இலக்கு 31 இணைய இதழை PDF வடிவில் பெற இந்த லிங்கை அழுத்தி டவுன்லோட் செய்துக் கொள்ளவும் தோழர்களே
இன்று அடையாள அரசியலுக்குள் புரட்சிகர கட்சிகளே அடைபட்டுகிடக்கும் பொழுது. அன்று சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் பாலன். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதிகடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வந்த சாதியம் தகர்க்கப்பட்டது .ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளன.
இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). ஆசிரியரிடமிருந்து
2). செப்டம்பர் 12 தோழர் அப்பு பாலன் மற்றும் நக்சல்பாரி தியாக தோழர்களின் நினைவுநாள்
3). தோழர் அப்பு பாலன் எனும் அணையா நெருப்பு
4). மார்க்சிய வாதிகளுகிடையிலேயான பணி-6
5). சாதியம் தொடர்-5
6). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு - லெனின். பகுதி – 4
ஆசிரியரிடமிருந்து
தோழர்களே,
இலக்குஇணையஇதழ் தொடங்கியதி லிருந்து நமது ஆசான்களின் பல்வேறு நூல்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக் கொண்டும் அதன் ஊடாக விவாதித்துக் கொண்டும் உள்ளோம்.
சமூக விதிகளை நமது மார்க்சிய ஆசான்கள் நமக்கு விளக்கிய தோடில்லாமல் இங்குள்ள ஏற்ற தாழ்வு ஒடுக்குமுறை அடக்குமுறைக்கான காரணம் நாம் வாழும் அமைப்பு முறையேதான் என்றும் இதிலிருந்து விடுபட உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்த போராடும் சக்தி படைத்த பாட்டாளி வர்க்க கட்சி வேண்டும் என்றும் அவற்றின் சரியான வழிகாட்டுதலில் உள்ள அமைப்பு தான் பாட்டளிவர்க்ககட்சிஎன்றும்,உழைக்கும்வர்க்கத்தின் போராட்டத்தை சரியாகவழிநடத்தும்,அந்த கட்சியானது மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் சமூக வளர்ச்சி விதிகளை பற்றி அறிவு மற்றும் வர்க்க போராட்டம் விதிகள் பற்றிய அறிவு ஆகிய ஆயுதங்களை கொண்டிருக்க வேண்டும்.அவைதான் பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடி படைப் பிரிவான கட்சியாகும். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படைப்பிரிவு என்ற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து அமைப்பு களிலும் ஆக மிக உயர்ந்தது கட்சியாகும்.உழைக்கும் வர்க்கத்தின் மற்ற அனைத்து அமைப்புகளையும் அதுதான் வழிநடத்த வேண்டும். அதனால்தான் முடியும். மக்கள் திரளோடு அதற்கு மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். அதன் அமைப்பு ஒற்றை உருவம் உள்ளதாக; மன ஒற்றுமை;செயல் ஒற்றுமை; ஒழுங்கு ஒற்றுமை உள்ளதாக, ஜனநாயகமத்தியத்துவகோட்பாடுகளின் அடிப்படையில் கட்டிஅமைக்கப் பட்டதாகஇருக்கவேண்டும். அத்தகைய ஒரு கட்சியை கட்டுவதற்கு ஒரு புரட்சிகர கோட்பாட்டின் அவசியத்தை பற்றி லெனின்இவ்வாறு விளக்குகிறார்:"புரட்சிகர கோட்பாடு ஒன்று இல்லாமல் புரட்சிகர இயக்கம் எதுவும் இருக்க முடியாது""ஆக மிக முன்னேறிய கோட்பாடுகளால் வழிகாட்டப்படும்கட்சியினால் மட்டுமே முன்னணிப் போராளி என்ற பாத்திரத்தைமுழுமையாகநிறைவேற்ற முடியும்"லெனின்.
