தோழமைகளுடன் ஓர் விமர்சன பூர்வமான விவாதம்-5

 நாம் தோழமையோடு ஏன் தோழர்களாக பழக முடிவதில்லை? நட்புமுரணையும் பகைமுரணையும் சரியாக எப்படி புரிந்து அவர்களிடையே  சரியான முறையில் விவாதிக்க முடிவதில்லை? கேள்வி கேட்டுவிட்டாலே எதிரி முகாமிற்கு தள்ளி விடும் போக்கு எங்கிருந்து வந்தது? நமது ஆசான்கள் இதனை பற்றி என்ன சொல்லியுள்ளனர் சற்று தெரிந்த்துக் கொள்ள முயற்சிப்போம் தோழமைகளே...

முதலில் கட்சி அமைப்பு முறை பற்றிய நமது ஆசான்களின் கருத்துக்களை பார்ப்போம்.

கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சி அடைந்த பிரிவாகும்; இது அந்த வர்க்கத்தின் முன்னணி படையாகும். அந்த முன்னணி படையின் வலிமை அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஒரு 100 மடங்கு அதிகமானதாகும்.... நூறு மடங்கு அதிகமானதாகும்.  (லெனின் தொகுப்பு நூல்கள் தொ 19. ப 406 ).

வரலாற்றில் தனக்குரிய பாத்திரத்தை உணர்ந்து கொள்கிற பாட்டாளி வர்க்கம், மற்ற சுரண்டப்படும் வர்க்கங்களின் முன்னணி படையாக தன்னை அமைத்துக் கொள்கிறது. இந்த வர்க்கங்களில் முதன்மையானது குட்டி முதலாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் அவ்வர்க்கங்களுக்குரிய தலைமையை வழங்குகிறது ; அவர்களது ஆதரவை வென்றெடுக்கிறது அதேவேளை அந்த வர்க்கங்கள் தம்முடன் இயக்கத்துக்குள் கொண்டு வரும் ஊசலாட்டங்களையும் திசை விலகல்களையும் எதிர்க்கிறது. பாட்டாளி வர்க்கமே ஒரு சுதந்திரமான பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையின் கீழ் அமைப்புக்குள்ளாக்கப்பட்டு இருந்தால் தான் அதை சாதிக்க முடியும். (லெனின் தொகுப்பு நூல்கள் தொ 7 , ப 415 ).

முன்னணி படை என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக கட்சியானது பாட்டாளி வர்க்கத்துக்கும் குட்டி  முதலாளி வர்க்கத்திற்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளே இருக்கிற பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். (லெனின் தேர்வு நூல்கள் தொ 31, ப 74 ).

ஜனநாயக மத்தியத்துவம் 

கட்சிக் கட்டுப்பாடு மத்தியத்துவப் படுத்தப்பட்ட தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இம்முறையில் விவாத சுதந்திரமும் விமர்சன சுதந்திரம் செயல் ஒற்றுமையுடன் இணைக்கப்படுகின்றன. கீழ் அமைப்புகள் மேல் அமைப்புகளை தேர்ந்தெடுக்கின்றன ,மேல் அமைப்புகளுக்கு கட்டுப்படுகின்றன. பெரும்பான்மையோர் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு வர்க்க உணர்வு உள்ள தொழிலாளியும் தொழிற்சங்கப் போராட்டத்தில் பெற்ற அனுபவத்துக்கு பொருத்தமாக கோட்பாடுகள் அமைகின்றன.

செயல் ஒற்றுமை விவாத சுதந்திரம் விமர்சன சுதந்திரம் இத்தகைய கட்டுப்பாடு தான் வளர்ச்சி அடைந்த வர்க்கத்தின் ஜனநாயக கட்சியின் மதிப்புக்கு  உகந்தது. பாட்டாளி வர்க்கத்தின் வலிமை அதன் அமைப்பில் பொதிந்துள்ளது. மக்கள் திரளினர் அமைப்புக்குள் கொண்டுவரப்படாவிட்டால் பாட்டாளி வர்க்கம் ஒன்றும் இல்லாததாக இருக்கும்...

