மாவோவின் சிந்தனைகள் சண்முகதாசன் பாகம் 12

மாவோவின் சிந்தனைகள் சண்முகதாசன் பாகம் 12. 

இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினியக் கொள்கைகளின் வளர்ச்சி மற்றும் திரிபுவாதத்திற்கு எதிரான சித்தாந்தப் போராட்டங்களை விரிவாக விளக்குகின்றன. சோசலிசப் புரட்சிக்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டுமே அடிப்படை என்ற வாதத்தை நிராகரிக்கும் இக்கட்டுரை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. லெனின் மற்றும் ஸ்டாலினின் பங்களிப்புகளைத் தொடர்ந்து, மாவோ சேதுங் முன்வைத்த கலாச்சாரப் புரட்சி மற்றும் சோசலிசப் பாதையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்திய மற்றும் சர்வதேச அளவில் கம்யூனிச இயக்கங்களுக்குள் ஊடுருவியுள்ள திருத்தல்வாதப் போக்குகளை விமர்சிக்கும் அதேவேளையில், உண்மையான புரட்சிகரப் பாதையைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை இப்பாடம் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், மார்க்சியம்-லெனினியம் என்பது மாவோ சிந்தனை எனும் புதிய கட்டத்திற்கு உயர்ந்துள்ளதை இந்தத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது.

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

பெர்ன்ஸ்டைன், காவுட்ஸ்கி முதலிய பழைய காலத் திரிபுவாதிகள் சோவியத் யூனியனில் சோஷலிசப் புரட்சி நடத்துவதை எதிர்த்தார்கள். அவர்களுடைய தத்துவம் உற்பத்தித் அனைத்தும் என்ற தத்துவம் என அழைக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் ரஷ்யாவில் முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி அடையாத காரணத்தால், சோஷலிசப் புரட்சி அசாத்தியம்; அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் முதலாளித்துவத்திற்கு மாத்திரம் வழியமைக்கும்; ரஷ்யாவில் முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்த பின்னர்தான், அது இயற்கையாகவும், சமாதானமாகவும் சோஷலிசமாக மலரும் என்று வாதாடினர். இதுதான் சோஷலிசத்துக்குச் செல்லும் சமாதான மாற்றம் பற்றிய அவர்களுடைய தத்துவமாகும். 

இந்த அபத்தமான தத்துவத்தை காவுட்ஸ்கி 1918ல் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி" என்ற தனது பிரசுரத்திலும், ரஷ்ய கட்சிக்குள் "நிர்கதியானயான நிலையிலுள்ள போல்ஷ்விக்குகள்" என்ற தனது கட்டுரையிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். 

பின்னர், ஸினோவியேவ், ட்ரொத்ஸ்கி, புகாரின் ஆகி யோர் சோஷலிச புரட்சியையும், சோஷலிச நிர்மாணத்தையும், ஒரு நாட்டில் சோஷலிசம் கட்டிய மைக்கப்பட முடியும் என்ற தத்துவத்தையும் எதிர்க்க, இந்த பழைய காலத் திரிபுவாதிகளின் தத்துவத்தை உபயோகித்தனர், கம்யூனிஸ்ட் சர்வதேசியத்தின் செயல் கமிட்டியின் 7வது கூட்டத் தொடரில், ரஷ்யாவில் சோஷலிச உற்பத்தியின் மேம்பாட்டை இன்று அல்ல, 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு பின்னர்தான் காட்டமுடியும் என்று கூறினான் ட்ரொத்ஸ்கி. 

இந்த அபத்தத்தை ட்ரொத்ஸ்கி பிரகடனம் செய்தபோது ஸ்டாலின் அவனைப் பாரதூரரமாக மறுத்துரைத்தார். காரணம், முதலாளித்துவ நாடுகளில் காணும் தனியுடைமை முறையிலும் பார்க்க சோஷலிச உடைமை முறை மேலானது, சிறந்தது என்பது அதி ஆரம்பத்திலேயே-புரட்சியின் பின் தனியுடைமை முறை ஒழிக்கப்பட்டு, பொது உடைமை முறை ஸ்தாபிக்கப் பட்ட உடனேயே-நிரூபிக்கப்பட்டுவிட்டது. 

