நக்சல்பாரி: எழுச்சியும் வீழ்ச்சியும் — ஒரு
மார்க்சிய-லெனினியப் பார்வையில் படிப்பினைகள்
முன்னுரை
1967 மே மாதம் வட வங்காளத்தின் தர்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி எனும் சிற்றூரில் தொடங்கிய விவசாயிகள் கிளர்ச்சி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. "வசந்த இடிமுழக்கம்" என சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் புகழப்பட்ட இந்த எழுச்சி, இந்திய பாராளுமன்றவாத "இடதுசாரி" கட்சிகளின் திருத்தல்வாதத்திற்கு எதிரான கடுமையான எதிர்வினையாகவும், சீனப் புரட்சியின் பாதையை இந்திய நிலத்தில் பின்பற்ற முற்பட்ட ஒரு முயற்சியாகவும் வெளிப்பட்டது. ஆயினும், ஐந்தே ஆண்டுகளுக்குள் — 1972-ல் சாரு மசூம்தாரின் மரணத்துடன் — இந்த இயக்கம் நடைமுறையில் சிதைந்து, எண்ணற்ற பிரிவுகளாகச் சிதறிப்போனது.
எல்லா தத்துவங்களும் உலகை வியாக்கியானம் செய்தன.
மார்க்சியம் மட்டுமே உலகை மாற்றி அமைப்பதற்கான வழியை விஞ்ஞானமாக வகுத்தளித்தது.
ஏடறிந்த வரலாறுயாவும் வர்க்கப் போராட்ட வரலாறே என்கிறது
மார்க்சியம். அந்த வகையில் தற்போது முதலாளித்துவம் கருக்கொண்டிருக்கும்,
இழப்பதற்கு ஏதுமற்ற
பாட்டாளி வர்க்கமே முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டி சோசலிசத்தை அடையும் என்றும்
கூறுகிறது. இதுநாள்வரை சிறுபான்மை உடைமை வர்க்கம் பெரும்பான்மை உழைக்கும்
வர்க்கத்தின் மீது ஆட்சி அதிகாரத்தை அல்லது சர்வ-அதிகாரத்தை (சர்வாதிகாரத்தை)
செலுத்திவருகிறது என்றும், இனி அது மாறுபட்டு பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தின்,
அதாவது பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் சிறுபான்மை உடைமை வர்க்கத்தினை இருத்தி,
இறுதியில் சுரண்டல்
இல்லாத சமூக அமைப்பான பொதுவுடைமைச் சமுதாயத்தைப் படைக்கின்ற மகத்தான வரலாற்றுக்
கடமையை நிறைவேற்ற வேண்டிய பணி பாட்டாளி வர்க்கத்தையே சாரும். ஆட்சி அதிகாரத்தைச்
சுவைத்துக்கொண்டிருக்கும் எந்த வர்க்கமும், தனக்கான அதிகாரத்தை தானே விட்டுக்கொடுப்பதில்லை என்ற
வரலாற்று உண்மையின் அடிப்படையில், பாட்டாளி வர்க்கம் தனது எதிரி வர்க்கமான முதலாளித்துவத்தை
வீழ்த்தி தனது ஆட்சி அதிகாரத்தை நிறுவ வேண்டுமானால்,
அது முதலில் அமைப்பாக
வேண்டும். தனக்கான ஒரு கட்சி வடிவமாக அந்த அமைப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
இந்த அடிப்படைகளை வலியுறுத்தியதோடு நில்லாமல் அக் கட்சியின்
நோக்கங்களையும், இலக்குகளையும் வரையறுத்து கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை என்ற
மாபெரும் ஆவணத்தை மார்க்சிய ஆசான்களான மார்க்சும்,
எங்கெல்சும்
அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக சமூக ஜனநாயகக் கட்சிகளை
உருவாக்கியும், சர்வதேச ஒருங்கிணைப்பாக சர்வதேச அகிலங்களையும் உருவாக்கி
வழிகாட்டிச் சென்றனர்.
ஏகாதிபத்திய சகாப்தத்தில் தொழிலாளர் இயக்கம்,
குறிப்பாக ரஷ்யாவின்
தொழிலாளர் வர்க்கத்தை எதிர்நோக்கிய புதிய கடமைகள் உறுதியான,
ஒருங்கிணைக்கப்பட்ட
போராட்டத்தையும், அதன் அனைத்து நடவடிக்கைகளின் ஒருமையையும்,
அதாவது இப்போதைக்கு
மையப்படுத்தப்பட்ட தலைமையையும் கோரின.
ஒரு புரட்சிகரமான, மையப்படுத்தப்பட்ட அரசியல் ஸ்தாபனம் மட்டுமே இதை
உறுதிப்படுத்த முடியும், மத்தியத்துவத்தின் முக்கியமான ஸ்தாபனக் கோட்பாடு என்று
லெனின் கூறினார். கட்சிக்கு ஒற்றை இலட்சியம் இருக்க வேண்டும்,
உறுப்பினர்கள்
கண்டிப்பான கட்டுப்பாட்டைப் பின்பற்றவேண்டும்,
கீழ்திசை அமைப்புகள்
மேல்திசைக் கட்சி அமைப்புகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்,
பகுதி அமைப்புகள் மைய
அமைப்புக்குக் கீழ்ப்படிய வேண்டும், மையத் தலைமையின் முடிவுகளை கட்சியின் எல்லா அமைப்புகளும்
நிறைவேற்ற வேண்டும். இதைத்தான் லெனின் மத்தியத்துவம் என்ற சொல்லினால்
குறிப்பிட்டார்.
அந்தக் கட்சியானது தொள தொளப்பாக இல்லாமல் உருக்குப் போன்ற
உறுதித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
சமூக சூழல் மற்றும்
மாறுபட்ட வர்க்கப் பின்னணி கொண்ட தோழர்களின் இலட்சியம் ஒன்றாக இருந்தாலும்
ஒருமுகப்பட்ட சிந்தனை இல்லாமல் போனால் எதிரி வர்க்கத்தை வீழ்த்துவதற்கான வல்லமையை
இழந்துவிடும் என்பதற்காக கட்சி ஊழியர்களை தெளிவான சித்தாந்த நோக்குடையவர்களாக
மாற்றுவதற்காக தோழர் லெனின் அவர்கள் உட்கட்சிப் போராட்டங்களைத் துவங்கி மிக
உறுதியாகப் போராடி மார்க்சியத்தை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த
நோக்கத்திலிருந்து அவர் வெற்றியும் பெற்றார். அது உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு
நல்ல வழிகாட்டியாகவும் அமைந்தது.
எல்லாப் பொருட்களிலும் எதிர்மறைகள் உள்ளது போலவே பாட்டாளி
வர்க்கக் கட்சியும் எதிர்மறைகளை உள்ளடக்கியது. எனவே,
ஒரு புரட்சிகரமான
பாட்டாளி வர்க்கக் கட்சிக்குள்ளும், வர்க்கங்களாகப் பிளவுண்ட சமுதாயத்தில் இரண்டு
வர்க்கங்களுக்கிடையே நடக்கும் போராட்டம் கட்சிக்குள்ளும் பிரதிபலிப்பதின் விளைவே
உட்கட்சிப் போராட்டமாகும். சமுதாயத்தில் வாழுகின்ற பாட்டாளி வர்க்கமல்லாத பிற
வர்க்கப் பிரிவைச் சார்ந்தவர்கள் சேருவதால் அந்நிய வர்க்கக் கருத்துகள்
கட்சிக்குள் கடத்தப்படுகின்றன. அத்துடன் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும்
ஆளும்வர்க்கக் கருத்துகள் கட்சி உறுப்பினர் மத்தியில் செல்வாக்கு செலுத்துகிறது.
கட்சிக்குள் பிரதிபலிக்கிறது. எனவே கட்சிக்குள் இருவழிப் போராட்டம் தீவிரமாகிறது.
கட்சிக்குள் நடக்கும் இரண்டு எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டமே இருவழிப்
போராட்டமாகும். ஜனநாயக மத்தியத்துவம் என்ற இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையில்
தான் தீர்க்கமுடியும். சரியான கருத்துகளை நிலைநிறுத்த முடியும்.
அந்த வகையில் ருஷ்யாவைத் தொடர்ந்து,
வெற்றிகரமான முறையில்
பாட்டாளி வர்க்கப் புரட்சியை நிறைவேற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியில் நடைபெற்ற
உட்கட்சிப் போராட்டங்களைப் பற்றி விளக்கியுள்ளனர்
ஆனால் இங்குள்ள நிலையை பற்றியே விவாதம் தோழர்களே.
நம் கட்சிக்கு வெளியே நிகழும் வர்க்கப் போராட்டங்களின்
பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் என்றார் லியோசோஷி. கட்சியின் அடிப்படையான
தொழிலாளி வர்க்க குணாம்சத்தைப் பாதுகாப்பதற்கு உட்கட்சிப் போராட்டம் முற்றிலும்
இன்றியமையாதது. இந்த லட்சியத்தை மனதிற்கொண்டு,
உட்கட்சிப்
போராட்டத்தை இருபக்கங்களிலிருந்தும் அல்லது இரண்டு முனைகளில் நடத்தப்பட வேண்டும்.
ஏனெனில் எதிரியின் தத்துவரீதியான பாதிப்பு இரு திசைகளிலிருந்து வருகின்றன. கட்சி
“வலது பக்கத்திலிருந்தும்”, “இடது பக்கத்திலிருந்தும்” இரு பக்கங்களிலிருந்தும்
தாக்கப்படுகிறது. இது கட்சியில் வலது அல்லது இடது சந்தர்ப்பவாதமாக
பிரதிபலிக்கிறது. ஆகவே நமது உட்கட்சிப் போராட்டம் ஏககாலத்திலேயே வலதுசாரி
சந்தர்ப்பவாதத்தையும், இடதுசாரி சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து திருப்பிவிடப்பட
வேண்டும் என்று கூறும் தோழர் லியோசோஷி, உட்கட்சிப் போராட்டம் என்றால் என்னவென்று பின்வருமாறு
விளக்குகிறார்.