அமைப்பு என்பது செயல் ஒற்றுமை நடைமுறை காரியங்களில் ஒற்றுமை எனவே விவாதிப்பதற்கும் விமர்சிப்பதற்கான சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை என்பதை பாட்டாளி வார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. (லெனின் தேர்வு நூல்கள் தொ 11, ப 320).

குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பாட்டாளி வர்க்கத்திடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிற பல்வேறு பலவீனங்களை கொண்டுள்ளது என்பது மட்டுமல்ல; பாட்டாளி வர்க்க தலைமையை இழக்கும் போது தாராளவாத முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கின் கீழ் அது அடிக்கடி திசை மாறி வீழ்ந்து அவர்களது கைதியாகிறது.

கட்சிக்கு வெளியே உள்ள குட்டி முதலாளிய மக்கள் திரளுடன் உறுதியான பரந்த நேச அணியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் ஒரு புறம் அவர்களை கையாளுவதில் இணங்கிப் போக வேண்டும் . மறுபுறம் அவர்களுடன் நமக்குள்ள கூட்டை வலுப்படுத்துவதற்காக பொருத்தமான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும் (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தொ 3, ப 214 ).

பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே இன்னொரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் முதலில் இந்தப் பக்கமும் பிறகு அந்தப் பக்கமும் சாய்வார் இது எல்லாப் புரட்சிகளும் எப்போதும் நிகழ்ந்துள்ளது.  பெரும் உடமையாளர்களால் அவன்  சுரண்டப்படுவதன் காரணமாக அவன் நாசம் அடைந்து பாட்டாளி வர்க்கத்தினுள் தூக்கி ஏறியப்படும் ஆபத்தில் இருக்கிறான் . போட்டியிடும் இரண்டு முதன்மையான வர்க்கங்களுக்கு இடையே நிலையற்ற இடத்தை பெற்றுள்ள அவனிடம் ஊசலாடும் போக்கு உள்ளது. ஆக பாட்டாளி வர்க்கம் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக குட்டி முதலாளித்துவ போக்கிற்கு எதிரான போராட்டம் அவசியமாகின்றது.  

ஆக தோழர்களே மேலுள்ள நமது ஆசான்களின் கருத்தின் அடிப்படையில் கீழ் காணும் விவாதம் அவர்களின் எழுத்துகளிலிருந்தே.

கம்யூனிஸ்ட்களாகிய நாம் எப்பணியை செய்தாலும் கட்டாயம் செயல்படுத்த வேண்டிய இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று பொதுவானதை குறிப்பானதுடன் இணைப்பது; இன்னொன்று தலைமையை மக்கள் திரளுடன் இணைப்பதாகும்.எந்த ஒரு கடமையிலும் பொதுவான பரந்து விரிந்த அறைக் கூவல் வெளியிடாமல் இருக்குமானால் பரந்த மக்கள் திரள் செயலுக்கு திரட்டப்பட இயலாது.

"பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றுக்குள்ளேயே, அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது". என்று இயக்கஇயல் பொருள்முதல் வாதம் கூறுகிறது. மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டிருக்கின்ற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.

ஆனால் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் உழைப்பாளரில் ஒரு பகுதியினரை கொண்டதே பொதுவுடமைக் கட்சி எனவே சமுதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்யக்கூடியது அல்ல உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும். பொதுவுடைமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது ஆனால் அது தனது சொந்த பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒரு போதும் முடியாது. எனவே பொதுவுடமை கட்சி என்ற தேரானது மக்கள் திரள் என்ற அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும். ஒரு பொதுவுடைமை கட்சி அல்லது குழு பரந்துபட்ட மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்றத்தேர் போன்றதாகும். அதன் இதரப் பகுதிகள் எவ்வளவு அழகாக மிக சரியாகவும் இருந்தாலும் உண்மையான பொருள் அது தேராகாது அதாவது பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமை கட்சியே அல்ல.மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?

