மார்க்சியம் என்னும் சமூக விஞ்ஞானம் மனித சமூகத்தின் இயங்கு விசையான உற்பத்தி சக்திகள் அதற்கேற்ற உற்பத்தி முறை அதன் அடிப்படையில் சமூகத்தை விளக்கி உள்ளது. நம் சமூக இயக்கத்தை புரிந்து கொள்வதற்கு நம் சமூகத்தில் உள்ள உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி முறையையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மார்க்சியம் என்னும் சமூக விஞ்ஞான அடிப்படையில் புரிதல் வேண்டும்.
இங்குள்ள பல்வேறு கட்சிகள் அதன் பிரிவினர் பல்வேறு வகை மார்க்சியத்தை புரிந்து கொண்டுள்ளனர் அதன் வெளிப்பாடு இங்கு உள்ள பல நிலைகளாக உள்ளது.
சிலர் இங்குள்ள சாதியை மட்டுமேதான் பிரச்சினையாக பார்க்கிறார்கள். இன்னும் சிலர் மத பிற்போக்குத்தனங்களை மட்டும் பார்க்கிறார்கள். இன்றைய சமூக வளர்ச்சியில் தேசிய இன பிரச்சனை முன்னுக்கு வருகின்றது இதனை மட்டுமே பிரச்சினையே என்று பார்க்கிறார்கள். இன்னொன்று பெண் அடிமைத்தனத்தை மட்டும் பார்க்கிறார்கள். உண்மையில் இது சமூகமானது உழைக்கும் மக்களாகிய உற்பத்தி சக்திகளின் உழைப்பாளே உயர்வாக வாழ்கிறது. இங்கே உழைக்கும் மக்கள் பல்வேறு பிரிவாக பிரிந்துள்ளதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இன்று வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைப்பிடித்துள்ளது உலக நாடுகளின் மீது அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிரூபித்துள்ள. அதனை எதிர்க்க கூட முடியாத அளவிற்கு பலவீனமான முறையில் உள்ளவைதான் இன்றுள்ள ரசிய சீன நிலைமைகள். இதில் எங்கே புரட்சி பேசுவோரின் குரல் கேட்க போகிறது? ஆகையால் எதிப்பு குரல்களை நசுக்கி அல்லது பயமுறுத்திதான் இன்றைய அரசதிகாரம் உள்ளது. இதனை புரிந்துக் கொண்டாலே ஒட்டுமொத்த பிரச்சினையும் சமூக பிரச்சினைதான் என்று விளங்கும்.
விவாதிக்க மூன்று படங்களை உங்கள் முன் வைத்துள்ளேன். இவை விவாசாய நிலங்கள்தான் ஆனால் இதனை பேசுவதன் நோக்கம் நமக்கான அரசியல் தெளிவிற்கே.
நம்மிடையே எவ்வளவு சமூக சிந்தனை சமூக அறிவு உள்ளது என்பதனை நாமே பரிசீலிக்க சில தேடல்தான்.
