ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின். பாகம் – 4.

 ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு

போர்த்தந்திரங்கள். லெனின். பாகம் – 4.

3. “ஜார் ஆட்சி மீது புரட்சியின் நிர்ணயமான வெற்றிஎன்பதன் பொருள் என்ன?

மாநாட்டின்தீர்மானம் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தற்காலிக அரசாங்கத்தில் கலந்துகொள்வதும்எனும் விஷயத்தில் கவனம் செலுத்துகிறது. நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, பிரச்சனையை முன்வைத்துள்ள முறையிலேயே குழப்பம் உள்ளது.

ஒருபுறத்தில், பிரச்சனை குறுகி முறையில் முன்வைக்கப்படுகிறது: தற்காலிக அரசாங்கத்தில் நாம் கலந்துகொள்வதைப் பற்றி மட்டுமே தீர்மானம் கவனிக்கிறது, பொதுவாகத் தற்காலிகப்புரட்சி அரசாங்கம் சம்பந்தமாகக் கட்சியின் பணிகளைப் பற்றி அல்ல. மறுபுறத்தில், முற்றிலும் வெவ்வேறான இரண்டு பிரச்சனைகள் -- அதாவது, ஜனநாயகப் புரட்சியின் கட்டங்களில் ஒன்றில் நாம் கலந்துகொள்வது பற்றிய பிரச்சனையும் சோசலிசப் புரட்சியைப் பற்றிய பிரச்சனையும் -- குழப்பப்படுகின்றன. உண்மையாகப் பார்த்தால், சமூக ஜனநாயக வாதம்அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதுஎன்பது சோசலிசப் புரட்சியே ஆகும். அச்சொற்களை அவற்றின் நேரடியான,வழக்கமான அர்த்தத்தில் நாம் பயன்படுத்தினால் அதைத்தவிர வேறொன்றாக இருக்க முடியாது. ஆனால், இச்சொற்களின் அர்த்தம் ஜனநாயகப் புரட்சிக்காக-- சோசலிசப் புரட்சிக்காக அல்ல -- அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டுமெனில், தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் கலந்துகொள்வதைப் பற்றி பேசுவதோடு மட்டுமின்றிப்பொதுவாக அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதுபற்றியும் பேசுவதில் அர்த்தம்என்ன? ஜனநாயகப் புரட்சியைப் பற்றி பேசுவதா சோசலிசப் புரட்சியைப் பற்றி பேசுவதாஎன்று தெரியாமல் நம் மாநாட்டுக்காரர்கள்நிச்சயமற்று இருந்தனர் என்பது வெளிப்படை.

தோழர் மார்தீனவ் தம்முடைய இரண்டு சர்வாதிகார முறைகள் எனும் பழிகேடான நூலில்இந்தக் குழப்பத்தைத் தொடங்கி வைத்தார் என்பதை இப்பிரச்சனையைப் பற்றிய இலக்கியத்தைப் படித்து வந்திருப்பவர்கள் அறிவார்கள்;வால்பிடிக்கும் போக்கின்இலக்கியத்துக்கு முன்மாதிரியாகவுள்ள அந்நூலில் (ஜனவரி 9க்கு14முன்பே)இப்பிரச்சனையை முன்வைத்த முறையை புதிய இஸ்க்ராவாதிகள் நினைவுபடுத்திக்கொள்ளவிரும்பவில்லை.என்றபோதிலும்,அது மாநாட்டின் மீது சித்தாந்தச் செல்வாக்கு செலுத்தியதில்ஐயம் இருக்க முடியாது.

நிற்க,தீர்மானத்தின் தலைப்பு பற்றிச் சொன்னபோதும்.ஒப்பிடமுடியாத அளவிலே இதைவிட மேலும் கடுமையான,ஆழமான தவறுகளைத் தீர்மானத்தின் உள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது. அதன் முதற்பகுதி பின்வருமாறு:

ஜாராட்சி மேல் புரட்சி நிர்ணயமான வெற்றி பெறுவதை ஒரு வெற்றிகரமான மக்கள்புரட்சியெழுச்சியிலிருந்து தோன்றும் தற்காலிக அரசாங்கம் நிலை நாட்டப்படுவது குறிக்கக்கூடும், அல்லது ஏதாவது ஒருவகையான பிரதிநிதித்துவ நிறுவனத்தின் புரட்சிகரமானமுன்முயற்சி குறிக்கக்கூடும்,இது மக்களின் நேரடியான புரட்சிகரமான நிர்பந்தத்தின் கீழ்அனைத்து மக்களுடைய அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்துவதென்றுமுடிவு செய்யலாம்.

