சமூகத்தில் உள்ள பிரச்சினைக்கான தீர்வு சீர்திருத்தம் வழியிலா அல்லது புரட்சியின் மூலமா?

நேற்றை விவாதமே

"சமூகத்தில் உள்ள பிரச்சினைக்கான தீர்வு சீர்திருத்தம் வழியிலா அல்லது புரட்சியின் மூலமா?" இந்த விவாதம் நேற்றிரவு 8-9:30 வரை நடைபெற்றது அதற்கான ஒலி வடிவம் கீழ்காணும் லிங்கில்

விவாதங்களை கேட்க இந்த பகுதியை அழுத்தவும்

புரட்சி ஒன்றேதான் இந்த சமூகத்தில் உள்ள எல்லா கசடுகளையும் களைந்தெறியும் திறன் கொண்டவை மற்றெல்லாம் தற்காலிகமானவையே அவை மக்களுக்கு நன்மை பயக்குமா என்றால் சமூகத்தின் ஒரு சிறுபான்மையிருக்கு வளர்ச்சிக்கு உதவும் ஆனால் பெரும்பான்மையிலான மக்கள் வறுமையிலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று தொடங்கி நான் கீழ் காணும் பகுதியனை பேசி முடித்த பின்னர் தோழர் ரவீந்திரன் தொடர்ந்து பேசினார். அதில் சீர்திருத்தம் என்ன எப்படி நாம் எப்படி ஆதரிக்கிறோம் ஏன் ஆதரிக்கிறோம் அதற்கான முகாந்திரம் எப்படி என்பதனை பேசிய பொழுது என்னிடமிருந்த சில அசட்டு கொள்கைகள் தவிடுபொடியாகி விட்டது. ஆம் தோழர் மார்க்சியத்தை ஆழமாக உள்வாங்கி உள்ளமையின் தெளிவின் வெளிப்பாடே.

சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை ஒவ்வொன்றையும் தனித்து மட்டும் பார்பதல்ல அதன் சமுக காரணிகளையும் ஆராய்வதும் ஆகும். இச்சமூகத்தில் உள்ள பிரச்சினைக்கு இச்சமூகமே காரணம். ஆக ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக பிரித்து சரி படுத்த முடியாவை அவை இந்த சமூகத்தின் அங்கமே ஆக அதனை சரிபடுத்த மார்க்சியம் என்னும் மருத்துவத்தால் முடியும் அதனை அறிந்து செயல்படுத்தும் பாட்டாளி வர்க்க கட்சியானது வெற்றி வாகை சூடும். இவை நடைமுறை உத்தி.

நான் முன்னுரையாக பேசியவை கீழே:-

இன்று இந்தியாவின் மக்கள் தொகை 1,436,466,418(143கோடி)  அதில் 65% இந்தியர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள்இந்தியாவின் பெரியஆற்றல்மிக்க மற்றும் இளம் மக்கள்தொகையால் இந்த வளர்ச்சி முக்கியமானவர்கள் இவர்கள்இளம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று வேலையின்மை. இது ஒரு வாய்ப்பு அல்லது மக்கள்தொகை பேரழிவா என்பது முக்கிய கேள்வியை எழுப்புகிறது!? மேலும் 40 per cent of India's population, almost half of them – 45.8 per cent – were unemployed as of December 2022, according to the Centre for Monitoring Indian Economy (CMIE).Over 50% of Indian women in 15-29 age group are neither employed nor studying, shows NSSO survey. Most aren’t seeking a job either. Expert points to ‘burden of care’, marriage factor.02 April, 2023 09:27 am IST தி பிரிண்ட் பத்திரிக்கை செய்தியே இப்படி நீண்ட தகவல்களின் ஊடே

தற்போதுள்ள தொழிலாளர்களுக்கும் புதிய தொழிலாளர் சந்தையில் நுழைபவர்களுக்கும் அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது,ஆனால் அவை நடைமுறையில் நீங்கள் காண்பதென்ன?

· ஏராளமான மனித மூலதனம்: இந்தியா ஒரு பரந்த அளவிலான படித்த மற்றும் திறமையான நபர்களைக் கொண்டுள்ளது, இந்த பணியாளர் பல்வேறு துறைகளில் புதுமை, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார போட்டித்திறனை இயக்க முடியும் ஆனால் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது?.

