விமர்சனம் சுயவிமர்சனம்-2 ஒலிவடிவில் கேட்க தோழர்களே

 தோழர்களே,

இந்த கட்டுரையை முழுமையாக கேட்க இந்த லிங்கை அழுத்தி ஒலி வடிவில் கேட்க முடியும்

நானும் என் வாழ்க்கையின் நீண்டகாலம் பொதுவுடமை கட்சியின் நீரோட்டத்தில் வளர்ந்து வந்தான். என் அரசியல் பயணத்தில் ஏற்பட்ட விபத்து என்னை மார்க்சியத்தை கற்க தூண்டியது அதன் வெளிப்பாடு பல தோழர்களை பல்வேறு கட்சியில் உள்ள தோழர்களை சந்தித்து பலகற்றலுக்கு பயன்பட்டாலும் பெரிய அளவில் இவர்கள்களின் மீதான விமர்சனங்கள் கடந்த கால தவறுகளுக்கு சுய விமர்சனமாக முன்வராமல் பதிலளிக்காமல் எல்லா தவறுகளுக்கு வேறோரு காரணம் சொல்லி ஏமாற்றுவதை அறிந்துக் கொள்ள நீண்ட காலம் ஆனது அதனை தொடர்ந்து பேச உள்ளேன். அதன் மூலம் நமக்கான சரியான பார்வையை பெற முயலுவோம் என்ற நிலையில்.

எதிர்கால தவறுகளை தவிர்க்க கடந்தகால தவறுகளிலிருந்து படிப்பினை பெறுவோம் என்ற மார்க்சிய முன்னோடி ஒருவரின் வாசகம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடந்து கால கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகமும் உயரி இலட்சியதிற்காக அவர்கள் ஆற்றிய பணியும்தான் இன்றும் உலகில் எங்கும் கம்யூனிஸ்டுகள் மீதான மதிப்பும் அவை மட்டுமே வழிமுறையும் என்றறிவர். ஆனால் இன்றைய நிலைக்கு காரணம் நாம் அறிய வேண்டாமா?

மார்க்சிய தத்துவம் மனிதகுல விடுதலைக்கான தத்துவம் ஆம் உழைக்கும் கோடான கோடி மக்களின் விடுதலைக்கான தத்துவம். அதனை தவிர உலகில் மனிதகுல விடுதலைக்கான தத்துவம் எதுவும் இல்லை இதனை மார்க்சியவாதிகள் அறிந்தவர்கள்தானே!

இதனை புரிந்துக் கொண்டோ புரியாமலோ மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டே மறுக்கும் துரோகிகளை பற்றி சொல்வதற்கு நிறையவே உள்ளன. அதனை பற்றி புரிந்துக் கொள்வோம். ஏனென்றால் அவர்கள் மார்க்சியத்தின் பெயரிலேயே வாழ்ந்து கொண்டு; மார்க்சியத்தை எதிர்த்து அதற்கு துரோகமான முறையில் தனது அணிகளையும் தனது கட்சியையும் குழப்பும் வேளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உழைக்கும் மக்களின் விரோத செயல்களில் ஈடுபடுவதும் துரோகமான முறையில் மார்க்சியத்தை குழப்பும் வேலை செய்யும் பொழுது இவர்களின் பணி விரோதிகளை விட அதிக பாதிப்படைகிறது. இந்த துரோகிகளின் நிலைப்பாட்டை புரிந்துக் கொள்வதும் மார்க்சியத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் பணியாகும்.

ஆக துரோகிகளை தேடும் பொழுது அவர்கள் நேரடியாக தெரிந்துக் கொள்வது கடினமே அவர்களின் ஒவ்வொரு செயல்கயும் நுணுக்கி ஆராயும் பொழுது மார்க்சிய ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறையிலிருந்து விலகி ஓடும் இடத்தை அறிந்தாலே அவர்களின் உண்மையான முகத்தை அறிந்துக் கொள்ள புரிந்துக் கொள்ள முடியும் அல்லவா?. ஆம் துரோகிகள் பல உருவில் உள்ளார்கள். அவர்கள் பொதுவுடமை கட்சி(குழுக்கள்)க்குள்ளும் உள்ளனர். அவர்கள் மார்க்சிய லெனினியத்தை மறுப்பதும் அதாவது அதற்கான செயல்பாட்டை மறுத்து இங்குள்ள முதலாளித்துவ கட்சிகளின் தேவைக்கேற்றால் போல் அதை மாற்றி அமைப்பதும்.