மக்களிடையே ஆன பணி சரிவர செய்ய கம்யூனிஸ்டுகள் மக்களுடன் அய்க்கியப்படுவது முழு முதல் தேவையாகும். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விதை போன்றவர்கள் மக்கள் மண் போன்றவர்கள் நாம் செல்லும் இடம் எங்கும் மக்களிடம் அய்க்கியப்பட்டு வேரூன்றி பூத்துக் குலுங்க வேண்டும் (மாவோ). மக்கள் தம்மில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா மக்கள் அவருடைய கருத்துக்களை தம்முடையவையாக கருகிறார்களா இல்லையா இதுதான் ஒரு கம்யூனிஸ்ட் மக்களுடன் ஐய்க்கியப்படுகிறார்களா இல்லை என்பதை அறிவதற்கான அளவுகோல். மக்களிடையே வேலை செய்வதும் அவர்களின் போராட்டங் களில் (அரசியல் சமூக பொருளாதார போராட்டங்களில்) பங்கெடுத்துக் கொள்வதும் அவ்வாறு செய்யும்போது புரட்சியின் அவசியம் பற்றி அவர்களுக்கு போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அவர்களை தயார் படுத்துவதும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும். ஒன்றிணைவது என்பது கம்யூனிஸ்ட் என்ற ரீதியில் ஒன்றிணைவதாகும். சாதாரண நபர்கள் ரீதில் ஒன்றிணைவது அல்ல. மக்களின் பின்னால் வால் பிடித்து செல்வதன் மூலம் அவர்களோடு கலப்பது என்பது மிக எளிது ஆனால் அவை பயன் அளிக்காது.

அவர்களுக்கு தலைமை அளிப்பது மற்றும் விஞ்ஞான சோசலிச அடிப் படையில் அவர்களை கருத்தாயுத மாக்குவதாகும் (ஆயுத்தமாக்குவதாகும்). மக்களிடையே பணிக்கும் ஊழியர்களை உருவாக்கும் பணிக்கும் இடையிலான வேறுபாட்டை இங்கே குறிப்பிடுவது அவசியம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஊழியர்கள் வானத்திலிருந்து வீழ்வதில்லை எந்த ஒரு மார்க்சியவாதியும் மக்கள் மத்தியில்இருந்து எந்த ஒரு ஊழியரையும் நாம் விரும்பியபடி பொறுக்கி எடுக்க முடியாது. போராட்டத்தின் வாயிலாகவே உண்மையான பொதுவுடமை ஊழியர்கள் வளர்ச்சி அடைகின்றனர். போராட்டத்தில் பாட்டாளி வர்க்க உணர்வு உலக கண்ணோட்டமே வளர்த்தெடுக்கபடுகிறது.

எதார்த்த நடைமுறையில் மக்கள் அனைவரின் உணர்வு மட்டம் சீராக ஒன்று போல் இருக்கும் என்று எண்ணுவது சரியல்ல.

"குறிப்பிட்ட எந்த இடத்து பொதுமக்கள் மத்தியிலும் ஒப்பீட்டு வகையில் உற்சாகிகள், நடுநிலையாளர்கள், ஒப்பீட்டு வகையில் பின்தங்கியவர்கள், என்ற மூன்று பகுதியினர் இருப்பர். எனவே தலைவர்கள் சிறிய தொகையினராக உள்ள உற்சாகிகளைத் தலைமை சூழ ஐய்க்கியபடுத்தி அவர்களை முதுகெலும்பாக கொண்டு, மத்திய பகுதியின் தரத்தை உயர்த்தி பின்தங்கியவர்களை வென்றெடுப்பதில் தேர்ச்சி பெற வேண்டும் "(மாவோ).நடைமுறையில் நிகழக்கூடியது என்னவெனில் தோழர்கள் முன்னேறிய சக்திகள் மீது மட்டும் கவனத்தை செலுத்துவதும் மற்றவர்களை பற்றி மறந்து விடுவதும் இது சரியல்ல. மக்களை பிளவுபடுத்தாதீர்கள் ஐய்க்கியப்படுத்துங்கள் தேவையற்ற குழுக்களையும் உதிரி குழுக்களையும் உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரையும் முழுமையாக நோக்கி ஐய்கியப்படுத்த வேண்டும்.மக்களிடையே பணியாற்றுதல் ஒரு சரியான வேலை முறை இல்லாமல் வெறுமனே இத்தகைய போக்குகளை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது அல்ல.தலைமையின் வழிமுறைகள் சம்பந்தமான சில சிக்கல்கள்- மாவோ(ஜூன் 1 1943 பக்கம் 155 வால்யும் 3 ).

