இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு பகுதி – 1. லெனின்

 இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு பகுதி – 1. லெனின்

எப்பொருளில் நாம் ரஷ்யப் புரட்சியின் சர்வதேச முக்கியத்துவம் குறித்துப் பேசலாம் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றதும் (அக்டோபர் 25 [நவம்பர் 7], 1917) ஆரம்ப மாதங்களில், பிற்பட்ட ரஷ்யாவுக்கும் மேலைய ஐரோப்பாவின் வளர்ச்சியுற்ற நாடுகளுக்கும் இடைப்பட்ட மிகுதியான வேறுபாடுகள்காரணமாய்,இந்நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சி சிறிதும் எங்களுடையதை ஒத்ததாக இராதென நினைக்கத்தோன்றியிருக்கலாம். இப்பொழுது நமக்குக் கணிசமான அளவில் சர்வதேச அனுபவம் கிடைத்திருக்கிறது; எங்களுடைய புரட்சியின் குறிப்பிட்ட சில அடிப்படை இயல்புகள் ஒரு மண்டலத்துக்கோ, தனியொரு தேசத்துக்கோ, ரஷ்யாவுக்கோ மட்டும் உரித்தான முக்கியத்து வத்துடன் கூட, சர்வதேச முக்கியத்துவமும் பெற்றவை என்பதை இந்த அனுபவம் திட்டவட்டமாகப் புலப்படுத்துகிறது. சர்வதேச முக்கியத்துவம் என்பதாக இங்கு நான் கூறுவது இப்பதத்தின் விரிவான பொருளில் அல்ல; எங்களுடைய புரட்சியால் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும் விளைவுகளின் பொருளில், இப்புரட்சியின் முதல் நிலைக் கூறுகளில் சிற்சில மட்டுமின்றி யாவுமே, மற்றும் அதன் துணைக் கூறுகளில் பலவுங்கூட, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையே. இப்பதத்தின் மிகக் குறுகிய பொருளில்தான், எங்கள் நாட்டில் நடந்தேறியது சர்வதேச அளவில் பொருந்துவதாகும், அல்லது சர்வதேச அளவில் திரும்பவும் நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க இயலாததாகும் என்கிற பொருளில்தான்,இதைப் பற்றி இங்கு நான் கூறுகிறேன்எங்களுடைய  புரட்சியின் சில அடிப்படை இயல்புகள் இந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இந்த உண்மையை மிகைப்படுத்திக் கூறி,எங்கள் புரட்சியின் சிற்சில அடிப்படை இயல்புகளுக்கு அப்பாலும் இதனைவிரிவுபடுத்திச் செல்வது மிகப் பெரிம் பிழையாகிவிடும் என்பதைக் கூறத் தேவையில்லை. வளர்ச்சியுற்ற நாடுகளில் ஏதேனும் ஒன்றிலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடையுமாயின், அதைத் தொடர்ந்து பெரும் மாற்றம் ஏற்படக் கூடும். அதாவது ரஷ்யா முன்மாதிரியாக இருக்கும் நிலை விரைவில் முடிவுற்றுத் திரும்பவும்(சோசலிசப் பொருளில்) பிற்பட்ட நாடாகிவிடக் கூடும் என்பதைக் காணத் தவறுவதும் பிழையே ஆகும்.

ஆனால் வரலாற்றின் தற்போதைய தருணத்தில் ரஷ்யாவின் முன்மாதிரியே, எல்லா நாடுகளுக்கும் அவற்றின் தவிர்க்க முடியாத சமீபத்திய எதிர்காலங் குறித்து ஒன்றை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை --புலப்படுத்திக் காட்டுகிறதுஇந்த வழியில்தான் காரியங்கள் நடைபெறுகின்றன. எல்லா நாடுகளிலும் முன்னேறிய தொழிலாளர்கள் இதனை முன்பே உணர்ந்து கொண்டு விட்டனர். பல சந்தர்ப்பங்களில், உணர்ந்து கொண்டனர் என்பதற்குப் பதிலாய், தமது புரட்சிகர வர்க்க உள்ளுணர்ச்சியின் துணை கொண்டு இதனை இறுகப் பற்றிக் கொண்டனர். சோவியத் ஆட்சியதிகார அமைப்புக்கும் மற்றும் போல்ஷ்விக்குத் தத்துவம், போர்த்தந்திரம் இவற்றின் அடிப்படை கூறுகளுக்கும் உள்ள சர்வதேசமுக்கியத்துவம்” (இச்சொல்லின் குறுகிய பொருளில்) இதில்தான் அடங்கியிருக்கிறது. இரண்டாவது அகிலத்தின் புரட்சிகரத்தலைவர்கள்ஜெர்மனியில் காவுத்ஸ்கியையும்ஆஸ்திரியாவில் ஒட்டோ பௌவரையும் பிரெடெரிக் ஆட்லெரையும்போன்றவர்கள்இதனைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்அவர்கள் பிற்போக்காளர்களாகவும் படுமோசமான சந்தர்ப்பவா தத்தின், சமூக - துரோகத்தின் ஆதரவாளர்களாகவும் ஆகியதற்கு இதுவேதான் காரணம். எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் உலகப் புரட்சி (Weltrevolution)1என்ற தலைப்பில் 1919 வியென்னாவில் வெளியான பிரசுரத்தை (Sozialistische Bucherei, Heft 11: Jgnaz Brand*) இங்கு குறிப்பிடலாம். இது அவர்களுடைய சிந்தனைப் போக்கு அனைத்தையும் கருத்துக்களின் வீச்சு முழுவதையும், இன்னும் பொருத்தமாய் சொல்வதெனில் அவர்களுடைய மடமை, பகட்டுப்புலமை, இழிநிலை, தொழிலாளி வர்க்க நலன்களுக்கு அவர்கள் இழைக்கும் துரோகம் ஆகியவற்றின் முழு அளவையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதுவும்உலகப் புரட்சிஎன்னும் கருத்தைப்பாதுகாப்பதாகக்கூறிக்கொண்டு இவ்வளவை யும் அவர்கள் செய்வதை வெளிப்படுத்துகிறது.