ஆக,ஜாராட்சி மேல் புரட்சி நிர்ணயமான வெற்றி பெறுவதை வெற்றிகரமான மக்கள்புரட்சியெழுச்சி குறிக்கக்கூடும்.அல்லது....அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்துவது என்று ஒருபிரதிநிதித்துவ நிறுவனம் எடுக்கிற முடிவும் குறிக்கக் கூடும்! அதன் பொருள் என்ன? அதைநாம் எப்படிப் புரிந்து கொள்வது? அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்துவது என்கிற முடிவுநிர்ணயமான வெற்றியைக் குறிக்கக் கூடுமா?? இப்படிப்பட்ட வெற்றிஎன்பதுவெற்றிகரமானமக்கள் புரட்சியெழுச்சி யிலிருந்து தோன்றும்தற்காலிக அரசாங்கத்தைநிலைநாட்டுவது என்பதுடன் அருகே வைக்கப்படுகிறது!! ஒரு வெற்றிகரமானபுரட்சியெழுச்சியும் தற்காலிக அரசாங்கத்தை நிலைநாட்டு வதும் புரட்சி நடைமுறையில்உண்மையாக வெற்றி பெறுவதைக் குறிக்கும்,ஆனால் அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்துவது என்று எடுக்கும் முடிவுபுரட்சி சொல்லளவில் வெற்றி பெறுவதை மட்டுமேகுறிக்கும் என்கிற விஷயத்தை மாநாடு கவனிக்கத் தவறிவிட்டது.

ஒஸ்வபஷ் தேனியே குழுவின் மிதவாதிகள் விடாமல் செய்து வருகிற அதே பிழையைத்தான் புதிய இஸ்க்ரா மென்ஷ்விக்குகளின் மாநாடு செய்திருக்கிறது.பலமும் அரசதிகாரமும் ஜாரிடம் நீடித்து வருகிற உண்மையைப் பார்க்காமல் நாணத்துடன் கண்ணை மூடிக்கொண்டும்,“நிர்ணயிக்கவேண்டுமென்றால் அவ்வாறு செய்வதற்கான பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டும் ஒஸ்வபஷ்தேனியே குழுவினர் அரசியல்நிர்ணயசபையைப் பற்றி பிதற்றுகிறார்கள். பிரதிநிதிகள் -- அவர்கள் யாராக இருந்த போதிலும் சரி -- எடுத்த முடிவுஎன்பதற்கும் அந்த முடிவு நிறைவேற்றப்படுவது என்பதற்கும் வெகுதூரம் உள்ளது: ஜார் மன்னரிடம் அரசதிகாரம் இருந்துவரும் வரை, எந்தப் பிரதிநிதிகளாயினும் சரி, அவர்கள் எடுக்கிற அத்தனை முடிவுகளும் பொருளற்ற, இரங்கத்தக்கபிதற்றலாகவே இருந்துவரும் -- 1848 ன் ஜெர்மன் புரட்சி வரலாற்றில் பெயர்பெற்ற ஃபிராங்ஃபுர்ட் நாடாளுமன்றத்தின் 15 “முடிவுகள்போல் இருக்கும் -- என்கிற உண்மையையும் மாநாடு மறந்துவிட்டது. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியான மார்க்ஸ் தம்முடைய புதிய ரைன் பத்திரிக்கையில் 16ஒஸ்வபஷ்தேனியே மாதிரியான ஃபிராங்ஃபுர்ட் மிதவாதிகளைக் கொடிய ஏளனத்துடன் தாக்கிக் கண்டித்தார்; ஏனெனில், அவர்கள் நேர்த்தியான வார்த்தைகளைப் பேசி வந்தனர், எல்லா வகைப்பட்ட ஜனநாயக முடிவுகளும்எடுத்து வந்தனர், எல்லாவிதமான சுதந்திரங்களையும் நிர்ணயித்துவந்தனர், ஆனால்நடைமுறையில் அரசதிகாரத்தை அரசனிடமே விட்டு வைத்தனர், அரசன் வசமிருக்கும்இராணுவ பலத்தை எதிர்த்து ஆயுதமேந்திய போராட்டத்தை ஒழுங்க மைக்கத் தவறினர் ஃபிராங்ஃபுர்ட் ஒஸ்வபஷ்தேனியே மிதவாதிகள் இவ்வாறு பிதற்றிக் கொண்டிருக்கையில் அரசன் தருணம் பார்த்தபடியே தன் இராணுவ பலத்தைக் கெட்டிப்படுத்திக் கொண்டே இருந்தான்;எதிர்ப்புரட்சி அசல் பலத்தை ஆதாரமாகக் கொண்டு ஜனநாயகவாதி களை அவர்களின் நேர்த்தியான முடிவுகள்அனைத்துடனும் சேர்த்து அடியோடு தோற்கடித்துவிட்டது.

