பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய இந்தியாவின் அரசின் தன்மை என்ன?

 நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் பிரிட்டிஷ் ஆட்சியில் மற்றும் ஆட்சி மாற்றதிற்கு பின் இந்தியஆட்சியில் அரசின் தன்மை.

நேற்றைய வகுப்பு ஒலி வடிவில் கேட்க இந்த லிங்கை அழுத்துங்கள் தோழர்களே

வகுப்பு 2 மணி நேரதிற்க்கு அதிகாமாக சென்றது தேவைக் கருதி நிறுத்து விட்டு அடுத்த வகுப்பில் தொடருவதாக முடித்துக் கொண்டோம்.

வகுப்பினை தொடங்கிய பொழுதே அரசு என்றால் என்ன? அரசு என்பது மனித சமூகம் தோன்றிய பொழுதே உதித்த ஒன்றல்ல என்றும் மேலும் இச்சமூக வலர்சியின் சுருக்கமான வரலாற்றை பேசி ஆங்கிலேயர்கல் 1600 ல் இந்தியாவில் வனிகம் செய்ய வந்து விட்டாலும் 157 ஆண்டுகள் இந்த பகுதியை கண்கானித்தான் தன் வணிகத்தை வளர்த்துக் கொண்டதோடு தன் ஆட்சியதிகாரதிற்கான அடிதளத்தை இட்டுக் கொண்டான்.
1857 முதல் இந்தியப் போரை அவன் அடக்கிய விதமானது இட்டரின் கொடூர அடக்குமுறைக்கு குறைவில்லை என்று கூறுகிறார் வரலாற்று ஆசிரியர் சுனிதிகுமார் கோஷ் அவர்கள். மெக்காலே கல்வி அதன் பயன் அதனால் உதிதெழுந்த வர்க்கம் இப்படி பேசிய நான் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவிற்க்கும் இன்றை இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமைகள் அடக்குமுறை அரசு பற்றி புரிதல் இன்மை இப்படி பெசி அடுத்த தோழர் ரவிந்திரனை பெச அழைத்தேன் அவர் வர்க்கம் அரசு புரட்சி என்ற மார்க்சிய ஆசான்களின் நூல்களிலிருந்து பேசியதோடு நாங்கள் எடுத்துக் கொண்ட வாதத்தைமுழுமையாக்கி முன் வைத்தார்.

வகுப்பினிறுதியில் ஜாதி பிரச்சினைக்கு இருவர் தாவியதோடு அரசு பற்றிய பிரச்சினையை கிளப்பினர் அதற்கும் தோழர் ரவீந்திரன் தெளிவாக பதிலளித்தார். தோழர் வேலன் ஈழப்பிரச்சினை இன்று அங்கு துளித்தெழும் ஜாதி பிரச்சினை பற்றியும் பேசினார்.

இருபதாம் நூற்றாண்டில் நடந்த போர்த்துகல், மற்றும் துருக்கி புரட்சிகளில்
பெருவாரியான மக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆகவே அந்தப் புரட்சிகள் எல்லாம் மக்கள் புரட்சிகள் அல்ல என்றார் காரல் மார்க்ஸ். இதன் மூலம் மார்க்ஸ் பெருவாரியானமக்களின் ஆதரவோடும் அவர்களின் பங்களிப்போடும் நடத்தப்படும் போராட்டங்களையே கம்யூனிஸ்டுகள் நடத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்கிறார். அதற்கு பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரிவு மக்களையும்ஓர்அணியில் திரட்டுவதற்கான திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று காரல் மார்க்ஸ் நமக்குப் போதிக்கிறார்.

உழைக்கும் வர்க்கமானது ஆளும் வர்க்கமாகத் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான நடைமுறை என்பது பரந்துபட்ட மக்கள் திரளின் போராட்டத்தின் மூலமே சாத்தியம் என்றார் மார்க்ஸ். ஆகவே பரந்துபட்ட மக்களின் தத்துவ, பொருளாதார, மற்றும் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள கருத்தியல்ரீதியான போராட்டமும் நடைமுறைரீதியான போராட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்து வதன் மூலமே இதனை சாதிக்க முடியும்.
15. 1848 - 49 ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பின்பு அரசு அதிகாரமானது உழைப்புக்கு எதிராய் மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு ஆதரவாய் மிகப்பெரிய போர்க் கருவியாக
வளர்ந்துவிட்டது என்றார் மார்க்ஸ். மார்க்சின் காலத்திலேயே அரசுப் பொறியமைவு வளர்ந்துவிட்ட நிலையில் இன்றைய காலத்தில் இந்த அரசுப் பொறியமைவானது மிகப் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த அரசுப் பொறியமைவானது மிகக் கடுமையாகவும் வெளிப்படையாகவும் உழைக்கும் மக்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தும் பிரமாண்டமான சாதனமாக முதலாளிகளின்கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்