· நுகர்வோர் சந்தை: இந்தியாவின் பெரிய மக்கள் தொகையானது கணிசமான உள்நாட்டு நுகர்வோர் சந்தையை வழங்குகிறது, வணிகங்கள் ஒரு பரந்த நுகர்வோர் தளத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. இதனை நோக்கிதான் உலக நாடுகள் இந்தியாவை நோக்கிய கவனத்தை குவிக்கிறது.

· கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு: இந்தியாவில் உள்ள இளம் மற்றும் ஆற்றல்மிக்க மக்கள், புதுமை மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்த்து, புதிய தொழில்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளின் வளர்ச்சிக்கு பங்களித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்க வேண்டும் அவை இங்குள்ள ஆளுவோருக்கு தேவையற்றதாக உள்ளது..


மேலும் சாதியொழியாமைக்கு காரணம் இதிலே அடங்கியுள்ளது அவை ஒரு பொதுவுடமை சிந்தனை உடையவனால் மட்டுமே புரிந்து பேச முடியும் என்பதற்கு சமுக வளர்ச்சி விதியினை அறிந்த ஒருவனால் மட்டுமே முடியும் என்பது எனது முடிவு..

தொழிற்துறை வளர்ச்சியால் மட்டுமே சாதியின் கோர தாண்டவத்தை அழிக்க முடியும்

இந்தியாவிலும், தமிழகத்திலும் தொழிற்துறை வளர்ச்சி போதிய அளவு இல்லாததுதான் சாதியம் இருப்பதற்கான முதற்காரணி. இந்தியாவில் பணி செய்பவர்களில் (Work force) 2020ல் இருந்த சுமார் 50 கோடிப்பேரில் 47 கோடிப்பேர் அமைப்புச்சாரா பணிகளிலும், 3 கோடிப்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த பணிகளிலும் இருந்துள்ளனர். இவைபோக மத்திய மாநில அரசுகள், பொதுத்துறைகள் போன்றவற்றில் 4.5 கோடி மக்கள் பணிபுரிகின்றனர். மொத்தப் பணிகளில் சுமார் 15% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் அமைப்பு சார்ந்த பணிகளில் (Organised or Formal) உள்ளனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சாரா பணிகளில் (unorganized or informal)தான் இருக்கின்றனர். ஆனால் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் 10-20% க்கும் குறைவானவர்களே அமைப்புச் சாரா பணிகளில் இருக்கின்றனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சார்ந்த பணிகளில்தான் இருக்கின்றனர். தமிழகத்திலும் அமைப்பு சார்ந்த பணிகளில் 80%க்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களில் 70% மக்களும், மொத்த மக்கள் தொகையில் 50% மக்களும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2001ல் 49.2% மக்களும், 2011ல் 42.1% மக்களும் வேளாண்மையை நம்பி உள்ளனர் என்பது கண்க்கெடுப்பு கூறுகிறது. இதே வளர்ந்த நாடுகளில் 10% க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பி உள்ளனர். சான்றாக அமெரிக்க மக்களில் 1.5%க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பியுள்ளனர். தமிழகம் அந்த நிலையை அடையும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும். இது திண்ணம் அதற்கான வழி வகை புதிய தொழிற் வளர்ச்சி எல்லா படித்தவார்களுக்கும் அவர்கள் கல்வி சார்ந்த பணி, நிரந்தரமான பொது துறையே ஏற்று நடத்தும் தொழில்துறை வேலைவாய்ப்புகள் பெருகினால் இன்றுள்ள ஜாதி கொடுமைகள் கெட்ட கனவாய் மறைந்தோடும் எல்லாம் சில காலம்தான்.

சரி சீர்திருத்தம் பற்றி:-

"இன்றையப் புரட்சிக் காலகட்டத்தில் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கங்களை வைத்து முக்கியமாக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வுள்ள பகுதிகளை எதிர்த்து வழக்கமான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் அதேநேரத்தில்
அது 1) சலுகைகளைக் கொடுத்தும் சீர்திருத்தம் பற்றிய வாக்குறுதிகளைக் கொடுத்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியிலே கெடுக்கவும் அதன் விளைவாக அதைப் புரட்சிப் போராட்டத்தினின்று திசைதிருப்பி விடவும் முயல்கிறது.
2) அதே நோக்கத்தை வைத்துத் தன்னுடைய பாசாங்குகளை சலுகையளிக்கும் கொள்கையைப் போலி ஜனநாயக வடிவங்களிலே போர்த்தி வருகிறது -- ........கேலியான மக்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது வரை இவ்வடிவங்கள் உள்ளன.

