மாவோ வரலாற்றில் கருத்து முதல் வாத கருத்தாக்கத்தின் தோல்வி செப்டம்பர் 16, 1949.அமெரிக்காவின் செய்தி தொடர்பாளரான அசிசன் கூறும் கருத்தையே பல்வேறு முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் பேசுவதை கண்டித்து மாவோ எழுதிய கட்டுரை (மாவோ தேர்ந்தெடுத்த படைப்புகள் 4 பக்கம் 579 லிருந்து 591).
மார்க்சிய லெலினியம் சீனாவில் அறிமுகப்படுத்த பட்டதிலிருந்து அது சீனாவில் அத்தகைய பெரிய பாத்திரத்தை வகிப்பதற்கான காரணம் சீனாவின் சமூக நிலைமைகள் அதைக் கோரின அது சீன மக்கள் புரட்சியின் உண்மையான நடைமுறைடன் இணைக்கப்பட்டு இருந்தது சீன மக்கள் அதை உள்வாங்கி கொண்டனர். எந்த ஒரு சித்தாந்தமும் மிகச்சிறந்த சித்தாந்தமும் ஏன் மார்க்சிய லெனினியம் கூட அது புறவய எதார்த்தங்களுடன் இணைக்கப்படாத வரை நிலவும் தேவைகளை ஈடு கட்டாத வரை மக்கள் பெரும் திரள் உள்வாங்கிக் கொள்ளபடாத வரை செயல் திறமையாற்று தான் இருக்கும் நாம் வரலாற்று பொருள் முதல்வாதிகள் வரலாற்று கருத்தியல்வாதிகளுக்கு எதிரானவர்கள்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம்
வெற்றிகரமாக புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடித்த சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் அனுபவத்தை கூறுகிறபோது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு லெனின் எதிர்ப்பட்ட நிலைமை சீனாவில் இல்லை.
1).ரஷ்ய போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்று உயிருள்ள உதாரணத்தை உருவாக்கி வைத்த பிறகு கட்டப்பட்டது.
2). இரண்டாம் அதிலத்தின் சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் செல்வாக்கிற்கு உட்படவில்லை.
3). ஐரோப்பாவைப் போன்று சீனாவில் தொழிலாளி வர்க்கம் சமாதானமான சட்டசபை போராட்டங்களில் பங்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படும் சமாதானமான முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தை கண்டதே இல்லை அன்றியும் ஐரோப்பாவில் இருப்பதைப் போன்று சீனாவில் தொழிலாளர்கள் சலுகை பெற்ற பகுதி என்றும் உருவாகவில்லை.
4 லெனினிய முறைப்படி அமைந்த ஒரு கட்சியை ஆரம்பத்திலிருந்து கட்டுவதற்கு உதவிற்று புத்தி பூர்வமாக நாம் லெனின் வகுத்து வைத்து போன கோட்பாடுகளிலிருந்து இம்மியளவும் பிறழாது நடந்து கொண்டோம் ஆரம்பத்திலிருந்தே கட்சி கண்டிப்பான சுயவிமர்சனமும் உட்கட்சிப் போராட்டம் நடத்தி வந்துள்ளது. (உட்கட்சி போராட்டம் பற்றி - லியோசோசி).
லெனினிய கோட்பாடுகளும் சுயவிமர்சனம் உட்கட்சி போராட்டமும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ரசிய சோசலிசப் புரட்சியின் பீரங்கி முழக்கம் சீனாவுக்குள் சோசலிச கருத்துகளைக் கொண்டு கொண்டுவந்தது என மாவோ கூறியது போல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நக்சல்பாரி வசந்தத்தின் இடிமுழக்கம் திரிப்பு வாத புதை சேற்றில் அமுக்கி வைக்கப்பட்டிருந்த மார்க்சிய லெனினியத்தை வெளியே கொண்டு வந்தது. புரட்சிகரப் போக்கை நிகழ்ச்சி நிரலில் வைத்தது. நக்சல்பாரி எழுச்சி பெற்று 50 ஆண்டு கடந்த பிறகும் நாடு தழுவிய அளவில் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை.
