சாதியம் தொடர்-5
தோழர்களே,
ஜாதியம் தொடர் கட்டுரையில் இடையில் வேறு கட்டுரையின் வரவால் தொடர முடியாமல் போய் விட்டது இந்த இதழில் நேரடியாக தெந்தமிழகத்தில் நடந்தேறிய மாற்றங்களை கூறுகின்றன.
நான் உண்மையில் ஜாதி பற்றி எழுத தொடங்கிய பொழுது வாசித்த நூல்கள் அவை பல்வேறு கருத்துகளை பேசியிருந்தாலும் நடைமுறையில் ஜாதி தீண்டாமை அதனை கடந்து வந்த போராட்டம் பற்றி சில ஆவணங்கள் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பாக உள்ளது.
எனது புரிதல் வட மாவட்டங்களில் உள்ள ஜாதி அமைப்பு ஒடுக்குமுறைக்கு வேறாக தென்பகுதியில் இருந்து வந்தது எப்படி என்று அந்த கட்டுரையாளர் ஆராய்ந்துள்ளார் அதனை பற்றி விரிவாக அடுத்தப் பகுதியில் எழுதுவேன் அதற்குமுன் இந்தப் பகுதியில் வாசித்து விவாதிக்க வாருங்கள் தோழர்களே.
தென் தமிழகத்தில் தலித் எழுச்சி இனி என்ன? கோ. கேசவன் இந்தப் பகுதி அவரின் கட்டுரையின் அடிப்படையில் சுருக்கமாக எழுதியுள்ளேன்.
மதுரை ராமநாதபுரம் நெல்லை குமரி ஆகி மாவட்டங்களை தென் தமிழகம் என்கிறோம் இவ்வாறு பிரிப்பது சரியா? இதற்கான காரணங்களை கூறுவது இக்கட்டுரை.
1). தமிழோடு தொடர்புடைய கதையாக்கங்கள் இந்தப் பகுதியை சார்ந்து கட்டப்பட்டன பக்திய இலக்கியங்கள் தல புராணங்கள் சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றின் ஆக பெரும்பான்மை இந்த பகுதியோடு தொடர்புடையன.
2).நாயக்கர் காலத்தில் அறிமுகமான பாளையப்பட்டுகள் இங்கு அதிகம். பழையக்காரர்களாக நாயுடு, மறவர் ஆகிய ஜாதியினரே இருந்துள்ளனர்.
3).தமிழகத்தில் தெலுங்கு பேசும் ஜாதியினர் இந்தப் பகுதியில் 400 ஆண்டு காலத்திற்கு மேலாக குடியமர்த்தப்பட்டு இருந்தனர். தமிழகத்தின் பிறப்பகுதிகளை விட அவர்கள் வாழும் இடம் தொடர்ச்சியாக பரப்பு இங்கு அதிகம்.
4).பிரிட்டிஷார் வருகைக்கு முன்னர் இங்கு சுயேச்சையான தன்னரசுகள் அதிகம். பெரும்பகுதி தன்னரசுகளை மறவர், கள்ளர் ஆகியோர் ஆட்சி செய்து கொண்டு இருந்தனர்.
5).இங்கு பல கிராமங்களில் நாடு என்ற அரசியல் சமூக அமைப்பு இருந்தது. பல கிராமங்களை கொண்டது ஒரு நாடு.ஒரு நாட்டின் பெரும்பான்மை எண்ணிக்கை ஜாதியினர் குறிப்பாக கள்ளர், மறவர் ஆகியோர் அரசு அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் பிற நாட்டு மக்கள் தலையிடக்கூடாது என்று இருந்தது. அதாவது ஜாதிய சமூகத்தில் உள் முரண்பாடுகளில் பிற நாட்டினர் தலையிடக் கூடாது. அதேபோல் வெளியாருடன் முரண்பாடு ஏற்படும் பொழுது உள் முரண்பாடுகளை மறந்து ஒற்றுமை திணிக்கப்பட்டது.அதாவது ஒரு நாட்டின் ஜாதிய சமூகத்தில் உள் முரண்பாடுகளை பிறரைத் தலையிட அனுமதிக்காமை;பிரருடன் முரண்பாடு ஏற்படும் பொழுது உள் முரண்பாடுகளின் மறந்து ஒற்றுமை என்பனவாக இருந்தன.