வெற்றிக்கு இன்றியமையாத நிபந்தனை இல்லாமலிருக்கிற ஒன்றை நிர்ணயமான வெற்றிக்குச் சமமாக மாநாடு வைத்தது.நம் கட்சியின் குடியரசுப் போக்கான வேலைத்திட்டத்தை அங்கீகரிக்கும் சமூக - ஜனநாயகவாதிகள் இப்படிப்பட்ட தவறு செய்யச் சாத்தியமானதுஎப்படி? இந்த வேடிக்கையான நிகழ்வுத் தோற்றத்தைப் புரிந்து கொள்வதற்குக் கட்சியினின்று பிரிந்து சென்ற பகுதியினரைப் பற்றி மூன்றாவது காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தை திருப்பிப்பார்க்க வேண்டும்.* . இத்தீர்மானம் பொருளாதாரவாதத்தை ஒத்திருக்கும்

----------------

* இத்தீர்மானம் முழுவதையும் தருகிறோம். “;பொருளாதாரவாதத்தைஎதிர்த்து கட்சி போராட்டம் நடத்திய காலந்தொட்டு ...தொ.கட்சியில் சில சாயல்கள் தப்பிப் பிழைத்துவந்துள்ளன; இவை வேறுபடும் அளவுகளிலும் விஷயங்களிலும் பொருளாதாரவாதத்தைஒத்துள்ளன,பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் வர்க்க உணர்வுக்குரிய அம்சங்களின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்துவதும் அவற்றை தன்னியல்புப் போக்கான அம்சங்களுக்குக் கீழ்படுத்துவதுமான ஒரு பொதுவான போக்கைக் காட்டிக் கொள்கின்றன.ஒழுங்கமைப்பு பற்றிய பிரச்சனை விஷயத்தில் இந்தச் சாயல்களின் பிரதிநிதிகள்தத்துவரீதியிலே ஒழுங்கமைப்பு என்பது ஒரு தொடர் நிகழ்வுப் போக்கு எனும் கோட்பாட்டை முன்வைத்தனர்;இது முறையாக நடத்தப்படும் கட்சி வேலையுடன் இசைவிணக்கம் உள்ளதல்ல;நடைமுறை யிலே பார்த்தால் இச்சாயல்களின் பிரதிநிதிகள் பலவழக்குகளில் முறைமையுடன் கட்சிக் கட்டுப்பாடினின்று விலகிச் செல்கின்றனர்; மற்ற வழக்குகளில்,இவர்கள் ரஷ்ய வாழ்க்கையின் புறநிலைமைகளை கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் கோட்பாட்டின் விரிவான செயல்படுத்துதல் பற்றிய கருத்தை கட்சியில் மிகவும் தெளிவுக் குறைவுள்ள பகுதியிடையே பிரச்சாரம் செய்கின்றனர்,எனவே தற்சமயம் கட்சியின்பிணைப்புகளுக்குரிய சாத்தியமான ஒரே அடிப்படையைப் பலவீனப்படுத்த முயல்கின்றனர்.

போர்த்தந்திரப் பிரச்சனைகள் விஷயத்தில்,மிதவாத முதலாளி வர்க்கக் கட்சிகள் சம்பந்தமாக முற்றிலும் சுதந்திரமான போர்த்தந்திரங்களைக் கட்சிபின்பற்றுவதற்கு தங்களுடைய எதிர்ப்பைப் பிரகடனப்படுத்தியும்,மக்கள் புரட்சி யெழுச்சியில் அமைப்பாளனின் பாத்திரத்தைநம் கட்சி எடுத்துக் கொள்வது சாத்தியமில்லை,விரும்பத்தக்கதுதுமல்ல என்று மறுத்தும்,எந்தவிதமான நிலைமைகளின் கீழும் தற்காலிக ஜனநாயக புரட்சி அரசாங்கத்தில் கட்சி கலந்துகொள்வதை எதிர்த்தும் கட்சி வேலையின் செயல் பரப்பைக் குறுக்கிவிடும் முயற்சியை இவர்கள் காட்டிக் கொள்கின்றனர்.

புரட்சிகரமான சமூக ஜனநாயகவாதத்தின் கோட்பாடுகளினின்று விலகும் இப்படிப் பட்டஅரைகுறைத் திரிபுகளை எதிர்த்து ஒரு வலுமிக்க சித்தாந்தப் போராட்டம் நடத்தும்படிஎல்லாவிடங்களிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் காங்கிரஸ்ஆணையிடுகிறது;எனினும்,அதே நேரத்தில் எந்த அளவுக்காயினும் இவ்வகை கருத்துக்களை வைத்திருப்பவர் கள் கட்சி அமைப்புகளில் இருந்து வரலாம் என்று அது கருதுகிறது,ஆனால்இதற்கு ஓர் இன்றியமையாத நிபந்தனையாக அவர்கள் கட்சிக் காங்கிரசுகளையும் கட்சி விதிகளையும் அங்கீகரித்து கட்சிக் கட்டுப்பாற்றிற்கு முற்றிலும் கீழ்படிந்து நடக்க வேண்டும்”.

