இரண்டாம் உலகப் போரினால் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்காவில் ஒரு மாபெரும் புரட்சி புயல் பரவி வந்திருந்தது. 50 க்கும் மேற்பட்ட ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்து உள்ளன.
சீனா வியட்நாம் கொரியா கியூபா நாடு சோசலிச பாதையில் நடைபோட தொடங்கின. ஆசிய ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்காவில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நடைபெற்று வந்தன.
முதலாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களது அடிவருடிகளின் அடக்குமுறைக்கு உள்ளான. காலனி புதிய காலனி நாடுகளில் புரட்சி கடும் பின்னடைவை சந்தித்தது . ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உருவான நிலைமை அடிப்படையிலே வேறுபட்டதாக இருந்தது. ஏகாதிபத்தியவாதிகள் தேச விடுதலை என்ற காட்டு தீயை அணைப்பது சாத்தியமற்றதாகியுள்ளது. அவர்களது பழைய காலனி அமைப்பு முறை வேகமாக நொருங்கிக் கொண்டுள்ளது. அவர்களுடைய பாதுகாப்பான தளம் பிரதேசங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது. அப்பொழுது ஏகாதிபத்தியம் காலனி வாதிகளும் நடு நடுங்கச் செய்தது உலகெங்கும் புரட்சி ஒடுக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏகாதிபத்திய வாதிகளுக்கும் காலனி வாதிகளுக்கும் இது கலகம், இது தடை செய்யப்பட வேண்டும் என்று கொக்கரித்தனர். புரட்சியை நேசித்த மக்களோ இது புரட்சி, மக்களின் எழுச்சி, மக்களின் உரிமை, தவிர்க்க முடியாத வரலாற்றுப் போக்கு என்று முழங்கினர்.
1963 ஜூலை 14 ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையானது அதன் தலைவர்களின் கோட்பாட்டையும் நடைமுறையும் காணும்பொழுது திருத்தல் வாதமும் ஏகாதிபத்தியங்கள் உடன் சமரச போக்கும் வெளிப்பட்டது.
அவை அமெரிக்க சார்ந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு உற்சாகத்தை அளித்தது. அதாவது தெளிவாக சொன்னால் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏகாதிபத்தியவாதிகள் காலனியாதிக்கத்தை கைவிடவில்லை புதிய வடிவிலான காலனியாதிக்கத்தை மேற்கொண்டனர். பழைய முறையிலான நேரடி காலனி ஆட்சி வடிவத்தை கைவிடுமாறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் ஒரு புதிய வகை காலனி ஆட்சி சுரண்டல் வகை பட்டதை நிர்ப்பந்திக்கப்படுத்தி புதிய வகையான காலனியாதிக்கத்தை அமெரிக்க தலைமையிலான ஏதிபத்தியவாதிகள் தொடர்கின்றனர். இராணுவ முகாம்களைஉருவாக்கி, இராணுவத் தளங்களை அமைத்து கூட்டமைப்புகள் உருவாக்கி பொருளாதார சமூகங்கள் ஆகியவற்றை நிறுவி பொம்மை அரசுகளை வளர்த்துவிட்டு தங்கள் காலனி நாடுகளாக சுதந்திரமடைந்த நாடுகளையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது.
பொருளாதார உதவிகள் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ இந்நாட்டில் பொருட்களை விற்பதும் சந்தைப்படுத்தும். கச்சா பொருளை பெறுவதற்கு ஆதாரமாக தங்களது மூலதன ஏற்றுமதிக்கான வாசலாகும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நாட்டு செல்வங்களை கொள்ளை அடித்துச் செல்கிறார்கள் இன் நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள் மேலும் இன்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறார்கள். அந்நாடு மீது ராணுவ பொருளாதார கலாச்சார ஆக்கிரமிப்பை தொடுகிறார்கள். ஐக்கிய நாட்டு சபையை ஒரு கருவியாக பயன்படுத்தி பல்வேறு விதமான நேரடி மறைமுக சதிகளில் ஈடுபடுகின்றனர்.
இன்னும் விரிவாக பின்னர் தொடரும்......
தோழர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு.....

இன்னும் விரிவாக பின்னர் தொடரும்.
Like
Comment
Like
Comment
No comments:
Post a Comment