தன்னார்வ நிறுவனமான-NGO களின் செயல்

 இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மா லெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்.

இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய நிலவுடமை கலாச்சாரமாகும்முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை  எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம்.

(1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது

(2)வரைமுறையற்ற ஆபாசத்தை பரப்புகிறது.

 (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள்.

 (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது

(6) மேட்டிமைதனத்தை பரப்புதல். (7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.

மற்றொரு புரம் ரஸ்ய ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனின்யத்தை திரித்து, இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன)மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது,அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.... 

இன்று இலங்கையில் தமிழர்களின் எழுச்சி போராட்டம் எப்படியெல்லாம் இன்று திரித்தும் புரட்டியும் பேசப்படுகிறது அதிலிருந்து இன அழிப்பு அதற்கு பின்னான  அரசியலின் ஊடாக உலகில் மார்க்சியத்தை மடை மாற்றும் செயல் எப்படியெல்லாம நடக்கிறது என்றொரு மாதிரியே இந்தப்பதிவு...

1980களின் ஆரம்பத்தில் பல தன்னார்வ நிறுவனங்கள் உருவாகின.தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கூர்மையடைந்த போது இவை அவற்றின் மீது பலவழிகளில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன இடதுசாரி புத்திஜீவிகள் அன்னிய நாடுகளின் பெரும் பண உதவிகளின் பின்னணியில் தமது சொந்தத் தன்னார்வ நிறுவனங்களை ஆராம்பித்தனர். இவர்களோடே பல இரண்டா நிலை போராட்ட சக்திகள் உள்வாங்கப்பட்டனர்.புரட்சிகர சமூக இயக்கங்களின் அரசியல் வளர்ச்சியும் போராட்டங்களும் ஒரு பணம்கொழிக்கும் பண்டத்தை வழங்குகின்றன. அப்பண்டத்தையே ஐரோப்பிய அமரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ள தனியார் பொது நிறுவனங்களுக்கு முன்னாள் புரட்சிகர, போலி, ஜனரஞ்சக அறிவுஜீவிகள் விற்கிறார்கள்;அவை பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் நிதியளிக்கப்படுகின்றன;அவை இந்த அறிவு ஜீவிகளின் நலன்களைப் பேணுகின்றன; எனவே அவர்கள் மீது அக்கறை காட்டுகின்றன. ” என்கிறார் ஜேம்ஸ் பிராட்ஸ்.

ஒரு கணிணிக்குப் முன்னாலிருந்து திட்ட முன்மொழிவுகளை எழுதுவதிலிருந்து இந்த முன்னாள் புரட்சிகர அறிவுஜீவிகளின் தன்னார்வ நிறுவனங்கள் ஆரம்பமாகின்றன. தாம் மக்களின் போராட்ட உணர்வை தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரம்,பெண்ணியம்,தலித்தியம் போன்ற முற்போக்கான,புத்திஜீவிகள் ஏற்கனவே பரீட்சயமான சொல்லாடல்களை நிதி நிறுவனங்களிற்கு விற்பனை செய்து, பெரும் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். 

மார்க்சிய வாதிகளையும், இடது சாரிகளையும், கற்பனா வாதிகளாக, செயற்திட்டமற்ற கற்பனைப் புரட்சி நடத்துபவர்களாகவும் சித்தரிக்கின்றன.

இன்று நாம் காணும் இந்திய பிரச்சினைகளில் "பெண்களுக்கும், தலித்துகளுக்கும், மத – இனச் சிறுபான்மையின மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. இதுபோன்று பயங்கரமான சம்பவங்கள் நாள்தோறும் ஏராளமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இவற்றில் வெளியுலகின் கவனத்தில் வரக்கூடிய சில விஷயங்களுக்கு மட்டுமே சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைவிடப் பெரியதொரு சம்பவம் வெளியே தெரிய வரும்போது முன்பிருந்த விஷயம் மறக்கடிக்கப்பட்டு புதிய சம்பவம் பேசுபொருளாக மாறுகிறது. இதனை நிர்வகிப்பது யார் என்று பாருங்கள். இதே உலகளாவிய NGOகளின் கையில் உள்ளதை அறிவீர்.

இப்போது நாடெங்கும் சாதி – மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.  திட்டமிட்ட என்ஜிஓகளின் செயலில் உள்ளனர் பின் விரிவாக பேசுவோம்.