6).கிழக்கு இந்திய கம்பெனி வணிக நிறுவனத்திற்கு எதிர்ப்பு இந்தப் பகுதியில் கூர்மையடைந்திருந்தன. புலிதேவன்,கட்டபொம்மன், கோபால கிருஷ்ணநாயக்கர், மருதுபாண்டியர் போன்ற முக்குலத்தோர் நாயுடு மன்னர்களின்எதிர்ப்புகள் குறிப்பிடத் தக்கவை.இவர்களின் படைகளில் இருந்த நாடார்கள், தேவேந்திரர்கள் ஆகியோரின் உறுத்துணையும் இங்கு குறிப்பிடத்தக்கவை.இந்த எதிர்ப்புகளை தேசப்பற்று என்று காண்பதை விட இனக்குழு மக்களின் பிரதேசப்பற்று எனக் காண்பது பொருத்தம்.
7).பிரிட்டிஷார் வருகைக்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் இங்கு முதலில் துலக்கமடைந்தன.பணப்பயிர் சாகுபடி நிலப்பரப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பு, தமிழகத்தில் சமயப் பரவல் இங்குதான் கிறிஸ்துவம் அதிகமாக குறிப்பிட்ட அளவில் தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் இடையில் அதிகமாக பரவியது.இதை ஒட்டி கல்வி வளர்ச்சியும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டது. பார்ப்பனர், வேளாளர், நாயுடு முக்குலத்தோர், நாடார், தலித் என இருந்த ஜாதி படிநிலை வரிசை கொண்ட ஒரு சமூக அமைப்பில் இது முன்னேறிய சமூக இயங்குதலை கொடுத்தது. சாதிய படிநிலை வரிசைக்கு ஏற்ப வர்க்கம் மாறுதல்கள் அமைந்தன, என்பதோடு மட்டுமின்றி தமிழகத்தில் பிற பகுதிகளை விட இந்த பகுதியில் ஒடுக்கப்பட்ட ஜாதிகள் இடையே ஏற்பட்ட வர்க்க மாறுதல்கள் அதிகமாக முன்னேறிய தன்மையிலும் அமைந்தன.
8).இத்தகைய வர்க்க மாறுதல்களினால் ஜாதி அதிகார படிநிலை வரிசையில் பாரம்பரிய இடங்களை மாற்றி அமைக்க வேண்டிய போராட்டங்கள் தொடங்கின. குறிப்பாக நாடர்களுக்கும் வேளாளர், மறவர் தலைமையிலான நாடார் அல்லாத ஜாதியினற்கும் இடையே நடைபெற்ற உக்கிரமான சண்டைகளில் ஜாதியை படிநிலை வரிசையில் ஒரு கௌவரமான இடத்தை நாடார்கள் பெற்றனர்.
9).பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிர்ப்புகள் இங்குதான் அதிகமாக கூர்மை அடைந்தன முழுமையான எதிர்ப்பு களாலும் மக்கள்மைய எதிர்ப்புகளும் இதை காணலாம்.ஆங்கிலேயே கொடுங்கோல் அதிகாரியான ஆஸ் என்பவனை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனும் அவர்கள் குழுவும் ; மக்கள் மைய எதிர்ப்புகளில் தலைமை தாங்கிய இயக்கமே. உ.சி.யும் இந்த பகுதியினரே. தமிழகத்தில் பொருளாதார சுதேசிய தலைநகரமாக இந்த பகுதி விளங்கியது.