உட்கட்சிப் போராட்டம் பிரதானமாக சித்தாந்தப் போராட்டம்
ஆகும். அதன் உள்ளடக்கம் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து எழுகின்ற
திரிபுகளும், முரண்பாடுகளும் ஆகும்.
சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் நமது தோழர்களிடையே
எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளும் கட்சிக்குள் அரசியல் பிளவுகளில்
கொண்டுசெல்லலாம்; சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர்க்கமுடியாத அமைப்பு
பிளவுகளிலும் கொண்டுசெல்லலாம். ஆனால் குணாம்சத்திலும்,
உள்ளடக்கத்திலும்
அத்தகைய திரிபுகளும் முரண்பாடுகளும் அடிப்படையில் சிந்தாந்தப் போராட்டங்கள் ஆகும்.
உட்கட்சிப் போராட்டங்களை தோழர் லியோசோஷி மூன்று வகையாக
வகைப்படுத்துகிறார். 1. வலதுசாரி திரிபை எதிர்த்த போராட்டம்,
2. இடதுசாரி திரிபை
எதிர்த்த போராட்டம், 3. இதில் எதிலும் சேராத வேறுபட்ட பகுதி சரி இன்றைய விவாதப்பகுதிக்கு வருவோம் தோழர்களே!
நக்சல்பாரி: எழுச்சியும் வீழ்ச்சியும் — ஒரு
மார்க்சிய-லெனினியப் பார்வையில் படிப்பினைகள்
இந்தியாவில் வசந்தத்தின் இடிமுழக்கம்
(மக்கள் தினசரி, ஜூலை 5, 1967, தலையங்கம்)
இந்திய மண்ணில் வசந்தத்தின் இடிமுழக்கம் ஒலித்துள்ளது.
டார்ஜிலிங் பிரதேசத்தில் உள்ள புரட்சிகர உழவர்கள் புரட்சி செய்ய எழுந்துள்ளனர்.
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் புரட்சிகரக் குழு ஒன்றின் தலைமையின் கீழ்
இந்தியாவில் கிராமப்புற புரட்சிகர ஆயுதப் போராட்ட சிவப்புப் பிரதேசம்
நிறுவப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் புரட்சிப் போராட்டத்துக்கு
மகத்தான உத்வேகமாக வாய்ந்தது.
கடந்த சில மாதங்களில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின்
புரட்சிகரக் குழுவின் தலைமையிலான டார்ஜிலிங் பிரதேசத்து உழவர் பெருமக்கள் நவீன
திரிபுவாதத் தலைகளை விசியெறிந்து தம்மைப் பிணைத்திருந்த வலைகளை
அறுத்தெறிந்துள்ளனர். அவர்கள் நிலப்பிரபுக்கள்,
தோட்ட உரிமையாளர்கள்
ஆகியோரிடமிருந்து தானியம், நிலம், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி உள்ளனர். உள்ளூர்
கொடுங்கோலர்களையும் கொடிய மேட்டுக்குடியினரையும் தண்டித்துள்ளனர். அவர்களை அடக்க
வந்த வழிகண்டு படையினரையும் போலீசாரையும் தாக்கி உள்ளனர். அவர்கள் இவ்வாறு
புரட்சிகர உழவர் ஆயுதப் போராட்டத்தின் வலிமை சக்தியை நிரூபித்துள்ளனர்.
ஏகாதிபத்தியவாதிகள், பாட்டாளிகள், ஊழல்மிக்க அதிகாரிகள், உள்ளூர்க் கொடுங்கோலர்கள்,
கொடிய
மேட்டுக்குடியினர், பிற்போக்கு ஆட்சினர் போலீஸ் ஆகிய அனைவரையும் அடித்து
வீழ்த்தி கைவசம் செய்யத்துணிந்த புரட்சிகர உழவர்களுக்கு அவர்கள் ஒரு பொருட்டாகவே
தெரியவில்லை. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் புரட்சிகரக் குழுவினர் மிகச்சரியான
விஷயத்தை போந்த முறையில் செய்துள்ளனர். டார்ஜிலிங் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய
உழவர்களின் புரட்சிகரப் போராட்டத்தை, அனைத்து மார்க்சிய - லெனினியவாதிகளையும் உலகம்
முழுவதிலுமுள்ள புரட்சிகர மக்களையும் போலவே சீன மக்களும் மகிழ்வுடன்
வரவேற்கின்றனர்.
இந்திய உழவர்கள் புரட்சி செய்ய எழுவதும் இந்திய மக்கள்
புரட்சி செய்வதும் தவிர்க்க முடியாதது. ஏனெனில் பிற்போக்கு காங்கிரஸ் ஆட்சி
அவர்களுக்கு மாற்றுவழி எதையும் விட்டுவைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் கீழான
இந்தியா பெயரளவிலேயே சுதந்திரமானது; உண்மையில் இது ஓர் அரைக்காலனி,
அரைநிலப்பிரபுத்துவ
நாடே அன்றி வேறல்ல. இந்திய பிரபுத்துவ சிற்றரசர்கள்,
பெருநிலப்பிரபுக்கள்,
அதிகாரவர்க்கத் தரகு
முதலாளிகள் ஆகியோரின் நலன்களை காங்கிரஸ் ஆட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது
உள்நாட்டில் இந்திய மக்களை ஈவிரக்கம் எதுவுமின்றி அடக்கி ஒடுக்கி அவர்களது
குருதியைச் குடிக்கிறது; அதே வேளையில் அது பழைய பிரித்தானிய ஏகாதிபத்திய எஜமானனுக்கு
தொண்டுழியம் புரிவதுடன் தனது புதிய எஜமானனான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன்
முதல் சகபாடியான சோவியத் புரட்டல்வாத ஆளும் கும்பலுக்கும் சர்வகேசரிதியில் சேவை செய்கிறது.
இவ்வாறு இது இந்திய தேசிய நலன்களைப் பெருமளவில் காட்டிக் கொடுக்கிறது. எனவே
ஏகாதிபத்தியம், சோவியத் புரட்டல்வாதம்,
நிலப்பிரபுத்துவம்,
அதிகார வர்க்கத் தரகு
முதலாளித்துவம் ஆகியவை இந்திய மக்களின் குறிப்பாக பரந்துபட்ட உழைப்பாளிகளான
தொழிலாளர்கள், உழவர்களின் முதுகின் மீது பெரும்மலைகளைப் போல்
அழுத்துகின்றன.
காங்கிரஸ் ஆட்சி இந்திய மக்களை அடக்கி ஒடுக்கிச்
சுரண்டுவதைத் தீவிரப்படுத்தி தேசத்துரோகக் கொள்கைகளைக் கடந்த சில ஆண்டுகளாகப்
பின்பற்றி உள்ளது. நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பசியாலும் பட்டினியாலும்
மாண்டவர்களின் உடல்கள் வயல் வெளிகளில் பரவலாக உள்ளன. இந்திய மக்கள் அதிலும் இந்திய
உழவர்கள் வாழ்வது சகிக்க முடியாததாக உள்ளதைக் காண்கிறார்கள். இப்பிரதேசத்தில் உள்ள
புரட்சிகர உழவர்கள் புரட்சியில் - பலாத்காரப் புரட்சியில் எழுந்துள்ளனர். இந்தியா
முழுவதிலும் கோடான கோடி உழவர்கள் பலாத்காரப் புரட்சி செய்யப் போவதற்கு முன்னறிவிப்பே
இது. இந்திய மக்கள் தமது முதுகுகளை அழுத்தும் இப்பெருமலைகளைத் தூக்கியெறிந்து முழு
விடுதலையை வென்றெடுப்பது நிச்சயம். இது இந்திய வரலாற்றின் பொதுப்போக்கு. உலகிலுள்ள
எந்த சக்தியும் இதை நிறுத்தவோ அல்லது தடைப்படுத்தவோ முடியாது.
இந்தியப் புரட்சி மேற்கொள்ள வேண்டிய பாதை என்ன?
இந்தியப் புரட்சியின்
வெற்றியையும் 50 கோடி இந்திய மக்களின் இந்தியா பரந்த பகுதியை உடைய நாடு.
பிற்போக்கு ஆட்சி பலவீனமாயுள்ள அதன் நாட்டுப்புறங்கள் புரட்சியாளர்கள் தாராளமாக
தயாரிப்புகள் செய்வதற்கான வாய்ப்பை அளிக்கின்றன. இந்தியப் பாட்டாளி வர்க்கப்
புரட்சியாளர்கள் மா-லெ-மா புரட்சிகர வழியைக் கடைப்பிடித்து தமது முக்கிய நண்பர்களான
உழவர்களைச் சார்ந்திருக்கும் வரை அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிராமப்புறப் புரட்சி
தளப்பிரதேசங்களை நிறுவுவதும் புதுமாதிரியானதொரு மக்கள் படையை உருவாக்குவதும்
சாத்தியம். இத்தகைய தளப்பிரதேசங்களை உருவாக்கும் போக்கில் இந்தியப்
புரட்சியாளர்கள் எத்தகைய விளைவுகளையும் திருப்பங்களையும் எதிர்கொண்டாலும் அவர்கள்
இறுதியில் அங்குமிங்கும் உள்ள சிறுபிரதேசங்களை இணைத்து பரந்த இத்தகைய பிரதேசங்களை
உருவாக்க முடியும். அலைஅலையாகத் தொடர்ந்து வளர்க்க முடியும். இவ்வாறு இந்தியப்
புரட்சி கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை சுற்றிவளைக்கும் ஒரு நிலைமை படிப்படியாக
ஏற்படும். இறுதியில் நகரங்களையும் மாநகரங்களையும் கைப்பற்றி தேசிய ரீதியிலான
வெற்றியை அடைவதற்கான வழியை வகுக்கும். டார்ஜிலிங் கிராமப்புற ஆயுதப் போராட்ட
வளர்ச்சியினால் இந்தியப் பிற்போக்காளர்கள் பயபீதி அடைந்துள்ளனர். உடனடியாக நிகழப்போகும்
அழிவை அவர்கள் மோப்பம் பிடித்துள்ளனர். டார்ஜிலிங் உழவர் கலகங்கள் "தேசிய
அழிவாகிவிடும்" என்று அவர்கள் அச்சத்துடன் கூக்குரலிடுகிறார்கள்.