(1907 பதிப்புக்கு ஆசிரியர் எழுதிய குறிப்பு --  - ர்.)

------------------------

பல்வேறு போக்குகள் நம் கட்சியில் இருந்துவருகிற உண்மையைக் குறிப்பிடுகிறது. அரசியல் போராட்டத்தைப் பற்றியோ எட்டுமணி நேர வேலை நாள் பற்றியோ பொருளாதாரவாதிகள்பேசிய மாதிரியே நம்முடைய மாநாட்டுக் காரர்களும்புரட்சியைப் பற்றிப் பேசுகிறார்கள்.(இவர்கள் மார்த்தீனவின் சித்தாந்த வழிகாட்டுதலின் கீழ் இருப்பது தற்செயலாதல்ல).

பொருளாதாரவாதிகள்” “கட்டங்கள் பற்றிய தத்துவத்தைஉடனே முன்வைத்தார்கள்:  1)உரிமைகளுக்காகப் போராட்டம்,           

2)அரசியல் கிளர்ச்சி,

3) அரசியல் போராட்டம், அல்லது,

(i) பத்துமணிநேர வேலை நாள்,

(ii) ஒன்பதுமணிநேர வேலை நாள்,

(iii) எட்டுமணிநேர வேலை நாள் என்று இந்தப் போர்த்தந்திரங்கள் என்பவை ஒரு தொடர் நிகழ்வுப் போக்கின்விளைவுகளை எல்லோரும் போதிய அளவுக்கு அறிவார்கள். இப்போது முன்கூட்டியே புரட்சியையும் பின்வரும் கட்டங்களாக ஒழுங்காகப் பிரிவு செய்யம்படி நம்மை அழைக்கிறார்கள்

1) ஜார் மன்னன் ஒரு பிரதிநித்துவ நிறுவனத்தைக் கட்டுகிறான்

2)மக்களின்நிர்பந்தத்தின் கீழ் இந்த நிறுவனம்ஓர் அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்த முடிவு செய்கிறது” 

3)...மூன்றாம் கட்டத்தைப் பற்றி மென்ஷ்விக்குகளிடையே இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை;மக்களின் புரட்சிகரமான நிர்பந்தம் ஜாராட்சியின்எதிர்ப்புரட்சி வகைப்பட்ட நிர்பந்தத்தை எதிர்கொள்ளும்,எனவே முடிவுநிறைவேற்றப்படாமலே இருந்துவிடும் அல்லது மக்கள் புரட்சியெழுச்சியின் வெற்றியோ தோல்வி யோதான் இறுதியிலே விவகாரத்தை முடிவு செய்யும் என்பதை அவர்கள்மறந்து விட்டார்கள்.புரட்சிகரமான வழியில் எட்டு மணிநேர வேலைநாளைச் செயல்படுத்து வதோ,அல்லது பத்துமணிநேர வேலைநாளை வழங்கி ஒன்பது மணிநேர வேலைநாளுக்கு மாறிச் செல்வதென்று முடிவுசெய்வதோ தொழிலாளிகளின் நிர்ணயமான வெற்றியைக் குறிக்கக் கூடும் எனும் பொருளாதாரவாதிகளின்வாதத்தை மாநாட்டுத் தீர்மானம் அப்படியே ஒத்துள்ளது ... பிரதியெடுப்பும் நிறைநேர்த்தியாயுள்ளது.

அத்தீர்மானத்தை எழுதியவர்கள் புரட்சியெழுச்சியின் வெற்றியை ஜார் மன்னனால் கூட்டப்பட்ட ஒரு பிரதிநிதித்துவ நிறுவனத்தின் முடிவுக்குசமமாக வைக்க எண்ணங்கொள்ளவில்லை என்றும் அவ்விரு வழக்குகளில் எது நேர்ந்தாலும் அதற்கான கட்சிப் போர்த்தந்திரங்களைக் கொடுக்க மட்டுமே விரும்பினர் என்று நம்மிடம் ஆட்சேபணைதெரிவிக்கலாம். இதற்கு நாம் அளிக்கும் பதில் இதுதான்

1)ஒரு பிரதிநிதித்துவ நிறுவனத்தின்முடிவை ஜார் ஆட்சி மேல் புரட்சி நிர்ணயமான வெற்றி பெறுவதுஎன்று நேரடியாக, ஐயந்திரிபுக்கு இடமின்றித் தீர்மானத்தின் வாசகம் கூறுகிறது. ஒருக்கால் இது கவனமின்றி எழுதியதன் விளைவாக இருக்கலாம்; ஒருக்கால் மாநாட்டுக் குறிப்பேட்டைத் திருப்பிப்பார்த்தபின் அதைத் திருத்திக் கொள்ள முடியும். ஆனால் அப்படித் திருத்தப்படும் வரை,தற்போதைய வாசகத்துக்கு ஒரேஒரு பொருள்தான் இருக்க முடியும், அந்தப் பொருள் ஒஸ்வபஷ்தேனியே வாதப்போக்குடன் முற்றாகப் பொருந்தி நிற்கிறது