சரியான மார்க்சிய லெனினியத்தை தேடிய பயணமே "இலக்கு" இணைய இதழின் தொடக்கம் இதுவரை 29 இணைய இதழ்கள் வந்துள்ளன இப்பொழுது இவை 13ம் இதழ். எங்கள் கட்டுரைகள் தேடுதல்கள் ஒரு சரியான கட்சி ஒரு புரட்சிக்கான வித்தாக இருக்க வேண்டும் அதற்க்கான முயற்ச்சியாகவே இதனை தொடர்கிறோம். விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயதம் கொண்டு சரியான வழியில் பயணிப்போம்.எல்லா மனிதர்களும் கட்டாயம் இறக்க வேண்டும்; ஆனால் இறப்பு அதனுடைய முக்கியத்துவத்தில் மாறுபடலாம். மக்களுக்காக இறப்பது டாங்கு மலையை விட கனமானது ஆனால் பாசிஸ்ட்டுகளுக்காக வேலை செய்வதும் சுரண்டல்கலாளர்களுக்காக ஒடுக்குமுறையாளர்களுக்காக இறப்பதும் லேசானது.

நம்மிடம் குறைபாடுகள் உள்ளதெனில் அவற்றை சுட்டிக் காட்டவும் விமர்சிக்கவும் பயப்படக்கூடாது. ஏனெனில் நாம் மக்களுக்கு சேவை செய்கிறோம். எவரும், அவர் யார் என்பது முக்கியமல்ல, நமது குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம். அவர் குறிப்பிடுவது சரியாக இருக்குமாயின் அவற்றை சரி செய்து கொள்வோம். அவர் எடுத்துச் சொல்வது எதுவும் மக்களுக்கு பயனளிக்குமா என்பதை கணக்கிலெடுத்து அதன்படி செயல்படுவோம். சிறந்த துருப்புகளும் எளிய நிர்வாகமும் என்ற கருத்தை முன்வைத்த திரு லியோ டீம் என்பவர் கம்யூனிஸ்ட் அல்ல, அவர் வழங்கிய. சிறந்த ஆலோசனை மக்களுக்கு நன்மையை அளிப்பதாக இருந்தால் அதை பின்பற்றுவோம்.

ஒரு பொதுவான புரட்சிகர நோக்கத்திற்காக நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து ஒன்றாக இணைந்து விட்டோம். இந்த நோக்கத்திற்கான பாதையில் நம்முடன் பயணிக்க பெரும்பான்மையான மக்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். இவை போதுமானதாக இல்லை. தேசம் முழுவதையும் விடுவிப்பதற்கு ஏராளமானோர் தேவைப்படுகிறார்கள். கஷ்டமான நேரங்களில் நமது சாதனைகளை பார்க்க வேண்டும் ;ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்க வேண்டும் ; நமது தைரியத்தை துணிவால் மேற்கொள்ள வேண்டும். மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களை காப்பாற்றுவது நமது கடமையாகும். நம்மைப் போராட்டத்தில் முனைப்புடன்ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கே போராட்டம் இருக்கிறதோ அங்கு தியாகமும் இருக்கும். இறப்பு என்பது பொதுவான நிகழ்ச்சியாகும். ஆனால் மக்களுடைய நலன்களையும் மிகப் பெரும்பான்மையர் களுடைய துன்பங்களையும் இதயத்தில் வைத்துள்ளோம். நாம் மக்களுக்காக சாகும் பொழுது அது போற்றத்தக்க சாவாகிறது. எனினும் தேவையற்ற தியாகங்களை தவிர்ப்பதற்கு நம்மால் இயன்றவரை செய்ய வேண்டும். நமது ஊழியர்கள் ஒவ்வொரு படை வீரர்களுக்கும் அக்கறை காட்ட வேண்டும் புரட்சிகர அனி வரிசையில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதும் ஒருவரோடு ஒருவர் அக்கறை காட்டுவதும் வேண்டும் . (செப்டம்பர் 6 , 1944 பக்கம் 233 மாவோ தேர்ந்தெடுத்த படைப்புகள் தொகுப்பு மூன்று ).