இங்கே குறிப்பிடும் எல்லா அம்சங்களும் ஏதோ ஓரளவில் பிறப்பகுதிகளிலும் காணப்பட்டாலும் இவை எல்லாம் இங்கு ஒருங்கி இருந்தன. குறிப்பாக ஜாதிய சமூகம் அதன் உள்ளூர் அரசு அதிகாரமும் அவற்றின் செயல்பாடுகளும் மனோபாவங்களும் கருததக்கவை. பிரிட்டிஷார் கொணர்ந்த சீர்திருத்தத் தினால் ஏற்பட்ட வர்க்க மாறுதல்கள் ஒடுக்கப்பட்ட ஜாதிகள் மத்தியில் ஏற்படுத்திய மாறுதல்களையும் அவற்றின் விளைவாக ஜாதியை படிநிலையில் கௌரவர்களுக்கு எடுத்துகாக நடந்த போராட்டத்தி லிருந்து காணலாம். கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பகுதி முழுவதிலும் இந்த பகுதியில் நாடார்களால் நடத்தப்பட்ட போராட்டம் போல ... புரிதலுக்காக சில ...
இன்றைய தலித் எழுச்சி சில விவரங்கள்
சமூக உற்பத்தி முறையில் கொண்டுவரும் அடிப்படையான மாற்றங்கள் சமூக உறவுகளை மாற்றி அமைக்க கூடியவை.ஆனால் அடிப்படையான மாற்றங்கள் நடைபெறாமல் அரசின் பொருளாதார நிர்வாக சமூக சீர்திருத்தங்களும் காலப்போக்கில் சில விளைவுகளை ஏற்படுத்தும். 1950 பின் கொண்டுவரப்பட்ட நில சீர்திருத்தம், கல்வியில் வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, வரியவர்களுக்கான கடன் உதவி, ஐந்து ஆண்டு திட்டங்களில் தலித்துகளுக்கான நிதிஉதவி ஆகியவை சமூகத்தில் சலனப்படுத்தி யது.அதுவரை சமூகத் கட்டமைப் புக்குள் கவுரவமான இடத்தை வகிக்காத தலித்துகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆகியோர் அத்தகைய இடத்துக்கு வர வாய்ப்புகள் ஏற்படுத்தியது.கல்வி கற்று ஏதேனும் நிரந்தர பணியில் அமர முடிகிறது. ஒரு பாதுகாப்பாக நடுத்தர வாழ்க்கை வாழ முடிகிறது.நிலவுடமை முறையைஅழித்துவிட்டு முதலாளியம் உருவாவதாலும் சுய மூலதனம் இட்டு முதலாளிம் உருவாகாததாலும் இங்கு ஏற்பட்ட தொழில்மயமாதல் நகர மயமாதல் ஆகியவற்றின் தன்மைகள் மாறியே உருவெடுத்தன. அமைப்பு ரீதியான தொழிலாளர்கள் உருவாவதற்கு பதிலாக அவர்களை சிறுபான்மையினராக கொண்டு உதிரிப் பாட்டாளிகளை பெரும்பான்மையான கொண்ட நகர்மயமாதல் உருவாயிற்று. 1950இல் தொடங்கிய ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தல அளவில் அதன் தன்மைக்கு ஏற்ப வேறுபாடுகளையும் கொண்டிருந்தது.
தென் தமிழகத்தில் இத்தகைய மாற்றங்கள் தலித் ஜாதியில் குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் ஜாதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஏற்பட்டன.ஏனைய தலித் ஜாதிகளை விட தேவேந்திரர் நிலம் சார்ந்த வாழ்க்கை முறையில் தொடர்ந்து இருந்து வந்தனர். இவர்கள் படித்த பிரிவினர் சேவை தொழிலில் ஈடுபட்டனர். சிறு நில உரிமையாளர்கள் ஆகிய பிரிவினர்கள் தோன்றின. இவர்கள் தொடக்கத்தில் தமக்குரிய அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை பெற்றுக் கொள்வதில் அரசாங்கத் தோடு அதைநடத்தும் ஆளுங்கட்சி யோடு இயைந்தே இருந்தனர். ஜாதிய சமூகத்தில் ஏற்பட்ட இத்தகைய வர்க்க மாறுதலுக்கு ஒரு வரம்பு இருந்தது. இது ஒரு ஜாதியை குறுக்கும் நெடுக்கமாக பிளந்து விடவில்லை.