மார்க்சிய லெனினியர்களும் உழைக்கும் மக்களுக்கும் தலைமைதாங்கும் முன்னணிப் பாத்திரத்தை ஆற்றவும் இயலவில்லை. மார்க்சிய லெனின் யவாதிகள் பல குழுக்களாக பல போக்குகளை கொண்டவர்களாக இருந்து வருவதால் இத்தகைய பலவீனம் உள்ளது . குழுக்களின் நிலவும் தவறான விலகல் போக்குகளுக்கு எதிராக போராடி சித்தாந்த ஒற்றுமை அடைவதென்பது புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை சீர் அமைப்பதற்கு உடனடியான அவசியமானதாகும். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் பணியை சாதிக்க வேண்டுமானால் மார்க்சிய ஆசான்களின் வழிநின்று போராடினால் மட்டுமே சாத்தியம்.
இங்கு கடைபிடிக்கப் படும் அணுகுமுறை என்னவென்றால் கேள்வி கேட்டுவிட்டாலே எதிரியாக பாவிக்கும் முறை எங்கிருந்து வந்தது? சமயத்தை கட்டிக்காக்கும் நோக்கில் உள்ள மதவாதிகள் தங்களின் கருத்தை யாரும் எதிர்க்கவே கூடாது என்பதற்காக "கடவுள் அருளியதாக" கூறி நமது சிந்தனைக்கு பூட்டு போட்டுவிடுகின்றனர். அதாவது ஆண்டவனின் "அடியையும் முடியையும்" தேடவே முடியாது என்ற கட்டுகதைகள். அதேபோல் நமது சில இடதுசாரி கட்சிகளும் குழுக்களும் நாங்கள் மட்டுமே புரட்சிக்கானவர்கள் மற்றவர்கள் எதிரிகள் என்ற மனநிலையில் உள்ளது உழைக்கும் ஏழை எளிய மக்களை இந்த சுரண்டல்வாதிகளிடமிருந்து காக்க நீங்கள் எப்பொழுது சிந்திக்கப் போகிறீர்கள்.
விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய நோயாளியை கொள்வதாக இருக்கக்கூடாது என்றும் விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைய போராட வேண்டும் என்றும் அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் உணரப்பட்டுள்ளது ? தவறிழைக்கும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்வதில் முதன்மையானது, பெரும் தவறுகளை இழைத்தபின்னும் வழிகாட்டலை ஏற்க மறுத்து திருத்திக் கொள்ளாதவர்கள் விஷயத்திலேயே அம்பலப்படுத்தும் விதத்திலான போராட்ட முறை கைக்கொள்ள வேண்டும் இத்தகைய பொறுமையின்றி எடுத்த எடுப்பிலே ஒருவரை சந்தர்ப்பவாதி திரிப்பு வாதி எதிர் புரட்சியாளர் என முத்திரை குத்தி விடுவதும் போராட அறைகூவல் விடுவதும் குறுங்குழுவாத போக்கின் விளைவேயாகும் . விமர்சனம் சுய விமர்சனம் மூலம் மாற்றி அமைப்பதற்க்கான வழிமுறை க்கு எதிரானதாகும் .
விமர்சனம் சுயவிமர்சனம் என்பது என்ன? நாம் வழக்கமாக விமர்சனம் சுய விமர்சனம் என்று கருதி செய்வது தவறுகளை சுட்டிக் காட்டுவதும் தவறுகளை ஏற்றுக் கொள்வது மாக உள்ளன உண்மையில் விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தவறு ஏன் நிகழ்ந்தது அதற்கான தத்துவார்த்த வர்க்க வர் என்ன அதைக் களைவதற்கான சிந்தனை செயல்முறை என்ன என்பதை உள்ளடக்கி ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும் .
ஒரு குறிப்பிட்ட தவறை எதிர்த்துப் போரிடும் போது அத்தகைய தவறு வருங்காலத்தில் நிகழாமல் அல்லது பாதிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நாம் எவ்வாறு நமது வேலை முறையை மாற்றிக் கொள்வது என்பதும் சேர்த்து உணரப்பட வேண்டும். ஆக பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றியமைத்துக் கொண்டே தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது .விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்றும் முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அக சக்தி என்ற விதத்தில் சுயவிமர்சனம் முதன்மையானது .இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை.
ஆக இங்கு உள்ள நிலையைப் பற்றி இயங்கியல் அணுகுமுறையை பார்ப்போம்.
1).கட்சியின் உள் முரண்பாடுகளும் மாற்றுக்கருத்துக்கள் அல்லது வழிகளும் நிலவும் ; அவை ஒன்றுபட்டு நிற்கிற நேரத்தில் தம்முள் போராடிக் கொண்டிக்கொண்டுமிருக்கும் என்ற பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கின்ற தூய கட்சி வாதம் பிளவுகளும் அழிவுவாதத்திற்கும் வழிவகுக்கின்றது.