                                                                                   -----------------------

பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது. விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்று முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அகசக்தி என்ற விதத்தில் சுய விமர்சனமே முதன்மையானது. இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை.

புற உலகமானது மனிதர்களது விருபத்திற்கு அப்பாற்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமான புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பொருளானது என் நேரமும் மாறிக் கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல்வாத கண்ணோட்டம். வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்தே பொருளைப் புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல்வாதம்.

இயங்கியல் பார்வையும் பொருள்முதல்வாத சித்தாந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை ; ஒன்றைஒன்று நிறைவு செய்பவை.

=================================

ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஏன் வேண்டும்?. ஒரு கம்யூனிஸ்டு கட்சியானதுபுரட்சிகர கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?. உலகத்தில் வாழம் உழைக்கும்மக்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றனர். அம்மக்கள் எதிரியினுடைய ஒடுக்குமுறையினைத் தூக்கியெறிந்திடவே விரும்புகின்றனர். முதலாளியமற்றும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி போன்ற ஒரு கட்சியே தற்போதுதேவைப்படுகிறது. அதனைப் போன்ற ஒரு கட்சியில்லாமல் எதிரியின் ஒடுக்குமுறையை  மக்களால் தூக்கியெறிந்திட முற்றிலும் சாத்தியமற்றதாகும். நாம் கம்யூனிஸ்டுகள். எதிரியைத்தூக்கியெறிவதில் மக்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம். ஆகவே நமது படையின் அணிவகுப்புகளைச் சிறந்த நிலையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்துச்சென்றாக வேண்டும். நமது துருப்புகள் அதாவது நமது கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அது தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் சிறந்தஆயுதங்களாக இருக்க வேண்டும். அதாவது நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள்விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அத்தகைய தத்துவஆயுதம்தான் நமது ஆயுதமாகும். இந்த நிலைமைகள் இல்லாமல் எதிரியை நம்மால்தூக்கியெறிய முடியாது. -மாவோ-

மாவோவின் காலத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுவழியானது சரியானதாகவே இருந்தது. எவ்விதமான சிக்கலையும் கட்சிக்கு கொண்டுவரவில்லை. கட்சியின் பணியானதுபயன் உள்ளதாகவே இருந்தது. கட்சியானது பல்வேறு வகைப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அந்த உறுப்பினர்கள் எதிரிக்கு எதிரான கடுமையான போராட்டங்களில்துன்ப துயரங்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கினார்கள். அவ்வாறு மிகச்சிறந்த உறுப்பினர்களைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியும் சில சிக்கல்களைஎதிர்கொண்டது, அந்த சிக்கல்கள் மிகவும் தீவிரமாக இருந்தது.

சீனக் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களிடம் பலரின் உள்ளங்களில் உள்ள ஏதோ ஒன்று சரியல்ல,முற்றிலும் முறையானது அல்ல . வேறு சொற்களில் சொல்வதென்றால் பயிலுதல் குறித்தபாணியிலும், கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் உள்ள பாணியிலும், எழுத்துபாணியிலும் ஏதோ ஒருவகையான தவறு இருந்தது.