டார்ஜிலிங் உழவர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கவும் அதை
முளையிலேயே கிள்ளி எறியவும் ஏகாதிபத்தியமும் இந்தியப் பிற்போக்காளர்களும்
ஆயிரமாயிரம் வழிகளில் முயற்சிக்கின்றனர். டாங்கே ஓடுகாலிக் கும்பல்களும்
இ.பொ.க-யின் புரட்டல்வாதத் தலைவர்களும் இ.பொ.க.யில் உள்ள புரட்சியாளர்களையும்
புரட்சிகர டார்ஜிலிங் உழவர்களையும் அவர்கள் துணிவுடன் செயல்பட்டதற்காக அவதூறு
செய்து தாக்குகிறார்கள். புரட்சிகர டார்ஜிலிங் உழவர்களை கொடூரமாக அடக்குவதில்
"காங்கிரஸல்லாத அரசாங்கம்" எனப்படும் மேற்குவங்க அரசு இந்தியப்
பிற்போக்கு அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டது. இந்த ஓடுகாலிகளும்
புரட்டல்வாதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத்து புரட்டல்வாதம் ஆகியவற்றின் ஏவல் நாய்கள்
என்பதற்கும், இந்தியப் பெருநிலப்பிரபுகள்,
பெரும்(தரகு)
முதலாளிகள் ஆகியோரின் அடிவருடிகள் என்பதற்கும் இது மேலும் சான்றளிக்கிறது…..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
புரட்சியாளர்களின்
பிரகடனம்
(1967 நவம்பர் 13)
தோழர் லெனின் தெளிவாகக் கூறியிருப்பதைப் போல் நமது நாட்டில்
இப்போது ஒரு மிகச் சிறந்த புரட்சிகர சூழ்நிலை அதற்குரிய எல்லா சிறப்பு
அறிகுறிகளுடனும் நிலவுகிறது. ஆயினும் சி.பி.ஐ.(எம்) இன் நவீன திரிபுவாதத் தலைமை
மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டது. அவர்கள் இந்தியப் புரட்சியின்
நோக்கங்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.
இந்த ஓடுகாலிகள் அவர்களுடைய எல்லா புரட்சிகர வார்த்தை
ஜாலங்களுக்கு மாறாக பாராளுமன்றவாத வர்க்க சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்ததோடு
அரசியல் அதிகாரத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தையும் நிரந்தரமாக கிடப்பில்
போட்டுவிட்டனர் என்பது இப்போது தெட்டத் தெளிவாகிவிட்டது. டாங்கேவின் தலைமையை
மறுத்து திரிபுவாதத்திற்கு எதிராக நடத்திய புகழ்பெற்ற போராட்டத்தின்போது
புரட்சிகரத் தோழர்கள் வைத்திருந்த பெரும் நம்பிக்கைக்கு வெட்கம் கெட்ட முறையில்
இவர்கள் துரோகம் இழைத்தனர். இயல்பாகவே இந்தக் காட்டிக்கொடுக்கும் நடைமுறை அமைப்பு
ரீதியான பிளவு ஏற்படுவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தப் பிளவு சித்தாந்த
அடிப்படையில் ஏற்படவில்லை. மாறாக உட்கட்சிப் போராட்டத்தின் மூலமாக ஒரு
விரும்பத்தக்க இயல்பான பிளவாக நிறைவேறுவதைத் தடுக்கும் பொருட்டு டாங்கேவின்
கடிதங்களை செயற்கையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. ஏனெனில் இந்த நவீன
திரிபுவாதிகள் அத்தகைய பிளவைக்கண்டு மிகவும் பீதியடைந்திருந்தனர். எவ்வாறாயினும்
அவர்கள் தங்களுடைய குறிக்கோளில் தற்காலிகமாக வெற்றி பெற்றனர். இந்த சதிக் கும்பல்
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைக்கு முரண்பட்ட கருத்தாக்கங்களை கட்சித் திட்டத்தில்
வஞ்சகத்தனமாகச் சேர்ப்பதில் வெற்றியடைந்தது. சுயமான பகுத்தாய்வு என்ற பெயரில் நமது
நாட்டின் நவீன காலனியத் தன்மை மற்றும் அதன் அரைநிலப்பிரபுத்துவ, அரைக்காலனியப் பண்பு, மேலும் ஜனநாயகப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும்
செயல்தந்திரம் ஆகியவற்றை ஏற்க மறுத்தனர். இதன் மூலம் இந்தியாவில் ஒரு சுதந்திரமான
முதலாளித்துவப் பொருளாதாரம் கட்டப்படுகிறது என்றும் இந்தியப் பெருமுதலாளிகளின்
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாத்திரம் முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை என்றும்
மறைமுகமாகச் சுட்டிக்காட்டினர். இவ்வாறு அவர்கள் தோழர் மாசேதுங்கின் உலகப்
புரட்சிக்கான, சிறப்பாக லின்பியோவால் செறிவான வடிவில் முன்வைக்கப்பட்ட
ஆசிய, ஆப்பிரிக்க,
லத்தீன் அமெரிக்க,
நாடுகளின்
புரட்சிக்கான மாபெரும் வழிகாட்டுதல்களைக் கைவிடுவதில் ஓரளவு வெற்றி பெற்றனர்.
உலகக் கம்யூனிச இயக்கத்தைப் பொருத்தவரையில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல்
"நடுநிலை" வகிப்பது என்பது குருச்சேவ் திரிபுவாதத்தை அவர்கள் ஆதரிப்பதை
மறைப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவே இருந்தது. இவ்வாறு தேசிய ரீதியாகவும்,
சர்வதேச ரீதியாகவும்
டிட்டோயிசத்திற்கான விதைகள் வஞ்சகமாகத் தூவப்பட்டன. அவை காலப்போக்கில்
இகழ்ச்சிக்குரிய மதுரைத் தீர்மானமாகத் துளிர்த்து வெளிப்பட்டது.
நமது கட்சியின் தொடக்கம் முதல் பல்வேறு கட்டங்களில் அதன்
தலைமையை திரிபுவாதிகள் சாகசவாதிகள், சந்தர்ப்பவாதிகள் ஆகியோர் தகாத வழிகளில்
பறித்துக்கொண்டிருந்தனர் என்பதை இங்கு நினைவு கூர்வது பயனுள்ளதாக இருக்கும். இதன்
விளைவாக நமது கொடியின் கீழ் புரட்சிகரத் தோழர்களும் மக்களும் நடத்திய புகழார்ந்த
வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுக்கப்பட்டது. கட்சி
ஊழியர்களின் விலைமதிப்பற்ற இரத்தம் பல கொலை வெறிபிடித்த வர்க்கப் போராட்டங்களில்
சிந்தப்பட்டது. பல குறிப்பிடத்தக்க வெற்றிகளும் ஈட்டப்பட்டன. ஆயினும் அந்த வெற்றிகளின்
பலன்கள் கட்சித் தலைமையிலிருந்த நபர்களின் நம்பிக்கை துரோகத்தினால் அந்தப்
போராளிகளுக்கே கூட கிடைக்காமல் பறித்துக்கொள்ளப்பட்டது. மீண்டும் மீண்டும்
கட்சியிலிருந்த புரட்சிகர நபர்கள் தீவிரமான கொள்கை வழிப்பட்ட உட்கட்சிப்
போராட்டங்களை நடத்தினர். மீண்டும் மீண்டும் அவர்கள் வெளிப்படையாகக்
கிளர்ந்தெழுந்து போராடினர். மீண்டும் மீண்டும் சர்வதேச கம்யூனிச இயக்கம் உதவி
செய்யவும் வழிகாட்டவும் முன்வந்தது. ஒவ்வொரு சமயத்திலும் கட்சி இயந்திரத்தை தவறான
வழிகளில் பறித்துக்கொண்டிருந்த "வலது" மற்றும் "இடது" ஆகிய
இரு சந்தர்ப்பவாதிகளும் உட்கட்சிப் போராட்டங்களையும் சர்வதேசத் தலைமையிடமிருந்து
வந்த நிகரற்றப் பூர்வமான உதவிகளையும் அறிவுரைகளையும் மிகுந்த வெறுப்புடனும்
மதியாமலும் நடத்தியது.
