ரசிய புரட்சியின் தாக்கமும் நமது இடதுசாரி இயக்கங்களுக்கு இடையிலான படிப்பினைகளும்-1- சிபி.

 உலகம் தளுவிய நிலைமைகள்:-

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரஷ்யாவில் மூன்று புரட்சிகள் நடந்தது.அதன் பாதிப்பு இந்தியாவிலும்எதிரொலித்தது.இந்தியாவிலுள்ள புரட்சிகர அறிவுஜீவிகளும் ரஷ்யப் புரட்சியால் கவரப்பட்டு இந்தியாவிலும் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவில் நடந்தது போன்ற ஒரு புரட்சியை நடத்திட வேண்டும் என்று விரும்பினர். இந்த அறிவுஜீவிகளின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் சரியான தன்மையையும் தவறான தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்

ரஷ்யாவில் 1905, டிசம்பரிலும் 1917 மர்ச்சிலும்,1917 நவம்பரிலும் புரட்சிகள் நடத்தப்பட்டது. இவற்றில் முதல் புரட்சி தோல்வியடைந்தது. அன்றைய பிரிட்டனின் ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதிகளில், இந்த ரசிய புரட்சியை புரட்சிகர சக்திகள் பலராலும் வரவேற்கப்பட்டது,பிரிட்டனை சட்டபூர்வ வழிகளில் மட்டுமே எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பல்வேறு தலைவர்கள் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து மக்களை புரட்சிப்பாதையில் அணிதிரட்டிட வேண்டும் என்று விரும்பினர். அத்தகைய சூழலில்,பிரிட்டீஷ் அரசை சட்ட வழியில்மட்டுமே நின்று எதிர்ப்பதை தொழிலாககொண்ட இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை மக்களின் போராட்டத்தை வரம்பிட்டு வளர்தெடுத்தது; எப்பொழுதெல்லாம் போராடும் மக்கள் வரம்பு மீறி பிரிட்டீஷ் அரசுக்கெதிரான போராட்டதில் தீவிரமாக குதிக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் கங்கிரஸ் தலைவர்கள் பின்வாங்கியதும் மக்களை நட்டாற்றில் விட்டதும் அன்றைய நடைமுறையாக இருந்தது. இத்தகைய போராட்ட முறையே அதாவது சட்டப்பூர்வமான, சாத்வீகமானபோராட்ட முறையே இங்கே போராட்டவழியாக மக்கள் மூளைகளில் திணிக்கப்பட்டது. எனினும் அவற்றை யெல்லாவற்றையும் தூக்கியெறிந்து பல புரட்சிகரமான போராட்டங்களை இங்கே மக்கள் தன்னியல்பாக நடத்தியுள்ளார்கள்.மக்கள் தாங்கள் கொண்ட இலட்சியத் திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த வரலாறு அதில் சில தேடுதல்கள்தான் நமது இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

"ஏகாதிபத்தியம் மூர்க்கத்தனமானது என்று நாம் சொல்லும் போது,அதன் இயல்பு ஒருபோதும் மாறாது என்பதையும், இறுதிவரை ஏகாதிபத்தியவாதிகள் தங்களது கசாப்பு கத்தியை கீழே போட மாட்டார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் அழிவை சந்திக்கும் வரை ஒருபோதும் புத்தராக மாற மாட்டார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றோம்" மாவோ (தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தொகுதி 4 பக்கம் 428).

ஏகாதிபத்தியமும் பிற்போக்கு வாதமும் என்றுமே தனது இயல்பை மாற்றிக் கொள்ளமாட்டாது என்ற விதியை மா-லெ வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.தன்நாட்டின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப புரட்சிக்கான தயாரிப்புகளை செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு மாறாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கணக்கில் கொண்டு புரட்சியை கைவிட்டு சமாதான முறையில் வர்க்கப் போராட்ட விதிகளை மாற்றிவிடலாம் என்றும் மார்க்சிய லெனினிய கொள்கை இன்று மாற்ற வேண்டும் முடிவுக்கு வருவது திருத்தல்வாதமே அன்றி மார்க்சிய லெனினியமல்ல. அதனை பற்றி தேடுதல்களே இந்த கட்டுரையின் நோக்கம்.

மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை நக்சல்பாரி இயக்கமானது நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத்தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதியஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கு வதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப்பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டனஇடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது.இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.இந்த சூழ்நிலையானது பாட்டாளிவர்க்கப் போராட்டம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.

இந்த சூழ்நிலைகளை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப்படும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள்,மற்றும் ரசிய புரட்சியிக்கு முன்னும் பின்னும் எழுந்த திர்த்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடிய அனுபவத்தை கிரகிக்காத நிலை,அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு லெனின் முறியடித்தார் என்பதை பார்க்காத தன்மை ஆகியவற்றை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தைநிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யமும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அனுபவமும் நமக்கு சுட்டிகாட்டுகிறது. ஆகவே நமது தோழர்களின் உயரிய தியாகத்தை போற்றும் நாம், அதற்க்கு ஒரு ஒன்று பட்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேண்டும் என்பதனை உணரவேண்டும். அதற்காக நாம் மார்க்சிய தத்துவத்தை பயில வேண்டும்.அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான குறிப்பான பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ரஷ்ய முதலாளித்துவ வளர்சியின் குருசேவ் வகையறாக்கள் கூறியது "தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகள் பல முதலாளித்துவ நாடுகளில் சமாதான முறையில் சோசலிச புரட்சி நடத்த பாட்டாளி வர்க்கதிற்கு சாதகமாக உருவாகி வருகின்றன" என்கின்றனர். (மாபெரும் விவாதம் நூல் 677 பாரா 3).

இதைத்தான் நமது இந்திய நாட்டில் உள்ள சமதான முறையில் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதைப் பற்றி செயல்பட்டுக் கொண்டுள்ளனர் இதில் இன்றுள்ள சில மார்க்சிய லெனினிய  குழுக்களும் கட்சிகளும் இதே நிலைப்பாட்டைஎடுத்துள்ளது.இவை திருத்தல்வாதம்தான் என்பதனை புரிய வைக்கவும் உலக அளவில் நடந்தேறிக் கொண்டிருப்பதை புரிய வைக்க நமது ஆசான்களின் எழுத்தில் இருந்தே பார்ப்போம்.

நமது பின்னடைக்கு காரணம் சர்வதேச முன்னால் சோசலிஸ நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு காரணமாகும் அதனை பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.

மார்க்சிய சமூகம் பற்றிய நடைமுறை விஞ்ஞானம் சமூகத்தில் வளர்நிலையில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சித்தாந்தம். மனிதகுலம் மேம்பாட்டுக்கான விஞ்ஞானம்.

அமைப்பு ரீதியாக இல்லாமல் ஒரு சித்தாந்தம் மக்களிடம் வேர்ப்பாய்ச்ச முடியாது என்பதனால் மார்க்ஸ் எங்கெல்ஸ் பாட்டாளிவர்க்ககட்சியின் ஸ்தாபன அடிப்படைகளை வகுத்தனர்.லெனின் ஸ்டாலின் மாவோ பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் பங்களிப்புக்கு இணையாக புரட்சிகர அமைப்பு வடிவத்திற்கு பங்களித்து வளர்த்தனர்.

சோசலிச காலகட்டத்தில் வர்க்கங்களும் வர்க்க போராட்டங்களும் தொடர்கின்றன.வர்க்கங்கள் இருக்கும் வரை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இருந்தே தீரும். வர்க்கங்கள் அற்ற கம்யூனிச சமுதாயம் உருவாகும் போது அரசு உலர்ந்து உதிர்ந்து விடுகிறது கம்யூனிஸ்ட் கட்சியின் தன்மையும் இல்லாமல் செய்து கொள்ளும்.

தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் உள்நாட்டு பிற்போக்கு வர்க்கங்களின் பிரதிநிதியாய் ஆட்சியை கைப்பற்றிய குருசேவ் சோசலிசத்தில்  வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் இருப்பதை மறுத்தார்.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாட்டாளி வர்க்க கட்சி ஆகியவற்றுக்கு பதிலாக அனைத்து மக்கள் கட்சி என்ற கருத்தை முன் வைத்தார். 25ஆண்டுகளில் உற்பத்தியை உற்பத்தி சக்திகளையும் பிரம்மாண்டமான அளவுக்கு வளர்த்து கம்யூனிச சமூகத்தை கட்டி விடப் போவதாக பகன்றார்.

உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுக்கும் இவர்களுடைய கோட்பாடு முதலாளித்துவத்தை புகுத்தும் கோட்பாடாகும்.உற்பத்தியை பெருக்குவதாக இவர்கள் பொருளாதார ஊக்கம் ஊதியம் போன்ற முதலாளி கோட்பாடுகளை முன் வைக்தார்கள்.

உற்பத்தி பெருக்கத்திற்காகவும் உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்காகவும் என்ற பெயரில் சோசலிச உறவுகளை பின்னுக்குத் தள்ளி முதலாளித்துவ உறவுகளை கட்டியமைத்தார்கள்.

இந்த முதலாளியை மீட்பு வழியில் தான் குருசேவை (ரசியாதொடங்கி கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் வரை ஏன் சீனவின்திரிபுவாதிகளும்கடந்தார்கள்.இவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் என்ற பெயர் இருந்தது ஆனால் கம்யூனிஸ்டுகளாகஇல்லை.கட்சித் தலைமையில் இருந்து டிராட்ஸ்கியை  பற்றி லெனின் சொன்னதை கவனியுங்கள் "அவர் நம்மிடையே தான் இருக்கிறார் ஆனால் நம்மவராக இல்லை".

முதலாளித்துவ சிந்தாந்தத்தை நெஞ்சில் கொள்கிற திரிப்புவாதிகள் முதலாளிய ஜனநாயகத்தையும் அதற்கான பலகட்சி ஆட்சி முறையும் மீட்டெடுப்பது தவிர்க்க முடியாதது. ஆக நமது புரிதலுக்காக ....

சோசலிச சமுதாயத்தில் உற்பத்தி சாதனைகளின் தனி உடமை முதலில் ஒழிக்கப்படுகிறது: உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடமையாக ஆக்கப்படுவதின் விளைவாக "உழைக்காதவர்களுக்கு உணவுஇல்லை" என்று சோசலிச கோட்பாடு நடைமுறைக்கு வருகிறது. கூடவே, "திறமைக்கேற்ற உழைப்பு உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற சோசலிச கோட்பாடும் நடைமுறைக்கு வருகிறது:இந்த நிலையில்இருந்து,'திறமைக்கேற்ற உழைப்புதேவைக்கேற்ற பங்கீடுஎன்ற கம்யூனிச கட்டத்திற்கு சமுதாயம் மாறும் புரட்சிகர நிகழ்ச்சிகள் நடந்தேறும்".

சோசலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வருவது மட்டுமல்ல :அது சமூக நீதி சம்பந்தப்பட்டதாகும். அரசியல் அமைப்பு முறையிலும் பொருளாதார கட்டுமானத்திலும் மட்டுமல்லாமல், மனிதனையும் சோசலிச மனிதனாக மாற்றுவதை உள்ளடக்கியது.

இத்தகைய மனிதனை வளர்த்தெடுக்க சோசலிச கல்வி சோசலிச கலாச்சாரம் பெரிதும் பங்காற்றுகிறது. கலாச்சாரம் என்பது மனித வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் செலுத்தப்படும் பண்பாட்டு நோக்கமாகும்.அரசியல் பொருளாதார முனைகளில் மாற்றம் ஏற்பட்ட பிறகும் பழைய பண்பாட்டு மிச்சங்கள் தேவையற்ற எச்சங்கள்செல்வாக்குசெலுத்தும்.அவைகளை அடையாளம் கண்டு களைவதில் உணர்வு பூர்வமாக போராடுவதும் புதிய அம்சங்களை கடைப்பிடிப்பதில் உணர்வுபூர்வமாக பங்கேற்பது மூலமே பழையன அழிக்கப்படும். புற சூழல்களில் சாதகமான நிலைமைகள் தோன்றி விட்டது என்பதாலே புதிய கலாச்சாரம் தானாகவே தோன்றி விடும் என்பது தவறானதாகும்.