ட்ரொத்ஸ்கியின் போலித் தத்துவம், உற்பத்தி நன்கு வளர்ச்சி அடையாத காரணத்தால், அக்டோபர் புரட்சி சோஷலிசத்துக்கு அல்ல, முதலாளித்துவத்துக்குத் தான் வழிகோலும் என்று சமூக ஜனநாயக பொருளாதாரவாதி காமனேவ் முன்வைத்த அதே தத்துவம்தான் என்று ஸ்டாலின் சுட்டிக் காட்டினார். எனவே, ட்ரொத்ஸ்கியின் நிலை சோஷலிசப் புரட்சிக்கும், சோஷலிச நிர்மாணத்துக்கும் எதிரானது என்பது தெளிவு  

ட்ரொத்ஸ்கியின் போலித் தத்துவத்துக்கும், முதலாளித்துவத்துக்குச் செல்லும் காலகட்டம் என்பது ஒரு முழுமையான சகாப்தம் என்று லெனின் முன்வைத்த தத்துவத்துக்கும் எவ்வித சம்பந்தமுமே கிடையாது. அதுபோல, ட்ரொத்ஸ்கியின் தத்துவத்துக்கும் இக்காலம் பல தசாப்தங்களை, அல்லது ஒரு நூற்றாண்டை, அல்லது ஒரு சில நூற்றாண்டுகளைக் கொண்டடது என்று தோழர் மாசேதுங் அவர்கள் முன்வைத்த தத்துவத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. லெனின், தோழர் மாசேதுங் இருவரும் முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்குச் செல்லும் காலகட்டம் எவ்வளவு நீண்டதாக இருக்கும் என்பதையே விவாதித்தனர். 

இந்த உண்மைகளை திரித்துப் புரட்டி, தோழர் மாசேதுங் அவர்களின் கருத்துக்களையும் ட்ரொத்ஸ்கியின் கருத்துக்களையும் ஒன்றாகக் காட்டுவதன் மூலம் தோழர் மாசேதுங் அவர்களை அவதூறு செய்ய முயல்பவர்கள் உண்மையில் ட்ரொத்ஸ்கியைத் தாக்கவில்லை; மாறாக, அவர்கள் அவனை அழகுபடுத்தவே முயல்கின்றனர். அவர்கள் ஒன்றில் அறியாமையால் இப்படிச் செய்கின்றனர்; அல்லது, லெனின் தோழர் மாசேதுங் இருவரையும் வேண்டுமென்றே அவதூறு செய்யும் அல்லது இழிவுபடுத்தும்  நோக்கத்தோடுக இப்படிச் செய்கின்றனர். 

ட்ரொத்ஸ்கியின் இந்தப் போலித் தத்துவத்தை ஸ்டாலின் ஏற்கெனவே ஆராய்ந்து அதற்கும், ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சியும் சோஷலிச நிர்மாணமும் வெற்றிபற மாட்டா என்பதற்கு இரண்டு காரணங்கள் காட்டிய சமூக ஜனநாயகவாதி சுகானேவ் முன்வைத்த தத்துவத்திற்கும் வித்தியாசனமே இல்லை என்று காட்டிவிட்டார். சுகானேவின் காரணங்கள் பின்வருமாறு:- ஒன்று, ரஷ்யாவில் முதலாளித்துவ உற்பத்தி போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. இரண்டு ரஷ்ய, விவசாயிகள் பின்தங்கியவர்கள்; அவர்களுடைய கலாசாரத் தரம் தாழ்ந்தது. 

லெனின் "நமது நாட்டுப் புரட்சி பற்றி" என்ற தனது படைப்பில், ரஷ்ய விவசாயி வர்க்கத்தின் கலாசாரத் தரம் தாழ்ந்ததாயினும், அது பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து புரட்சி நடத்தியது; சோஷலிசத்தை ஆதரிக்கின்றது என்று கூறினார். சில ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல, ரஷ்யாவில் முதலாளித்துவ உற்பத்தி அவ்வளவு வளர்ச்சியடையவில்லை என்பது உண்மைதான் என லெனின் ஏற்றுக்கொண்டார். ஆனால், பாட் டாளி வர்க்கப் புரட்சியின் பின்னர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் உற்பத்தியை பெருமளவில் ஏன் அபிவிருத்தி செய்ய முடியாது? இப்படிச் செய்ய முடியாது என சுகானேவ் எந்த நூலில் படித்தார்? "யுத்தத்தின் விளைவைப் பார்க்க வேண்டுமானால், முதலில் யுத்தத்தில் குதிக்க வேண்டும்" என்று நெப்போலியன்தான் கூறினான். 