நமது கட்சி மற்றும் நாட்டின் வரலாற்றில் நக்சல்பாரி ஒரு
திருப்புமுனையாக வந்தது. மேற்குவங்க டார்ஜிலிங் மாவட்டத்தின் புரட்சிகரத் தோழர்கள்
கட்சியின் திரிபுவாத தலைமைக்கும் கொள்கைக்கும் எதிராகவும் அதற்கு சற்றும் குறையாத
அளவில் இந்தக் கட்சியின் தலைமையினால் திணிக்கப்பட்ட அமைப்பு ரீதியான
அடிமைத்தனத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்தனர். ஆயினும் இதற்கு முந்தைய
உட்கட்சிப் போராட்டங்களைப் போல் அல்லாது இந்தக் கிளர்ச்சியுடன் புரட்சிகர
நடைமுறையும் தொடர்ந்தது. இது தோழர் மாசேதுங் சிந்தனையின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளாலும் பாட்டாளி வர்க்கத்தினாலும் வழிநடத்தப்பட்ட
ஒரு குறிப்பிடத்தக்க விவசாயப் போராட்டமாகும். இவ்வாறு இது இந்தியாவில் ஜனநாயகப்
புரட்சிக்கான உண்மையான ஒரே பாதையை திறந்துவிட்டது. டார்ஜிலிங் விவசாயிகளின் இந்த
மாபெரும் வர்க்கப் போராட்டம் உலக கம்யூனிச இயக்கத்தின் தலைவராகிய தலைவர் மாசேதுங்
அவர்களால் வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்வமிக்க சகோதர ஆதரவைப்
பெற்றது. இது நீண்டகாலமாகப் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் போராட்டங்களை
உடனடியாக வெளிப்படையான புரட்சிகரக் கலகமாகக் கிளர்ந்தெழச் செய்தது. உடன் நிகழ்வாக
சில சமயங்களில் தன்னெழுச்சியாகவும் சில சமயங்களில் புரட்சியாளர்களால்
வழிநடத்தப்படும் போர்க்குணமிக்க ஆயுதம் தாங்கிய விவசாயப் போராட்டங்களை நாட்டின்
பல்வேறு பகுதிகளிலும் நக்சல்பாரி கட்டவிழ்த்துவிட்டது. ஆயினும் இந்தியப்
புரட்சிக்கு நக்சல்பாரியின் பெரும் பங்களிப்பு புரட்சிகர முழக்கங்களை உதட்டளவில்
உச்சரித்து வந்த கட்சியின் தலைமை மற்றும் இதர கட்சிகளின் முகமூடியைக்
கிழித்தெறிந்து அவர்களுடைய புரட்சிகரத் தன்மையின் போலித்தனத்தை உலகத்தின் முன்
முற்றிலும் அம்பலப்படுத்தியதாகும். அவர்கள் இந்தப் புரட்சிகர விவசாயத் தளத்தை
அதிகபட்ச இராணுவ மற்றும் காவல்துறைக் காட்டுமிராண்டித்தனத்துடன் நசுக்குவதற்கு
இந்தியப் பிற்போக்காளர்களுடன் வெளிப்படையாகவும் கூட ஒன்றிணைந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின்
போராட்டங்கள் இப்பொழுது வெடித்து வருகின்றன அல்லது வெடிக்கப் போகின்றன என்பதை
தோழர்கள் கவனித்திருக்கக்கூடும்.
பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எந்த
அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இந்தப் போராட்டங்களை வளர்த்து வழிநடத்துவது
நம்முடைய தவிர்க்க முடியாத புரட்சிகரக் கடமையாகும். இந்த நோக்கத்தை கருத்தில்
கொண்டு மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையால் வழிநடத்தப்பட்ட ஒரு புரட்சிகரக்
கட்சியைக் கட்டியமைக்க கட்சிக்கு உள்ளும் வெளியிலும் மக்கள் திரள் போராட்டங்களின்
பல்வேறு முனைகளில் தொடர்பற்று தனித்து இயங்கிவரும் எல்லாப் புரட்சியாளர்களும்
தங்களுடைய நடவடிக்கைகளை ஒன்றிணைத்து தங்களுடைய சக்திகளை ஐக்கியப்படுத்த வேண்டும்.
இறுதியானதும் தீர்மானகரமானதுமான மதுரை துரோகத்திற்கு பிறகு மேலும் தாமதிப்பதை
சூழ்நிலை அனுமதிக்காது. இதன் விளைவாக இந்த ஒருங்கிணைப்பிற்கான அவசரத் தேவை
ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட வழிகளில் சிந்தித்துக் கொண்டும்
போராடிக்கொண்டும் இருந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தோழர்களாகிய நாங்கள்
கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஓர் அகில இந்திய ஒருங்கிணைப்புக்
குழுவை உருவாக்கத் தீர்மானித்துள்ளோம். இந்தக் குழுவின் சார்பில் இதன் பிரதானப்
பணிகள் கீழ்கண்டபடி அமையும் என்று அறிவிக்கிறோம்.
* எல்லா மட்டங்களிலும் போர்க்குணம் மிக்க புரட்சிகரப்
போராட்டங்களை, சிறப்பாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் நக்சல்பாரி
மாதிரியான விவசாயப் போராட்டங்களை வளர்த்து ஒருங்கிணைப்பது.
* பொருளாதாரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்
வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்களின் போர்க்குணம் மிக்க புரட்சிகரப்
போராட்டங்களை வளர்ப்பது. இந்தப் போராட்டங்களை விவசாயப் புரட்சியுடன் இணைத்து
தொடர்புபடுத்துவது.
* திரிபுவாதம் மற்றும் நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராக
ஒரு சமரசமற்ற சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவது. இந்த சகாப்தத்தின்
மார்க்சிய-லெனினியமாகிய மாசேதுங் சிந்தனையைப் பரப்புவது. இந்த அடிப்படையில்
கட்சிக்குள்ளும் வெளியிலும் உள்ள எல்லாப் புரட்சியாளர்களையும் ஐக்கியப்படுத்துவது.
* தோழர் மாசேதுங் சிந்தனையின் வெளிச்சத்தில் இந்திய
நிலைமைகளைப் பற்றிய பருண்மையான ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு புரட்சிகரத்
திட்டத்தையும் செயல்தந்திர வழியையும் உருவாக்கும் பணியை மேற்கொள்வது.
...துரோகக் கும்பலின் மத்தியில் பீதியை உண்டாக்கியது. மறுபுறம்
இந்திய உழைக்கும் மக்களும் கட்சி பேதமற்று எல்லாப் புரட்சியாளர்களும் இந்த
நிகழ்ச்சியை உணர்ச்சி பொங்க நம்பிக்கையுடன் வரவேற்றனர். அவர்களைப் பொருத்தவரையில்
நக்சல்பாரி ஒரு பாதையாகும்-அந்தப் பாதை தலைவர் மாசேதுங் சிந்தனையினால் பிரகாசமாக
ஒளியூட்டப்பட்டது. அந்தப் பாதை எல்லா காலனி மற்றும் அரைக்காலனி மக்களையும்
விடுவிப்பதற்கான பாதையாகும். அந்தப் பாதையில் முன்னேறித் தான் சீனப்புரட்சி
வெற்றியடைந்தது.
சற்றேறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா பிரிட்டனின் ஒரு காலனியாக
இருந்தது. இன்று இந்தியா குறிப்பிட்ட சில ஏகாதிபத்திய சக்திகளின் நவீன காலனியாக
மாறியிருக்கிறது. அவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் சோவியத் ரஷ்யாவும்
முக்கியமானவையாக இருக்கின்றன. மனித இனத்தின் மிகவும் ஆக்கிரமிப்புத் தன்மைவாய்ந்த
எதிரியாக உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்திய மக்களின் மிகவும் மோசமான
எதிரியாகவும் கூட உள்ளனர். இந்தியாவின் மீது அவர்களுடைய நவீன காலனியப் பிடி
இப்போது முழுமை பெற்றிருக்கிறது. உலகத்தின் முதலாவது சோசலிச அரசில் முதலாளித்துவ
சர்வாதிகாரத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ள சதிகார சோவியத் ஆளும்கும்பல் இன்று
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செயல்வடிவில் கூட்டுச் சேர்ந்துள்ளது. அத்துடன்
அவர்கள் இந்தியாவை அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டின் புதிய காலனியாக
மாற்றியுள்ளனர். உலகின் மீது கூட்டாக மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக அமெரிக்க
ஏகாதிபத்தியமும் சோவியத் நவீன காலனியவாதிகளும் ஈடுபட்டுள்ள நேச உறவுக்கு இந்தியா
ஒரு முழுமை பெற்ற உதாரணம் ஆகும்.
மேலும் மேலும் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல்
நெருக்கடிகள் மக்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலுள்ள மிகக்கடுமையான
முரண்பாடுகளின் விளைவாகும். இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவ ஏகாதிபத்திய
அமைப்பு முறை இறுதி அழிவை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. அரைக்காலனி,
அரைநிலப்பிரபுத்துவ
இந்தியாவில் மக்களுக்கும் ஏகாதிபத்திய மற்றும் நவீன காலனிய சக்திகளுக்கும்
இடையிலான முரண்பாடும், விவசாயிகளுக்கும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கும்
இடையிலான முரண்பாடும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் தரகு அதிகார வர்க்க வடிவத்தை
மேற்கொண்டுள்ளன. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம்,
சோவியத் திரிபுவாதம்,
பெருநிலப்பிரபுத்துவ
வர்க்கம், இந்திய தரகு அதிகார வர்க்க முதலாளிகள் ஆகியோர் இந்திய
மக்களின் பிரதான எதிரிகள் ஆவர். இவை இந்திய மக்களின் மீது பெருஞ்சுமையாக அழுத்திக்
கொண்டிருக்கும் நான்கு மலைகளாகும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சி இந்த நான்கு நேரடி மற்றும் மறைமுக
எதிரிகளையும் தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே வெற்றியடைய முடியும். தொழிலாளர்
வர்க்கத்தின் தலைமையின் கீழ் புரட்சியில் பிரதான சக்தியாக இருக்கும் விவசாயிகள்
கிராமப்புறங்களில் புரட்சிகர தளப்பிரதேசங்களை உருவாக்கி ஒரு நீண்டகால ஆயுதப்
போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களை
சுற்றிவளைத்து இறுதியாக அவற்றைக் கைப்பற்றி நாடு தழுவிய இறுதி வெற்றியை ஈட்ட
வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் விவசாயிகளுடனான நேச உறவின் அடிப்படையில்,
தொழிலாளி வர்க்கம்,
விவசாயிகள்,
குட்டிமுதலாளிகள்
மற்றும் தேசிய முதலாளிகளின் ஐக்கிய முன்னணி கட்டப்படும். இந்தியப் புரட்சியின்
வெற்றி நமது காலத்தின் மார்க்சிய-லெனினியத்தின் மிகவும் உயர்ந்த பட்ச வளர்ச்சியான
தலைவர் மாசேதுங் சிந்தனைகளால் புரட்சியாளர்களும் மக்களும் எந்த அளவுக்கு
உணர்வூட்டப்படுகின்றனர் என்பதைச் சார்ந்துள்ளது. அனைத்து கம்யூனிஸ்ட்
புரட்சியாளர்களின் தலையாய கடமை மாசேதுங் சிந்தனையைப் பிரச்சாரம் செய்வதும்
பரப்புவதும் ஆகும். இந்திய மக்களின் எதிரிகளை இரகசிய சதியின் மூலமாக அல்ல,
மாறாக மக்கள் திரள்
பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே தூக்கி எறிய முடியும்.
