியவாதிகளாக இருக்க முடியும் நீங்களே சிந்தியுங்கள் தோழர்களே!?!

தன் முன்னோடிகள் தன் கட்சி கூறியவற்றை மட்டுமே மார்க்சியமாக நினைத்து செயல்படுகின்றனர். மார்க்சியம் ரசிய புரட்சியின் ஊடாக லெனினியமாகவும் சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாகவும் வளர்ச்சியுற்றதை புரிந்துக் கொள்ளாதவர் எப்படி மார்க்சிய இயக்கவியலை புரிந்துக் கொள்வர்?

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனினால் எழுதப்பட்டது. 1905 இல் இருந்து 1907 இடைப்பட்டகட்டத்தில் ரஷ்ய புரட்சி தோல்வியாடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் தலைவிரித்தாடியது

மார்சிக்சியம் இரு தரப்புகளில் இருந்துதாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவ தத்துவவாதிகளின் இப்போக்கு. இன்னொன்று மார்க்சியத்தைமறைமுகமாக திருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சியபோதனைகளில் திருத்தம் செய்தல் மார்க்சியத்தை ஆராய்கிறேன் என்று மார்க்சியத்தை குழப்புதல்.

மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின்பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமை களுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற கோசத்தின் அடிப்படையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.

இங்குள்ள அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பு கைவிட்டதை இப்பொழுது கையிலெடுத்ததுள்ளது வருத்ததிற்க்குறியது.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர்.

இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!

மாவோ ஒரு முறை சொன்னதுபோல் மார்க்சியம் என்பதே பொதுத் தன்மையைக் குறிப்பானதன்மையுடன் இணைப்பதாகவும். அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர, குறிப்பான தன்மைகளுக்குமுதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்து விடக்கூடாது.

ஆனால் இங்குள்ள சிலர் இதுபோன்ற பொதுத்தன்மைகளை அதாவது பொது உண்மைகளை புறக்கணித்துவிடுகின்றனர். அதன் மூலம் பொதுத்தன்மையை குறிப்பான தன்மையுடன் பொருத்திப்பார்த்து விஞ்ஞானப்பூர்வமான முடிவிற்கு வராமல் அகவயமான முடிவிற்குச் செல்கின்றனர்.

நம்மிடையே உள்ள புரட்சி பேசும் சிலரின் நிலைபாட்டை விமர்சிப்போம்

இங்குள்ள பல்வேறு இடதுசாரி என்பவர்களும் ஏன் புரட்சி பேசுபவர்களும் சோசலிசப் புரட்சிக்கு எவ்வித தயாரிப்பும் செய்யாமல் தள்ளிப்போடுவதே இவர்களின் பணியாக உள்ளது. ஏகாதிபத்தியம் உருவாக்கி உள்ள புரட்சிக்கு பதிலாக பல்வேறு தந்திரங்கள் ஒன்றினைந்த போராட்டத்தை சீர்குழைத்தல் சீர்‌திருத்தவாதத்துக்கு ஆட்படுத்துவதும்‌ உலக முதலாளியத்தின்‌ தந்திரங்களாக இருக்கும்‌. இன்றைய காலத்தில்‌ புரட்சிகர உணர்வின்‌ செயல்பாட்டின்‌ பேரூக்கம்‌--லெனின்‌ காலத்தைவிடபன்மடங்கு கூடுதலாகத்‌ தேவைப்படுவதையே: இந்த அளவுச்‌ சேர்க்கைகள்‌ வலியுறுத்தி நிற்கின்றன.

இங்கே கட்சியாக இல்லாதவர்களே யுத்த தந்திர முழக்கங்களையும் ஆணைகளை முன் வைத்து செயல்படுவதும் யாரின் தேவைக்கு மக்களை ஏய்கதானே செயலற்ற முழக்கங்களை வைப்பதன் நோக்கம் எதற்கு?