ஒரு ஜாதியின் ஒரு மட்டத்தில் மட்டுமே மாற்றத்தை உருவாக்கி விட்டது. அப்படி உருவான வர்க்கம் தம் வர்க்கத்திற்குரிய உணர்வு பெற்ற தன்மையில் உருவாகாமல் ஜாதி உணர்வு சிந்தனை கொண்ட பிரதானமாக பிரிவாக அமைந்தது.அதாவது தமக்கான வர்க்கமாக அமையாமல் தானொரு வர்க்கமாக அமைந்தது.ஜாதிக்குள் ஏற்பட்ட வர்க்க மாறுதல்கள் அடக்குமுறை அரசும் அரை நிலஉடமை சமூகம் அதன் தாக்கத்தால் அதற்கு மேல் தாண்டாமல் முடங்கி விட்டன. இத்தகைய ஒரு பொதுவான கூட்டமைப்புக்குள் தேவேந்திரகுல வேளாளரின் வரம்புக்கு உட்பட்ட வளர்ச்சி அமைந்தது.இத்தகைய வளர்ச்சி நிலை தேவேந்திரர் ஜாதி உள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. தேவேந்திரர்களுக்கும் பிற ஜாதிக்கும் இடையிலான ஸ்தல அளவிலான அதிகார சமன்பாட்டில் ஒரு மாற்றத்தை கோரியது.
தேவேந்திர ஜாதிக்குள்ளேயே படித்த நிலைத்த வருவாய் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க பிரிவு தோன்றியது. இவர்கள் அரசாங்கத்தின் மாநில உள்ளூர் மட்டங்களில் அரசாங்க சலுகைகள் இட ஒதுக்கீடு பகுதி சிக்கல்கள் ஆகியவற்றில் தேவேந்திரர் நலன்களை பேணக்கூடிய ஒரு பேரமைப்பாக தம்மை ஆக்கிக் கொண்டனர்.அரசாங்கத்தை நடத்திய காங்கிரஸ் கட்சியும் இவர்களை தம் வாக்கு வங்கிகளாக வைத்திருப்பதில் வெற்றி கண்டது.தென் தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக முத்துராமலிங்க தேவரின் ஃபார்வர்ட் பிளாக் கட்சி செயல்பட தொடங்கிய பின் இத்தகைய போக்கு அதிகரித்தது.
தேவேந்திரரில் தோன்றிய இத்தகைய நடுத்தரவர்க்கப் பிரிவு தல அளவிலான ஆதிக்கத்தை எதிர்த்தது. ஜாதி கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு வரும் தேவேந்திரர் அனைவருக்கும் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இத்தகைய எதிர்ப்புக்கான காரணங்கள் உள்ளார்ந்து மறைந்து இருப்பினும் தேவேந்திரர் ஏற்பட்ட பிறகு மாணவர்கள் இங்கு உடனடியாக காரணமாக அமைந்தன .
இவற்றின் தொடர்ச்சியாகவே அண்மைக்காலத்தில் தென் தமிழக தலித் எழுச்சிகளை காண முடிகிறது. முக்குலத்தோர் தலித்துகளுக்கு இடையில் இது நடந்தது எனினும் சில இடங்களில் நாயுடு நாடார் ஆகிய ஜாதியினரும் தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்தனர்.இன்றைய தென் தமிழகத்தில் முக்குலத்தோர் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டவராகவும் நாயுடு நாடார் ஆகியோர் பொருளாதார ரீதியில் வலுப்பெற்றவராகம் உள்ளனர்.
தி இந்து (30/05/1997)பத்திரிக்கை ஆதாரத்தின்அடிப்படையில்தேவேந்திரர் ஆதிதிராவிடர் அருந்ததியர் ஆகிய தலித் மக்கள் தத்தம் பகுதியில் தனித்தனியே கிளர்ந்து எழுந்தனர். முக்குலத்தோர் நாயுடு நாடார் ஆகிய சாதிகளை சேர்ந்தோர் இத்தகைய எழுச்சிகளை தாங்கிக் கொள்ள இயலாமல் செயல்பட்டனர். கோயில் விழாக்களில் சமஉரிமை மறுக்கப்பட்டது. பிற ஜாதியினர் தலித்துகள் சமூக அளவில் தனிமைப் படுத்தப்பட்டனர்.தேர்தலில் வெற்றி பெற்ற தலித்துகளை செயல்பட விடாமல் தடுத்தனர். செயல்பட்டோரை கொல்லவும் துணிந்தனர்.தலித்துகள் விரோதமாக எல்லாவிதமான சமூக கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.