முதலாளிகளிடமிருந்தும் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் உற்பத்தி சாதனங்களையும், நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களையும் பறிமுதல் செய்தபின் உற்பத்திவைப் பெருமளவில் விருத்தி செய்வது சாத்தியம் என்று லெனின் உறுதியாகக் கூறினார். 

தோழர் மாசேதுங் அவர்கள் ஆரம்பித்து வைத்த மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சி குறிப்பாக சோஷலிசப் பாதையில் செல்வதை எதிர்த்து, முதலாளித்துவப் பாதையில் செல்வதை ஆதரிக்கும் காவுட்ஸ்கி, சுகானேவ், ட்ரொத்ஸ்கி, புகாரின் ஆகியோரின் போலித் தத்துவத்திற்கு எதிராகவே, செலுத்தப்படுகின்றது. 

சீனாவில் இந்தக் கருத்துகளின் பிரதிநிதி லியூ ஷௌ-சி ஆவான். 1949 கோடைகாலத்தில், சீனா அப்பொழுதுதான் விடுதலை பெற்றிருந்தபோது, சீனாவில் முதலாளித்துவ உற்பத்தி போதுமான அளவு வளர்ச்சியடையாத காரணத்தால், சோஷலிஸப் பாதையில் செல்வது சாத்தியமல்ல என்று லியூ ஷௌ-சி கூறினான். சீனாவில் உள்ள பிரச்சினை இங்கு கூடுதலாக முதலாளித்துவம் இருப்பதல்ல, குறைவாக இருப்பதுதான்; முதலாளித்துவச் சுரண்டல் ஒரு குற்றமல்ல, அது பாராட்டுக்குரியது; தொழிலாளர் சுரண்டலை எதிர்க்கவில்லை, வரவேற்கின்றனர் என்று லியூ ஷௌ-சி கூறினான். ஆகவே, விடுதலைக்குப் பின் சீனா சோஷலிஸப் பாதைக்குப் பதில் முதலாளித்துவப் பாதையில் செல்லவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தான். 

இது, கடந்த காலத்தில் சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில், காவுட்ஸ்கி, சுகானேவ், ட்ரொத்ஸ்கி முதலியோர் முன் வைத்த, உற்பத்தியே அனைத்தும் என்ற அதே தத்துவம்தான். மாசேதுங் சிந்தனையும், தோழர் மாசேதுங் ஆதரித்த மார்க்சியமும் இந்த நபர்களின் தத்துவத்தை கூர்மையாக எதிர்ப்பவே  நேர் எதிரானவை. 

மாசேதுங் சிந்தனையும், அக்டோபர் புரட்சியின் பின், முதலாளித்துவப் பாதையில் செல்வதை உறுதியாக எதிர்த்து, சோஷலிசப் பாதையில் உறுதியுடன் முன்னேறவேண்டும் என்று சுட்டிக்காட்டிய அதே லெனினின் சிந்தனை அன்றி வேறல்ல. 

மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியில் போராடுகின்ற இரண்டு மார்க்கங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் யாது? பிரதான பிரச்சினை என்னவென்றால், சீனா முதலாளித்துவப் பாதையில் செல்வதா? அல்லது சோஷலிசப் பாதையில் செல்வதா? என இரு பாதைகளுக்கிடையில் நிகழும் போராட்டம் இது. இந்த இரண்டு மார்க்கங்களுக்குமிடையில் கடந்த காலத்தில் போராட்டம் நடைபெற்றது, இன்று நடை பெறுகின்றது. எதிர்காலத்திலும் நடைபெறுவதும் திண்ணம். 

எனவேதான் தோழர் மாழசேதுங் அவர்கள் இன்றைய கலாசார புரட்சி முதலாவது புரட்சி மாத்திரமே; எதிர்காலத் தில் மேலும் பல புரட்சிகள் நிகழும் என்று கூறினார். 