2) . ஒரு அரசியல் வழி அல்லது அமைப்பு வழியில் நின்று கொண்டு தவறான சிந்தனை மற்றும் செயல்முறைகளை எதிர்த்து போரிடுவதற்கு உட்படுத்தி தனிநபரின் நல்ல அல்லது தவறான பண்புகளை அணுகுவதற்கும் பதில் தனிநபரின் பண்புகளில் இருந்து உட்கட்சிப் போராட்டத்தை தொடங்குவது கோஷ்டி வாதத்தையும் அதிகார வர்க்கப் போக்கையும் தோற்றுவிக்கிறது.
3). சுய விமர்சனம், விமர்சனம் மூலம் தன்னைத் திருத்திக் கொண்டு பிறரையும் திருத்துவதன் மூலம் கட்சியை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்ற நிகழ்ச்சி போக்கே கட்சியின் வளர்ச்சி விதியாகும் .
மேல் கூறிய மூன்று விதிகளும் எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வின் எந்த ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்திலும் நிலவுகின்ற முரண்பாட்டின் இருத்தல் கையாளுதல் தீர்வு என்ற மூன்று நிலைகள் பற்றி வையாகும் .
இத்தகைய பாட்டாளி வர்க்க அரசியல் மற்றும் அமைப்பு வழியில்லாததால் தான் பல்வேறு மாலெ குழுகள் பல துண்டுகளாக உடைந்தது அதேபோல இத்தகைய தவறான போக்கை வெவ்வேறு அளவில் எதிர்த்தாலும் கூட சரியான பாட்டாளிவர்க்க வழியில் போராட தெரியாததுதான் பிளவுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை .
ஐக்கியம் ஐக்கியம் என உரக்கக் கூறிக் கொண்டே தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பிற குழுக்களை ஜீரணிக்கும் முயற்சிகளாக அமைந்தன.
உட்கட்சி முரண்பாடுகளை எவ்வாறு இயங்கியல் நோக்கில் தீர்ப்பது என்ற விஷயம் இவ்வாறு உள்ளது. கட்சியின் இயங்கியல் பார்வை பற்றிப் பேசும்போது இதே அளவு முக்கியத்துவம் உடைய வேறு இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று கட்சிக்கு வெளியில் நிகழும் மாற்றங்கள் பற்றியது மற்றது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது .
புறவுலகானது மனிதர்களது விருப்பத்திற்கப்பாற்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறது .அடிப்படை சமூக மாற்றமானது புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போது சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் பொருளானது என் நேரம் மாறிக்கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல் வாத கண்ணோட்டமாகும்.
என் கேர்ள் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புற பொருளையும் சரியாக புரிந்து கொள்வதுடன் புறவய விதிகளிருந்தல்லாமல் நமது அகவய விருப்பங்களில் இருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்துக் கொள்வது வரை நடக்கின்றன இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம் கொடுக்கிறது .
கட்சி ஒன்றுபடுதல் சரியான அணுகுமுறை பிரிவிற்கான காரணங்கள். (அதே நூல் பக்கம் 46-48).
கடந்த கால படிப்பினைகள் என்ன சொல்கின்றது இது யுத்த தந்திர கோட்பாடுகளையும் செயல் தந்திர கோட்பாடுகளையும் கிரகித்து புரட்சியாளர்கள் மத்தியில் சிந்தனை ரீதியாக ஊட்டவில்லை இதனால் புரட்சியாளர்கள் தன்னியல்பு வகைப்பட்ட சிந்தனையிலிருந்து கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை . (அதாவது முன்னர் இருந்த கட்சியின் சித்தாந்தத்தை சொல்லுகிறார்) . பின்னர் தலைமை பொருளாதார வாதத்திற்கு மாற்றாக பயங்கரவாதத்தையும் இடது சகாசவாதத்தையும் ஏற்படுத்தியது முடிந்தது .தத்துவ அரசியல் பணிகளின் முக்கியத்துவத்தை குறைத்து இயக்கத்தில் சித்தாந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தி விடுகிறது.
தன்னியல்பான நடைமுறைக்கு ஏற்ப அமைப்பு துறையில் கற்றுக்குட்டி தனமும் அதிகாரவர்க்க மனப்பாங்கும் இடம்பெற்றன .