இன்றைய ஏகாத்திபத்திய காலதில் 80 சதவீத உலக மக்கள் வறுமையிலும் நோயிலும் அறியாமலும் வாழும் நிலையில் 20% வளர்ந்த சுரண்டலாளர்களின் சுகபோகத்திற்காக 80 சதவீதம் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய இணைய உலகத்தில் உலகில் ஒரே குடையின் கீழ் வந்துவிட்டபின் சந்தை பொருளாதாரத்திற்காக தனி மனிதனை தனியாக காட்டப் முயற்சிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் மனிதனின் தூய அக வாழ்வு பிரச்சினைகள் பண்பாட்டுப் பிரச்சினைகள் மனிதனின் புற வாழ்வு பிரச்சனைகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு புதிய புதிய தத்துவங்கள் உருவாக்கப்படுகின்றன.  இந்த புதிய புதிய தத்துவங்கள் எடுத்த எடுப்பிலே  மார்க்சியத்தைக் குறி வைத்து தாக்கி மார்க்சியத்துக்கு மேலான தன்னை பாவித்து கொள்வதில்  புரட்சிமயமாகின்றன. மார்க்சியத்தின் போதாமையை இவை பூர்த்தி செய்வதாகவும் பெருமையோடு மார்தட்டி பிரகனப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சியம் கவனிக்காமல் விட்டுவிட்ட பிரச்சினைகளுக்கு தமது வழியே மாற்று என பறைசாற்றுகின்றன.

நீட்சையின் அதர்க்கவாதத்தை எடுத்துக்கொண்ட ஐரோப்பிய பிற்போக்கின் தற்கால வாரிசாக பின் நவீனத்துவம்  உலகை வலம் வருகிறது.  பெரும் கதையாடலுக்கு பதிலாக சிறுகதையாடல் வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாக மற்றதுகளுக்கு இடையேயான போராட்டம் என அறிவியல் புரட்சிகயுகத்துப் போராட்டங்களை திசை திருப்புகிறது பின் நவீனத்துவம்.

பின்ன நவீனத்துவாதியான லியோ தார்த் சமூகங்கள் பின் தொழில் வளக் காலத்தை அடையும்போது கலாச்சாரங்கள் பின் நவீனத்துவ  காலத்தை அடைகின்றன என்றார்.

அறிவியல் புரட்சி மாற்றங்களை ஆராய்ந்த நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் பேராசிரியர் ஆல்வின் டாஃப்பர் "வர்க்கங்கள் இல்லை அவை சிறு சிறு அலகுகளாக உடைந்து விட்டன. பொருளாதார காரணிகள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன தனிமனிதன் வாழ்க்கை முறையை தீர்மானிக்க வர்க்க அடிப்படை காரணமாக அமையவில்லை " என்றார்.

பின் நவீனத்துவம்   டபுலரின் கருத்தை கலாச்சாரத் துறையை பரப்பி வருகிறது. உண்மையில் உலகமயமாக்களின் கீழ் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் சுரண்டலைக்  காணவிடாமல் தடுக்க வர்க்கம் இல்லை என்ற போலிவாதம் முன்வைக்கப்படுகிறது . 

பொருள்உற்பத்தி  விநியோகம் நுகர்வு பற்றிய அரசியல் பொருளாதார விதிகளுக்கு உட்பட்டு தான் எந்த ஒரு தனி மனிதன் அல்லது குழுவின் சுயேட்சையும் சுதந்திரமும் இருக்கிறது என்பதை நவீன கலகக் காரர்கள் புரிந்து கொள்வதில்லை. தனிமனிதனின் அவலமும் சமூக உறவோடு சம்பந்தப்பட்டது.சமூக உறவுகள் அரசியல் பொருளாதார உறவுகளோடு பின்னிப் பிணைந்தது. இதை மாற்றுவதே சமூக மாற்றத்தின் துவக்கமாகும். 

பின்நவீனவத்துவம் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு எதிரான சந்தேகத்தையும் குழப்பத்தையும் விதைக்கிறது. பின் நவீனத்துவம் அடிப்படையில் கலகத்தின் தத்துவம் கூட அல்ல அது மனிதனை தனியான ஆக்கி ஒழுங்கற்ற குழப்பவாதியாக்கும் அராஜக கோட்பாடாகும்.

அறிவியல் புரட்சியோகத்தில் மனித குலம் மேலும் சிறப்பாக ஒழுங்கப்படுத்துப்பதை நோக்கியே நகர்கிறது. ஏகாதிபத்தியம் உலகை தனது நலனுக்குரிய வகையில் ஒற்றைத் தன்மை உள்ளதாக நுகர்வு சந்தையாக மாற்ற முயல்கையில் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒழுங்கப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் போராட்டம் வளர வேண்டும் மார்க்சியம் இதை தான் முன்மொழிகிறது. பின் நவீனத்துவம் முன்வைக்கும் பிளவுபட்ட தனித்தனியான அராஜகவாதம் உலகமயமாக்கள் சந்தை சக்திகளோடு பின்புறவமாக கைகோர்த்துக் கொள்கிறது.

தத்துவ ஞானிகள்  உலகை பல்வேறு வகையில் வியாக்கானப்படுத்தித்தான் வந்திருக்கிறார்கள் ஆனால் அதை மாற்றுவது தான் இப்போதுள்ள விஷயமாகும்.(பயர்பாக் ஆய்வுரைகள் 1845).

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்