தொழிலாளி வர்க்கத்தினுடைய முன்னேறி படைப்பிரிவாக கட்சி இருக்க வேண்டுமானால் கட்சியானது புரட்சிகர கோட்பாடுகளால் ஆயுத பாணியாக்கப்பட்டு இருக்க வேண்டும். புரட்சிகர இயக்கத்தின் விதிகளை பற்றிய ஆழ்ந்த அறிவு அதற்கு இருக்க வேண்டும். புரட்சியின் விதிகளை பற்றிய தேர்ந்த அறிவு அதற்கு இருக்க வேண்டும்.இவை இல்லாமல் போனால் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை வழிநடத்தும் ஆற்றலோ பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை தாங்கி செல்லும் ஆற்றுலோ இல்லாததாகவே அது இருக்கும். பாட்டாளி வர்க்கம் தன்னுடைய வர்க்க நலன்களின் மட்டத்திற்கு பரந்துபட்டு மக்களின் புரிதலை உயர்த்த இயலாமல் இருக்குமானால் அது ஒரு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சியாகவே இருக்க முடியாது.தொழிலாளர் வர்க்கத்தினுடைய தன்னெழுச்சியான இயக்கத்தின் வாலை பிடித்துக் கொண்டு செல்லும். தன்னெழுச்சியான இயக்கத்தின் செயலற்ற தன்மையும் அரசியலற்றத் தன்மையும் வெற்றிகொள்ள முடியாமல் இருக்கும்.ஆக பாட்டாளி வர்க்கத்தினுடைய முன்னேறிய படைப்பிரிவின் நிலைப்பாட்டை மேற்கொள்கின்ற கட்சிதான் நமக்கு வேண்டும்.அத்தகைய கட்சியானது ஒரு திட்டமிட்டு செயல்படுகின்ற திட்ட வகைப்பட்ட போர்தந்திரத்தையும்செயல்தந்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.ஒரு திட்ட வகைப்பட்டு செயல்தந்திரத்தை உருவாக்க வேண்டும் என்றால் சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகள் அனைத்தையும் மார்ச்சிய லெனினிய அடிப்படையில் ஆய்ந்து அறிந்து புறநிலையில் பற்றி சரியான மதிப்பீட்டு அடிப்படையில் அதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு சரியான போர்தந்திரத்தையும் செயல் தந்திரத்தையும் முன்வைத்து ஒரு சரியான அரசியல் வழியையும் ஸ்தாபனக் கோட்பாடுகளையும் முன் வைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்(லெனின் கட்சிநிறுவனக்கோட்பாடுகள் நூலின் அடிப்படையில் எழுதப்பட்டவை).
ஆக தோழர்களே இங்கு நமது நடைமுறை என்பது திட்டத்தை செயலாக்க மக்கள் மத்தியில் கட்சியின் பணிதான். அப்படி எந்த கட்சி இங்கு இயங்கிக் கொண்டுள்ளது நீங்களே புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே.
மக்கள்தான் புரட்சியை கொண்டு வருகிறார்கள். ஏழை எளிய உழைக்கும் பரந்துபட்ட மக்கள்தான் புரட்சியை ஆதரித்து விசுவாசமாக அதற்காகப்பணிபுரிபவர்கள். தோழர் மாவோகுறிப்பிட்டதுபோல்,”மக்கள்தான் உண்மையான இரும்புக்கோட்டை, இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது”. ஆனால் இந்த இரும்புக்கோட்டை உருவாக்கும் இரும்புக்கற்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமலும் உள்ளது. இந்த இருபுக்கற்களை அடுக்கி, பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த இரும்புக்கோட்டையை நிறுவ வேண்டும் இவைதான் பொதுவுடைமை யாளர்களின் முக்கிய பணி இதைதான் மக்களிடையேயான பணி என்கிறோம்.
இவை இன்றும் நம்முன் கனவாக உள்ளதை நனவாக்க தத்துவ போராட்டத்தை முன்னெடுத்து சரியான வழியில் பயணிக்க முயற்சிப்போம் தோழர்களே.
தோழமையுடன் ஆசிரியர் குழு.
01/09/2023
No comments:
Post a Comment