2)தீர்மானத்தை எழுதியவர்கள் வழிவிலகிப் பற்றியிருக்கும் ஒஸ்வபஷ்தேனியே வாதப்போக்கு புதிய இஸ்க்ராகுழுவினரின் பிற பிரசுரங்களில் மேலும் எவ்வளவோ தெளிவாகவும் எடுப்பாகவும் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, டிஃப்ளிஸ் கமிட்டியின் பத்திரிக்கையான சொத்ஸியால் - டெமக்ராட்17 (ஜார்ஜிய மொழியில் வெளியிடப்படுவது; இஸ்க்ரா இதழ் 100 ல் இதைப் புகழ்ந்திருக்கிறது) “ஜெம்ஸ்கி ஸபோரும்* நம்முடைய போர்த்தந்திரங் களும்எனும் கட்டுரையில், ஆயுதமேந்தியபுரட்சி எழுச்சி என்கிற,தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவது என்கிற போர்த்தந்திரங்களையும்விட ஜெம்ஸ்கி ஸபோரை நம் செய்கைக்குரிய மையமாகச்செய்யக்கூடிய போர்த்தந்திரங்கள்”(இந்த ஜெம்ஸ்கி ஸபோரைக் கூட்டுவதைப் பற்றி எதுவும்திட்டவட்டமாக இதுவரை தெரியவில்லை என்பதையும் நாம் சொல்லிவைப்போம்!)

------------------------

* தேசிய சட்டமன்றம். -- -ர்.

------------------“நமக்கு அனுகூலமானவை”; என்று கூறும் அளவுக்குப் போகிறது. இந்தக் கட்டுரையைப் பின்னால் மீண்டும் குறிப்பிட்டுப் பேசுவோம். 3) புரட்சி வெற்றி பெற நேர்கிற போதும் தோல்வியடைய நேர்கிற போதும், வெற்றிகரமான புரட்சியெழுச்சி ஏற்படுகிற போதும் புரட்சியெழுச்சி பலமான சக்தியாக வளரத் தவறுகிற போதும் கட்சி பின்பற்ற வேண்டிய போர்த்தந்திரங்களை முன்கூட்டியே விவாதிப்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது.மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தாருடன் பேரம் நடத்தி முடிக்கும் நோக்குடன் ஜார் அரசாங்கம் ஒரு பிரதிநிதித்துவ சபையைக் கூட்டுவதில் வெற்றிபெறுவது சாத்தியமே; அப்படி நேரிடுவதை உத்தேசித்து, “பாசாங்குத்தனமான கொள்கை”, “போலிஜனநாயகம்”, “ஜெம்ஸ்கி ஸபோர் எனப்படுவது போன்ற கேலியான மக்கள் பிரதிநிதித்துவம்பற்றி மூன்றாவது காங்கிரஸ் தீர்மானம் தெளிவாகப் பேசுகிறது.* ஆனால் விஷயம் முழுவதும் இதுதான்:

-----------------------

*புரட்சி நிகழவிருக்கும் காலத்தில் அரசாங்கத்தின் போர்த்தந்திரங்கள் பற்றிய கண்ணோட்டம் சம்பந்தப்பட்ட இத்தீர்மானத்தின் வாசகம் பின்வருமாறு:

இன்றையப் புரட்சிக் காலகட்டத்தில் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கங்களை வைத்து முக்கியமாக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வுள்ள பகுதிகளை எதிர்த்து வழக்கமான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் அதேநேரத்தில் அது 

1)சலுகைகளைக் கொடுத்தும் சீர்திருத்தம் பற்றிய வாக்குறுதிகளைக் கொடுத்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியிலே கெடுக்கவும் அதன் விளைவாக அதைப் புரட்சிப் போராட்டத்தினின்றுதிசைதிருப்பிவிடவும் முயல்கிறது

2)அதே நோக்கத்தை வைத்துத் தன்னுடைய பாசாங்குகளை சலுகையளிக்கும் கொள்கையைப் போலி ஜனநாயக வடிவங்களிலே போர்த்தி வருகிறது -- கமிசன்களுக்கும் மாநாடுகளுக்கும் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்படி தொழிலாளிகளை அழைப்பது முதல் ஜெம்ஸ்கி ஸபோர் எனப்படுவது போன்ற கேலியான மக்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது வரை இவ்வடிவங்கள் உள்ளன. 3) கறுப்புநூற்றுவர்18 எனப்படும் கும்பலை அது அமைக்கிறது.மக்களிடையே பொதுவாகப் பிற்போக்கானவர்களாகவும், அரசியல் உணர்வுபெறாதவர்களாகவும்,இனவெறியாலோ மதவெறியாலோ கண்மூடிப்போனவர்களாகவும் இருக்கும் எல்லாப் பகுதிகளையும் புரட்சிக்கு எதிராகத்தூண்டிவிடுகிறது; ”இக்காரணங்களை வைத்து ...தொ.கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் கட்சி அமைப்புகள்அனைத்தையும் பின்வருமாறு பணித்திட தீர்மானிக்கிறது