இதில் இங்குள்ள இடதுசாரிகள் என்பவர்கள் தொடங்கி புரட்சி பேசும் சிறிய குழுகள் வரை அடங்கும். இவர்களின் சுயவிமர்சனமற்ற போக்கு அவர்களை பீடித்துள்ள பல நொய்களில்  குறுங்குழுவாதம் என்பது முதன்மையானதாகும். ஒவ்வொரு கட்சியும் குழுவும் தான்/தாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் மற்றவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற நிலைப்பாடு மிக மோசமானது. ஏனென்றால் இவர்கள் அடிப்படையில் மார்க்சிய ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளை உள் வாங்காமலே ஆளுக்கொரு வழியில் (கண்ணோட்டத்தில்) உள்ள பொழுது. எப்படி இவர்களின் செயல்பாடு நடைமுறை பேசுவது சரியாக இருக்கும்? என்பதுதான் முதன்மையான கேள்வியாக உள்ளது.

 

கட்சி/குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மார்க்சிய அரசியல் தத்துவ பணியை நடைமுறைக்கான கல்வியை போதித்து ஒரு புரட்சிக்கான கட்சியாக வளர்தெடுக்க முற்படாத இவர்கள் மார்க்சியத்தை வளர்க்கவோ அதேபோல் மார்க்சிய ஆசான்களின் வழிமுறையை பின்பற்றாத பொழுது இவர்கள் யார்?!

இன்னொருபுறம் மார்க்சியத்தை மார்க்சியம் அல்லாத போக்குகளில் ஒருங்கிணைப்பதலில் முற்படும் பொழுது அவர்கள் கலைப்புவாதிகளாகவும் குழப்பவாதிகளாகவும் மாறி ஆளும் வர்க்க தத்துவத்தை தன் அணிகளுக்கு மத்தியில் கொண்டு செல்வதால் அணிகள் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்கில் பயிற்றுவிக்கப் படுகின்றனர்.

 

இந்த போதாமையை பயன்படுத்திக் கொண்டு இவர்கள் தங்கள் தவறான கருத்துகளை அணிகளின் மண்டையில் ஏற்றுவது போலவே உழைக்கும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள். இதனைப் பற்றி ஒரு புரிதலுக்கான கட்டுரைதான் இவை தொடர்ந்து எழுத பேச முயலுவோம் தோழர்களே.

மார்க்சிய போர்வையில் இருந்துக் கொண்டே மார்க்சியத்தை மறுப்பவர்களை புரிந்துக் கொள்ள

சிலபோக்குகளை பார்ப்போம்.

1). மார்க்சியத்தையே மறுப்போர் -மார்க்ஸ் முதல் மாவோ வரையான ஆசான்களையே முழுமையாக ஏற்காதவர்கள்.

2). மார்க்சிய அடிப்படையான, பாட்டாளி வர்க்க புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் (ஜனநாயகம்)  ஏற்காதவர்கள்.

3). புரட்சிகான மார்க்சிய லெனினிய போதனையை மறுத்தல்.

4). ஒன்றுபட்ட புரட்சிகான கட்சியை கட்டுவதை மறுத்தல்.

 

இதன் தொடர்ச்சியாக நாம் விமர்சனம் சுயவிமர்சனம் எனும் மார்க்சிய அடிப்படையில் நமது கடந்தகால தவறுகளை களைந்தெறிவதும் எதிர்கால தேவைக்கான புரட்சிகான பணியினை மார்க்சிய ஆசான்களின் வழி நின்று செயல்படுவடுமேயாகும் தோழர்களே... 

முதலாளித்துவம் அமைதியான முறையில் சோஷலிசமாக மாறும் என்ற கட்டுக் கதையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற பித்தலாட்டம் இன்னும் பல சந்தர்ப்பவாத போக்குகளும் இரண்டாம் அகிலத்தில் நிலவியது இன்றும் நிலவுகிறது அவை மார்க்சிய வகைபட்டதல்ல..

சர்வதேச அளவில் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர்த்துப் போரிட்ட லெனின், சோவியத் ரஷ்யாவில் பிரிந்து கிடந்த குழுக்களை இணைத்து பலம்வாய்ந்த ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கட்சி கட்டி புரட்சி நடத்தி காட்டினார். லெனினியத்தின் கொள்கை சர்வதேச மதிப்புள்ளதாக மாறியது. மார்க்சியத்தின் நிலைப்பாடுகளை நடைமுறையில் நிரூபித்தது அக்டோபர் புரட்சி. சந்தர்ப்பவாததின் மீது லெனினிய வெற்றியாக அமைந்தது. அக்டோபர் புரட்சி மூன்றாம் அகிலம் அமைப்பதற்கான சூழல் மிகவும் பிரகாசமாக இருந்தது இன்று நிலை என்ன? ஏன் இவை சிந்தியுங்கள் தோழர்களே!ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு தத்துவம் மார்க்சியம் போதிக்கவில்லை

