தத்துவம் மற்றும் கருத்தியல் இவற்றை தெரிந்துக் கொள்வோம்!
மார்க்சிய-லெனினிய தத்துவமும் சமூக மாற்றத்திற்கான புரட்சிப் பாதையும்
இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினிய தத்துவத்தின் வலிமையையும், அது சமூக மாற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் விரிவாக விளக்குகின்றன. முதலாளித்துவத்தின் நெருக்கடிகளிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்க பாட்டாளி வர்க்கப் புரட்சியும் சோசலிசமுமே ஒரே வழி என்பதை இந்த உரை வலியுறுத்துகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்வதோடு, சீர்திருத்தவாதம் என்பது தற்காலிக சலுகைகளை மட்டுமே பெற்றுத்தரும் ஒரு தடையாகும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. சமூக அமைப்பை வேரோடு மாற்றும் தத்துவத்திற்கும், நிலவும் அமைப்பிற்குள் சலுகை கோரும் கருத்தியல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியம் போன்ற கருத்தியல்கள் புரட்சிகர மாற்றத்தை விட சீர்திருத்தங்களையே முன்னிறுத்துகின்றன என்று இது விமர்சிக்கிறது. இறுதியில், சுரண்டலற்ற ஒரு புதிய சமூகத்தை உருவாக்க மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படையில் உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை இது போதிக்கிறது.
நடைமுறையில் இருக்கும் நிலப்பிரபுத்துவ காலனிய கார்பரேட்
ஏகாதிபத்திய சமூக அமைப்பை அடியோடு தகர்த்தெறிந்து புதிய சமத்துவ சமூக அமைப்பை
புரட்சிகர நடவடிக்கையால் மாற்றுவதே கம்யூனிசக் கொள்கையாகும்.
அதற்கு வழிகாட்டும் தத்துவமாக இருப்பது மார்க்சிய – லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையிலான தத்துவமாகும். உலகளவில் இன்றுவரை இந்தத் தத்துவத்தை தனிநபர்களாகவும் அமைப்பியல் வடிவத்திலும் பலகோடிபேர் பின்பற்றி வருகின்றனர். இன்றுவரை முதலாளித்துவ சக்திகளையும் ஏகபோக நாடுகளையும் அச்சமடையச் செய்கின்ற தத்துவமாக மார்க்சியம் மட்டுமே இருக்கின்றது.
மார்க்சியக் கோட்பாட்டை பின்பற்றி கம்யூனிச கட்சியை கட்டி வெகுமக்களை அரசியல்படுத்தி புரட்சியின் மூலம் மாபெரும் சமூக மாற்றத்தை செய்த நாடுகளாக ரஷ்யாவும் சீனமும் உதாரணமாக உலகில் விளங்கியது. அது தொடர்ந்து தனக்கான பணி செய்யாமல் எதிரி வர்க்க பணியால் வீழ்ந்து போனது. அவை மீண்டெழும் இன்னும் உத்வேகத்துடன் இந்த சுரண்டல் அமைப்புமுறைக்கு முடிவுகட்ட.
மார்க்சியத்திற்கு முந்தைய தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை பேசியது மார்க்சியம் மட்டும்தான் பிரச்சனைக்கான காரணத்தையும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறையையும் கூறியது. அப்படியெனும் பொழுது மார்க்சியதிற்கு முந்தைய எல்லா தத்துவங்களும் உள்ள அமைப்பு முறையை தக்கவைத்துக் கொள்ள விரும்பியது. அதாவது தனியுடமையை சுரண்டலை ஏற்றதாழ்வை ஏற்றே வாழ சொன்னது.
ஆனால்
மார்க்சியம் இந்த அமைப்பு முறைதான் இந்த எல்லா பிரச்சினைகளுங்குமான காரணம். ஆக இந்த சமூகஅமைப்ப் மாற்றி
அமைக்க வேண்டும் என்றனர். அதற்கான வழிவகையை கூறினர். அதனை அடிவொற்றி ரசிய சீன புரட்சி நடத்தி காட்டினர். உலக நாடுகளுக்கு
வழிகாட்டியது பல நாடுகளில் புரட்சி நடந்தேறியது இன்று அவை நமக்கான
படிப்பினைகள்தான்...
