நாங்குநேரி பெருந்தெருவில் ஆதிதிராவிடர் மாணவர் சின்னத்துரை மறவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் கொடூரம்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்குள்ள அம்பேத்கர் ஆரம்பப் பள்ளியில் சமையல் உதவியாளராக வேலை செய்து வரும் அம்பிகா கணவனால் கைவிடப்பட்டவர் ஆவார். இவருக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
நாங்குநேரி சங்க ரெட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பயில்கிற ஆதிதிராவிட மானக்கர்கள் மீது நாங்குநேரி சுற்று வட்டார மறவர் மாணவர்களால் தீண்டாமை கொடுமை தாங்க முடியாமல் ஆதிதிராவிட மாணவர்கள் மேற்படி சங்க ரெட்டியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்காமல் பாளையங்கோட்டை, களக்காடு, வள்ளியூர், மூலக்கரைப்பட்டி என சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு படிக்கச் சென்று வருகிறார்களாம். அதேபோன்றுதான் மாணவன் சின்னத்துரையும் வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறாராம்.
மேற்படி மாணவன் சின்னதுரையை நாங்குநேரியில் இருந்து படிக்கப் போகிற திமுக ஒன்றிய செயலாளர் சுடலைகண் தம்பி மகனும் மதிமுக ஒன்றிய செயலாளர் துரைச்சாமி தேவர் பேரனும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளனர். வழக்கம் போல மாணவர் சின்னதுரையை தேர்வு எழுதும் போது தங்களுக்கு பேப்பர்களை காட்ட வேண்டும் என்றும். புத்தகம் நோட்டுகளை பிடுங்கி. தங்கள் புத்தகப் பைகளையும் சுமந்து வரச் சொல்லி துன்புறுத்தி வந்துள்ளனர். மாணவன் சின்னத்துரை கடந்த நான்கு நாட்களாக பள்ளிக்குச் சென்று படிக்க மறுத்ததால் அம்பிகா மகனை விசாரித்த போது நாங்குநேரி மறவர் மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாக கூறி அழுதுள்ளான். தாயார் அம்பிகா மேற்படி பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் சொல்ல தலைமையாசிரியரால் மறவர் மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கி விடுவதாக. எச்சரிக்கப்பட்டு இனிமேல் தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி சின்னத்துரை தங்கள் குற்றங்களை தாயாருக்கு சொல்லி பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டு விட்டோம் என்ற ஆதங்கத்தில் நேற்றைய தினம் மேற்படி மறவர்கள் நேரில் வந்து மிரட்டி சென்றுள்ளனர். 09.08.2023 இரவு 10 மணிக்கு பின்னர் எதிரிகள் மூன்று பேர் அருவாள் வெட்டு கத்திகளோடு சின்னத்துரை வீட்டிற்குள் புகுந்து சின்னத்துரையை தலை, மார்பு, கை, தொடை பகுதிகளில் கொடூரமாக வெட்டி ரத்த காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். மாணவன் சின்னத்துரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த போதும் அவனது கால்களில் வெட்டி கீழே சாய்த்து உள்ளனர். சின்னத்துரையின் தங்கை அண்ணனை காப்பாற்ற முற்பட்டவளுக்கு கைவிரல்கள் வெட்டப்பட்டுள்ளது. தாய் அம்பிகா கண் முன்னே தன் பிள்ளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்ட போது தாய் அம்பிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மாணவன் உயிருக்கு ஆபத்து உள்ளதால் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மாணவனை பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேற்படி சம்பவத்தில் அம்பிகாவின் வீட்டிற்குள்ளும் வாசல் படி தெருவிலும் மாணவனின் ரத்தம் தேங்கி கிடப்பதை பார்த்து உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியிற்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
ஏற்கனவே பரமசிவன் என்பவரின் மனைவியோடு தகாத உறவு வைத்திருந்த மறவர்கள் பரமசிவத்தை வீடு புகுந்து அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார்கள். பரமசிவத்தின் மனைவியை கண்டித்த உறவினர் செல்வராஜ் மறவர்கள் கிருஷ்ணன் புதூர் கண்மாய்க்குள் மறைவாக ஏமாற்றி அழைத்துச் சென்று கழுத்தை அறுக்க முயன்றுள்ளனர். எதேச்சையாக சாலையில் வந்த போலீசாரை பார்த்து செல்வராஜியை ஒரு வெட்டு மட்டும் வெட்டி போட்டு விட்டு ஓடி விட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் பெருந்தெருவில் மூன்றாவது தீண்டாமை வன்கொடுமை என்பதால் கொந்தளித்துப்போன சேரி மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட பெருந்தெருமக்களை ஆறுதல் படுத்தி குற்றவாளிகளை கைது செய்து விடுவதாக உறுதியளித்துள்ளனர். அதனால் பெருந்தெருமக்கள் இன்று கிருஷ்ணன் உடலை நல்லடக்கம் செய்ய இருக்கிறார்கள்.