எங்கெல்லாம் எதிர்ப்பாற்றும் அதை பயன்படுத்தற்குரிய களமும் இருந்தனவோ அங்கெல்லாம் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.எழுச்சிக் கொண்ட தலித் சாதியினரும் எழுச்சியை அடக்க முயன்ற முக்குலத்தோரும் வசிக்கும் கிராமங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து இருந்தும் அவை அனைத்திலும் கொந்தளிப்பு இருப்பினும் தலித் எழுச்சிகள் சிறிது சிறிதாகவே நடந்தேறின.
இத்தகைய எழுச்சிகளை அரசு எவ்வாறு எதிர்கொண்டது? அரசியல் கட்சிகள் எங்கனம் எதிர்கொண்டன? என்பது முக்கியமானவை ஆகும்.
அரசாங்கம் இதை ஓர் அடிப்படையான சமூக சிக்கலாக காண்பதை விட சட்டம் ஒழுங்கு சிக்கலாக காண்பதில் பிரதான கவனம் செலுத்தியது.காவல்துறை நிர்வாக துறையின் கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டன.1989ல் பதிவு செய்யப்பட்ட பல குற்றங்களின் அடிப்படையில் தென் தமிழகத்தின் காவல்துறையில் முக்குலத்தோர் கனிசமாக இருக்கின்றது என்பதும் தலித் அல்லாத சாதிகளில் இருக்கும் எவராயினும் அவர்கள் ஒரு சார்பாகவே நடந்து கொள்கின்றனர் என்பதும் உண்மை அறியும் குழுக்களின் தகவல்களாகும். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர் பலரை தமிழக அரசு ஆணையினால் இடம் மாற்றம் செய்யப்பட்டது இந்த செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
உள்ளூர் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்ற வரை பல நேர்வுகளில் அரசு அதிகாரம்மேற்கொண்ட தன்மையி லிருந்து விலகி விடவில்லை.
அரசாங்கம் தல அளவிலும் மாநில அளவிலும் இந்த கலவரத்தை எப்படியாவது வற்றடித்தால் போதும், என எண்ணி அமைதி குழுக்கள் பஞ்சாயத்து செத்தாலும் காயமடைந் தாலோ ரொக்க பணம் சொத்துகளுக்கு இழப்பீடு கொடுத்தல் என செயல்பட்டது. நவீன தீண்டாம கொடுமை அரசு உணராமல் அரசாங்கம் மேலிருந்து சில நிர்வாக தலையீடுகளை மேற்கொள்வதன் மூலமே இத்தகைய கலவரங்களை கட்டுப்படுத்தி விட முடியும் என நினைத்தது.
அரசியல் கட்சியில் இத்தகைய நிகழ்வுகளை தத்தம் அரசியல் லாபக் கண்ணோட்டத்தில் அணுகின சமூக சீர்திருவாத இயக்கமாக தொடங்கிய திராவிடர் இயக்கம் பார்ப்பனர் அல்லாதவர்களிடம் ஏற்படும் இத்தகைய மோதல்களை கையாளக் கூட எவ்வித கருத்துருவாற்றலும் இன்றி இருந்தது. எனினும் நடைமுறையில் தலித் அல்லாத சாதிகளிடம் தமக்குள் ஆதரவு இழந்து விடாமல்,தலித்துகளிடம் அனுதாபமும் தோய்ந்த உபகாரங்களை காட்டின.மனித சங்கிலி, சமபந்தி என்ற பழைய நடைமுறைகளே கையாளப்பட்டன.ஊரையும் சேரியையும் வேறுபடுத்தும் அடிப்படைகளை கண்டு களையாமல் சமத்துவபுரம் எனும் தனி ஊரையே நிர்மாணிக்க அறிவித்தது. பல அரசியல் கட்சிகள் தங்களின் நடைமுறை சார்ந்த வாக்கு வங்கிகளை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாகவே அமைந்தன.இது மட்டுமல்லாமல் தீண்டாமை ஒழிப்பதற்கான காந்திய தத்துவ கட்டமைப்புக்குள்ளேயே இது இயங்கியது.தீண்டாமை எதிர்த்து தலித்துகளின் போராட்ட நியாயத்தை பற்றியோ எவ்வித அரசியல் நிலைப்பாடும் எடுக்காமல் ஆதிக்க சாதிகள் தம் சாதி ஆதிக்க மனநிலை கைவிட வேண்டும் என்ற உயர் ஜாதி தாராள மனநிலையோடு இவை இயங்கின.