மார்க்ஸ் என்ற மாமேதை மறைந்து 100 ஆண்டு கடந்தும் அவரது போதனைகளும் அவருடைய வழிகாட்டுதலும் இன்றைய சமூகத்தின் அவசியமான படிப்பினைகளாக உள்ளன. முதலாளி வர்க்க சிந்தனையாளர்களும் கொள்கை எதிரிகளான மதவாதிகளும் மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள் அது வர்க்க அடிபடையில் அவர்களின் பணியாக வர்க்க சார்பாக உள்ளது. ஆனால் சமூக மாற்றத்தை விளையும் மார்க்சிய முகாமுக்கு உள்ளே உள்ள ஆம் கம்யூனிஸ்டா உள்ளவர்களே மார்க்சியத்திற்கு புதுப்புது விளக்கம் கொடுக்க முனைவது, சர்வதேச அளவில் இருந்து தமிழகம் வரை இவை தொடர்கதையாகதான் உள்ளது.

பல்வேறு நாடுகள் சோசியலிச புரட்சி நடத்தி முடித்த படிப்பினையானது கட்சி அணிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இங்குள்ள நமது தோழர்கள் மீது விமர்சனம் வைப்பதன் நோக்கம் ஒரு சரியான புரட்சிக்கான கட்சி வேண்டும் என்பதும் அவை மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை அடிபடையிலானவையாகவும் இருக்க வேண்டும் என்பதே.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு காணும் பொழுது அவர்கள் புரட்சி சாதிப்பதற்காக என்னென்ன செய்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்று ஆவணங்கள் நமக்கு காண்பிக்கிறது.

ஆனால் நமது கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியதில் இருந்து அதற்கான தனித்தனியான நிலைப்பாடுகள் இருந்தாலும் அவை மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்களில் இருந்துதான் செயல்பட்டார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் மார்க்சிய ஆசான்களின் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் பல்வேறு விதமான போக்குகள் உள்ளவர்களை நாம் காணலாம்.

அதனை தனித்தனியாக இப்பொழுது முழுமையாக எழுதாவிட்டாலும் சிலவற்றை கீழே கோடிட்டுகாட்டியுள்ளேன். பொதுவாக மார்க்சிய ஆசான்கள் என்பவர்கள் மார்க்ஸ் முதல் மாவோ வரை உள்ளவர்கள் தானே? அப்படி எனும் பொழுது மார்க்ஸ் மார்க்சியம் என்ற தத்துவத்தை படைத்தளித்தார் என்றால் அந்த மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு ஆசான்களின் வழிமுறை உள்ளது. அவர்கள் தன்னுடைய நாட்டின் நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை பிரயோகித்து ஒரு புரட்சிகர நிலைக்கு கொண்டு வந்தார்கள் அந்தந்தநாட்டின் சூழலுகேற்ப. ஆகவே மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர்களை மார்க்சிய ஆசான்கள் என்று நாம் கூறுகிறோம். இதில் வேறுபட்ட கருத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படி எனும் பொழுது மார்க்சிய ஆசான்களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் நிலைப்பாடு வெவ்வேறாக இருபதற்கு காரணம் அவர்கள் மார்க்சியத்தின் முழுமையை உள்வாங்கவில்லை என்பதுதானே? ஆக ஒரு முழுமையான அறிவியல் பூர்வமான தத்துவத்தை கிரகிக்காதவர்கள் மார்க்சியத்தின் முழுமையை உள்வாங்காதவர்கள் அல்லது கட்சியும் தன்னை எப்படி மார்க்சிய வழியில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் நம்முள் உள்ள கேள்வியாக உள்ளது.

ஆகவே மார்க்சிய லெனியம் என்பது வெறும் தத்துவம் மட்டுமல்லாத நடைமுறைக்கான வழிகாட்டியும் என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும் தோழர்களே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமை வழிகாட்டு முறை அன்றிலிருந்து இன்று வரை உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். அதற்கு முக்கிய காரணம் நமது சமூகத்தில் உள்ள பிற்போக்கான சமூக அமைப்பின் சித்தாந்தங்களை உள்வாங்கி நடைமுறைப்படுத்துவது தான். மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்குகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதால் இந்த குறைபாடு. அதனால் மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்குவதோடு மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்து அணிகளுக்கும் அமைப்புகளையும் வலுப்படுத்துவது வேண்டும். ஒரு வலிமை வாய்ந்த நாட்டில் வலிமையான எதிரிகள் உள்ள இடத்தில் தனிமைப்பட்ட எந்த போராட்டமும் நடைமுறையோ செயல்படுத்த முடியாது, என்பது வரலாற்று உண்மைகள். இங்குள்ள ஒவ்வொரு இடதுசாரிகளும் புரிந்துக் கொள்ள வேண்டியதே.

ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கட்சியும் தான் மட்டுமே புரட்சிக்கானவர் தான் மட்டுமே புரட்சி சாதிக்க முடியும் என்பது வீண் கற்பனையே ...

மாவோ புரட்சி நடத்தி முடித்த சீனாவில் தன் கட்சியில் ஏற்பட்டுள்ள அகம்பாவத்தை எதிர்த்து எழுதியவைதான், ஒரு கம்யூனிஸ்டானவர் மக்களையும், அவரது அமைப்பிலுள்ள தோழர்களையும் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும். மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டு என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள், மக்களையும் தனது அமைப்பைச் சேர்ந்த தோழர்களையும் சமமாக மதிப்பதில்லை. மாறாக மக்களைக் காட்டிலும் தன்னை சிறந்தவராகக் கருதி கர்வம் கொள்கிறார்கள். மக்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை மறுக்கவோ, வெறுக்கவோ செய்கிறார்கள்.

மக்களிடமோ, தமது அமைப்பைச் சார்ந்தவர்களிடமோ இருக்கும் நல்ல அம்சங்களை பார்க்க மறுத்து மக்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இத்தகைய பண்பானது ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கக் கூடாத குறுங்குழுவாதப் பண்பாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது.

சில மார்க்சிய நூல்களை படித்தவுடன், தன்னடக்கம் உள்ளவர்களாக மாறுவதற்குப் பதிலாக அகந்தை கொண்டவர்களாக சிலர் மாறுகிறார்கள். தங்களது அறிவு அரைகுறையானது என்பதை உணராமல், தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணராமல், அதாவது கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழியை உணராமல், தான் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டு மற்றவர்களை மதிக்காமல் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள். இத்தகைய பண்பு கொண்டவர்கள் குறுங்குழுவாதிகளே. மார்க்சியத்தால் வகைப்படுத்தப்படும் மார்க்சியவாதிகள் இல்லை.

மார்க்சியத்தை மறுக்கும் பக்கத்தை பேசதான் நமது ஆசான்களின் போதனைகளைமுழுமையாக உள்வாங்காமைதான் இந்தப்போக்கு என்பேன். ஆக இதிலிருந்து விடுபட நாம் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை கற்றறிவோம்.

மார்க்சியம் என்பது ஒரு ஒன்றிணைந்த உலகக் கண்ணோட்டமாகும்-பிளக்னோவ் வரலாற்று பொருள்முதல்வாதமும் இதோடு நெருக்கமாக தொடர்புடையதுமான அரசியல் பொருளாதாரத்தின் கடமைகள், முறை, வகைகள் மற்றும் சமுதாயத்தின், குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளின் தொகுப்பும் அடிப்படையில் அநேகமாக முற்றிலும் மார்கஸ், எங்கெல்சின் சாதனையாகும். கார்ல்மார்க்ஸ், பிரெட்றிக் ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோசலிசத்தின் பிதாமகன்கள் ஆவர். அவர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சிவிதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம்புரிந்து, முதலாளித்து வத்தை தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு போதித்தனர். மார்க்சும், ஏங்கெல்சும் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது தத்துவம் நடைமுறையாவதைக் காண கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய வழிகாட்டுதல் தத்துவம் மார்க்சியம் என அழைக்கப்படுகின்றது.

மார்க்சிய லெனினியம் என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தின் உலகக் கண்ணோட்டமாகும்-ஸ்டாலின்

லெனின் அவர்கள், முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய கால கட்டத்தில் புரட்சி இயக்கத்தின் ஊக்கமாக உழைத்த ஒரு மார்க்சியவாதியாவார். வேறுவார்த்தைகளில் சொன்னால், அவர் ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தை அறிந்து சோசலிச புரட்சிக்கு வழிகோலினார். தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர் மார்க்சியத்தைப் உபயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்சியத்தை லெனினியம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார். லெனின் அவர்கள் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தி மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் புதிபித்ததும் லெனினின் முதல் கட மையாக இருந்தது. மார்க்சியத்தை நடைமுறையாக்க திட்டம் போர்தந்திரம் அதற்கான புரட்சிகர கட்சியினை ஸ்தாபித்த்துடன் தனி ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழலை அறிந்து புரட்சியை நடத்தி சோசலிசத்தை நிர்மானிக்க முயற்சித்தார் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை ஆக்கினார்.