எனவே சோசலிச மனிதனை உருவாக்குவதில் கலாச்சாரத்தில் திட்டமிட்ட உணவுப்பூர்வமான செயல்பாடுகள் தீர்க்கமானபங்காற்றுகின்றன.சுருக்கமாக நிலப்பரப்புத்துவ முதலாளித்து பண்புகளுக்கு எதிரான விஞ்ஞானபூர்வமான அனைத்தும் சோசலிச பண்புகள் எனலாம்.

குருசேவின் வாரிசுகளான இன்றைய திருத்தல்வாதி களுக்காக எதார்த்த நிலைமையோடு அறிதல் வேண்டும் அல்லவா?

இரண்டாம் உலக யுத்திற்கு பின் ஏகாதிபத்திய வாதிகளும் பிற்போக்குவாதிகளும் எல்லா இடங்களிலும் கொடூரமான முறையில் மக்களை அடக்கி ஒடுக்க தங்களின் அடக்குமுறை இயந்திரங்களை பலப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தங்களின் ராணுவ மற்றும் போலீஸ் படையை பன்மடங்கு பெருக்கி உள்ளது ஏன் ஏகாதிபத்தியம் இல்லாத முதலாளித்துவ நாடுகளும் கூட மிகப்பெரிய அளவில் ஆயுதப்படைகளையும் போலிஸ் படைகளையும் அதிகரிப்பதில் விதிவிலக்காக இல்லையே.

இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆயுதப் போட்டியும் பலாத்கார அடக்குமுறை கருவிகளும் விரிவாக்கப்பட்டு வளப்பட்டுக் கொண்டுள்ளது காண முடிகிறது.எதற்காக இந்த முதலாளித்துவவாதிகள் சமாதான காலத்தில் தனது ராணுவ போலீஸ் படைகளை விரிவாக்கி பெரிதுபடுத்திக் கொண்டுள்ளனர்.

உழைக்கும் மக்களின் வெகுஜன இயக்கங்களை ஒடுக்குவது அன்றி சமாதான முறையில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாக அவர்களின் நோக்கம் இருக்க முடியுமா?  

இதுவரை நடந்தேறிய பல்வேறு போராட்டங்களில் வேலை நிறுத்தங்களில் ஜனநாயக உரிமைக்கான போராடும் மக்களை இந்த போலீசும் ராணுவமும் கடுமையாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது அல்லவா???

இவை உள்நாட்டு போலீஸ் ராணுவத்தின் செயல் என்றால்,அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் பல நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைக்க உடன்படிக்கை செய்து முதலாளித்துவ உலகின் அனைத்து பகுதிகளிலும் கிட்டத்தட்ட2,200(இன்று கூடுதலாக இருக்கலாம்)ராணுவ  தளங்களையும் படை முகாம்களையும் அமெரிக்க உருவாக்கியுள்ளது.10லட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் அமெரிக்காவை விட்டு வெளி நாடுகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்இவர்களின் தரைப்படை விமானப்படை உலகின் எந்த இடத்துக்கும் அனுப்பி மக்களுடைய புரட்சி அடக்கி ஒடுக்க தயாறாக இருந்து வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்  அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் பல்வேறு நாடுகளில் உள்ள பிற்போக்குவாதிகளுக்குஉதவியும்,ஆதரவும் வழங்கியதோடு மக்களின் புரட்சிகளை அடக்குவதற்கும் உதவியும் செய்துள்ளனர்.எண்ணற்ற எதிர் புரட்சி ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்புகளையும் தலையீடுகளையும் நேரடியாக திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் அதாவது எதிர் புரட்சியை அவர்கள் ஏற்றுமதி செய்து கொண்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான தன்னாட்டுப் படைகள் பல்வேறு நாடுகளின் உள்விவாகாரங்களில்  தலையிட்டும் தாக்குதல் செய்தும் ஆக்கிரமிப்பு போரை கட்டவிழ்த்து விட்டு உள்ளது.