உண்மையில் நமது சமூகமானது உழைக்கும் மக்களாகிய உற்பத்தி சக்திகளினால்தான் வாழ்கிறது. ஆனால் இங்கு உழைப்பானது பல்வேறு பிரிவாக பிரிந்துள்ளது குறிப்பாக கிராமப்புறத்தை எடுத்துக் கொண்டால் நேரடியாக நிலத்தை வைத்திருப்பவரும் அதற்கான உழைப்பும் செலுத்துவோரும் கணக்கில் கொண்டால் இங்கு துண்டு துக்கானி நிலங்களுக்காக விவசாயிகள் தங்களுடைய வாழ்க்கை முழுமையாக அர்ப்பணித்து வாழ வேண்டி உள்ளது தான் தன் குடும்பம் தனக்கான வாழ்க்கை என்றே சுருங்கிக் கொள்கிறது.நிலமுள்ள விவசாயின் நிலையே மிக கொடூரமாக உள்ளது பின் கூலி விவசாய நிலையை புரிந்துக் கொள்ளுங்கள். விவசாய கூலிகள் விவசாய உழைப்பில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் உயிர் வாழ்வதற்காக நகரங்களையும் பல்வேறு தொழிலும் செய்து வாழும் கட்டாயத்தில் உள்ளார்கள்
குறிப்பாக கிராமப்புறத்தை எடுத்துக் கொண்டால் நேரடியாக நிலத்தை வைத்திருப்பவரும் அதற்கான உழைப்பும் பெருவீத நிலக்குவிப்பு என்பது சில பகுதிகள் உள்ளது. ஆனால் எல்லா கிராமப்புறங்களிலும் சிறு வீத நிலங்களும் அதற்கான உழைப்பும் தான் உள்ளது. இங்கு துண்டு துக்கானி நிலங்களுக்காக விவசாயிகள் தங்களுடைய வாழ்க்கை முழுமையாக அர்ப்பணித்து வாழ வேண்டி உள்ளது தான் நிலை. தன் குடும்பம் தனக்கான வாழ்க்கை என்றே சுருங்கிக் கொள்கிறது. இவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றி பேசுவோம் பின்னர். இங்கே வாழும் கூலி விவசாயிகள் நேரடியாக விவசாய உழைப்பில் இருந்து அகற்றப்பட்டு விட்டனர் என்றே சொல்ல முடியும். அதேநேரத்தில் அந்த கூலித் விவசாய தொழிலாற்கள் அவர்கள் உயிர் வாழ்வதற்காக நகரங்களையும் நம்பியும் பல்வேறு தொழில் சார்ந்தும் வாழும் கட்டாயத்தில் உள்ளார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி மாற்றத்திற்கு பிறகான இந்திய மக்கள் தொகையில் 81% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்ததாக 1951 கண்க்கெடுப்பு கூறியது. அதேபோல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்படி கிராமப்புறத்தில் வாழும் மக்கள் 70% அதில் 61% மக்கள் இன்னும் நிலம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதாக கூறுகிறது. இவை உண்மைதான அறிய வைக்கும் அளவீடுகள் மற்றும் கணக்கெடுப்பே நடத்தா இன்றைய ஆட்சியாளர்களின் பொறுப்பின்மையே இந்த கணக்கெடுப்பில் நாட்டமின்மையை வெளிப்படுத்துகிறது அல்லவா?. உண்மையில் இந்த கணக்கீடானது நிலம் உள்ளவர்களே நிலத்தில் உழைப்பதை கைவிட்டு விட்டனர் என்று நேரடியாக காணும் பொழுது பல கேள்விகளை உள்ளடக்கியதாக உள்ளது.
இதனை பற்றி ஒரு புரிதலுக்கே
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ன் படி, தமிழ்நாட்டில் (தமிழகத்தில்) விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மொத்த பணியாளர்களில் 34.4% ஆக உள்ளனர் என்கிறது தமிழக புள்ளிவிவரங்கள்.
முக்கிய குறிப்பு: இந்தப் புள்ளிவிவரங்கள் முதன்மைத் தொழில் (Main workers) என வகைப்படுத்தப்பட்டவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக பெண்களில், வீட்டுத் தொழில்கள் மற்றும் குறுந்தொழில்களில் பங்களிப்பு முழுமையாக பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.
மிகவும் சமீபத்திய தரவுகளுக்கு, தமிழ்நாடு அரசின் விவசாயத் துறை அல்லது இந்தியப் புள்ளிவிபர அலுவலகம் (NSSO) நடத்தும் கணக்கெடுப்புகளின் அடிப்படையிலே இந்த கணக்கீடு.
மேலும் கிராமப்புற பணியாளர்கள் என்பது விவசாயிகளை மட்டும் குறிக்காது; கிராமப்புற பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் அனைத்து அங்கங்களையும் உள்ளடக்கியது.
கிராமப்புற பணியாளர்களை பின்வரும் பரந்த வகைகளில் பார்க்கலாம்:
1. விவசாயம் சார்ந்த தொழில்கள் (கிராமப்புற பணியாளர்களில் பெரும்பகுதி)
· நில உடமையாளர்கள் / விவசாயிகள்: சொந்த நிலத்தில் பயிரிடுபவர்கள்.