எல்லாவகையான திரிபுவாதிகளும் டாங்கே துரோகிகள் அல்லது நவீன
திரிபுவாதிகள்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்,
சோவியத் திரிபுவாதம்,
உள்நாட்டுப்
பிற்போக்காளர்கள் ஆகியோர் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் இந்திய மக்களின் எதிரிகள்
என்பது நமது அனுபவமாக இருந்துள்ளது.
பர்துவானில், நவீன திரிபுவாத தலைவர்கள் மார்க்சிய விரோத திரிபுவாத
சித்தாந்தத்திற்கும் அரசியல் வழிக்கும் இறுதி அங்கீகாரம் அளித்தனர். அவர்கள் முன்
எப்போதையும் விட அதிக அளவு வஞ்சகர்களாகவும் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களாகவும்
மாறினர். மார்க்சியம்-லெனினியம் தலைவர் மாவோவின் சிந்தனைகள் ஆகியவற்றை மறுதலித்து
புரட்சிகர வன்முறைப் பாதையைக் கைவிட்டு பாராளுமன்றப் பாதையை மேற்கொள்ளும் ஒரு......
கட்சி அமைப்பைப் பற்றிய தீர்மானம்
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
1969, ஏப்ரல் 22
நமது அரசியல் தீர்மானம்,
நமது தேசிய விடுதலைப்
போராட்டத்தின் ஒவ்வொரு நெருக்கடியான கட்டத்திலும்,
கட்சித் தலைமை எவ்வாறு
கட்சியை வலது சந்தர்ப்பவாதம் மற்றும் இடது குறுங்குழுவாத சகதிக்குள் ஆழ்த்துவதன்
மூலம் புரட்சியின் நோக்கங்களை உணர்வுபூர்வமாகக் காட்டிக்கொடுத்தது என்பதை ஏற்கனவே
போதுமான அளவு தெளிவுபடுத்தியிருக்கிறது. தெலுங்கானா விவசாயிகளின் மாபெரும் ஆயுதப்
போராட்டங்கள், சுதேச சமஸ்தான மக்களின் போராட்டங்கள்,
வட இந்தியாவில்
மாபெரும் தேபகா மற்றும் பகஸ்த் விவசாயப் போராட்டங்கள்,
இந்திய கடற்படை
வீரர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய படைகளின் இதர பகுதியினரின் மாபெரும் போராட்டங்கள்
ஆகியவற்றைக் கட்சித் தலைமை எவ்வாறு காட்டிக்கொடுத்தது என்பதை நாம் பார்த்தோம்.
யுத்தத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்தியா முழுவதையும் சூழ்ந்திருந்த
ஏகாதிபத்தியத்திற்கும் அவற்றின் அடிவருடிகளுக்கும் எதிரான மரண அடிகளைக்
கொடுத்துக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் உலக தழுவிய எழுச்சியின் ஓர்
அங்கமான, ஆசிய,
ஆப்பிரிக்க,
லத்தீன் அமெரிக்க
நாடுகளில் கட்டமைப்பு முழுவதையும் ஆட்டங்கான வைத்துக் கொண்டிருந்த மாபெரும்
ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு எழுச்சிகளைக் கண்டு கட்சித்
தலைமை எவ்வாறு பீதியில் அதிர்ச்சியுற்று பின்நடைந்தது என்பதை நாம் பார்த்தோம்.
யுத்தத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் வர்க்கப்போராட்டத்திற்கான ஆயுதமாக இருந்த
கட்சியை வர்க்க சமரசத்திற்கான ஆயுதமாக, புரட்சிப் படையின் தலைமை என்ற நிலையிலிருந்து
எதிர்புரட்சியின் கைக்கூலியாகவும், ஒரு புரட்சிகரக் கட்சி என்ற நிலையிலிருந்து ஒரு சட்டரீதியான
பாராளுமன்றக் கட்சியாகவும், ஒரு பாட்டாளிவர்க்க சர்வதேசக் கட்சி என்ற நிலையிலிருந்து
ஒரு குறுகிய தேசிய வெறிகொண்ட கட்சியாகவும் மாற்ற கட்சித் தலைமை எவ்வாறு உணர்வுபூர்வமாகச் செயல்பட்டது
என்பதை நாம் கண்டோம். திரிபுவாதத் தலைமையினால் நக்சல்பாரியின் வீரமிக்க விவசாய
மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையானது
துரோகத்தின் உச்ச கட்டமாகவும், அவர்களுடைய அருவறுக்கத்தக்க எதிர்புரட்சி முகத்தை மறைத்து
வந்த திரையை முற்றிலுமாகக் கிழிக்கெறிந்த நடவடிக்கையாகவும் இருந்தது.
ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கைக்கூலிகளுக்கும் எதிரான இதுவரை அறியப்பட்ட
வரலாற்றிலேயே மிகவும் நீடித்ததும் இன்னல் நிறைந்ததுமான சீன மக்களின் மாபெரும்
ஆயுதம் தாங்கிய போராட்டத்திலிருந்து அவர்கள் படிப்பினைகளைப் பெற மறுத்துவிட்டனர்
என்றபடியால் கட்சித் தலைமையின் இந்த துரோகங்களில் எதுவும் தற்செயலானது அல்ல என்பதை
கட்சி வரலாற்றைப் பற்றிய ஒரு கவனமான ஆய்வு துளியும் சந்தேகத்திற்கிடமற்ற வகையில்
நிரூபிக்கிறது. இந்த துரோகங்கள் நிகழ முடிந்ததற்கு காரணம் தலைமை,
உழைக்கும் மக்களிடையே
குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே கட்சி வேர்கொள்ளாமல்
இருக்கும் வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொண்டதாகும். அவை நிகழ முடிந்ததற்கு காரணம்,
அணிகளின் அரசியல்
உணர்வு வேண்டுமென்றே தாழ்ந்த மட்டத்தில் வைக்கப்பட்டிருந்ததாகும்.
ஆயினும் கட்சி அணிகள், தலைமை பின்பற்றிய காட்டிக்கொடுக்கும் கொள்கைகளுக்கு
எதிராகத் தொடர்ந்து கிளர்ச்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வந்தனர் என்பதையும்,
தொடர்ந்து கோட்பாடு,
நடைமுறை ஆகிய
இரண்டிலும் தளர்வின்றி, புரட்சிகரப் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வழிக்காகப்
போராடினர் என்பதையும் கட்சி வரலாறு நிரூபிக்கிறது. கட்சி அணிகள் மேற்குறிப்பிட்ட
போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவதிலும் விடாப்பிடியாக நடத்துவதிலும் ஒரு மகத்தான
பாத்திரமாற்றியதோடு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றின் தளைகளிலிருந்து
விடுவிப்பதற்காக இந்தியாவில் போராட்டக் களம் முழுவதும் வர்க்கப் போராட்டத் தீயை
அணையாது பாதுகாத்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் துயரம்மிக்க
வர்க்கப் போரில் முன்னணியில் நின்றதோடு கொடூரமான அடக்குமுறையைத் தாங்கிக் கொண்டு,
அவர்களில்
ஆயிரக்கணக்கானோர் இந்தியப் புரட்சியின் இலட்சியங்களுக்காக தியாகிகள் ஆனார்கள்.
இவற்றில் எதிர்பாராதது எதுவுமே இல்லை. கம்யூனிசத்தின் மிக உயர்ந்த இலட்சியங்களால்
உணர்வூட்டப்பட்டும், துயருற்ற மக்கள் திரளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டும்
இருந்த கட்சி அணிகள் இந்தக் காலகட்டம் முழுவதும் மக்களின் புரட்சிகர உந்துதல்களை
பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பது இயல்பானதாகும்.
தொகுப்பாகக் கூறின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறானது,
முதலாளித்துவ
நிலைப்பாட்டிற்கும் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டிற்கும் இடையில் முதலாளித்துவப்
பாதைக்கும் பாட்டாளி வர்க்கப் பாதைக்கும் இடையில் முதலாளித்துவப் பிற்போக்குத்
தலைமைக்கும் பாட்டாளி வர்க்க புரட்சிகர அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இடைவிடாத
போராட்ட வரலாறாக இருந்துவந்துள்ளது. என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.