காரணம் என்னவென்றால், இது பழைய சுரண்டும் வர்க்கங்களை தூக்கியெறிந்துவிட்டு, புரட்சியை என்றென்றைக்குமாக முடித்துவிடும் ஒரு பிரச்சினை மட்டுமல்ல. புதிய சுரண்டும் நபர்கள் எப்பொழுதும் தோன்றிக்கொண்டே இருப்பர். புதிய முதலாளி வர்க்கம் எப்பொழுதும் சிருஷ்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். "பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுட்ஸ்கியும்'' என்ற நூலில் லெனின் இதை விளக்கியுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக்கால கட்டம் பூராவும், தூக்கி வீசப்பட்ட சுரண்டும் வர்க்கங்கள் அதிகார அரங்கிற்கு மீள முயன்றவண்ணம் இருக்கும், தமது முயற்சிகளை செயலாக்க முயன்றவண்ணம் இருக்கும் என்று லெனின் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு லெனின் தாக்கியெறியப்பட்ட பழைய சுரண்டும் வர்க்கங்களைக் குறிப்பிடுகின்றார். 

ஆனால் "இடதுசாரி கம்யூனிஸம், ஒரு சிறுபிள்ளைத்தனக் கோளாறு'' என்ற படைப்பில் அவர், பழைய சுரண்டும் வர்க்கங்கள் அதிகார அரங்கிற்கு மீள முயல்வது மாத்திரமல்ல, சோஷலிச சமுதாயத்தில் புதிய முதலாளி வர்க்கமும் சிருஷ்டிக் கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினார். நாம் முன்பு விளக்கியதுபோல, லெனின் அவர்கள் இந்தப் பிரச்சினைகளை எழுப் பியபோதிலும், அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு முன் அவர் மறைந்துவிட்டார். 

முன்பு எடுத்துக் காட்டிய மக்கள் தினசரி ஆசிரியர் தலையங்கம் சுட்டிக் காட்டியதுபோல, ஸ்டாலின் அவர்கள் ஒரு மார்க்சிய-லெனினியவாதியாவார்; அவர் பாட்டாளி வர்க்கப் புரட்சியும், ஒரு நாட்டில் சோஷலிசத்தை கட்டி மைக்கும் பிரச்சினையும் சம்பந்தமான பல தத்துவ, அனுஷ்டானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார். ஆனால், வர்க்கப் போராட் டம் பற்றிய தத்துவத்தில் அவர் தவறு இழைத்துவிட்டார். 

அக்டோபர் புரட்சியின் பின், ஸ்டாலின் வர்க்கப் போராட்டப் பிரச்சினையை முற்றாகக் கைகழுவி விட்டார் என்று கூறுவது சரியல்ல. உண்மையில் 1928க்கு முன், சோவியத் யூனியனில் வர்க்கப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அவர் பெரிதும் வலியறுத்தினார். 1928க்கு முன் அவர் கொம்சொமோல், கட்டுப்பாட்டு கமிஷன் ஆகியவற்றில் ஆற்றிய சொற்பொழிவுகளில் இப்பிரச்சினையை விளக்கியுள்ளார். சமாதான காலங்களில் வர்க்கப் போராட்டத்தை மறப்பதற்காக சில நபர்களையும் அவர் விமர்சனம் செய்துள்ளார். 

ஆனால், அவருடைய குறைபாடு யாது? 1928க்குப் பின், குலாக்குகளின் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர், விவசாயம் கூட்டுறவு மயமாக்கப்பட்ட பின்னர், முதலாவது 5 ஆண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சோவியத் யூனியனில் வர்க்கங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன; அங்கு வர்க்கங்கள் இல்லை என்று அவர் கூறினார். இந்தக் பிழையான கருத்து 1936ல் சோவியத் அரசியல் சட்டம் பற்றி சமர்ப்பித்த அறிக்கையில் தெளிவாக வெளிப்பட்டது. 

ஸ்டாலினுடைய குறைபாடு யாதெனில், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்று கால கட்டம் பூராவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழும், சமுதாயத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருக்கும் என்பதை அவர் தத்துவரீதியில் அங்கீகரிக்காததுதான். 

ஆனால், உண்மை என்னவென்றால், விவசாயம் கூட்டுறவு மயமாக்கப்பட்ட பின்னர், புதிய சோவியத் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர்கூட, முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டம் இன்னும் நடைபெற்றது; முதலாளித்துவ மீட் சியின் அபாயம் இன்னும் நிலவியது; உண்மைகள் ஸ்டாலினுக்குப் போதனைளித்தன. அவருடைய கடைசி ஆண்டுகளில் சில வழிகளில் இதை உணர்ந்து கொண்டார். 

