தோழர்களே,
இலக்கு 30 இணைய இதழ் PDF வடிவில்
இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள் கீழே:-
ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின். பாகம் – 4. |
அரசும்புரட்சியும்1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்,மார்க்சின் பகுத்தாய்வு - பாகம் 1. |
மார்க்சிய வாதிகளுகிடையிலேன பணி-5 |
இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு - லெனின். பகுதி – 4 |
“பாட்டாளி வர்க்கம் புரட்சியை முன்னெடுத்துச் சென்று இறுதிவரை நடத்திச் செல்லும் போதும், பழமையான சமூகத்தின் அறிவு ஜீவிகள் தம்மைப் பெருந்திரளான மக்களுடன் இணைத்துக் கொண்டு செயல்படும் போதும், பெருந்திரளான மக்கள் பழம் சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி, கலை நுணுக்க வளர்ச்சி போன்ற அறிவுச் சாதனைகளைத் தமக்குள் கிரகித்து கலாசார மட்டத்தில் தம்மை உயர்த்திக் கொண்டு செயல்படும் போதும், மனித சமுதாயத்தின் வர்க்கப் பிரிவினைகள், உடல் உழைப்பு, மன உழைப்புப் பிரிவினைகள், மானிட சமூக உணர்வுகளில் ஏற்பட்ட பிரிவினைகள் ஆகியவற்றுக்கிடையில் ஒரு புதிய ஒற்றுமை மலரும்; அது மனித சிந்தனையின் அறிவு அம்சங்களுக்கும் உணர்ச்சி அம்சங்களுக்கும் இடையிலான ஒற்றுமையாகும்; அது மட்டுமல்ல மனித சிந்தனையின் இவ்விரண்டு அம்சங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான ஒற்றுமையாகும்.”
இன்றைய நவீன உலகில் ஏகாதிபத்தியங்கள் தோன்றி அதன் ஆதிக்கம் நிலவுகின்ற போது,தொழிலாளி வர்க்கங்களில் சிலர் சலுகைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அந்ததொழிலாளி வர்க்கப் பிரிவினர் அரைவாசிக் குட்டிமுதலாளித்துவ வாதிகளாகவும், சந்தர்ப்பவாத தொழிலாளர் பிரபு குலத்தோராகவும் மாறியதன் காரணமாக, இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநித்துவப் படுத்தும் தலைவர்கள் தொழிலாளர் வர்க்க அமைப்புகளில் தலைவர்களாக தோன்றி வலம் வந்தார்கள்.
உழைக்கும் மக்களின் எதிரிகளான பெருமுதலாளிகளை நாம் ஒப்பீட்டளவில் எளிதாகப் போராடி வெற்றிகொள்ள முடியும்.ஆனால் குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகப்போராடி நாம் வெற்றிகொள்வது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்கிறார் லெனின்.
இது உண்மை என்பதை பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள்இருக்கும் குட்டிமுதலாளித் துவ சக்திகளை குறிப்பாக தலைவர்களை யும் அவர்களின் கருத்துக்களையும் எதிர்த்துப் போராடி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை நடைமுறையில் நாம் பார்க்கலாம்.
ஏனென்றால் குட்டிமுதலாளித்துவ சக்திகளோடு நாம் இணைந்தே செயல்பட வேண்டியுள்ளது,அதே வேளையில் அவர்களின் சித்தாந்த அரசியலை எதிர்த்து நாம் விடாப்பிடியாகப் போராடவேண்டியுள்ளது. அது மிகமிக கடினமான பணியாக நம்முன் உள்ளது.
இங்குள்ள காங்கிரஸ் கட்சியின் வாலாக அதன் சித்தாந்தத்தை முறியடிக்க முடியாத கம்யூனிஸ்டுகளாகதான் இன்றுவரை இந்தியாவில் உள்ளனர் பெரும்பாலும் இடதுசாரிகள் ஏன் புரட்சி பேசும் பிரிவினரும்!?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அந்த போராட்டகாரர்களை வெறும் பொம்மையாக பயன்படுத்திக் கொண்டது. சட்ட வழிப்பட்ட போராட்டம் மட்டுமே நடத்திய காங்கிரஸ் அவை வன்முறையாக அரசுக்கு எதிராக திரும்மும் பொழுது அந்த போராட்டத்தை கைவிட்டது மட்டும்மலாமல் அதனை காட்டிக் கொடுக்கவும் செய்தது. அதவது அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்தூதும் செயலாக தன் கொள்கையை கொண்டிருந்தது செயல்பட்டது. அதிலிருந்து அந்த மயையிலிருந்து விலாகமலே இங்கு இடதுசாரி என்போர் புரட்சி பேசுவது முரண்நகையாக உள்ளது என்றால் மிகையல்ல. ஆக நமது ஆசான்களின் வழி நின்று சரியான மார்க்சிய புரிதலுக்கு வந்தடைவோம் தோழர்களே இவையே இன்று நம்முன்ள்ள பெரிய பணியாகும்.
No comments:
Post a Comment