இதனை
எதையையும் ஏற்காமல் ஏகாதிபத்தியம் தன் இருப்பை கட்டிக்காக்க சில அறிவுஜீவிகளை கொண்டு தன் கருத்துகளை பரப்பினர் பரப்புகின்றனர். அவை ஆளும் வர்க்கமாய் உள்ளவற்றவுடன் சமரசம் செய்துக் கொண்டு இதே அமைப்பில் சில சலுகை பெற்று வாழமுடியும் என்பதே! இவை தத்துவத்துறையில் ஆளும் வர்க்கதின் சீர்திருத்தவாதமே இவை கருத்தியலே இவை சமூக மாற்றத்தை விட ஆம் பிரச்சினையை தீர்பதற்கு பதில் சமூகத்தில் பங்குதாரர்களாக இதே சுரண்டல் சமூக அமைப்பை நீடிக்க செய்பவ்ர்களாக உள்ளனர். இவர்கள் ஏகாதிபத்திய சதியால் வளர்க்கப்பட்டவர்கள். இவர்களின் சீர்திருத்த நடைமுறைகளை முற்போக்கு
முலாம் பூசி மக்கள் மத்தியில் பரப்புவோர் எதற்காக செய்கின்றனர்? அவர்களின் செயல் எந்த
வர்க்க நலன் சார்ந்தவை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?
அம்பேத்கர் பெரியார் கொள்கை கோட்பாடுகள் கருத்தியலானவை - ஐடியாலஜி
மார்க்சிய தத்துவம் - ஃப்பிலாசபி ஆம் சமூகம் பற்றிய விஞ்ஞானம்(சமூக அறிவியல்)
நடைமுறையில் இருக்கும் சமூக அமைப்பிற்குள் சலுகைகளையும் சீர்திருத்தத்தையும் கோரியதுதான் ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கரின் கருத்தியல். இதில் இந்த சமூக அமைப்பை எதிர்த்தோ மாற்றவோ இருவரும் பேசவேயில்லை.
மொழி மற்றும் தேசிய இனம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாது தான் திராவிடம் என்ற உருட்டை நிலைபெறச் செய்தவர் பெரியார். தேசிய இனங்களை ஏற்காதவர்தான் அம்பேத்கர்!
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் இருப்பை அழித்தொழித்தவர் பெரியார் என்றால் மிகையல்ல! மேலும் ஆங்கில மொழியை தனது இறுதிக்காலம்வரை கொண்டாடி தமிழுக்கான முக்கியதுவத்தை மறந்தவர் மறுத்தவர்பெரியார் என்றாம் அம்பேத்கர் மொழிகளையே மறுத்து ஒற்றை மொழிக்கு ஆதரவளித்தவர்.நடைமுறையில் இருக்கும் நிலப்பிரபுத்துவ காலனிய கார்பரேட் முதலாளித்துவ சமூக அமைப்பை அடியோடு தகர்த்தெறிந்து புதிய சமுத்துவ சமூக அமைப்பை புரட்சிகர நடவடிக்கையால் மாற்றுவதே கம்யூனிசக் கொள்கையாகும்.
அதற்கு வழிகாட்டும் தத்துவமாக இருப்பது மார்க்சிய – லெனினிய
மாவோ சிந்தனையின் அடிப்படையிலான தத்துவங்களாகும். சீர்திருத்தவாதம் நோயிலிருந்து விடுதலை அல்ல நோயால் வாடிக் கொண்டே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் புரட்சிக்கான தத்துவம் அந்த நோயை இல்லாதொழிக்கும் ஆக கருத்தியல் தத்துவம் பற்றி தெளிவடைய வேண்டியுள்ளோம்
No comments:
Post a Comment