)அரசாங்கத்தின் சலுகைகளின் பிற்போக்கான நோக்கத்தை அம்பலப்படுத்தி வரும் அதே நேரத்தில்,ஒருபுறத்தில் இந்தச் சலுகைகள் பலவந்தத்தின் மூலமாகப் பறிக்கப்பட்டவை எனும் உண்மையையும்,மறுபுறத்தில் பாட்டாளி வர்க்கத்தைத் திருப்திபடுத்தக் கூடிய சீர்திருத்தங்களை எதேச்சிகார ஆட்சியால் அறவே கொடுக்க இயலாது எனும் உண்மையையும் தங்களது பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் வலியுறுத்த வேண்டும்;

)தேர்தல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசாங்க நடவடிக்கைகளின் உண்மையானகுறிபொருளைத் தொழிலாளிகளுக்கு விளக்க வேண்டும்,மற்றும்எல்லோருக்கும் சம வாக்குரிமை,நேர்முகத் தேர்தல்கள்,இரகசிய வாக்குப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஓர் அரசியல் நிர்ணய சபையைப் புரட்சிகரமானவழியில் கூட்டுவது பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியம் என்று நிருபிக்க வேண்டும்;

)புரட்சிகரமான வழியிலே எட்டு மணிநேர வேலை நாளையும் தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான மற்ற கோரிக்கைகளையும் தாமதமின்றிச் செயல்படுத்துவதற்குப் பாட்டாளி வர்க்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும்;

)கறுப்பு நூற்றுவரின்,பொதுவாகவே அரசாங்கத்தின் தலைமையிலுள்ள எல்லாப் பிற்போக்கான பகுதிகளின் செய்கைகளை எதிர்த்து ஆயுதமேந்திய எதிர்ப்பை ஒழுங்கமைக்க வேண்டும்” (1907 பதிப்புக்கு ஆசிரியர் எழுதிய குறிப்பு. -- -ர்)

---------------------

தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய தீர்மானத்தில் இது சொல்லப்படவில்லை, ஏனெனில் இதற்கும் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இந்தச் சாத்திய நிகழ்ச்சி புரட்சியெழுச்சிப் பிரச்சனையையும் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை நிறுவும்பிரச்சனையையும் தள்ளிப் போடுகிறது;இந்தப் பிரச்சனையை மாற்றியமைத்து விடுகிறது.இன்று விவகாரத்தில் இருக்கும் விஷயம் எல்லா வகையான சேர்க்கைகளும் சாத்தியம், ஒருங்கே வெற்றியும் தோல்வியும் சாத்தியம், நேரான பாதையோ சுற்றுப் பாதையோ இருக்கக் கூடும், என்பதல்ல; எது உண்மையில் புரட்சிகரமான பாதை என்பதைப் பற்றித் தொழிலாளிகளின் மனதில் ஒரு சமூக - ஜனநாயகவாதி குழப்பம் உண்டாக்குவது அனுமதிக்கக் கூடியது அல்ல என்பதே விஷயம்; வெற்றிக்குரிய அடிப்படையான நிபந்தனை இல்லாத ஒன்றை -- ஒஸ்வபஷ்தேனியே செய்வது போல் -- நிர்ணயமான வெற்றியாக வர்ணிப்பது அனுமதிக்கதக்கதல்ல என்பதே விஷயம். எட்டு மணியேர வேலை நாளையுங்கூட நாம் ஒரேயடியில் அல்லாமல் ஒரு நீண்ட, சுற்றுப் பாதையிலே மட்டுமே பெறுவோம் என்பது சாத்தியமே. ஆனால், தள்ளிப்போட்டு வருவதையும், தாமதப் படுத்துவதையும், பேரம் பேசுவதையும், துரோகத்தையும், பிற்போக்கையும் குறித்திடப் பாட்டாளி வர்க்கம் சக்தியற்றுப்போகுமாறு செய்கிற இப்படிப்பட்ட செயல்திறமின்மையை,இப்படிப்பட்ட பலவீனத்தைத்தொழிலாளிகளுக்கு ஒரு வெற்றியாக வர்ணிக்கிறவனைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