· குத்தகை / கூட்டுறவு விவசாயிகள்: மற்றவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பணிபுரிபவர்கள்.
· விவசாயத் தொழிலாளர்கள்: நாடோடி தொழிலாளர்கள் உட்பட, நிலையான அல்லது தினசரி கூலியில் வேலை செய்பவர்கள்.
· கால்நடை பராமரிப்பு / கோழி வளர்ப்பு: பால் பொருட்கள், முட்டை, இறைச்சி உற்பத்தியில் ஈடுபடுவோர்.
· மீன்பிடித் தொழிலாளர்கள்: கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடி சமூகங்கள்.
2. விவசாய சார்ந்த தொழில்கள் (கிராமப்புற பணிவாழ்வில் முக்கியமான…
தமிழ்நாடு பல்வேறு தொழில்துறைகளில் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்புகளின் அடிப்படையில், மக்கள் ஈடுபடும் முக்கிய தொழில் வகைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
அ. விவசாயம் மற்றும் தொடர்புடைய தொழில்கள் (இன்னும் பெரிய வளமான பகுதி)
· பயிர் விவசாயம்: நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், தினை, காய்கறிகள், பழங்கள் (மா, வாழை, மாதுளம்பழம்).
· கால்நடை வளர்ப்பு: பால் பண்ணைகள், கோழி வளர்ப்பு, ஆடு/ஆடு வளர்ப்பு.
· மீன்பிடி: கடல் மீன்பிடி (தூத்துக்குடி, நாகப்பட்டினம்), உள்நாட்டு மீன் வளர்ப்பு.
· தோட்டக்கலை: மலர் வளர்ப்பு, நீர்ப்பாசன தோட்டங்கள்.
ஆ. உற்பத்தித் தொழில்கள் (தொழில்துறை மாநிலத்தின் முதுகெலும்பு)
· தானுந்து மற்றும் கூறுகள்: சென்னை ("தென்னிந்தியாவின் டிட்ராயிட்"), ஓராகடம், தொட்டியம்.
· நெசவு மற்றும் ஆடை: கோயம்புத்தூர் (உடைகள்), திருப்பூர் (ஆடை உற்பத்தி & ஸ்போர்ட்ஸ் வியர்), ஈரோடு (நெசவு), கரூர் (ஆடை), காஞ்சிபுரம் (பட்டுப் புடவைகள்).
· பெருமளவிலான பொறியியல்: பொன்மேனி, திருச்சி (எடை தூக்கும் பொருட்கள், கப்பல் கட்டுதல்).
· மின்னணுவியல் & தொழில்நுட்ப வன்பொருள்: சென்னை, காஞ்சிபுரம் (ஹார்ட்வேர், மோபைல் தொழிற்சாலைகள்).
· செதுக்குதல் & கைவினை: செஞ்சி, மயிலாடுதுறை (பித்தளை, வெண்கல செய்பொருட்கள்), சுவாமிமலை (செதுக்குதல்).
· உணவு மற்றும் பதப்படுத்துதல்: பழ ஜூஸ், காபி, மசாலா பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங்.
· தோல் பொருட்கள்: அம்பூர், வேப்பம்பட்டி (தோல் பொருட்கள்), திருப்பத்தூர் (தோல் உற்பத்தி).
இ. சேவைத்துறை (வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மற்றும் மிகப்பெரிய பங்களிப்பு)
· தகவல் தொழில்நுட்பம் (IT) & IT-Enabled Services: சென்னை (ஐடி கோர்), கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் (IT/ITES பார்கள்).
· வங்கியியல் & நிதிச் சேவைகள்: தலைமையகங்கள் மற்றும் அலகுகள் பரவலாக உள்ளன.
· சுகாதாரப் பராமரிப்பு: சென்னை ("இந்தியாவின் சுகாதாரத் தலைநகரம்"), பிற நகரங்களில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள்.