நக்சல்பாரி விவசாயிகளின் புரட்சிகரப் போராட்டம்,
எதிர்புரட்சித்
தலைமையிடமிருந்து புரட்சிகர அணிகள் இறுதியாக முறித்துக்கொண்டதைச்
சுட்டிக்காட்டுகிறது என்பதையும், கம்யூனிஸ்ட்டுப் புரட்சியாளர்களின் அகில இந்திய
ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியது, இந்தியாவில் ஓர் உண்மையான புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டுக்
கட்சியை கட்டியமைப்பதற்கான சங்கிலித் தொடர் போன்ற நடைமுறையில் முதல் கண்ணியாகும்
என்பதை வலியுறுத்திக் கூறவேண்டும். வெல்லப்படமுடியாத தலைவர் மாவோவின் சிந்தனையால்
உணர்வூட்டப்பட்டும் மாபெரும் சீனப்புரட்சியிலிருந்து படிப்பினைகள் பெற்றும்,
அகில இந்திய
ஒருங்கிணைப்புக்குழு நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக ஸ்ரீகாகுளம்,
லக்கிம்பூர்,
கேரி மற்றும் இதர
இடங்களில் வீரமிக்க ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தி வருகிறது. பாராளுமன்றப்
பாதையின் ஓட்டாண்டித்தனம் நிரூபிக்கப்பட்டுவிட்டதோடு திரிபுவாதிகள்,
நவீன திரிபுவாதிகள்
ஆகியோரின் துரோகம் பெருமளவுக்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பதினெட்டு
மாதங்களும் கட்சித் திட்டத்தின் அனைத்து இன்றியமையாத கூறுகளிலும் இந்தியப்
புரட்சியாளர்கள் ஐக்கியப்பட்டதற்கு சான்று பகர்கின்றது. இவ்வாறு உடனடியாகக்
கட்சியை உருவாக்கும் பணி நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றது. தலைவர் மாவோ கூறினார்,
“ஒரு புரட்சியை நடத்த
வேண்டும் என்றால் ஒரு புரட்சிகரக் கட்சி இருக்க வேண்டும்”.
அரசியல் சித்தாந்த ஒருமைப்பாடு
ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்குவது என்பது முதலாவதாகவும்
மிக முக்கியமாகவும் சித்தாந்த மற்றும் அரசியல் உருவாக்கமாகும். கட்சியின் நவீன
திரிபுவாதத் தலைமை சித்தாந்தம் மற்றும் அரசியல் பிரச்சனைகளை இரண்டாம் இடத்திற்கு
ஒதுக்கிப் போடுவதன் மூலமாகவும், அமைப்புப் பணிகளை முதன்மைப் படுத்துவதன் மூலமாகவும் அணிகளை
எளிதாக ஏமாற்ற முடிந்தது. பெரும்பான்மைப் புரட்சிகர அணிகள் கட்சி ஐக்கியம் மற்றும்
சட்டப்பூர்வம் பற்றிய தவறான தனிப்பட்ட கருத்துக்களால் ஊசலாட்டம் அடைந்து
ஒதுங்கினார்கள், இதன் விளைவாக திரிபுவாதக் கும்பலின் கைப்பாவைகளாக
மாறினார்கள். நாம் இப்போது இந்தத் தவறுகளில் இருந்து ஒரு சரியான படிப்பினை பெற்று
எல்லாவற்றுக்கும் மேலாக சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் முதலிடம் அளிக்க
வேண்டும்.
இன்று கட்சியின் சித்தாந்த மற்றும் அரசியல் உருவாக்கம்
என்று பொருள்படுவதாவது- நாம் அனைவரும் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைகளை எல்லா
புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டியாக ஏற்று அவற்றின் பொதுவான உண்மைகளை நமது
பருண்மையான நிலைமைகளுக்கு பயன்படுத்துவோம். நாம் அனைவரும் நமது சகாப்தத்தின்
மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியான தலைவர் மாவோவின் உண்மையான சீடர்களாவோம் என்று
சபதம் ஏற்கிறோம்.
நாம் அனைத்து வகையான திரிபுவாதிகளுக்கும் எதிரான நமது
போராட்டத்தின்போது எழுப்பிய அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றியும் அத்துடன்
பெரும்பான்மையான புரட்சியாளர்கள் செய்த தவறுகள் பற்றியும் கூட ஒருமித்த
கருத்துக்களை அடைய வேண்டும்:
* நாம் அனைவரும் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைகளை எல்லாப்
புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டியாக ஏற்று அவற்றின் பொதுவான உண்மைகளை நமது
பருண்மையான நிலைமைகளுக்கு பயன்படுத்துவோம். நாம் அனைவரும் நமது சகாப்தத்தின்
மாபெரும் மார்க்சிய-லெனினியவாதியான தலைவர் மாவோவின் உண்மையான சீடர்களாவோம் என்று
சபதம் ஏற்கிறோம்
* நாம் அனைத்துவகையான திரிபுவாதிகளுக்கும் எதிரான நமது
போராட்டத்தின்போது எழுப்பிய அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றியும் அத்துடன்
பெரும்பான்மையான புரட்சியாளர்கள் செய்த தவறுகள் பற்றியும் கூட ஒருமித்த
கருத்துக்களை அடைய வேண்டும்.
* நாம் நமது கட்சித் திட்டத்தின் இன்றியமையாத கூறுகள் பற்றி
ஒருமித்த கருத்தை அடைய வேண்டும். எடுத்துக்காட்டாக இந்திய சமுதாயத்தின் தன்மை,
இந்தியப் புரட்சி
பற்றிய தொலைநோக்கு...
கட்சி வழி மீது தோழர்கள் சூ என் லாய்,
காங் ஷெங் ஆகியோரது
விமர்சனம்
(1970 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்,
இ.க.க.(மா-லெ)வின்
தலைமையானது சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையுடன் விவாதிப்பதற்காக சரோஜ்தத்தா,
சௌரன் போசு,
மற்றும் என்னையும்
பீகிங்கிற்கு அனுப்ப முடிவெடுத்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால்,
சரோஜ்தத்தாவும் நானும்
செல்ல இயலவில்லை. சௌரன் போசு ஆகஸ்ட்டு மாத இறுதிவாக்கில் இலண்டன்,
திரானா(அல்போனியா)
வழியாகச் சீனாவிற்குப் பயணமானார். அவர் அக்டோபர் 29 அன்று தோழர்கள் சூஎன்லாய்,
காங் ஷெங் ஆகியோரைச்
சந்தித்தார். குறிப்புகள் எடுக்கக்கூடாது என்றும்,
இந்தியாவை அடையும்வரை
சந்திப்பைக் குறித்து எதுவும் எழுதி வைக்கக் கூடாது என்றும் சீனத் தோழர்களால்
அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சந்திப்பிற்குப் பிறகு,
தான் தங்கியிருந்த
விடுதியில் வைத்து அவர் சில குறிப்புகளை எழுதியதாகவும்,
நவம்பர் மாத
இறுதிவாக்கில் கொல்கத்தாவிற்குத் திரும்பிய பிறகு அவர் அந்தக் குறிப்புகளை அறிக்கை
வடிவில் தயார் செய்ததாகவும் சௌரன் போசு எங்களிடம் கூறினார். சௌரன் போசின் அறிக்கை
எவ்விதத் திருத்தங்களும் செய்யப்படாமல் அப்படியே தரப்படுகிறது. கண்ணுக்குப்
புலப்படுகின்ற பிழைகள் கூடத் திருத்தப்படவில்லை. (அந்த அறிக்கையானது முதலில்
சுனிதி குமார் கோஷ் தொகுத்த வரலாற்றுத் திருப்பு முனை: லிபரேசன் கட்டுரைத் திரட்டு
தொகுதி-2
என்ற நூலில் வெளிவந்தது.)
தோழர் சூ என் லாய்
நீங்கள் கட்சியைத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.
திரிபுவாதம், ஏகாதிபத்தியம், பிற்போக்குவாதம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் அது
தோன்றியுள்ளது. சர்வதேச இயக்கத்தில் எப்போதுமே தீய சக்திகள் இருந்து வந்துள்ளன.
ஆனால் சமூக ஏகாதிபத்தியம் என்பது புதிது. அது அரசு அதிகாரத்தை கையில்
வைத்திருப்பதால் அது வேறு வகைப்பட்டதாக உள்ளது. உங்களுக்கு ஆரம்பக்கட்ட வெற்றி
கிடைத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு புதியதொரு சூழலில் நீங்கள்
உள்ளீர்கள்.
“மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்” குறித்துப் பேசிய தலைவர் 1.
கட்சி,
2. இராணுவம்,
3. ஐக்கிய முன்னணி ஆகிய
மூன்று காரணங்களால் நாம் வென்றோம் என்று கூறினார். கட்சிக்கு உணர்வு முதலியனவும்
இருக்கின்றன. (மேற்கோள்)
நாம் மாசேதுங் சிந்தனை பற்றி பேசும்போது
மார்க்சியம்-லெனினியத்தைக் கொண்டு கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது என்று
பொருள்படும். அதாவது குறிப்பான நிலைமைகளுடன் அதை எவ்வாறு இணைப்பது என்று
பொருள்படும். சீனப் புரட்சியை மார்க்சிய-லெனினியத்துடன் நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவும்
தலைவர் மாபெரும் தலைவராக மாறினார். முக்கியக் கட்டங்களில் சீனப்புரட்சியை
வழிநடத்திய அவர் இப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். மார்க்சிய-லெனினியத்தை
குறிப்பாக எவ்வாறு பொருத்துவது என்றும், பிற நாடுகளின் வடிவங்கள்,
அமைப்புகள் ஆகியவற்றை
இயந்திரகதியில் பின்பற்றக் கூடாது என்றும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
பண்பாட்டுப் புரட்சி சித்தாந்தப் புரட்சியாக மட்டும் இருக்கவில்லை. மாறாக
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சியும் ஆகும். சோசலிசத்தில் இது ஒரு புதிய
விடயமாகும்.
ஒவ்வொரு நாட்டின் சூழல்களும் வேறுபடுவதால்,
ஒவ்வொரு கட்சியும்
குறிப்பான முறையில் மார்க்சிய-லெனினியத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டும். இது
தன்னடக்கம் அல்ல; யதார்த்தத்தின் படி செயல்படுவதாகும். உங்களுடைய பாதையை
உங்களால் மட்டுமே வகுக்க முடியும்.