வ்பெரியோத்* பத்திரிக்கையில் ஒரு சமயம் சொன்னது போல், ரஷ்யப் புரட்சி ஒரு குறைப்பிரசவமான அரசியல் சட்டத்தைப் பெற்றுமுடியலாம் என்பது சாத்தியமே.ஆனால் நிர்ணயமான போராட்டம் நடக்கவிருக்கும் காலத்தில் இந்தக் குறைப்பிரசவத்தை ஜார் ஆட்சிமீது பெற்ற நிர்ணயமான வெற்றிஎன்று ஒரு சமூக - ஜனநாயகவாதி வர்ணிக்க இணங்குவதை இது நியாயப்படுத்த முடியுமா? மிகவும் மோசமாகப் போனால் நாம் ஒரு குடியரசைப் பெறாமற் போகக்கூடும் என்பதோடல்லாமல் அரசியல் சட்டமுங் கூட பொய்யானதாக, ஷீப்பவ்பாணியில் அமைந்த”19

------------------------

* வ்பெரியோத் (முன்னோக்கி)பத்திரிக்கை கட்சியின் போல்ஷ்விக் பகுதியின் பத்திரிக்கையாக 1905 ஜனவரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது; ஜினீவாவில் பிரசுரிக்கப்பட்டது. ஜனவரி முதல் மே வரை மொத்தம் பதினெட்டு இதழ்கள் வெளியாயின. மே மாதத்தில் ரஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் முடிவுப்படி வ்பெரியோதுக்குப் பதிலாக புரொலிட்டாரி எனும் பத்திரிக்கை ...தொ. கட்சியின் மையப் பத்திரிக்கையாக ஆயிற்று. (இந்தக் காங்கிரஸ் லண்டனில் மே மாதத்தில் நடந்தது: இதில் மென்ஷ்விக்குகள் கலந்துகொள்ளாமல் தங்களுடைய சொந்த மாநாட்டைஜினீவாவில் நடத்தினர்) (1907 பதிப்புக்கு ஆசிரியர் எழுதிய குறிப்பு. -- -ர்)

----------------------

அரசியல் சட்டமாக இருக்க நேரிடலாம் ஆனால் அதற்காக ஒரு சமூக - ஜனநாயகவாதி நம்முடைய குடியரசு கோஷத்தை மட்டுப்படுத்துவது மன்னிக்கத்தகுமா? உண்மைதான், புதிய இஸ்க்ராவாதிகள் அதை மட்டுப்படுத்தும் அளவுக்கு இன்னும்போகவில்லை. எனினும் எந்த அளவுக்கு புரட்சி உணர்ச்சி அவர்களிடமிருந்து அகன்றுவிட்டது என்பதையும், எந்த அளவுக்கு இன்றையப் போர்த்துடிப்புள்ள பணிகளைப் பார்க்க முடியாதபடி உயிறற்று ஏட்டறிவுவாதம் அவர்களின் கண்களை மூடிவிட்டது என்பதையும் அவர்களின் தீர்மானத்தில் அவர்கள் குடியரசைப் பற்றி ஒரு வார்த்தையேனும்சொல்ல மறந்து விட்டார்கள் எனும் உண்மை எடுப்பாகப் புலப்படுத்துகிறது. நம்மவொண்ணாத தாயினும் இதுவே உண்மை.

மாநாட்டின் பல்வேறு தீர்மானங்களில் சமூக ஜனநாயகவாதத்தின் எல்லா முழக்கங்களும் உறுதிப்படுத்தப்பட்டன,திருப்பிச் சொல்லப்பட்டன,விளக்கப்பட்டன,விபரமாக முன்வைக்கப்பட்டன தொழிற்சாலை ஸ்டீவார்டுகளையும் பிரதிநிதிகளையும் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கும் விஷயங் கூட மறக்கப்படவில்லை ஆனால் ஒரு தற்காலிகப் புரட்சிஅரசாங்கம் பற்றிய தீர்மானத்தில் குடியரசைப் பற்றிக் குறிப்பிடுவதற்குச் சிறிதேனும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. மக்கள் புரட்சியெழுச்சியின் வெற்றிபற்றியும்தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை நிறுவுவது பற்றியும் பேசிவிட்டு இந்த நடவடிக்கைகள்செயல்கள் ஆகியவற்றுக்கும் குடியரசைப் பெறுவதற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசாமல்இருப்பது பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்கு வழிகாட்டும் நோக்க மின்றிப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பின்னால் ஊர்ந்து வரும் நோக்கத்துடன் தீர்மானத்தை எழுதுவதற்குச் சமமாகும்.

சுருக்கிச் சொல்வோம் : தீர்மானத்தின் முதற்பகுதி 

1) குடியரசுக்கான போராட்டத்தின் நிலையிலிருந்தும் உண்மையாகவே அரசியலை நிர்ணயிக்கக் கூடிய சபையைப் பெறுவதின் நிலையிலிருந்தும் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் குறிபொருளைப் பற்றி விளக்கம் ஒன்றும் தரவில்லை

2)ஜாராட்சி மீது பெறும் நிர்ணயமான வெற்றியை உண்மையான வெற்றிக்கு வேண்டிய அடிப்படையான நிபந்தனை இல்லாத நிலவரத்துடன் சமமாக வைத்துப் பாட்டாளிவர்க்கத்தின் ஜனநாயக உணர்வை முற்றிலும் குழப்பிவிட்டது.