*மார்க்சிய லெனினியமும் ஸ்டாலின் பங்களிப்பும்-மாவோ* ஸ்டாலின் அவர்கள் லெனினின் கடமைகளைத் தொடர்ந்து செய்தார். ஹிட்லரின் பாசிச ஆக்கிரமிப்பின் குரூரத்தை, எதிர்த்து, ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டிவளர்தது, அதைப் பாதுகாப்பதில் பெரும்பணி புரிந்தார். ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் ஈட்டிய வெற்றியும்,உலக பாசிசத்தை நிர்மூலமாக்குவதில்அது வகித்த முக்கிய பாத்திரமும் சோசலிசமும் ஒரு தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்கு துணைசெய்ததுமாத்திரமல்ல, உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும், அதாவது, சோசலிசம் புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது.இந்த தீர்க்கமான மாற்றம், 1949ல் சீன புரட்சியின் வெற்றியுடன், மனித குலத்தில் நாலில் ஒரு பகுதி ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய மூன்று மலைகளையும் தூக்கி வீசிவிட்டு, சோசலிசத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியதுடன், மேலும் தீர்க்கமானதாக மாறியது. இவ்வாறு உலகப் புரட்சியின் வெற்றிக்கு மேலும் சாதகமான ஒரு புத்தம் புதிய சூழ்நிலை உருவாகியது.

மாவோ கூறுகிறார் சோசலிசத்தின் எதிரிகள் ஸ்டாலினை மற்றும் எதிர்க்கவில்லை மார்க்சிய மூலவர்களை திரட்டி கொடுத்த மார்க்சியத்தையே கேள்வி குறியாக்கி தாங்கள் ஏகாதிபத்திய தாசர்களாக இழி நிலைக்கு சென்று விடுகிறார்கள் என்பார். ஆக ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு உலக சோசலிச அமைபுக்கு அளபரிய பணியாகும் என்பார் மாவோ..

மார்க்சியலெனினிய மாவோ சிந்தனை -சண்முகதாசன்

தோழர் மாசேதுங் சீன புரட்சியின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியம் - லெனினியத்தைப் பிரயோகித்தார்.வெளிநாட்டு ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் இவற்றுக்கு எதிரான நீடித்த போராட்டத்தின் வளைவுசுளிவுகளுக்கு ஊடாகச் சீன புரட்சி வெற்றிபெற வழிகாட்டி, தலைமை கொடுப்பதன் மூலமும், சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியதன் மூலமும், தோழர் மாவோ அவர்கள் மார்க்சியம் - லெனினியத்தின் பொது உண்மைகளை சீனாவின் ஸ்தூலமான புரட்சி நிலைமைக்கு இனங்கப் பிரயோகிப்பதில் தமது ஈடு இணையற்ற திறமையைக் காட்டினார்.

தோழர் மாவோ அவர்கள் சீன புரட்சியை வெற்றிக்கு வழிநடத்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது மாத்திரமல்ல, தமது காலத்தில் லெனின் அவர்கள் தீர்வு காணாது விட்டுச்சென்ற, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவிவிட்ட பின் எழுந்த பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கண்டார். அரசியல் பொருளாதார கட்டுமானத்தை வளர்த்தெடுக்க (கலாச்சார புரட்சியின் ஊடாக).தவறற்ற தீர்க்க தரிசனத்துடன், தோழர் மாவோ அவர்கள், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக் காலகட்டம் பூராவும் வர்க்கங்கள் தொடர்ந்து இருக்கும், ஆகவே, சோசலிசப் புரட்சியின் பின்னர்கூட வர்க்கப் போராட்டங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

நமமிடையே உள்ள இடதுசாரிகளின் நிலை யானையை பார்த்த கண்ணில்லாதவர்கள் நிலை போல் உள்ளது. மார்க்சியத்தின் இயங்கியலையும் அதன் வளர்ச்சி நிலையில் புரிந்துக் கொள்ளாதவர்களாக உள்ளனர்களே இவர்கள்! !!

இவர்கள் மார்க்சியவாதியாக இருந்தாலும் மார்க்சியத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளாமல் இருபதற்கான காரணம்! அவர்கள் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தை சரியாக போதிக்காமையே இவர்களின் குறைபாட்டிற்கு காரணம் என்பேன்.

நான் அறிந்தவற்றை தொடராக எழுதுகிறேன் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்... தொடரும் தோழர்களே


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்