ஸ்டாலின், அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் நிலவுகின்றன என்ற உண் மையை கிரகித்துக் கொண்டார். பின்னர் அவர் சோஷலிச சமுதாயத்தில் முரண்பாடுகள் இருக்கின்றன என்றும், சரியாகக் கையாளப்படாவிட்டால், அவை பகை முரண்பாடுகளாக மாறும் என்றும் கூறினார். இந்த கருத்து "சோவியத் யூனியனில் சில பொருளாதாரப் பிரச்சினைகள்" என்ற அவருடைய கடைசிப் படைப்பில் காணப்படுகின்றது. 

ஆனால், இந்த நூலில் கூட, ஸ்டாலின் இப்பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்று கூறத் தவறியது மாத்திரமல்ல, இப் பிரச்சினை பற்றி தெளிவான ஒரு விளக்கமும் கொடுக்கத் தவறி விட்டார் என்பதை கூறித்தான் ஆகவேண்டும். 

இன்றைய சகாப்தத்தில், தோழர் மாசேதுங் அவர்கள் சோவியத் யூனியனின் வரலாற்று அனுபவம் முழுவதும் கவனம் செலுத்தி வருகின்றார். சோவியத் யூனியனில் திரிபுவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றி, முதலாளித்துவத்தை மீட்டுள்ள நிலைைகளில், அக்டோபர் புரட்சியின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இது மார்க்சியம்-லெனினியவாதிகள் அனைவரும் பாரதூரமான கவனம் செலுத்தி, ஆராய்ந்து படிக்க வேண்டிய ஒரு கசப்பான அனுபவமாகும். இதைவிட சீன புரட்சியின் அனுபவங்களும் நமக்கு இருக்கின்றன. 

இந்த அனுபவங்களை ஆராய்ந்து படித்ததன் விளைவாகத் தான் தோழர் மாசேதுங் அவர்கள், சோஷலிச சமுதாயத் தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், வடிவதில் வேறுபட்ட போதிலும், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் நிலவுகின்றன என்று கூறினார். தோழர் மாசேதுங் அவர்கள் தமது படைப்புகளில் இந்த தத்துவத்தை விரித்துரைத்தது மாத்திரமல்ல, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியை தாமாகவே தொடக்கி வைத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் எவ்வாறு புரட்சியை நடத்துவது என்பது சம்பந்தமான முழுக்கோவை கோவையான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். 

இது மார்க்சியம்-லெனினிசத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாசேதுங் அவர்கள் வழங்கிய சாதனையைக் காட்டும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது மார்க்சியம்-லெனினிசம் முற்றிலும் புதிய ஒரு கட்டத்துக்கு வளர்ந்துவிட்டது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. மார்க்சியம் முதலில் லெனினிம் என்ற கட்டத்துக்கு வளர்ந்து, இன்று மாசேதுங் சிந்தனை என்ற கட்டத்துக்கு மேலும் வளர்ந்து விட்டது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சி 8வது மத்திய கமிட்டியின் 11வது பிளீனக் கூட்டம் 1966 ஆகஸ்ட் 12ல் அங்கீகரித்த அறிக்கை இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:- 

"தோழர் மாசேதுங் அவர்கள் நமது சகாப்தத்தின் மாபெரும் மார்க்சியம்-லெனினிசவாதியாவார், தோழர் மாசேதுங் அவர்கள் மேதாவிலாசத்துடனும், ஆக்கபூர்வமாகவும் பன்முகங்களிலும், மார்க்சியம்-லெனினிசத்தை கையேற்று, பாது காத்து, வளர்த்து, அதை புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். மாசேதுங் சிந்தனை என்பது ஏகாதிபத்தியம் அதன் பூர்ண அழிவை நோக்கிச் செல்லும் அதே வைளையில்,  சோஷலிசம் உலகரீதியான வெற்றியை நோக்கி முன்னேறுகின்ற சகாப்தத்தின் மார்க்சியம்-லெனினியம். மாசேதுங் சிந்தனை என்பது எல்லா வேளைகளிலும் நமது கட்சிக்கும், நாட்ட்டுக்கும் வழிகாட்டும் ஒருகோட்பாடு." 