பயிலுதல் குறித்த பாணியிலுள்ள தவறை அகநிலைவாத நோயாகவும், கட்சி உறவுகளில் உள்ளபாணியிலுள்ள தவறை குறுங்குழுவாத நோயாகவும், எழுத்து பாணியிலுள்ள தவறைசலிப்பூட்டும் வகையிலான எழுத்து நோயாகவும் (வார்த்தை ஜாலங்களைக் கொண்டுஉள்ளடக்கமின்றி வடிவத்தின் மீது கவனத்தை குவிக்கும் எழுத்து வடிவமாகும். விவரங்களைஅலசி ஆராய்வதற்குப் பதிலாக புரட்சிகர சொற்றொடர்களையும் வாசகங்களையும் பெரும்குழப்பமாக எழுதி குவிப்பதாகும். இந்த வகையான எழுத்து முறைகளை மார்க்சியத்தை எதிர்ப்பாளர்களிடம் இன்றும் நாம் காணலாம். குறிப்பாக அடையாள அரசியல்வாதிகளின்எழுத்தில் நாம் காணலாம். ஏராளமாக கதையடிப்பார்கள், அவர்களது நிலைபாட்டைதெளிவாகச் சொல்ல மாட்டார்கள். வாசகர்களை முழுவதும் குழப்பத்தில் ஆழ்த்துவார்கள்.)

இந்த மூன்றுமே தவறானவையாகும். அவை கெட்ட காற்றுகள் ஆகும். அகநிலைவாதம்,குறுங்குழுவாதம், மற்றும் கட்சியின் சலிப்பூட்டும் எழுத்துக்களை ஒழிக்க வேண்டும் என்றுமாவோ போராடினார். ஆனாலும் இந்த கெட்ட காற்று சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்வீசிக்கொண்டுதான் இருந்தது. அவைகளை உருவாக்குகின்ற வழிகளை நாம் அடைத்து வைக்கவேண்டும். நமது முழு அமைப்பும் இவ்வழிகளை அடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கட்சியானது மார்க்சியப் பள்ளிகளை நடத்தி இதற்காகப் பாடுபட வேண்டும். அகநிலைவாதம்,குறுங்குழுவாதம், சலிப்பூட்டும் கட்சியின் எழுத்து ஆகிய மூன்று கெட்ட காற்றுகளும் தங்களின்வரலாற்று மூலங்களைக் கொண்டுள்ளன. அவை முழு கம்யூனிச அமைப்புகளிலும் இனிமேலும்நம்மை ஆதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இவைகள்தான் நம்மிடையே குழப்பத்தைஉண்டாக்கி நம்மீது தாக்குதல்கள் தொடுக்கின்றன. ஆகவே அவற்றை எதிர்த்துப்போராடுவதும், மார்க்சியத்தை முறையாகப் பயில்வதும், அதன் அடிப்படையில் பிரச்சனைகளை அலசி ஆராய்வதற்கான பயிற்சியை மேற்கொள்வதும் நமக்கு அவசியமாகும். -மாவோ-

அகநிலைவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலமே நாம் மார்க்சியத்தை முறையாககற்றுக்கொள்ள முடியும். குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலமே கட்சிஉறுப்பினர்களுக்கு இடையிலான உறவுகளை தோழமையாக நட்பாக வைத்துக்கொள்ளமுடியும். சலிப்பூட்டும் எழுத்து முறைகளை எதிர்த்துப் போராடுவதன் மூலமே நம்மைகுழப்பத்தில் ஆழ்த்தும் எழுத்தாளர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மார்க்சியத்தை முறையாக கற்றுக்கொள்ள முடியும்.