· கல்வி மற்றும் ஆராய்ச்சி: பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள்.
· சுற்றுலாத்துறை: கடற்கரைகள், கோவில்கள், இயற்கை மற்றும் கலாச்சார இடங்கள், மருத்துவ சுற்றுலா.
· சில்லறை வணிகம் & லாஜிஸ்டிக்ஸ்: பெரிய மொல், சூப்பர் மார்க்கெட், e-காமர்ஸ் டெலிவரி சேவைகள்.
· போக்குவரத்து: டிரக்குகள், லாஜிஸ்டிக்ஸ் சங்கிலிகள்.
ஈ. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு
· கட்டுமானத் தொழிலாளர்கள்: நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள்.
· பொறியாளர்கள் & கட்டடக் கலைஞர்கள்.
· சாலை, நீர்த்தேக்கம், மின்சாரத் திட்டங்களில் வேலை.
உ. பொதுத்துறை மற்றும் அரசாங்கப் பணிகள்
· அரசு ஊழியர்கள்: கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், நீர் வழங்கல் துறைகள்.
· ஊராட்சி அமைப்புகள்.
· அரசு ஆலைகள் மற்றும் நிறுவனங்கள்: NLC, BHEL, அரசு வங்கிகள்.
ஊ. பாரம்பரியம் மற்றும் கலை
· கலைஞர்கள்: பாரம்பரிய நடனம் (பரதநாட்டியம்), இசை (கர்நாடக இசை), நாடகம்.
· கைவினைஞர்கள்: வீரர்கானம் (சுவர் ஓவியம்), காஞ்சிபுரம் பட்டு நெசவு, செப்புப் படிமம், மர வேலைப்பாடு.
· கோயில் தொடர்புடைய தொழில்கள்: பூசாரிகள், பூக்கடை, பிரசாதம் தயாரிப்பு.
முக்கியமான கவனிப்புகள் (தமிழ்நாட்டின் சிறப்பு):
· பிராந்திய சிறப்பு: மாநிலம் முழுவதும் தொழில் வகைகள் மாறுபடுகின்றன. (எ.கா.: கோவை-திருப்பூர்-ஈரோடு தொழில் பெல்ட், சென்னை ஐடி & ஆட்டோமொபைல் ஹப், தூத்துக்குடி துறைமுகம் & மீன்பிடி, மதுரை வர்த்தகம்).
· MSMEs-ன் பங்கு: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
· கல்வி & திறன்கள்: அதிக கல்வியறிவு மற்றும் திறன் வளர்ச்சி புதிய சேவை மற்றும் தொழில்நுட்ப தொழில்களுக்கு வழிவகுக்கிறது.
· மாற்றம்: கிராமப்புறங்களில் கூட, சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு மாறுவதன் மூலம் விவசாயத்தில் சார்ந்திருப்பது குறைந்து வருகிறது.
எனவே, "தமிழகத்தில் என்னென்ன வகையான தொழில் செய்கின்றனர்?" என்ற கேள்விக்கான பதில்: விவசாயத்தில் தொடங்கி, உலகளாவிய ஐடி சேவைகள் வரை, அனைத்து நிலைகளிலும் உள்ள மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் இயக்கமான தொழில்கள். (இவை எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தொகுத்துள்ளேன் மேலும் கருத்துகள் தெரிவித்தால் விரிவாக்கிக் கொள்வோம்)
ஆக இங்கே பணி புரியும் மக்கள் தாங்கள் சாதியின் அடிப்படையிலோ மற்ற எந்த பிரிவினையின் அடிப்படையில் இல்லை அதேபோல் கிராமபுர உற்பத்தியில் சாதிய உழைப்பு பங்களிப்பு இல்லை ஆகவே சாதியின் இருப்பை அந்த சமூகத்தை கட்டிக்காக்கும் அரசையே கேட்க வேண்டிய கேள்வி.
மக்களை சாதி பிரிவினை பேசி ஒற்றுமையை சிதைக்காதீர்!!!
தொடரும்..
No comments:
Post a Comment