உதாரணமாக “மோடியை தூக்கியெறிவோம்” என்ற முழக்கம் வைத்தவர்களிடம் கேட்கிறேன், மோடியை தூக்கி எறிய என்ன வழிமுறையை முன்வைத்துள்ளீர்கள்? பாராளுமன்றம் மூலமா? அல்லது புரட்சியின் மூலமா? இந்த இரண்டு கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை. ஏனெனில் பாராளுமன்றம் மூலம் வீழ்த்த உங்களிடம் எந்த வழியும் இல்லை அடுத்து புரட்சி மூலம் வீழ்த்த எவ்வித பணியையும் செய்யாமல் எப்படி சாதிப்பீர்? இதற்கான பதில் உள்ளதா உங்களிடம்! முதலில் அதற்கான பணியில் இறங்குங்கள். பின்னர் மற்றவை. புரட்சிக்கு முதலில் தேவை புரட்சிகர கட்சி அதனை பற்றி சிந்திக்காத குறுங்குழுவாதிகளாகி போன நீங்கள் என்ன செய்துக் கொண்டுள்ளீர்? எதற்கு இந்த பணியை செய்துக் கொண்டுள்ளீர்கள் பரிசீலித்ததுண்டா?

நாம் நம்மை ஒழுங்கு படுத்திக் கொள்ள நமது ஆசான் ஸ்டாலினிடம் செல்வோம். அவர் மிக சிறப்பான வழி கட்டுதலை கொடுத்துள்ளார்.

தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” -ஸ்டாலின்

சுரங்கத் தொழிற்சாலையில் நடைபெற்ற சதிச் செயல்கள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” என்பதை வலியுறுத்துகிறார். “சுயவிமர்சனம் இல்லாமல் கட்சி முன்னேற முடியாது; நமது இழிகுணங்களை வெளிப்படுத்த முடியாது; நமது குறைகளைக் களைய முடியாது – நம்மிடம் குறைகள் நிறையவே உள்ளன” என்கிறார். மேலும், சுயவிமர்சனம் இருந்தால்தான் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீவிரமாகவும் முழுமையாகவும் சமாளிக்க கட்சியால் இயலும்” என்கிறார்.

புரட்சி நடந்து முடிந்த ரஷ்யாவிலேயே இதுதான் நிலைமை என்றால், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கம் கொண்ட இந்திய சமூகத்தில்? கலைப்புவாதிகள், அராஜகவாதிகள், திரிபுவாதிகள், சீர்குலைவுவாதிகள் உருவாகுவதற்கான சாதகமான புறநிலைமையும், அகநிலைமையும் இங்கு பிரகாசமாக இருக்கின்றன.

மேலிடத்து’ ஆசிர்வாதம் பெற்றவர்கள், தமக்கு முதுகு சொறிபவர்களை விமர்சன சொல்லடிபடாமல் பாதுகாக்கும் ‘மேலிடங்கள்’, பரிசீலனைக்கு முழுமையாக தம்மை உட்படுத்திக் கொள்ளாத ஆதீனங்கள், அணிகளைப் பயிற்றுவிக்காமல் அவர்களை அடிவெட்டிப் பேசும் ‘அறிவுஜீவிகள்’, வார்த்தை ஜாலத்தில் ஆளை அசத்தும் தனித்துவம் பெற்ற சொல் வித்தகர்கள், துளியும் சுயவிமர்சனமற்ற ‘பரிசுத்த’ ஆத்மாக்கள் என இந்தப் பட்டியல் இன்னமும் நீளும்.

இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். இந்தப் பட்டியலில் நம் கண் முன்னே இருக்கும் ‘மதிப்புமிக்க தோழர்’களும் இருக்கலாம். இப்படிப்பட்ட ’தோழர்களிடம்’ இருந்துதான் சதிகாரர்களும், சீர்குலைவுவாதிகளும், கலைப்புவாதிகளும் ‘திடீரென’ வெளிப்பட்டிருக்கின்றனர். இன்னும் பண்பு மாற்றமெடுத்து வெளிப்படாத நிலையிலுள்ள ‘தோழர்களும்’ இருக்கின்றனர்.