திராவிட இயக்கம் அரசு நிர்வாக அமைப்பின் மூலம் மேலிருந்து வழங்கிய சீர்திருத்தங்கள் தல அளவிலான சுயமரியாதை தலித்துகளுக்கு வழங்க இயலவில்லை என்கிற பொழுது அந்த இயக்கங்கள் தலித்துகளுக்கு பயனடையாது போய்விட்டது. புதிய இளைய தலைமுறையின் பிழைப்புவாதிகளை மட்டுமே இந்த கட்டமைப்புகள் ஏற்றுக் கொள்ள முடிந்தன. மார்க்சிய லெனினிய அமைப்புகள் தலித்து களுக்கு தல அளவிலான சுயமரியாதை போராட்டத்திற்கு உரிய மதிப்பு கொடுத்த பகுதிகளில் உரிய மரியாதை கொடுத்தவரை தலித்துகளை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
தலித்துகளுக்கான கல்வி பெருக்கத்துக்கு ஏற்ப அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாகவில்லை. அரசுத் துறையில் வேலைவாய்ப்புகள் சுருங்கிவிட்ட நிலையில் இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசின் சுய வேலைவாய்ப்புக்கான நிதி உதவி பெற்று சிறு தொழில் ஈடுபட்டு உற்பத்தி பொருட்களை சந்தை பெறுகிற அளவிற்கு சமூகம் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. பிற மாநிலங்களை விட ஒப்பிட்ட அளவில் அதிகமான நகர்மயமாதல் தமிழ்நாடு ஆட்பட்டு உள்ளது. தீண்டாமை குறித்து கறாரான எல்லைகோடுகள் நகர் புறத்தில் காணப்படுவதில்லை .
தமிழகத்தில் தலித்தியம் ஜாதியும் பெண்ணியம் சூழலியல் தேசிய இனச் சிக்கல் ஆகியவற்றில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு அவற்றின் வலைப்பின்னல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது வர்க்கமற்ற அடையாளங்களை முன்னிறுத்துவதால் வர்க்கப் போராட்டங்கள் பின் இழுக்கப் படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.நிதிஉதவி பெறும் தன்னார்வகுழுக்களின் அகவய நோக்கில் ஏகாதிபத்திய நலமும் அடங்கியுள்ளன. இத்தகைய குழுக்களில்இயங்கும் முன்னணி யாளர்கள் இத்தகைய செயலுக்கு உட்பட்டவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.தலித் அமைப்புகளின் தலைமைக்கு பல உதவிகளை செய்தல். தலித்துகளிடமிருந்து முன்னணி சக்திகளை வென்றெடுப்பது தலித்து களுக்கும் பிற ஜாதிகளுக்கும் இடையிலானமுரண்பாட்டுஅம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல்.மோதல்களைப் பொது அரங்குகளில் பத்திரிகைகளில் விவாத பொருளாக்கி தலித்துகளின் சார்பு நிலை எடுத்தல். அமுக்கப்பட்ட பல விஷயங்களை பணிகளை வெளிப் புணர்ந்து பிரச்சனையை உருவாக்குதல்.