விளக்கம் 

இப்பதிவு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாசேதுங் சிந்தனை) தலைவரான என். சண்முகதாசன் அவர்களின் "மாவோவின் சிந்தனைகள்" (பாகம் 12) நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும். இதில் மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், சோஷலிச சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தையும், தோழர் மாவோ முன்வைத்த "பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி" பற்றிய கருத்துகளையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குகிறது. 

1. "உற்பத்தி சக்திகளே அனைத்தும்" (Productive Forces Theory) எனும் திரிபுவாதம் 

திரிபுவாதிகளின் வாதம்: பெர்ன்ஸ்டைன், காவுட்ஸ்கி (ஜெர்மனி), சுகானேவ், ட்ரொத்ஸ்கி, புகாரின் (ரஷ்யா) மற்றும் லியூ ஷௌ-சி (சீனா) ஆகியோர் முன்வைத்த முதன்மை வாதம்: "ஒரு நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் (தொழில்நுட்பம், தொழிற்துறை, கலாச்சாரம்) முழுமையாக வளர்ச்சி அடையாத வரை, அங்கு சோஷலிசப் புரட்சி சாத்தியமில்லை." 

மார்க்சிய மறுப்பு: 

  • லெனின்: சுகானேவ் போன்றோரின் இந்த பொருளாதாரவாதக் கோட்பாட்டை லெனின் கடுமையாக மறுத்தார். பாட்டாளி வர்க்கம் முதலில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்), அதன்பின் அரசு அதிகாரத்தின் துணை கொண்டு உற்பத்தி சக்திகளைப் பெருமளவில் வளர்க்க முடியும் என்று நிறுவினார். 

  • ஸ்டாலின்: ட்ரொத்ஸ்கியின் இக்கோட்பாட்டை மறுத்து, சோஷலிச உற்பத்தி முறையானது முதலாளித்துவ தனியுடைமை முறையை விடத் தொடக்கத்திலேயே மேலானது என்றும், ஒரே நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் நிரூபித்தார். 

  • லியூ ஷௌ-சியின் தவறு: சீன விடுதலைக்குப்பின் (1949), முதலாளித்துவச் சுரண்டல் வரவேற்கத்தக்கது என்றும், சீனா சோஷலிசப் பாதைக்குப் பதில் முதலாளித்துவப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் லியூ வாதாடியது அதே பழைய காவுட்ஸ்கி-ட்ரொத்ஸ்கி திரிபுவாதத்தின் தொடர்ச்சியே ஆகும். 

2. சோஷலிச சமுதாயத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் 

மார்க்சியக் கோட்பாட்டின் படி, முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் சோஷலிச காலகட்டம் ஒரு நீண்ட வரலாற்று சகாப்தமாகும். 

தலைவர்கள் 

பங்களிப்பு & கோட்பாட்டு நிலைப்பாடு 

வி. இ. லெனின் 

பழைய சுரண்டும் வர்க்கங்கள் அதிகாரத்தை மீட்க முயல்வது மட்டுமல்லாமல், சோஷலிச அமைப்பிலேயே புதிய முதலாளி வர்க்கமும் சிருஷ்டிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். 

ஜோசப் ஸ்டாலின் 

சோஷலிச நிர்மாணத்தில் மகத்தான சாதனை படைத்த போதிலும், 1936 அரசியல் சட்டத்திற்குப் பின் "சோஷலிசத்தில் வர்க்கங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன" என்று கோட்பாட்டு ரீதியாகத் தவறாகக் கருதினார். இருப்பினும், தன் வாழ்வின் இறுதியில் ("சோவியத் யூனியனில் சில பொருளாதாரப் பிரச்சினைகள்") சோஷலிசத்திலும் முரண்பாடுகள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டார். 

மாவோ சேதுங் 

ஸ்டாலினின் குறையைச் சரிசெய்து, "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்வது" எனும் கோட்பாட்டை உருவாக்கினார். சோஷலிச சமுதாயத்திலும் புதிய முதலாளிகள் உருவாவார்கள் என்றும், சோஷலிசப் பாதைக்கும் முதலாளித்துவப் பாதைக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து நிகழும் என்றும் விளக்கினார். 