தலைவர் சர்வதேச அளவில் சான்றுகாட்டக்கூடிய தலைவராக உள்ளார்
என்பதையும், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோருக்குப் பிறகு அவர்தான்
மார்க்சிய-லெனினியத்தை உயர்த்திப் பிடித்து புதிய கட்டங்களுக்கு உயர்த்தியுள்ளார்
என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. நாம் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால்
செல்லக்கூடாது என்று தலைவர் கூறுகிறார். அவர் சீனாவுக்குக் காட்டிய வழிகளை வேறு
இடத்தில் பின்பற்ற முடியாது. நமது இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் சகோதரத்துவ
உறவுகளைப் போன்றதாகும். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்ற உறவுகள் ஆகும். ஆனால்
நாம் இதன் எல்லைக்கு அப்பால் கடந்துவிட்டால் அது மாசேதுங் சிந்தனைக்கு...
இது சரியான முறையல்ல. இது அமைப்பின் தன்மையையே
மாற்றிவிடுகிறது. இவ்வனைத்துக் காரணங்களுக்காகவே நாங்கள் அந்தக் கட்டுரையை
மறுபிரசுரம் செய்யவில்லை.
உங்களுடைய பொதுவான திசைவழி சரியாகவே இருக்கிறது. சில
குறிப்பிட்ட கொள்கைகள் மட்டுமே மார்க்சிய - லெனினிய மற்றும் மாசேதுங் சிந்தனைக்கு
ஏற்புடையதாக இல்லை. 1968 ஆம் ஆண்டில் நாம் வெகுமக்கள் அடித்தளங்கள் பற்றி உங்களிடம்
பேசினோம். கீழிருந்து மேலாக, முக்கிய பொருளாதார நலன்களின் ஊடாக.
உங்களுடைய கட்டுரையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள்
குறித்தும், நகரங்களில் நடைபெறும் பணிகள் குறித்தும் எதுவும்
குறிப்பிடப்படவில்லை. பண்பாட்டுப் புரட்சிக்கான வெகுமக்கள் அமைப்புகள் போன்ற
அமைப்புகளை அப்படியே நகலெடுத்து கட்டியெழுப்பக் கூடாது. தொழிற்சங்கங்கள் பற்றி
உங்களுடைய கண்ணோட்டம் சரியாக இல்லை அல்லது செயலூக்கமாகத் தெரியவில்லை.
“தொழிற்சங்கங்களில் கட்சி ஈடுபடாது” என்ற கண்ணோட்டம் கொள்கை பற்றியதாகும். அதை மறு
ஆய்வு செய்ய வேண்டும். (தோழர் சூஎன்லாய்: சிறிய குழு நடவடிக்கைகளை தாக்குதல்
நடவடிக்கையாகவும், வெகுமக்கள் நடவடிக்கைகளை தற்காப்பு நடவடிக்கைகளாகவும்
கருதும் போக்கு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.)
நடுத்தர விவசாயிகள் பற்றிய கண்ணோட்டம்,
அதாவது அவர்கள்
கொரில்லா நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறுவது தவறானது ஆகும்.
நாகிரெட்டிக்கு எதிரான விமர்சனத்தில், அவர் நிலங்களையும், பயிர்களையும் விநியோகிக்க விரும்புவதாக நீங்கள்
கூறியுள்ளீர்கள். நாகி உண்மையில் என்ன கூறினார் என்பது எங்களுக்குத் தெரியாது.
ஆனால் நீங்கள் இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்கிறோம்.
இதில் எங்களுடைய அனுபவம் என்னவெனில் “ஆயுதப் போராட்டத்தைக் கட்டியமைத்து,
கொரில்லாப் போரை
கட்டியமைத்து நிலத்தையும், வீட்டையும் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு அழைப்பு
விடுத்ததன் காரணமாக நாங்கள் வெற்றி பெற்றோம்.”
முதலாவதாக, மக்கள் திரளை ஒன்றுதிரட்டுவதற்காக நாங்கள் விவசாயிகள்
கொள்கை ஒன்றை வைத்திருந்தோம். பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நாங்கள்
போராடினோம்.
(பக்கத்தின் மேல்பகுதி விடுபட்ட/மங்கலான வரிகள்)
...எங்களுடைய அனுபவம் வேறொருவகையாக உள்ளது. எனவே நீங்கள்
குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். பொதுவாக பிரச்சனைகளைத் தீர்த்து
விட முடியாது. குறிப்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். “தலைவர்கள் தங்களை
மாற்றிக்கொள்ளுங்கள்; நாங்கள் பின்னால் வருகிறோம் என்று கூறுகிறார்கள்” என்று 1967 ஆம் ஆண்டில் தலைவர் மாவோ கூறினார்.
அக்டோபர் 8 அன்று, வெளிவந்த இந்தியச் செய்தித்தாளில் “தவறான கருத்துக்கள்,
தவறான கொள்கை,
தவறான பணிமுறைகள்
ஆகியவை புரட்சியின் எதிரிகளாகும்” என்று தோழர் சாரு மஜூம்தார் கூறியுள்ளதை
கண்டோம். இது முற்றிலும் சரியான கருத்தாகும். ஆனால் மாற்றங்கள் படிப்படியாக
மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்; மக்களுடைய உணர்வுகள், ஆர்வமும் பாதிக்கப்படக்கூடாது;
அவசரப்பட்டு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது; திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும்;
தவறுகளைத் திருத்தும்
போது, தவறான
கொள்கைக்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும்; தற்போதைய சூழலில் ஒரு தெளிவான விவசாயிகள்
கொள்கையை வைத்திருப்பது அவசியமாகும்; மக்களுடன் கலந்தாலோசியுங்கள்;
அவர்களுடைய
படிப்பினையைத் தொகுத்துக் கொள்ளுங்கள்; செயலூக்கத்துடன் இரகசியக் குழுக்களைப் படிப்படியாக
ஆயுதப்படையாக மாற்றுங்கள்.
தோழர் சாரு மஜூம்தாரின் தலைமையில் உங்களுடைய பாதை பிரகாசமாக
இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
தோழர் சூ என் லாய்
எதிரிக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை “இடர்பாடுகளுக்கு,
சாவிற்கும் அஞ்சக்
கூடாது” என்பது இறுகிய முறையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்;
இடர்பாடுகளை மக்களிடம்
பங்கிட்டுக் கொள்ளுங்கள்; அவர்களிடம் இருந்து தனிமைப்படாதீர்கள்;
சாகசத்திற்காக உயிரை
அர்ப்பணித்துவிடாதீர்கள்; எதிரிகளை எதிர்த்துப் போரிடுங்கள்;
காவல்துறையினர் மீது
இரகசியக் கொலைகள் மேற்கொள்வது அராஜகவாதமாகும்;
மக்கள் பாதை
தனிமைப்பட்டதாகும்; அது நிலைக்கக்கூடியதல்ல.
(அக்டோபர் 29, 1970)
************
1970 மே மாதத்தில் நடந்த கட்சி காங்கிரசில் ஆர்.என். உபாத்யாயா.
உத்திரப்பிரதேசத்திலிருந்து கட்சியின் பிரதிநிதியாக
கலந்துகொண்ட ராம்நாராயண் உபாத்யாயா வெளிப்படுத்திய கருத்துக்கள்.
CPI(M.L)ன் அகில இந்தியக் காங்கிரசானது 1970 மே மாதத்தில்
கல்கத்தாவில் ரகசியமாக நடந்தது. பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த கட்சியின்
பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். அது முதலாவது காங்கிரஸ் என
குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன்னர் ஏழாவது காங்கிரஸ் நடந்திருந்தபடியால் அது
எட்டாவது காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது. உ.பி.யிலிருந்து நான்கு தோழர்கள் கலந்து
கொண்டனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: தோழர்கள் சிவகுமார்மிஸ்ரா, ஆர். என். உபாத்யாயா, ராம்ஸ்வரூப்யாதவ் மற்றும்
தோழர் மகேந்திரசிங்.
முதலாவதாக தோழர்கள் சரோஜ்தத்தா, சுசிதல்ராய்ச்சவுத்திரி மற்றும் தோழர்
கனுசன்யால் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மூன்றுபேர் கொண்ட தலைமைக் கமிட்டி
தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகு தோழர் சத்தியநாராயண சின்ஹா காங்கிரசின்
பிரதிநிதிகள் முன்பாக வரைவுத் திட்டத்தை முன்வைத்தார். அந்தத் திட்டத்தின் மீது
அவர் ஒருநீண்ட உரையாற்றினார். அதன் பிறகு வரைவுத் திட்டத்தைக் குறித்து உரையாற்றவோ
அல்லது திருத்தங்கள் வைக்கவோ விரும்பும் காங்கிரஸ் பிரதிநிதிகள், தங்களது பெயர்களைக் கொடுக்கும்படி தலைமைக் கமிட்டியானது பிரதிநிதிகளை
கேட்டுக்கொண்டது. பிரதிநிதிகள் அமைதியாக இருந்தனர். நான் எழுந்து வரைவுத்திட்டம்
குறித்து எனது திருத்தங்களை முன்வைப்பதற்கு அனுமதி கேட்டேன். அவ்வாறு செய்ய நான்
அனுமதிக்கப்பட்டேன்.
எனக்கு நினைவு இருக்கிற அளவுக்கு எனது திருத்தங்களை இங்கே
நான் கொடுக்கிறேன். கூடவே லிபரேசனில் வெளியிடப்பட்ட...