3) கறுப்புநூற்றுவர் எனப்படும் கும்பலை அது அமைக்கிறது. மக்களிடையே பொதுவாகப் பிற்போக்கானவர்களாகவும், அரசியல் உணர்வு பெறாதவர்களாகவும், இனவெறியாலோ மதவெறியாலோ கண்மூடிப்போனவர்களாகவும் இருக்கும் எல்லாப் பகுதிகளையும் புரட்சிக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது( நான் சொல்லவில்லை ஆசான் லெனின் சொல்கிறார்).
"அ) அரசாங்கத்தின் சலுகைகளின் பிற்போக்கான நோக்கத்தை அம்பலப்படுத்தி வரும் அதே நேரத்தில், ஒருபுறத்தில் இந்தச் சலுகைகள் பலவந்தத்தின் மூலமாகப் பறிக்கப்பட்டவை எனும் உண்மையையும், மறுபுறத்தில் பாட்டாளி வர்க்கத்தைத் திருப்திபடுத்தக் கூடிய சீர்திருத்தங்களை எதேச்சிகார ஆட்சியால் அறவே கொடுக்க இயலாது எனும் உண்மையையும் தங்களது பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் வலியுறுத்த வேண்டும்;
ஆ) தேர்தல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசாங்க நடவடிக்கைகளின் உண்மையான குறிபொருளைத் தொழிலாளிகளுக்கு விளக்க வேண்டும், மற்றும் எல்லோருக்கும் சம வாக்குரிமை, நேர்முகத் தேர்தல்கள், இரகசிய வாக்குப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஓர் அரசியல் நிர்ணய சபையைப் புரட்சிகரமான வழியில் கூட்டுவது பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியம் என்று நிருபிக்க வேண்டும்;(அதே நூல் பக்கம் 116-117)
முதலாளி வர்க்கம் தனக்குத் தானே துரோகம் செய்து கொள்கிறது, சுதந்திர லட்சியத்துக்குத் துரோகம் செய்கிறது, முரணற்ற ஜனநாயகப் போக்கிலே போகும் திறன் முதலாளி வர்க்கத்துக்குக் கிடையாது, என்று. முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிப் போகும் அவசியமான மாற்றங்கள் மேலும் மெதுவாக, மேலும் படிப்படியாக, மேலும் எச்சரிக்கையாக நடப்பது, குறைந்த உறுதியுடன் நடப்பது, புரட்சி வழியில்லாமல் சீர்திருத்தங்களின் வழியே நடப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. பண்ணையடிமை முறையின் "நன்மதிப்புக்குரிய" நிறுவனங்களை (முடியரசு போன்றவற்றை) இந்த மாற்றங்கள் முடிந்தவரை அப்படியே விட்டுவைப்பது., இந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் -- அதாவது விவசாயிகளின், குறிப்பாகத் தொழிலாளிகளின் -- சுதந்திரமான புரட்சிகரமான நடவடிக்கையும் முன்முயற்சியையும் ஆற்றலையும் முடிந்தவரை குறைவாக வளர்க்கிறவையாக இருப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. காரணம் பிரெஞ்சுக்காரர்கள் சொல்கிற மாதிரி "துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது" தொழிலாளிகளுக்கு மேலும் சுளுவாயிருக்கும் -- அதாவது, அவர்களுக்கு முதலாளித்துவப் புரட்சி கொடுக்கும் ஆயுதங்களையும் புரட்சி கொண்டுவந்து தரும் சுதந்திரத்தையும் பண்ணையடிமை முறையை ஒழித்துச் சுத்தப்படுத்திய களத்தில் தோன்றுகிற ஜனநாயக நிறுவனங்களையும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தொழிலாளிகள் திரும்புவது மேலும் சுளுவாயிருக்கும்.