3. மகத்தான பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் வரலாற்று அவசியம் 

மாவோ சேதுங் தொடங்கிய கலாச்சாரப் புரட்சி (1966–1976) என்பது வெறும் தனிநபர் அதிகாரப் போட்டியோ அல்லது நிர்வாக மாற்றமோ அல்ல. 

  • நோக்கம்: கட்சிக்குள்ளும் அரசுக்குள்ளும் புகுந்துவிட்ட "முதலாளித்துவப் பாதையில் செல்லும் அதிகார வர்க்கத்தினரை" (Capitalist Roaders) எதிர்த்துப் போராடுவது. 

  • வரலாற்றுப் பாடம்: சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவுக்குப் பின் திரிபுவாதிகள் (குருஷ்சேவ் போன்றோர்) அதிகாரத்தைக் கைப்பற்றி, முதலாளித்துவத்தை மீளமைத்த கசப்பான அனுபவத்திலிருந்து பெறப்பட்ட பாடம். 

  • மார்க்சிய-லெனினியத்தின் 3-வது கட்டம்: 

  1. மார்க்சியம்: மார்க்ஸ் & எங்கெல்ஸ் (முதலாளித்துவத்தின் வீழ்ச்சி, பாட்டாளி வர்க்கப் புரட்சி). 

  1. லெனினியம்: லெனின் & ஸ்டாலின் (ஏகாதிபத்திய சகாப்தம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஒரே நாட்டில் சோஷலிசம்). 

  1. மாவோ சிந்தனை: மாவோ சேதுங் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்வது & கலாச்சாரப் புரட்சி). 

இப்பதிவு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது பிளீனக் கூட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி, மாசேதுங் சிந்தனையானது மார்க்சியம்-லெனினியத்தின் புத்தம் புதிய உயர் கட்டம் என்பதை வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் உறுதிப்படுத்துகிறது. 

  1. பெர்ன்ஸ்டைன், காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் ரஷ்யாவில் முதலாளித்துவம் வளரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடத்தக்கூடாது என்று வெளிப்படையாகவே கருத்தைக் கூறினார்கள். ஆனால் இங்கே சோசலிசப் புரட்சி நடக்காது என்று யாரும் வெளிப்படையாகக் கூறுவதில்லை, இடதுசாரித் தலைவர்கள் அவர்களது அணிகளிடம் சோசலிசத்திற்காகவே பாடுபடுவதாகக் கூறிக்கொண்டே சோசலிப்புரட்சியை நடத்துவதற்கு எவ்விதமான முயற்சியிலும் ஈடுபடாமல் பாராளுமன்ற சகதிக்குள்ளேயே நீந்தி சுகம் கண்டுகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் உள்ளொன்றை வைத்துக்கொண்டு புறத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் பெர்ன்ஸ்டைனைக்காட்டிலும் ஆபத்தானவர்கள். இந்த உண்மையை மார்க்சிய அடிப்படையில் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் இவர்களின் துரோகத்தைப் புரிந்துகொண்டு இவர்களை புறக்கணித்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் ஒரு சினிமா நடிகனின் கவர்ச்சிக்குக்கூட பலியாகி சினிமா நடிகனைக்கூட ஆதரிக்கிறார்கள் ஆனால் பாரம்பரியமிக்க கட்சியான இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை உணர்ந்து இடதுசாரித் தலைவர்கள் அவர்களது துரோகக் கொள்கையை கைவிட்டுவிட்டு புரட்சிகரமான லெனினியக் கொள்கையை பின்பற்ற தயாரில்லாதது மிகவும் வேதனைக்குரியதாகும் 

  1. இந்தியாவில் அமைதியாக முதலாளித்துவம் வளர்ந்து சோசலிசமாக மாறும் என்று இந்திய இடதுசாரிகள் கருதுகிறார்கள். இந்தக் கருத்துத்தான் ரஷ்யப் புரட்சியை எதிர்த்த திருத்தல்வாதிகளின் கருத்தாகும். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சட்டவழிப் போராட்டங்களை நடத்தி காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களது இந்த நடவடிக்கையின் மூலமாக மக்களிடமிருந்த கொஞ்சநஞ்ச சோசலிச உணர்வுகளும் மங்கி சோசலிசத்தின் மீதான நம்பிக்கையையே மக்கள் இழந்துகொண்டு இருக்கிறார்கள். 

