தோழர் சாரூ நினைவுநாள் இன்று

 தோழர் சாரூ நினைவுநாள் இன்று



இலக்கு இணைய இதழ் - 8

இலக்கு இணைய இதழ் - 9

அகில இந்திய காங்கிரஸ்க்கு 1969ல் கூடிய பிறகு மத்தியகுழு ஒருமுறை கூட கூட்டவே இல்லை. கட்சியின் அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள் வேலை முறை ஆகியவை அனைத்தும் தோழர் சாரு அவர்களால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டு லிபரேஷன் ஏட்டில் மூலமாக நேரடியாக வழி காட்டப்பட்டது. மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை போன்று சாருவின் சிந்தனையும் புரட்சிகரமான கருத்தாக தோழர்கள் கருதினர். இந்த சிந்தனை முறையில் இருந்து அதிகாரவர்க்க போக்கு தோன்றியது. சமூக வளர்ச்சி விதி பற்றிய இயக்கம் மறுப்பில் கண்ணோட்டமே கட்சியில் அன்று மேலோங்கியது. இந்தக் கண்ணோட்டத்தின் விளைவாக அமைப்பு துறையின் கீழ் கண்ட தவறுகள் நேர்ந்தன.(இவை இ.க.க. மா-லெ (ம-யு) தமிழ்நாடு 88 சிறப்பு கூட்ட நகல் அறிக்கையிலிருந்து  எடுதாளப்பட்டுள்ளது).

1). அதிகாரவர்க்க போக்கு காரணமாக கட்சியின் தலைமை கமிட்டிகள் ஜனநாயகம் மத்தியதுவம் நிராகரிக்கப்பட்டது கட்சியின் மீது தனிப்பட்டவரின் அதிகாரத்தை திணிப்பதற்கு கொண்டு சென்றது.

2). விமர்சனம் சுயவிமர்சனம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்படவில்லை.

3). அனுபவங்களிலிருந்து படிப்பினை தொகுக்கப்படும் முறையும் புறக்கணிக்கப்பட்டது.

4). தகவல்கள் இருந்து உண்மைகளை அறியும் பொருள்முதல்வாத முறையும் சூழ்நிலைகள் மாறும் தன்மையில் பார்க்கும் இயங்கியல் முறையும் புற நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு கடைப்பிடிக்கப்படவில்லை அதற்கு மாறாக மனம் போன போக்கில் நிலைமைகளை கணிக்கும் முறை ஆதிக்கம் செலுத்தியது.

5). கட்சி கமிட்டிகள் செயல்படும் முறை அற்றுப்போய்விட்டது.

6). கட்சிக்குள் அரசியல் ஸ்தாபன பிரச்சினைகளில் தோன்றிய முரண்பாடுகள் தீர்ப்பதற்கான உட்கட்சி போராட்டத்திற்கு இருவழி போராட்டத்திற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

(இவை விரிவாக வரும் இதழ்களில் காண்போம்).

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்