ஆக தத்துவ பணியாற்றி விதம் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமை இடதுசாரி சாகாச வாதத்தில் தன் இயல்பு வழி இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சி கட்டுதல். இக்காரணங்களால் புரட்சியாளர்களை ஒன்றுபடுத்த இயலாததுடன் சிதறுண்ட இயக்கத்தையும் உருவாக்கியது. எனவே தவறான சித்தாந்தங்களும் தாராளமாக கட்சியில் மேலிருந்து கீழ் வரை நுழைகின்றன. தவறான சித்தாந்தங்களை எதிர்த்து சரியான பாட்டாளி வர்க்க சித்தாந்தங்களுக்குகான போராட்டம் இல்லை. எனவே இந்திய பாட்டாளி வர்க்கம் தனது சித்தாந்த தலைமையை உருவாக்கி கொள்ளவே கொள்ளவோ வளர்த்துக் கொள்ளவோ இல்லை . (பாரா 5, பக்கம் 47).
பிளவுபட்ட குழுக்கள் தன்னியல்பாகவே வெவ்வேறு நடைமுறைகளில் வகுத்துக் கொண்டு தனித்தனியாக பயணிக்கின்றன சில குழுக்கள் தத்துவத் துறையில் கவனம் செலுத்தி வேலை திட்டத்தில் சில மாற்றங்கள் அடைகின்றன சில மறு சேர்க்கைகளும் பிளவுகளும் நிகழ்கின்றன.
சர்வதேச அளவில் சீன ரஷ்ய திரிபுவாதம் மேலும் வங்கி முதலாளித்துவ மீட்சி ஆனது புரட்சிகர கட்சியில் பல்வேறு புதிய முரண்பாடுகளை தோன்றியுள்ளது. குழப்பங்கள் விலைகளும் விளைவுகளும் எங்கும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவை இந்திய மார்க்சிய லெனினிய குழுக்களை பிளவுபடுத்தி உள்ளது மேலும் சில குழுக்கள் மார்க்சிய நிலைக்கு அப்பால் தள்ளி உள்ளது புரட்சிக்கு எதிர்நிலையிலும் போயுள்ளது.
ஒற்றுமைக்கு முதல்படி
குறு குறு வாதத்தைத் அறியாமல் ஊற்றியது ஒற்றுமை சாத்தியமல்ல. அதற்காக குழுக்களை கலைத்து விடுவதனால் குறுங்குழு வாதம் ஒழிந்து விடாது .
சர்வதேசம் உள்ளிட்டு தத்துவத் துறை அரசியல் துறை அமைப்புகள் ஆகிய மூன்று துறைகளிலும் தெளிவான எல்லைக்கோட்டை வரையறுத்துக் கொள்ள வேண்டும்
திரிப்பு வாதமே முதன்மையாக எதிர்க்கப்பட வேண்டும் .இடது தீவிரவாதம் வரட்டு வாதம் அனுபவவாதம் களையப்பட வேண்டும்.
இந்தியாவில் பாட்டாளி வர்க்க கட்சி என எதுவும் இன்றி பாட்டாளிவர்க்க புரட்சியாளர் புரட்சியாளர்கள் ஒன்று அல்லது பல துறைகளிலும் வேறுபட்டு பல்வேறு மையங்களில் தனித்தனியாக அமைப்புகளாக இயங்கி வருவது எதார்த்தம்.
தீவிர கம்யூனிஸ்ட் எதிரி கலகக்காரர் என்று அடையாளம் காணப்பட்டவர்களை தவிர ஒவ்வொரு தோழர்களும் ஒற்றுமை பேண வேண்டும் என்பது நமது அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் -மாவோ நவம்பர் 18,1957.
ஒரு சிறு தவறு கூட செய்யாத மனிதன் உலகில் ஒருவரை கூட காட்ட முடியாது -லெனின்.
கட்சிக்கு விசுவாசமான சக தோழரையும் மார்க்சிய விரொதிகளோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. சோவியத் யூனியனின் ட்ராட்ஸ்கி சீனாவின் சென்- டு- சியு காவ் காவ் போன்றவர்கள் வலதுசாரிகள் இவர்களுக்கான தலைவர்கள் ஹிட்லர் சியாங்க ஷேக் ஜார் போன்றவர்கள். இவர்களை திருத்த முடியாது இவர்களை வரலாற்றின் குப்பை கூடையில் தூக்கி எறிய வேண்டிய நபர்கள். ஆனால் இயக்கம் சார்ந்த தோழர்களை நாம் அணுகுமுறை வேறு விதமாக இருக்க வேண்டும்.