இறுதியாக என் குறிப்பு:
நாடார்களின் போராட்ட வடிவமானது இருபதாம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அவர்களின் சுயமரியாத போராட்டமானது ஜாதி ஜனநாயக சக்திகளும் அவர்களின் போராட்டத்தை ஏற்று கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுத்தனர். தமக்கு கீழ் நிலையில் உள்ளவர்களின் ஜாதிகளின் இழிவை நீக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு சம பங்கு கொடுக்க வேண்டும் என்றும் கோரினர். தமக்கான சுயேச்சையான அமைப்புகளின் செயல்பாடுகளோடு பொது சமூக அமைப்புகளில் முனைப்பாக ஈடுபாடு காட்டி செயல்பட்டனர்.நாடார்களின்இத்தகைய ஜாதியை போராட்டத்தில் இருந்து தலித் அமைப்புகள் தமக்குரிய படிப்பினைகளை ஏற்றுக் கொண்டு அந்த வகையில் இல்லை என்பதும்; தலித்துகளுக்கான இன்றைய பின்னடைவு என்பது ஒடுகப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்களை ஒன்றினைத்து போராடமையுமேயாகும்.
இவர்கள் புரட்சிகர அரசியலை நோக்கி நகர வேண்டிய அவசியம் உள்ளது…ஜாதி தீண்டாமை ஜாதி ஏற்றதாழ்வு இழிவான செயல் ஆகும். மனித குலம் வெட்கி தலைகுனிய வேண்டும் தம்மில் சிலர் சமூகத்தில் ஒதுக்கப் படும் பொழுது எப்படி ஏற்று வாழ்வீர்?
ஜாதி ஒழிப்பானது எந்த தேவைக்காக அன்று ஜாதி தோன்றியதோ அந்த அடிதளத்தை (உற்பத்தி உறவுகளை) மாற்றி அமைப்பதோடு ஜாதிய சிந்தனையை சமூகத்திலிருந்து அகற்றிட அதற்கான பண்பாட்டு துறையில் கலாச்சார பிரச்சாரம் செய்து முழுமையாக அழித்திட வேண்டும் அதற்கு தேவை சமூக புரட்சி....
ஜாதி வேறுபாடுகளை கடந்து இடதுசாரிகளின் போராட்டம்
இன்று நமது சமூகத்தில் பேசப்படும் பல்வேறு விதமான ஜாதிய தலித்திய சிந்தனை முறைக்கு வேறாக அன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் போராட்ட வடிவங்கள் இருந்தன. 1930-40க்கு நாட்டில் நடந்த நில உடமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோரும் ஏனைய மக்களும் ஒன்று திரட்டப்பட்டு விவசாய சங்கங்களில் ஈடுபட்ட போராட்டங்கள். தேபாக இயக்கம், தெலுங்கானா இயக்கம், கீழ் தஞ்சை போராட்டங்கள் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வழிகாட்டுதலில் செயல்பட்டதை வரலாற்றுப் பக்கங்கள் நமக்கு கூறுகின்றன.
ஜாதி வேற்றுமைகள் தீண்டாமையும் ஆழமாக வேரூன்றி இருந்த கிராம நிலவுடமை சமூக அமைப்பில் உள்ளூர் நிலப்பிரப்புகளை எதிர்த்தும் அரசாங்கத்தை எதிர்த்தும் வர்க்க போராட்டம் நடைபெற்றன. இப் போராட்டங்களின்மூலம்மக்களிடையே இருந்த தீண்டாமை கொடுமைகளும் வேறுபாடுகளும்எதிர்த்துப் போராட்டங் களும் மேற்கொள்ளப்பட்டன. (சுந்தரய்யா பக்கம் 147 ).
இத்தகைய போராட்டங்களின் ஊடே தாழ்த்தப்பட்டோர் சமூக அரசியல் பொருளாதாரப் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டனர் . ஏனைய ஜாதிகளோடு ஐக்கிய அம்சங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
ஆக ஜாதி ஒடுக்குமுறை தீண்டாமைக்கு முடிவுகட்ட வேண்டியது உண்மையான மனிதாபிமானத்தை விரும்பும் ஒவ்வொருவரின் பணியாகும். ஜாதியின் வடிவமான உயர்வுதாழ்வு கற்பித்தல் சமூகத்தில் ஒரு பிரிவினரை ஒதுக்கி வைப்பது எவ்விதத்திலும் இந்த சமூக வளர்ச்சிக்கு வித்திடாது. ஆக ஜாதியை கட்டிக்காக்கும் இந்த அமைப்புமுறையை தகர்தெறிய மக்களை ஓரணியில் திரட்ட வேண்டும்… தொடரும் … சிபி.
No comments:
Post a Comment