"ஜனநாயம், பாராளுமன்றம் மார்க்சிய புரிதல்" இன்று இரவு 8 மணிக்கு கிளப் அவுஸ்ஸில் அவசியம் வாருங்கள் தோழர்களே விவாதிப்போம்.
ஒரு மார்க்சியவாதிக்கும் சாதரண மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன இன்னும் விரிவாக இந்த அமைப்புமுறை கையாளுவதை பற்றிய நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் இருந்தே தெளிவடைவோம் தோழர்களே.
+++++++++++++++++++++++++++++++++
கர்நாடக தேர்தலில் பிஜேபியின் தோல்வியை பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரு மார்க்சிய புரிதல் உள்ளவர் நிலைபாட்டிற்கும் மற்றவர்களும் பாரிய வேறுபாடு உண்டு அந்த சாமான்ய மக்களின் உணர்வுநிலையில் உள்ளவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதனை விளங்கிக் கொள்வோம் தோழர்களே.
++++++++++++++++++++++++++++++++
மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும், அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியமைவையும் மோசடியாகவும் நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாயாகும்.
ஜனநாயகத்தூண்களான முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகம் எவ்வளவு அதிகம் உயர்வாக வளர்ச்சி அடைகிறது அவ்வளவு அதிக அளவில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் பங்கு மார்க்கெட் மற்றும் வங்கி அதிபர்களால் ஆட்படுத்தப்படுகின்றன. ஆக முதலாளிகளால் வழங்கப்படும் ஜனநாயகம் ஆனது ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கானவை அல்ல.
மக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக சிந்திக்கின்றனர் ஆட்சியாளர்கள், அந்த ஓட்டை பெருவதற்காகவே இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நகர்வும் உள்ளது. ஓட்டை பெருவதும் நாட்டில் ஆட்சியை பிடிப்பதும் நோக்கமாக கொண்ட இந்த ஓட்டரசியல்கட்சிகள் இங்குள்ள மக்கள் உண்பதை பற்றியோ வாழ்வதை பற்றியொ தவறியும் பேசுவதில்லை.
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது "முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும், ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .மேலும் லெனின் கூறினார்,"புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
இவற்றிக்கு மாற்றாக ஏதாவது தங்களின் கருத்திருந்தால் விவாதிகலாம் தோழர்களே இதே இணைப்பில் இரவு விவாதிப்போம் தோழர்களே.
No comments:
Post a Comment