தோழர்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படும் சூழ்நிலை வரலாம் அப்போது ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினால் பூசல்கள் தீரும் .
கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டால் போதும் ஒருவர் ஞானி ஆகிவிடுவார் தவறு செய்ய மாட்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள் கட்சியும் அப்படியே அது ஒரு பேரியக்கம்.. எல்லாவற்றையும் கடந்தது சோதனைக்கு அப்பாற்பட்டது என்றும் எனவே பேச்சு வார்த்தைகள் கருத்து பரிமாற்றங்கள் தேவையில்லை என்றும் கருதுகின்றார்கள். மார்க்சியவாதிகளில் பல வகையாக உள்ளனர் . 100% மார்க்சியவாதி,90,80,70,60,50 % மார்க்சியவாதிகள் இருக்கிறார்கள் ஏன் 20%,10% மார்க்சியவாதிகளும் கூட இருக்கிறார்கள்.
ஆக மார்க்சிய லெனினிய தத்துவத்திற்க்கு குந்தகம் ஏற்படாதவரை அடுத்தவர்களின் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே போல் உங்களிடம் உள்ள வேண்டப்படாத கருத்துகளை விட்டொழிப்பதிலும் தவறில்லை ஆக தவறு செய்த ஒரு தோழரிடம் நீங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை கையாள வேண்டி உள்ளது .
முதலில் அவர் தனது தவறான சிந்தனையில் இருந்து வெளியே வர நாம் போராட்டத்தை துவக்க வேண்டும்.
இரண்டாவது அவருக்கு நாம் உதவ வேண்டும். ஒருபுறம் அவருடன் போராட்டமும் மறுப்புரம் அவருடன் தோழமை உணர்வேன் என்ன நெருக்கமாக்குதல் வேண்டும். போராட்டம் என்பது மார்க்சிய லெனினிய தத்துவத்தை உயர்த்தி பிடிப்பதற்கும் மேலும் மார்க்சியத்தை சரியாக புரிய வைப்பதற்தானதாக இருக்க வேண்டும். அவருடன் இணைந்து நிற்க வேண்டும் ஏனென்றால் அவரை இழந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அவருடன் சமரசமாக இணக்கமாக செல்ல வேண்டும் தத்துவமும் இணக்கமும் இணைந்து செல்வதும் மார்க்சிய தத்துவமே. அது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவே.
எந்த மாதிரியான உலகமானாலும் எந்த மாதிரியான வர்க்க சமூகமானாலும் அது முரண்பாடுகளின் குவியலாக தான் இருக்கும்.
Iiiiiiiiiii
முரண்பாடுகளை தேடி நீங்கள் அலைய வேண்டாம் அது இருக்கவே செய்கின்றது. முரண்பாடுகள் இல்லாத இடம் எது நீங்கள் சொல்லுங்கள்? . அதேபோல் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் இவர்கள் என்று யாரையாவது நீங்கள் காட்ட முடியுமே? ஒருவரை திருத்தவே முடியாது என்று நீங்கள் முடிவு கட்டினால் அது கருத்தியல் வாத அணுகுமுறையாகும். அணு என்பது என்ன எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு தானே? எலக்ட்ரான் என்பது எதிர் மின்னோட்டம் கொண்டது, புரோட்டான் என்பது நேர் மின்னூட்டம் கொண்டது இது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவு தானே.
இயக்கவியல் தத்துவம் ஏதோ அறிஞர்களின் தொடர்புடையது அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று நினைப்பது தவறு அது ஒரு விஞ்ஞான தத்துவம் சாமானிய மக்களிடம் சென்று சேர வேண்டிய தத்துவம். இந்த விஷயம் விவாதம் பரந்த அளவுக்கு செல்ல வேண்டும். அரசியல் தலைமை குழு மத்திய குழு கூட்டங்களிலும் கீழ்மட்ட கமிட்டி குழு கூட்டங்களிலும் இது பற்றி விவாதிக்க வேண்டும்.கட்சி கிளை செயலாளர்கள் இயக்கவியலை குறித்து புரிதல் உள்ளவர்கள் தான் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். கட்சிகளை கூட்டங்களில் அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் இரண்டு விஷயங்களை முக்கியமாக பதிவு செய்வார்கள் ஒன்று சாதனைகள் மற்றது குறைபாடுகள்.
No comments:
Post a Comment