நாம் எதிரிகளைத் தோல்வியுறச் செய்யும் கடமையினை நிறைவேற்றுவதற்கு, கட்சிக்குள்இருக்கும் இப்பாணிகளை சீர் செய்யும் கடமையினை நாம் கட்டாயமாக நிறைவேற்றிடவேண்டும். பயிலுதல் குறித்த பாணியும் எழுதும் பாணியும் கூட கட்சியின் வேலைப்பணியே ஆகும். நமது கட்சியின் வேலைப்பணி சரியாக்கப்பட்டவுடன் நாடு முழுவதுமுள்ள மக்கள் நமது எடுத்துக்காட்டிலிருந்து கற்றுக்கொள்வார்கள். (தற்போது தலைகீழாக மக்களிடமுள்ள தீயபண்புகளைத்தான் கம்யூனிச அமைப்பிலுள்ளவர்கள் எடுத்துக்காட்டாகஎடுத்துக்கொண்டுள்ளார்கள்) அதே வகையிலான பாணியைக் கொண்டு கட்சிக்கு வெளியேஇருப்போர் நல்லவர்களாகவும் நாணயமானவர்களாகவும் இருப்பார்களானால் நமதுஎடுத்துக்காட்டிலிருந்து கற்றுக்கொண்டு தங்களின் தவறுகளை சரிசெய்வார்கள். இவ்வாறு முழுதேசமும் மாறுதலுக்கு உள்ளாகும். நமது கம்யூனிஸ்டு அணிவரிசைகள் சிறந்த ஒழுங்கில்இருந்து சரியான வழியில் அணிவகுக்கின்ற வரையில் நமது துருப்புகள் (உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்கும் வரையில், நமது ஆயுதங்கள் (நமதுகொள்கைகள்) சிறந்த ஆயுதங்களாக இருக்கும் வரையில் எந்தவொரு எதிரியும் அவர்கள்எவ்வளவு பலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாதுமாறாக அவர்களை கம்யூனிஸ்டுகளாகிய நம்மால் தூக்கி எறிய முடியும். -மாவோ-

ஆகவே அகநிலைவாதம், குறுங்குழுவாதம், சலிப்பூட்டும் எழுத்துமுறைகளையும் நாம் எதிர்த்துப்போராடி வீழ்த்திவிட்டு நம்மை முறையாக ஒழுங்கமைத்து செயல்படுவதன் மூலம் நாம்மக்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்துகொள்வதன் மூலமே நாம் மக்களின் நம்பிக்கையைப்பெற்ற சிறந்த கம்யூனிஸ்டாகவும் சிறந்த கம்யூனிஸ்டுக் கட்சியாகவும் மாற முடியும். இந்தமுறையை இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பின்பற்றத் தவறியதால்தான் கம்யூனிஸ்டுக்கட்சியானது மக்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் இழந்து நிற்கிறது.

அகவியம் என்பது முறையற்ற பாணியில் பயில்வதேயாகும்; அது மார்க்சிய-லெனினியத்திற்குஎதிரானது. கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒவ்வாதது. நாம் விரும்புவது என்னவெனில் மார்க்சிய-லெனினிய பயிலுதல் பாணியேயாகும். பயிலுதல் பாணி என நாம் அழைப்பது வெறும் பள்ளிக்கூடங்களிலுள்ள பயிலுதல் பாணியே எனப் பொருள்கொள்ளவில்லை. மாறாக முழுக்கட்சியிலும் உள்ள பயிலுதலையே பொருள் கொள்கிறோம். அது நமது தலைமையமைப்புகளில்உள்ள தோழர்கள், அனைத்து ஊழியர்கள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோரின் சிந்தனையின்வழிமுறை குறித்த சிக்கலே ஆகும். அச்சிக்கல் மார்க்சிய-லெனினியத்தை நோக்கிய நமது எண்ணப்போக்கைப் பற்றிய சிக்கலே ஆகும். சரியான பொருளில் அது அசாதாரணமானசிக்கலே ஆகும். உண்மையில் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது. மடத்தனமான சிலகருத்துகள் மக்கள் பலரிடையே பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு கோட்பாளர்என்றால் என்ன, ஓர் அறிவுஜீவி என்றால் என்ன, கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைப்பது என்றால் என்ன ஆகியவை பற்றிய மடத்தனமான கருத்துகள் உள்ளன . -மாவோ-

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்