மறுபுறத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் அவசியமான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் வழியேயல்லாமல் புரட்சி வழியே நிகழ்வது தொழிலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது ஆகும். ஏனெனில் சீர்திருத்தவாதத்தின் வழி தாமதப்படுத்தும் வழி, தள்ளிப்போடும் வழி, நாட்டின் உடம்பிலுள்ள அழுகிப்போன பகுதிகள் வேதனைமிக்க நிதானத்துடன் இற்றுச்சிதையும் வழியாகும். . பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளுந்தான் அந்த அழுகளினால் முதன்மையாகவும் மிகுதியாகவும் துன்பப்படுகிறார்கள். புரட்சி வழி விரைவாக வெட்டியகற்றும் வழி, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் குறைந்த வலி கொடுக்கும் வழி, அழுகிவிட்டதை உடனடியாக அகற்றும் வழி, முடியரசிடமும் அதைச் சேர்ந்த வெறுக்கத்தக்க, இழிந்த, அழுகலான, நாற்றமெடுக்கும் நிறுவனங்களிடமும் மிகக் குறைவான இணக்கும் எச்சரிக்கையும் காட்டும் வழியாகும்.
(லெனின் நூல் திரட்டு 1 பக்கம் 139-140)..
இதனையெல்லாம் மிக ஆழமாக உள்வாங்கி இங்கு சீர்திருத்தம் பற்றிய பார்வையை தோழர் ரவீந்திரன் வைத்திருக்கிறார் கேட்டு விவாதிக்க வாருங்கள் தோழர்களே.
புரட்சி பற்றி
அரசும் புரட்சியும் நூலில் மிக அழகாக தோழர் லெனின் கூறியிருப்பார்,"ஒடுக்கும் வர்க்கங்கள் மாபெரும் புரட்சியாளர்களை அவருடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின;அவர்களின் போதனைகள் மீது காட்டுத்தனமான காழ்ப்பும் வெறித்தனமான வெறுப்பும் கொண்டு காயம்மையான பொய் பிரசாரம் அவதூறு இயக்கங்கள் நடத்தின. அவர்கள் இறந்த பிற்பாடு அவர்களை பயமற்ற பூஜையறைப் படமாக்கி வழிபாட்டுகுரியோர் ஆக்கவும் ஓரளவு அவர்களுடைய பெயர்களை புனித திருப் பெயர்களாக்கவும் முயற்சி செய்யப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை "ஆன்ம திருப்தி" பெற செய்வதும் அவற்றை ஏமாற்றுவதும், அதே நேரத்தில் புரட்சி போதனையிடமிருந்து அதன் சார பொருளைக் களைந்து அதன் புரட்சி முனையை மழுங்கடித்து, அதை கொச்சைப்படுத்துவதுதான் இந்த முயற்சிகளின் நோக்கம்-என்கிறார் தோழர் லெனின் அரசும் புரட்சியும் நூலில் அத்தியாயம் 1 பக்கம் 8ல். மேலும், அதே நூலில் லெனின்,பக்கம் 49-50ல் வர்க்க போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கான அங்கீகரிப்பகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சிவாதியாவார் மார்க்சிவாதிக்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனையாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இங்கேதான் அடங்கி உள்ளது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறார என்பதைச் சோதிப்பார்த்த உரைக்கல்லாக அமைவது இதுவே. இந்தப் பிரச்சினையை ஐரோப்பிய வரலாறு ஒரு நடைமுறை பிரச்சினையாக தொழிலாளி வர்க்கத்தின் முன் நேருக்கு நேர் கொண்டு வந்த போது எல்லா சந்தர்ப்பவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மட்டுமின்றி எல்லா காவுஸ்திகிவாதிகளும் கூட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிராகரிக்கு கேடுகெட்ட அர்ப்பவாதிகளாக குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாக
தன்னை நிரூபித்துக் கொண்டதில் வியப்பில்லை எங்கிறார். இவை அன்றே லெனின் சொன்னவையே.
இப்படி மார்க்சியம் தோன்றிய பொழுதிலிருந்தே மார்க்சிய விரோதிகளும் அதன் ஊடே வளர்ந்துக் கொண்டேதான் உள்ளனர் உண்மையில் மார்க்சியத்தை நேசிப்போர் மார்க்சியத்தை கற்று தேறுங்கள் என்பேன்.... விவாதம் தொடரும் தோழர்களே...


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்