நாங்குநேரியில் காவல் நிலையம் இருந்தும் 40 போலீசார் இருந்தும் காவல் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருந்தெருவில் வசிக்கிற ஆதி திராவிட மக்களுக்கு மறவர்களின் ஆதிக்கத்தால் பாலியல் தொல்லைகளும் கொலை முயற்சிகளும் தொடர்ந்து நிகழ்கிறது என்றால். நாங்குநேரியில் இருக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நாங்குநேரி வட்டாட்சியர் போன்ற அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ன சட்ட ஒழுங்கு பணியை ஆதிதிராவிடர் மக்களினுடைய பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஆதிதிராவிடர் மக்களை கொலை முயற்சியும் தீண்டாமை வன்கொடுமைகளையும் செய்கிற எதிரிகள் திமுக மதிமுக அரசியல் பிரதிநிதிகளின் ரத்த உறவுகளாக இருக்கும்போது அரசியல் அதிகாரத்தால் போலீசாரின் சட்ட ஒழுங்கு பணி தடுத்து நிறுத்தப்படுகிறதா? அரசியல் அதிகாரத்திற்கு காவல்துறையின் அதிகாரம் பயந்து கிடக்கிறதா என கருதிட தோன்றுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நாங்குநேரி பெருந்தெரு ஆதிதிராவிடர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் படுத்த வேண்டும். இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதி ஆகும்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு மாதத்திற்குள் மூன்று தீண்டாமை வன்கொடுமைகள் 50 குடும்பங்கள் வசிக்கிற ஆதிதிராவிடர் மக்கள் மீது ஏற்படும் போது தனது உளவு பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸ் சார் மூலம் பிரத்தியேகமான விசாரணையை மேற்கொண்டு அதன் பேரில் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே மெத்தன போக்கில் செயல்படுவார்களே ஆனால் ஆதிதிராவிட மக்கள் நாதியற்றவர்கள் என்ற நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டார்களா?
திமுக அரசு சமூக நீதி அரசாங்க திராவிட மாடல அரசு என்பது அல்ல. திமுக அரசும் காவல்துறை அதிகாரிகளும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். அதைச் செய்ய தவறுவார்களே ஆனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் மீது இலாக பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளலாம் இதை எச்சரிக்கையாகவே பதிவு செய்ய விரும்புகிறேன்.
சாதி வெறியர்களை தீண்டாமை வன்கொடுமை குற்றவாளிகளை காவல்துறை ஒடுக்கவில்லை எனில் தடுத்து நிறுத்தவில்லை எனில் ஆதிதிராவிட மக்களினுடைய பாதுகாப்பை உறுதி செய்யவில்லை எனில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை மறைமுகமாக காவல்துறை அதிகாரிகள்தான் ஊக்கமளித்து வருகிறார்கள் என்று கருதிட கூடும்.
எனவே திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தனது நேரடி கண்காணிப்பில் மேற்படி மூன்று வழக்குகளையும் சிறப்பு கவனம் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தி 60 நாட்களுக்குள் குற்ற அறிக்கையை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.
தீண்டாமை வன்கொடுமை கொலை முயற்சி குற்றவாளிகளை அனைவரையும் கைது செய்து சிறை படுத்த வேண்டும். பெருந்தெரு ஆதிதிராவிட மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வரை அப்பகுதியில் போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காயம் பட்ட மாணவனை சிறப்பு மருத்துவர் குழுவை ஏற்படுத்தி பரிசோதித்து தேவைப்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அரசு சிகிச்சை அளிக்க வேண்டும்.
மேற்படி மூன்று தீண்டாமை வன்கொடுமை சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டு உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தீர்யுதவி அனைத்தையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
கே ஆறுமுகம் சமூக நீதி மதுரை.
சின்னதுரையின்காயங்கள் இன்றோ நேற்றோ திட்டமிடப்பட்டது அல்ல இந்த காயங்களுக்கெல்லாம் பின்னால் ஒரு நீண்ட நெடிய #பிற்போக்குசிந்தனை கொண்ட #கதையும்_கலையுமே காரணமாகவும் சிற்பங்களும் சிற்பிகளும் ஓவியங்களும் ஓவியர்களும் எழுத்துக்களும் எழுத்தாளர்களும்
அதன் சான்றுகளாகவே நான் பார்க்கிறேன்.
இவைகள் மாற வேண்டும் மனித #மனங்களில்முதிர்ச்சி வேண்டும் இன்றைய நவீன வாழ்வில் முதியோர்களின் தவறான வழி நடத்துதலினாலும் தவறான கொள்கைகளாலும் முரண்பட்ட இந்த மனித வாழ்வை சரி செய்து ஆக வேண்டும் #இந்தமனித_சமூகம்.
ஒரு சக உயிரை துன்புறுத்த அறிவுறுத்தும் எண்ணங்களை உருவாக்கிய இந்த மண்ணின் வாழ்வியலை மாற்றியே தீர வேண்டும் இந்த பூமியில் #எல்லாஉயிர்களையும்போல மனித உயிர்களும் அன்பு நிறைந்து பெருகி #நட்பைகொண்டாடும் #அன்பைகொண்டாடும்
#காதலை_கொண்டாடும் நிலை வர வேண்டும்.
#மகனே_நீ
இம்மண்ணில் ஒரு #தலைவனாகவோ #வீரனாகவோ #வாழவேண்டாம் மற்ற உயிர்களைப் போல சக உயிர்களை மதிக்கும் அன்பு கொண்டாடும் ஒரு நல்ல #உயிராகவாழ்ந்து_விட்டு #போ...
என்றும்
#உன்சகஉயிராக_நான்
No comments:
Post a Comment