விமர்சன, சுயவிமர்சனத்தை விட்டொழிப்பது, வர்க்கப் பார்வையை விடுத்து புற உலகின் எதார்த்தத்தோடு கரைந்து விடுவது, சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்ளத் தவறுவது ஆகியவைதான் தோழர்களாக இருக்கும் நாம் மேற்கண்ட ‘தோழர்களாக’ சரிந்துபோகும் நிகழ்ச்சிப் போக்கின் துவக்கப் புள்ளி!

இறுதியாக, மேலும் ஒரு பிரச்சினை. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களின் தவிர்க்கமுடியாத நேரும் விதியைப் பற்றியது. கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றும் பிரச்சினை பற்றிய அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது பற்றிய நமது தோழர்கள் சிலரின் வழக்கமான, இதயமற்ற, அதிகார வர்க்க மனப்பான்மை பற்றிய பிரச்சினைகளை நான் மனதில் கொண்டுள்ளேன். இதில் முக்கியமான விசயமே நமது தலைவர்களில் சிலர் மக்கள் தொடர்பாக, கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக, தொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையற்று இருக்கிறார்கள் என்பதுதான். இதைவிட அதிகமாக அவர்கள் கட்சி உறுப்பினர்களை ஆய்வு செய்வதில்லை. அவர்கள் எத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. பொதுவாக இவர்கள் தொழிலாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில்லை. அதனால்தான் கட்சி உறுப்பினர்களுக்கான மற்றும் கட்சி ஊழியர்களுக்கான தனிப்பட்ட அணுகுமுறை இவர்களிடம் இல்லை.

மேலும் தனிப்பட்ட அணுகுமுறை இல்லாத காரணத்தால் கட்சி உறுப்பினர்களையும், கட்சி ஊழியர்களையும் மதிப்பிடுவதில் வழக்கமாக அவர்கள் வெறும் தற்செயலான வழிமுறைகளில் செயல்படுகிறார்கள். ஒன்று, அவர்களை எந்த ஒரு அளவுகோலும் இன்றி ஒட்டுமொத்தமாக பாராட்டுவது அல்லது அவர்களை ஒட்டுமொத்தமாகவும், எந்த அளவுகோலும் இன்றி முழுக்கமுழுக்கப் பழி கூறுவது, கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான உறுப்பினர்களை வெளியேற்றுவது ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். இத்தகைய தலைவர்கள் பொதுவாக அலகுகளைப் பற்றி கவலைப்படாமல், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது கதியைப் பற்றி கவலைப்படாமல் பத்தாயிரக்கணக்கானவர்களைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கிறார்கள். கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை ஒரு ‘வெறும் அற்பம்’ எனக்கருதி, நமது கட்சியில் இருபது இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கின்றனர்.

ஸ்டாலின் மார்க்சிய லெனினி கண்ணோட்டதிலிருந்து பங்காற்றினார். ஆனால் இங்கு முதலாளித்துவ கட்சியின் பண்பான தனிநபர்வாதமும் தன்நபர் துதிபாடலும் உள்ள பொழுது எப்படி விமர்சனம் சுயவிமர்சனம் எதிர்பார்க்க முடியுமா?.

பல்வேறு நாடுகளில் வலதுசாரி முதலாளித்துவ கட்சிகள் போல் இடதுசாரி கட்சிகளும் ஆட்சிக்கு வந்துள்ளன. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் இவை பற்றிய மார்க்சிய ஆசான்கள் வழியில் புரிந்துக் கொள்வதோடு, வலதுசாரி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாவதும் நடந்தாலும் அவை உலக அளவிலான மாற்றை முன் வைக்க அல்லது பிற நாட்டு புரட்சிகர சக்திகளுக்கு முன் உதாரணமாக இல்லை அதற்கான பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதே கண்முன் காணகிடைக்கிறது.

அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சீனா, ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாட்டு நலன்களை மையமாக வைத்து வெளிப்படையான முதலாளித்துவ அமைப்பாகதான் செயல்படுகின்றன.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி உள்ளது அவை என்ன செய்துக் கொண்டுள்ளது?. சீனஅரசு, சோசலிசத்தை கட்டியமைப்பதாக சொல்லிக் கொள்கிறது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த புரட்சிக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் சீனா உலகின் மிகப்பெரிய அரசியல் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால்விடும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இவை எவ்வகையான பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி அங்கு ஒரு சிலரின் கையில் உடைமைகள் குவிந்துள்ளது தனி உடைமை இல்லையா? இப்படியாக சீனா கம்யூனிச கட்சி யாரின் தலைமையில் யாரின் தேவைக்காக பாடுபடுகிறது என்பதனை புரிந்துக் கொண்டு தெளிவடைய வேண்டும் நாம்.

உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிச நாடும் கடைப்பிடிக்க வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்காத, தன் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச உறவுகளின் மீது மட்டுமே சீன அரசு அக்கறை காட்டுகிறது ஆக அவை பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து நலுவி விட்டதென்றால் அவை பற்றி விமர்சினங்கள் பின் பார்ப்போம்.

இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழிகாட்டும் அல்லது ஆதரவு அளிக்கும் சர்வதேச சோசலிச முகாம் எதுவும் இல்லாத நிலை உள்ளது.

நான்காவது அகிலம் முதலான பெயர்களில் செயல்படும் பல்வேறு டிராட்ஸ்கிய குழுக்கள் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான கோட்பாட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன இவை மார்க்சியத்தை குழைக்கும் வேலையை செய்துக் கொண்டுள்ளது அப்படி என்னும் பொழுது இதன் பங்களிப்பு என்பது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அல்ல ஏகாதியபத்திய உலகமயம் மற்றும் விரிவாக பின் பார்ப்போம்.

மொத்தத்தில், இன்றைக்கு சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பிற்போக்கும் எதிர்ப்புரட்சியும் கோலோச்சுகின்றன, அவற்றை எதிர்த்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் முதலாளித்துவத்தின் எல்லைக்குள் செயல்படும் வகையில் பலவீனமாக உள்ளது என்றால் மிகையாகாது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது குறுங்குழுவாதமும் அதனை பற்றியும் சற்று அறிவோம்.

குறுங்குழுவாதம்

அமைப்பிற்குள் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை மட்டுமே அங்கீகரிப்பார், தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாக இருப்பார். அதன் காரணமாக இவர் எப்போதும் அமைப்பிற்குள் ஒற்றுமைக்கு பாடுபட மாட்டார். தனது கருத்துக்களோடு முரண்படுபவர்களை விரட்டியடிப்பதன் மூலம் அமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்துவார். இத்தகைய தனிவுடமை முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பிற்குள் செயல்படுபவர்களையே குறுங்குழுவாதி என்கிறோம்.

ஒரு கம்யூனிஸ்டானவர் மக்களையும், அவரது அமைப்பிலுள்ள தோழர்களையும் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும். மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டு என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள், மக்களையும் தனது அமைப்பைச் சேர்ந்த தோழர்களையும் சமமாக மதிப்பதில்லை. மாறாக மக்களைக் காட்டிலும் தன்னை சிறந்தவராகக் கருதி கர்வம் கொள்கிறார்கள். மக்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை மறுக்கவோ, வெறுக்கவோ செய்கிறார்கள்.

மக்களிடமோ, தமது அமைப்பைச் சார்ந்தவர்களிடமோ இருக்கும் நல்ல அம்சங்களை பார்க்க மறுத்து மக்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இத்தகைய பண்பானது ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கக் கூடாத குறுங்குழுவாதப் பண்பாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது.

ஆக நமக்கான பணி சோஸலிச கட்டுமானதிற்கான கம்யூனிச இலக்கு கொண்டவையே அவையின்றி வேறொன்றுமில்லை என்பதே!

தொடர்ந்து விவாதிப்போம் தொழர்களே....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்