...சிலகட்டுரைகள் சம்பந்தமான எனது விமர்சனங்களையும் முன்வைத்தேன். இங்கு
அவற்றையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
* தோழர் சாருமஜூம்தார் எதைச்
சொன்னாலும் அதை இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழல்தான் கட்சியில்
நிலவியது. எனவே அவரைப்பற்றிய எந்தவிதமான விமர்சனமும் அசிம்சட்டர்ஜி போன்ற
தோழர்களுக்கு சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஒருசிலரைத் தவிர அனைத்துப் பிரதிநிதிகளும்
எனது திருத்தங்களை மிகக்கவனமாக கேட்டனர்.
வரைவுத் திட்டத்திற்கான திருத்தங்கள்:
* "இந்திய முதலாளிகள்
இயல்பிலேயே தரகர்கள்" என்பதானது இந்திய முதலாளிகளின் மேலெடுக்கு என்பதாக
இருக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து முதலாளிகளையும் தரகர்கள் என்று அழைப்பது தவறு
ஆகும். தோழர் எஸ்.என். சின்ஹா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தோழர் சாருமஜூம்தார் எனது
கருத்துடன் உடன்பட்ட பிறகே இறுதியாக அவர் ஏற்றுக்கொண்டார்.
* இந்திய மக்கள் இப்போது நான்கு
மலைகளால் அழுத்தப்படுகிறார்கள் என்பதற்குப் பதிலாக இந்திய மக்கள் மூன்று மலைகளால்
அழுத்தப்படுகிறார்கள் என்று மாற்றப்படவேண்டும். அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
தலைமையிலான ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும்
தரகுமுதலாளிகள் போன்ற மூன்று மலைகளால் அழுத்தப்படுகிறார்கள் என்று
மாற்றப்படவேண்டும்.
வரைவுத் திட்டத்தில் “சோவியத் சமூக ஏகாதிபத்தியம்” என்ற
சொற்றொடர் எங்கு வந்தாலும் அது நீக்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக அவ்விடத்தில்
“சோவியத் திருத்தல்வாதத் தலைமை” என்று குறிப்பிடப்பட வேண்டும்.
* வரைவுத் திட்டம் கூறுவதாவது:
"அரசு ஏகபோக முதலாளித்துவம் அதாவது அதிகார வர்க்க முதலாளித்துவம்" இதில்
"அதிகாரவர்க்க முதலாளித்துவம்" என்று திட்டத்தில் எங்கு வெளிப்பட்டாலும்
அது நீக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் "அரசு ஏகபோக முதலாளித்துவம்"
என்ற சொற்றொடர் அவ்வாறே இருக்கவேண்டும். அரசு ஏகபோக முதலாளித்துவத்தினை
அதிகாரவர்க்க முதலாளித்துவமாக பொருள் கொள்வது தவறாகும்.
* வரைவுத் திட்டத்தில் பின்வரும்
லின்பியோவின் மேற்கோள் நீக்கப்படவேண்டும். அதாவது "எதிரிக்கு எதிராக
மக்களை...
...அணிதிரட்டவும் அவர்களது முழுபலத்தையும் எதிரிக்கு எதிராக பிரயோகிக்கவுமான
ஒரே வழி கொரில்லா யுத்தம்தான்" என்பது நீக்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக
"ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்டமானது எதிரிக்கு எதிராக ஒட்டுமொத்த
மக்களையும் அணிதிரட்டவும், ஐக்கியப்படுத்தவுமான முதன்மையான
போராட்டவடிவமாகும்" இதை இதர போராட்ட வடிவங்களுடன் சேர்க்க வேண்டும் என்பதாக
எழுத வேண்டும்.
"நமது புரட்சியானது சீன கலாச்சாரப் புரட்சியின் ஒரு பாகமாகும்" என்பது
நீக்கப்படவேண்டும். "இந்தியப் புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் ஒரு
பாகமாகும்" என்று கூறுவது சரியானது ஆகும்.
என்னால் முன்வைக்கப்பட்ட மேற்கூறிய அனைத்து திருத்தங்களும்
நிராகரிக்கப்பட்டன.
* லிபரேசனில் பிரசுரிக்கப்பட்ட
கட்டுரைகளுக்கு நான் முன்வைத்த எதிர்க்கருத்துக்கள் அனைத்தும் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன:
* “அதிகாரம்” என்ற தலைப்பில்
அதில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அது சாருமஜூம்தாரின் “அதிகாரத்தை” ஏற்றுக்கொள்ள
வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. கொள்கை ரீதியாகவே அது தவறென்று நான் கருதினேன்.
அந்தக் கட்டுரையிலேயே அவரை இந்தியாவின் லெனின் மற்றும் மாவோ என்பதாக விவரிக்கப்பட்டிருந்தார்.
இது தனிநபர்வாதத்தை உயர்த்திப்பிடித்தது. எனவே நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது
இந்தக் கண்ணோட்டத்தைக் கண்டு அசிம்சட்டர்ஜி கடும்கோபம் கொண்டார். நான் அதை
பொருட்படுத்தவே இல்லை.
* "வர்க்க எதிரியை
அழித்தொழிப்பது என்பது வர்க்கப் போராட்டத்தின் உயர்ந்த கட்டம் என்றும் கொரில்லா
யுத்தத்தின் துவக்கம்" என்றும் அது கூறியது. அது முற்றிலும் தவறு. வர்க்க
எதிரியை அழித்தொழிப்பது என்பதன் பொருள் அவ்வர்க்கத்தின் படை மற்றும் அதன்
அதிகாரத்தின் அழிவைக் குறிப்பதாகும். மாறாக சில தனிநபர்களைப் படுகொலை புரிவது
அல்ல.
* "தலைவர் மாவோ நமது
தலைவராவார்" என்கிற கருத்தும் எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அவ்வாறு
கூறுவதன் மூலமாக நாம் மக்களிடமிருந்து மேலும் அந்நியப்படவே வழிவகுக்கும்.
***********
இந்தப் பகுதியானது 1969, 1970 மற்றும் 1971 ம் வருடங்களில் இ.க.க (மா.லெ) கட்சியைச்சார்ந்த தோழர்கள்
குறிப்பாக தோழர் ராம்நாராயன் (உ.பி), கட்சியின் வரைவுத் திட்டம் மற்றும் லிபரேசனில் வெளிவந்த சில
கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள் குறித்து 1970 கட்சிக் காங்கிரசின் விவாதத்திற்காக நேரடியாக முன்வைத்த
அறிக்கை, மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்களால்
அரசியல் தீர்மானம் குறித்து கட்சியின் தலைமைக்குழுவுக்கு முன்வைத்த விமர்சன
அறிக்கை,(2), . இந்த அறிக்கைகள் அனைத்திலும் அடிப்படையாக இழையோடியிருக்கும்
விமர்சனங்களானது கட்சியின் திட்டம், போர்த்தந்திரம், அரசியல் தீர்மானம்,
கட்சியானது அன்று
கடைபிடித்த அரசியல்வழி மற்றும் அமைப்புச் செயல்பாடு குறித்து பொதுவாகவும் மற்றும்
கட்சியின் பொதுச்செயலாளர், தோழர் சாருமஜூம்தாரின் தலைமையிலான செயல்பாடுகள் பற்றி
குறிப்பாகவும்...
அடிப்படையில் வைக்கப்பட்ட இந்த விமர்சன அறிக்கைகள், அன்றைய நாடுமுழுக்க மிகவும் நெருக்கடியான மற்றும் புரட்சிகரமானதான சூழ்நிலைகள் இருந்ததன் மத்தியக் கமிட்டியால் இவைகள் சுற்றுக்கு விட்டு விவாதிக்கப்படவில்லை.
கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு ஒரு தடவைதான் மத்தியக்
கமிட்டி கூடியது. மத்தியக்கமிட்டியில் பங்குவகித்த பல தோழர்கள் அதாவது தோழர்
எல்.அப்பு, தோழர் சரோஜ் தத்தா, தோழர் வேம்படப்புசத்யநாராயணா,
ஆதிவத்லா கைலாசம்,
மற்றும் தோழர் சுசிதல்
ராய்ச்சவுத்திரி உட்பட பல தோழர்கள் சாருமஜூம்தாரின் தியாகத்திற்கு முன்பே தியாகி
ஆனார்கள். சத்யநாராயணசின்ஹா மத்தியக் கமிட்டியின் மற்றொரு தோழர் அசிம்சட்டர்ஜி
போன்றவர்களை இணைத்துக்கொண்டு தோழர் சாருமஜூம்தார் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்த
போதே இ.க.க. (மா.லெ.) என்ற தனி ஒரு கட்சியைக் கட்டி,
தோழர் சாருமஜூம்தார்
மற்றும் தோழர் சுனிதிகுமார்கோஷ் இருவரையும் கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக அறிக்கை
விட்டு தன்னை கட்சியின் பொதுச்செயலர் என்று அறிவித்து வெகுவிரைவிலேயே
பிழைப்புவாதியாகிப் போனார். மற்றொரு மத்தியக் கமிட்டி உறுப்பினரான கேரளாவைச்
சேர்ந்த அம்பாடி மேனன், கட்சி கட்டி ஒருசில நாட்களிலேயே காங்கிரஸ் கட்சியில்
சேர்ந்துவிட்டார்.
கட்சியின் பொதுச்செயலரான தோழர் சாருமஜூம்தார் தியாகி ஆன பிறகு மத்தியக் கமிட்டியைக் கூட்டமுடியாத நிலையில் பல்வேறு மாநிலங்களிலிருந்த மாநிலக்குழுக்கள் அந்தந்த மாநில அளவிலேயே செயல்படத் துவங்கின. பின்னர் காலப்போக்கில் ஒரு சில குழுக்கள் இணைந்து பெரிய குழுக்களாவதும், பிறகு உடைந்து போவதும் ஒரு போக்காகவே இன்றுவரை நீடித்து வருகின்றன..
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.