இந்தப் பகுதி மீளக்கம் செய்கிறேன் இதனை இதற்கு முன் செப்டம்பர் 2022 எழுதியதே சில மாற்றதுடன்.
1980ஆம் ஆண்டுகளில் அன்றைக்கிருந்த மக்கள்திரள் அமைப்பு(RYL) என்று அழைக்கப்பட்ட நக்சல்பாரி கட்சியின் தலைமறைவு அமைப்பால் வழிநடத்தப்பட்டவீரமிகுபோராட்டங்கள் மோதல்கள் என்ற பெயரால் பல்வேறு முன்னணி தோழர்கள் கொன்றொழிக்க பட்டார்கள் அன்றைய தமிழக ஆட்சியாளர்களால். இருண்ட பகுதி என வர்ணிக்கப்படும் தர்மபுரி பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள்நிலபிரபுத்துவ கொடுங்கோலர் கள் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து போன்ற கொடுமைகளால் கஷ்டப் பட்டார்கள் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிராக தோழர்பாலன் தலைமையிலான வாலிபர் சங்கம் மக்களை திரட்டி எவ்வாறு போராடியது. மக்கள் திரள் போராட்டங்களால் விழிபிதுங்கி நின்ற ஆட்சியாளர்கள் பாலன் மற்றும் முன்னணி தோழர்களை கொன்றுவிட்டால் புரட்சியை நசுக்கி விடலாம் என்று எண்ணி பல்வேறு சூழ்ச்சிகளில் முன்னணி தோழர்களை கொன்றனர்.
அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வந்த சாதியம் தகர்க்கப்பட்டது.ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதை நடைமுறைப்படுத்தி வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராகவும் தனிக்குவளைவைப்பதற்கு எதிராகவும் புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. ஆனால் அன்று கொடிகட்டபறந்தபுரட்சிகர காலத்தோடு ஒப்பிடும் போது இன்றைய ஏகாதிபத்திய நாசகார கொடூரமான காலத்தை எவ்வாறு சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாக இருக்கிறது.
பாலனை அடித்துக் கொலை செய்து சரியாக 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாலனால் இன்னுயிர் ஈர்ந்து கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் இயக்கம் இன்று பிளவுண்டு செயலற்று நிற்கிறது.
தமிழகத்தில் இன்று அடையாள அரசியலுக்குள் புரட்சிகரகட்சிகளே அடைபட்டுகிடக்கும் பொழுது. அன்று சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் பாலன். உன்னதமான தனது வர்க்கஅரசியல் மூலம் சாதி கடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். நச்சல்பாரியின் விதை நெல்லாய் விளங்கும் தோழர் அப்பு பாலன் அவர்களின் படிப்பினை பெறத்தக்க வாழ்வானது இன்றைக்கும் புரட்சிகர இளம் தலைமுறைக்கு படிப்பினை தரத்தக்கதாகும். இன்று பல NGOகள் இந்த அமைப்பை கேள்வி கேட்பதும் இன்று சாதி ஒழிப்புக்கு கம்யூனிஸ்டுகள் என்ன செய்தனர் என்று பேசிக் கொண்டுள்ளனர்.
நக்சல்பாரி அமைப்புகளை அரசுமட்டுமா அழித்தது? இன்றுள்ள சாதிகட்சிகளின் பங்களிப்பு இல்லையோ?
போராட்டத்திலே சாவதெல்லாம் நம்ம இளைஞர்கள் தலைமையிலிருந்து கொண்டு பெயர் வாங்குவது, பேட்டிக் கொடுப்பதெல்லாம் மேல்சாதி இந்துக்கள் என்று பரஸ்பர குற்றம் சுமத்தி தத்தமது சாதி இளைஞர்களுக்கு நக்சல்பாரிகள் மீது சந்தேகத்தையும், அவநம்பிக்கை யையும் உண்டுபன்னியவர்கள் இந்த சாதி கட்சிகளின் தலைவர்கள் இல்லையோ?
“நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க” இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் அப்போது கூறியிருந்தது (இளவரசன்-திவ்யா கல்யாணம் அடுத்து நடந்த கலவரம்).
“நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப் பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று அச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும்அப்போதுஎழுதியிருந்தன. இன்றைய நிலையை பாருங்கள். நக்சல்பாரிகள் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்து போராடுபவர்களில் ஆதிக்க சாதியை சார்ந்த வாட்டாக்குடி இரணியன்கள், சீனிவாசராவுகள் போன்ற தலைவர்களும் தோழர்களும்தான் முன்ணனியில்நிற்ப்பார்கள்.என்றைக்குமே அனைத்து சாதியிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, உயர்சாதி திமிர் ஒழித்து, உழைக்கும் மக்களாய் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் இழந்த உரிமைகளை பெறமுடியும் என அப்போது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதை வென்றும் காட்டினார்கள். நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தததால் அவர்கள் புரட்சியாளர்களை நம்பினார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரண்டார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரித்தார்கள். நக்சல்பாரிகளும் அவர்களை அப்போது காப்பாற்றினார்கள். இன்று பாருங்கள். நிலைமை அப்படியே தலைகீழ். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கட்சி. தருமபுரியில் மட்டுமல்ல; தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் எந்த ஊரிலும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்துவதில்லை? அந்த இடத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அடையாள அரசியலை உயர்த்தி பிடிக்கும் அமைப்புகளும் அந்த மக்கள் தவறியும் வர்க்க அரசியல் பக்கம் போககூடாது என்றும், மற்றோருபுறம் பாமக போன்ற சாதிவெறி கட்சிகள் தமிழகமெங்கும் மேலோங்கிதான் இருக்கின்றன. ஏனென்றால் எதை, எப்போது, யாரை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கும் தெரியும் அதேபோன்று தொண்டு நிறுவனங்களுக்கும் தெரியும். வர்க்கமாக தவறியும் ஒன்றிணையாமல் இருக்க சாதிவெறி அமைப்புகளைதூக்கி நிறுத்தி, உழைக்கும் ஏழை எளிய மக்கள் வர்க்க உணர்வு கொஞ்சம் விழிப்புணர்வு பெறுகிறார்களா உடனே அவர்களை ஒருபுறம் ஆண்ட பரம்பரை பெருமை கொள்ளவை, ஒவ்வொருத்தரையும் தனக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்கவை. சண்டை மூட்டு. குடிசையை கொழுத்து, பின் கொஞ்சம் சலுகை கொடு. தேவையற்ற தத்துவங்களை, அமைப்புகளை தலையில் ஏற்றிவிடு. தேர்தல் அரசியலுக்குள் இழு. மீண்டும் பழையநிலைக்கே கொண்டுசெல். இதுதான் 1980களில் நக்சல்பாரிகள் பின்னடவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை தமிழகத்தில் நடக்கும் நடைமுறையாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் உழைக்கும் ஏழை எளிய வர்க்க மக்களின் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகள், அவர்கள் அவர்களது எல்லைக்குள்தான் இயங்க முடியும் ஆதிக்க சாதி அமைப்புகளுக்கு மரண பயத்தை உண்டாக்காது.அன்றுஅங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வரும் சாதியம் தகர்க்கப்பட்டது .ஒரு புரட்சிகர இயக்கம்மக்கள்பாதை நடைமுறைப் படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளன.
புறநிலையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் மார்க்சிய லெனினிய அடிப்படை நூல்கள் படிப்பதற்கான தேவைகளை வலியுறுத்தியது என்பதும் இந்த விவாதங்கள் நடத்துவதற்கு இயக்கத்தில் நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் புரிதலை மேம்படுத்த இந்த சூழல் உதவியது என்றால் மிகையாகாது.
இந்த காலகட்டத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்படுவது தொடர்கிறது. அடையாள அரசியல் வேகமாக வளர்ந்து வந்தது. சாதிய பார்வை கொண்ட தோழர்கள் உருவானது எப்படி என்று வியப்பாக இருந்தது. அடையாள அரசியல் குறித்து நடந்த உரையாடல்கள் மார்க்சியஅடிப்படைகளை புறந்தள்ளி சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னிறுத்தியது. அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் கருத்தியல் முதன்மை பெற்றன. இப்போது கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆன பிறகு அடையாள அரசியல் மாலெ குழுக்களை சிதைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மையை உணர்ந்து கொண்ட சூழல் உருவாகியுள்ளது.
-அன்றைய இயக்கத்தில் செயல்பட்ட ஒரு தோழரின் நேர்காணலில் இருந்து.
தியாகிகளுக்கு சிரம் தாழ்த்தி அவர்களின் உயரிய தியகத்தை போற்றுவோம், சரியான மார்க்சிய லெனினிய வழியில் அவர்கள் விட்டு சென்ற பணியினை முடிக்க ஒன்றிணைவோம்.
No comments:
Post a Comment