  1. லெனினும் ஸ்டாலினும் தனிவுடமை ஒழிக்கப்பட்டு பொதுவுடமையாக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். ஆனால் இந்திய இடதுசாரிகள் இந்திய பெருமுதலாளிகளின் உற்பத்திச் சாதனங்களை கைப்பற்றி பொதுவுடமை ஆக்கவேண்டும் என்பதைப் பற்றி பேசுவதே இல்லை. ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் இந்திய மக்களுக்குச் சொத்தமான பொதுச் சொத்துக்களையே தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறதை இவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் விவசாயிகளின் நிலங்களை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்தவர்கள்தானே இவர்கள். இவர்கள் உண்மையில் செங்கொடி பிடித்த முதலாளிகளே ஆவார்கள். ஆகவேதான் மக்கள் இவர்களை புறக்கணித்துவிட்டார்கள். இப்போதும் இவர்களுக்கு புத்திவரவில்லை. ஆகவேதான் இவர்களது கட்சியிலுள்ள மகேந்திரன் போன்ற தலைவர்கள் இவர்களது கட்சியைவிட்டு வெளியேறி பிற்போக்கு முதலாளித்துவ கட்சியில் சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

  1. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு செல்லும் காலம் மிகவும் நீண்டது என்பதை மார்க்சிய ஆசான்கள் வலியுறுத்தினார்கள். அதற்கு ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலையும் மதிப்பிட்டு வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதுதான் மார்க்சியமாகும். இந்த வர்க்கப் போராட்டத்துக்கான பாதை பாட்டாளிவர்க்கப் பாதையாக இருக்க வேண்டும் என்பதுதான் மார்க்சியம். ஆனால் இந்திய இடதுசாரிகள் வர்க்கப் போராட்டத்தையையே கைவிட்டுவிட்டு முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்து முதலாளிகளோடு கூட்டணி அமைத்து செயல்பட்டுக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம் 

  1. இந்திய இடதுசாரிகள் இந்திய மக்களின் அறியாமையை காரணம் காட்டி இந்தியாவில் புரட்சி சாத்தியமில்லை என்கிறார்கள். ஆனால் வரலாற்றில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி நடக்கவில்லை, மாறாக பின்நங்கிய ரஷ்யா மற்றும் சீனாவில்தான் அறியாமையில் மூழ்கியிருந்த மக்கள்தான் புரட்சியை நடத்தினார்கள். இங்குள்ள இடதுசாரிகள் புரட்சியை நடத்துவதற்கு தயாரில்லாத அவர்களது கோழைத்தனத்தை மறைத்துவிட்டு மக்கள் மீது பழிபோடுகிறார்கள். 

  1. இந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடி பல கம்யூனிஸ்டுகள் உயிர்தியாகம் செய்தனர். அவர்களின் தியாகம் மதிக்கத்தக்கது. ஆனால் அவர்கள் ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் பின்பற்றி அணிகளுக்கு மார்க்சிய அறிவை ஊட்டி சோசலிச உணர்வுகளை வளர்க்கவில்லை. அவர்கள் செய்த இந்தத் தவறை பயன்படுத்தித்தான் மார்க்சிய தத்துவ அறிவில்லாத கட்சி அணிகளை ஏமாற்றி பிற்போக்கான அவர்களது திருத்தல்வாதக் கருத்துக்களை கட்சி உறுப்பினர்களின் மூளைகளில் ஏற்றி அவர்களின் வளர்ச்சியையும் இடதுசாரித் தலைவர்கள் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தோழர்களே மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்று தெளிவாவோம். அதன் அடிப்படையில் மார்க்சியத்துக்கு எதிரான திருத்தல்வாதம், கலைப்புவாதம், டிராட்ஸ்கியவாதம் போன்ற கருத்துக்களை முறியடித்து லெனினைப் பின்பற்றி ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டியெழுப்புவோம். தேன்மொழி 

 


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மோடியின் ‘திமாஹி நக்சல்கள்’ என்பதன் அபாயகரமான அர்த்தம்: கரண் தாப்பர்

அவசியம் புரிதலுக்கு வாசிக்க வேண்டியப்பகுதி Dimagi Naxal மோடியின்  ‘திமாஹி நக்சல்கள்’ என்பதன் அபாயகரமான அர்த்தம்: கரண் தாப்பர் யமுனா ராஜேந்தி...

செய்தியை சார்ந்த அலசல்