நாம் தொரிந்துகொள்ள வேண்டியது

1. ஜார் மன்னரிடம் அரசதிகாரம் இருந்துவரும்வரை எந்தப் பிரதிநிதி களாயினும் சரி, அவர்கள்எடுக்கிற அத்தனை முடிவுகளும் பொருளற்ற, இரங்கத்தக்க பிதற்றலாகவே இருந்துவரும்என்று லெனின் அன்றைய ஜார் மன்னனின் ஆட்சியை ஒழிக்காமல் எந்தவகையான ஆட்சியாலும் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்றார்.அதுபோலவே உலகில் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சிக்கு முடிவுகட்டாமல் இன்றைய சமூகத்தில் மக்களுக்குப்பயன்படும் எவ்விதமான ஆட்சியையும் நாம் உருவாக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

2. இன்றைய பாராளுமன்ற ஆட்சியைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்கள், ஜனநாயகவாதிகள்போல் நாடகமாடு வார்கள்,ஆனால் நடைமுறையில் அரசியல் அதிகாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடமே விட்டுவைக்கிறார்கள்.

3.கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்கும் இந்தப் பாராளுமன்றவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவ பலத்தை எதிர்த்துப் போராட்டத்தை நடத்துவதற்காக உழைக்கும் மக்களை இவர்கள் ஒழுங்கமைக்கத் தவறுகிறார்கள்.

4. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஆளும் வர்க்கங்கள் உழைக்கும் வர்க்கத்தை அச்சுறுத்தி, தனது ஆயுதம் தாங்கிய படைப்பிரிவின் (போலீஸ்,இராணுவம்)மூலம் அடக்கி ஆளுவதற்கு ஒரு பக்கம் முயற்சி செய்துகொண்டே,மறுபக்கத்தில் சில சீர்திருத்தங்களின் மூலம் சலுகைகள்கொடுத்து உழைக்கும் வர்க்கங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார் கள்.மேலும் இந்த சீர்திருத்தங்களின் மூலம் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்திக்கொண்டும் இருப்பார்கள்.

5.முதலாளி வர்க்கமானது சில சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் உழைக்கும் வர்க்கங்கள் நடத்த வேண்டிய புரட்சிகரமான போராட்டங்களிலிருந்து திசைதிருப்பி விடுகிறார்கள்.

6.அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளின் நோக்கம் மக்களுக்கு வளமான வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதல்ல என்ற உண்மையை மக்களிடம் பிரச்சாரம் செய்து இந்த அரசாங்கம் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறது என்பதை நாம் புரியவைக்க வேண்டும்.

7.உழைக்கும் வர்க்கங்கள் எதிர்பார்க்கின்ற சீர்திருத்தங்களை முழுமையாக இந்த அரசாங்கத்தினால் செய்துகொடுக்க முடியாது,உதாரணமாக அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை இந்த அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்ற உண்மையைஉழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களுக்குவிழிப்புணர்வு ஊட்ட வேண்டும்

8.தேர்தல்களில் பங்குகொண்டு அரசாங்கத் தின் உண்மையான முகத்தை அதாவது இந்தஅரசாங்கம் மக்களுக்கானது இல்லை என்பதையும் இந்த அரசாங்கம் கார்ப்பரேட்டு முதலாளிகளின் நலனுக் கானதே என்பதையும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.அதற்குஇந்த தேர்தலையும் பாராளுமன்றத்தையும் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

9.புரட்சிகரமான வழிமுறையைக் கையாண்டுஅரசாங்கத்தைப் பணியவைத்து உழைக்கும் வர்க்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.அதற்குப் பொறுத்தமாகப் போராடுவதற்காக உழைக்கும் மக்களை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.

10. ரஷ்யாவிலுள்ள கறுப்பு நூற்றுபவர்கள் போல் இங்கு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ரௌடிகளை எதிர்த்து உழைக்கும் வர்க்கமானது போர்க்குணத்தோடு போராடுவதற்கான பயிற்சியை நாம் பெற வேண்டும்.

11.உழைக்கும் வர்க்கம் போராடி தனது உரிமைகளைப் பெறுவதற்குப் பல வழிகள் உள்ளது.அதில் எந்த வழி புரட்சிகரமானது என்பதையும் நாம் எந்த வழியில் போராடினால்வெற்றிபெறுவோம் என்பதை சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.சரியான வழி எது என்பது நமக்கு உடனடியாகத் தெரிந்துவிடாது தொடர்ந்து செயல்பட்டு நமதுஅனுபவத்தின் மூலமே நாம் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியும்.தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்