கிரீஸ் தொடங்கி உக்ரேன் வரை உள்நாட்டுப் போரை தொடர்ந்து நடத்த ஆயுத உதவி செய்து பிற்போக்குவாதிகளைவளர்பதும்,அந் நாடுகளில் நடக்கும்  இறையாண்மைக்கான பாதுகாப்பிற்கான நியாயமான தற்காப்பு போராட்டங்களை கூட ஆயுதப் படை கொண்டு அடக்குவது தான் இவர்களுடைய செயலாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய மக்களின் புரட்சிகளையும் தேசிய சுதந்திரத்தான இயக்கங்களையும் அடக்கவும் தலையிடவும் உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு தேசியத் தன்மையின் சாயல்கள் காணப்படும் முதலாளித்துவ நாடுகளின் ஆட்சிகளை கூட அப்புறப்படுத்த முயல்கிறது.

அமெரிக்கஅரசாங்கம்ஆசிய,ஆப்பிரிக்க,இலத்தீன் அமெரிக்காவின் எண்ணற்ற நாடுகளில் எதிர் புரட்சிகர ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளையும் ஏற்பாடு செய்துள்ளது.தானே உருவாக்கிய பொம்மை அரசுகள் தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது போய்விட்டால் அவற்றை நீக்குவதற்கு பலாத்காரத்தை கூட பயன்படுத்தி உள்ளது. ஈரத் தொடங்கி ஆப்கான் வரை கண்முன் கண்டது தானே.

இன்றைய காலகட்டத்தில் புரட்சிகளை வெற்றிகரமாக நடத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் நாடுகளின் விடுதலை சாதிக்க உள்நாட்டில் உள்ள பிற்போக்கு ஆளும் வர்க்களின் கடுமையான ஒடுக்கு முறைகளை எதிர்த்து  நின்று சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல்,  

ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் ஆயுத தலையிட்டையும் எதிர்த்துப் போராட முழுமையாக தயாராக இருக்க வேண்டி இருக்கும் என்பதைத்தான் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் நமக்கு விளக்குகின்றன. இதுபோன்ற தயாரிப்புகள் இல்லாமல் எதிர்ப்பு புரட்சிகளின் பலாத்காரத்தை அவசியமானபோது புரட்சிகர பலாத்காரத்தால் தீர்க்கமாக முறியடிக்காமல் புரட்சி என்பது சாத்தியம் இல்லை.வெற்றி என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லை.

ஏகாதிபத்தியம் மற்றும் எல்லா பிற்போக்குவாத ஆட்சியின் அரசியல் அஸ்திவாரம் "போலீஸ் படை" இதைத் தவிர வேறொன்றுமில்லை.அஸ்திவாரம் வலிமையாக அசைக்க முடியாமல் இருக்கும் வரையில் வேறு எதுவும் முக்கியமில்லை சாத்தியமில்லை. அவர்களுடைய ஆட்சியையும் அசைக்க முடியாது. முதலாளிகள் தங்களின் ஆட்சி பாதுகாக்க பலாத்காரத்தை சார்ந்துள்ளார்கள் என்ற உண்மையை மறைக்கும் "நவீனதிருத்தல்வாதிகள் "முதலாளித்துவம் மிகவும் ஏற்புடைய சமாதான மாற்றம் என்பது புரட்சி எதிர்ப்பதில் ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய நண்பர்களாக செயல்படும் தங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓடுகாலி காவுஸ்தகி பற்றி தனது விமர்சித்தல் லெனின் கூறினார்" 1870 களில் மார்க்ஸ் இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம்  சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திய பாட்டையே ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்கவாதமும்  இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும்  குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றுப் பெயர்களில் வேலையாகும். மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில்தான் ஏற்றுக்கொண்டார்  இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை. மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம்  முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்கவில்லை."( லெனின் நூல் திரட்டு  23 பக்கம் 233).

அதாவது சீனாவில் இருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்றபுரட்சிகள்  விதிவிலக்கன்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே  ஏகாதிபதிக்கு எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும்  தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன ( மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம்  வெளியீடு ).

1945  ஆகஸ்டில் வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.

1953ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள்  கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆதரவாளர்களை தூக்கி எறிந்து புரட்சிகரமான  ஆட்சி நிறுவினர் .

இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன.

ஆக நமது  படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே ...

ரசியாவில் திரித்தல்வாததிற்குப் பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதையும் மூன்றாம் உலக நாடுகளில் அதன் தாக்கம் என்ன என்பதனையும் அடுத்த இலக்கு இதழில் பார்ப்போம்.    தொடரும்…….

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்