ஆனால் இந்தப் பிரசுரத்தைப் பற்றி மேலும் விவரமாய் வேறொரு நேரத்தில் பரிசீலிப்போம். இன்னும் ஒரேயொரு விவரத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்;முன்னொரு காலத்தில் காவுத்ஸ்கி ஓடுகாலியாக இல்லாமல் மார்க்சியவாதியாகவே இருந்த போது,வரலாற்றியலாளராக அவர் இப்பிரச்சனையைப் பரிசீலிக்கையில்,ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சித் தன்மை மேலைய ஐரோப்பாவுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஒரு சூழ்நிலை எழுவதன் சாத்தியப்பாட்டை முன்னறிந்து கூறியிருந்தார். 1902-ல் புரட்சிகர இஸ்கராவுக்கு 2 “ஸ்லாவ்களும் புரட்சியும்என்று காவுத்ஸ்கி ஒரு கட்டுரை எழுதிய போது இது நிகழ்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் எழுதியதாவதுதற்காலத்தில் {1848-ல் இருந்ததற்கு மாறாக}” ஸ்லாவ்கள் புரட்சிகர தேசங்களது அணிவரிசையில் அடியெடுத்து வைத்து விட்டனர் என்பதுடன், புரட்சிகரச்சிந்தனையின்,புரட்சிகரச் செயலின் மையம் மேலும் மேலும் ஸ்லாவ்களின் பக்கம் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிகிறது. புரட்சிகர மையம் மேற்றிசையிலிருந்து கீழ்த்திசைக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் அது பிரான்சில் அமைந்திருந்தது. சிற்சில சமயங்களில் இங்கிலாந்திலும் இருந்தது. 1848-ல் ஜெர்மனியும் புரட்சிகர தேசங்களது அணிவரிசையில் சேர்ந்து கொண்டது.......... புரட்சிகர மையம் மேலும் இடம் பெயர்வதை, அதாவது ரஷ்யாவுக்கு இடம் பெயர்வதை, நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தைச் சுட்டும் நிகழ்ச்சிகளுடன் புதிய நூற்றாண்டு ஆரம்பமாகி யுள்ளது...... மேற்கிலிருந்து அவ்வளவு பெரிய அளவில் புரட்சிகர முன்முயற்சியை ஈர்த்துக் கொண்ட ரஷ்யாவானது, இப்பொழுது புரட்சிகர ஆற்றலுக்குரிய ஊற்றாக மேற்கிற்கு பணிபுரிய ஆயத்தமாகியுள்ளது என்பதாகத் தெரிகிறது. நம் அணிகளில் மலிந்து வரும் ஊதிப் பருத்த குட்டிமுதலாளித்துவ அற்பத்தனத்துக்கும் உணர்ச்சி வேகமில்லா அரசியலுக்கும் முடிவு கட்டவல்ல சக்தி மிக்கச் சாதனமாக,தற்போது மூண்டெழுந்து வரும் ரஷ்யப் புரட்சி இயக்கம் செயல்படக்கூடும்.போராட்ட ஆர்வத்தையும்,நமது மாபெரும் இலட்சியங்கள் பால் உணர்ச்சித் துடிப்புள்ள பற்றுறுதியையும் அது மீண்டும் கிளர்ந்தெழச் செய்யக்கூடும். மேற்கு ஐரோப்பாவுக்கு ரஷ்யாவானது பிற்போக்கின், வரம்பற்ற எதேச்சிகாரத்தின் கொத்தளமாய் இருந்த நிலை முடிவுற்றுப் பல காலமாகிறது. இதற்கு நேர்மாறான நிலைதான் இன்றுள்ள நிலையாகுமென நினைக்கிறேன். ரஷ்யாவுக்கு மேற்கு ஐரோப்பா பிற்போக்கின், வரம்பற்ற எதேச்சிகாரத்தின் கொத்தளமாகி வருகிறது.... ரஷ்யப் புரட்சியாளர்கள் ஜாருடன் கூடவே ஜாரின் கூட்டாளியான ஐரோப்பிய மூலதனத்தையும் ஏககாலத்தில் எதிர்த்துப் போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிராவிடில்,நெடுங்காலத்துக்கு முன்பே அவர்கள் ஜார் மன்னனைச் சமாளித்திருப்பார்கள். இம்முறை அவர்கள் இரு பகைவர்களையும் சமாளிப்பதில் வெற்றி காண்பார்கள் என்றும், இந்தப் புதிய புனிதக் கூட்டுஅதன் மூதாதைகளைக் காட்டிலும் மிக விரைவிலேயே தகர்ந்துவிடும் என்றும் எதிர்பார்ப்போமாக. ரஷ்யாவில் தற்போது நடைபெறும் போராட்டம் எப்படி முடிவுறுவதாய் இருப்பினும், அதன் தியாகிகளுடைய இரத்தமும் துன்பதுயரங்களும் அது தோற்றுவிக்கும் தியாகிகளின் எண்ணிக்கை துரதிருஷ்டவசமாய் அளவு கடந்ததாகவே இருக்கும் விரயமாகிவிடப் போவதில்லைஅவை நாகரிக உலகமெங்கும் சமுதாயப் புரட்சியின் குருத்துகளுக்கு ஊட்டமளித்து, அவற்றை மேலும் வளமாகவும் விரைவாகவும் வளரச் செய்யும். 1848- ஸ்லாவ்கள் உயிர் கொல்லும் கொடுங்குளிராகிமக்களது வசந்தத்தின் நறுமலர்களை நலிந்து விழச் செய்தனர். இப்பொழுது அவர்கள், பிற்போக்கின் இறுகிய பனிக்கட்டியை உடைத்து, தேசங்களுக்கு இன்பகரமான புதிய வசந்தத்தை யாராலும் தடுக்கவொண்ணாத முறையில் கொண்டு வந்து அளித்திடும் புயலாகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.”இஸ்கரா, ரஷ்ய சமூக - ஜனநாயகப் புரட்சிகரசெய்தியேடு, இதழ் 18, மார்ச் 10, 1902)”  பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு காரல் காவுத்ஸ்கி எவ்வளவு நன்றாய் எழுதினார்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாளில் சோசலிசப் புரட்சி போல்ஷ்விக் கட்சியின் தலைமையின்  கீழ் நடத்தப்பட்டு தொழிலாளி வர்க்கத்தின் சோவியத்து ஆட்சி நிறுவப்பட்டது.இந்தப் புரட்சியானது ரஷ்யாவில் நடத்தப்பட்ட போதும் இதன் அனுபவத்தை உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும்ஒரு சிறந்த முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அவரவர் நாடுகளில் புரட்சியை நடத்திட வேண்டும் என்று இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலின் மூலம் லெனின் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் கம்யூனிஸ்டு களுக்கும் வழிகாட்டினார்.

ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் லெனினது இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி செயல்பட்டிருந்தால் உலகம் முழுவதிலும் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டு அமைப்புகளின் தலைவர்கள் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுத் தலைவர்கள் லெனினது வழிகாட்டுதலைப் பின்பற்றத் தவறியதன் காரணமாகவும், லெனினியக் கொள்கைகளை மறுத்து காவுத்ஸ்கி,டிராட்ஸ்கிகுருஷேவ் போன்ற மார்க்சிய லெனினியத்திற்கு எதிரானவர்களின் திருத்தல்வாதக் கொள்கைகளைப் பின்பற்றியதால் எந்தவொரு நாட்டிலும் ரஷ்யா மற்றும் சீனாவில்நடந்தது போன்ற புரட்சிகள் நடந்து தொழிலாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்த முடியாதது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை தொடர்ந்து கூலி அடிமை நிலையிலேயே இருக்கும் நிலைக்கும் திருத்தல்வாதத் தலைவர்கள் காரணமாக உள்ளனர்.

வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் புரட்சி நடத்தப்பட்டால் ரஷ்யப் புரட்சி அனுபவத்தைக் காட்டிலும் மேலை நாடுகளில் நடக்கும் புரட்சி அனுபவம் முக்கியத்துவம் பெறும் என்றார் லெனின்.ஆனால் அதுபோன்ற புரட்சியை சீனாவைத் தவிர வேறு எங்கும் நடைபெறவில்லை.

ஆகவே கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய அனுபவமாக இப்போதும் ரஷ்யப் புரட்சியே உள்ளது. ஆகவே உண்மையிலேயே கம்யூனிசத்தை விரும்புபவர்களும்,அதனை நேசிப்பவர்களும் பின்பற்ற வேண்டியது ரஷ்யப் புரட்சி அனுபவமாகவே இருக்கிறது,அந்த அனுபவத்தை உள்வாங்கி புரட்சியில் ஈடுபடுபவர்களைத்தான் உண்மையான கம்யூனிஸ்டு என்று சொல்ல முடியும்.

ஆனால் மார்க்சிய லெனினிய நூல்களை படித்த அறிவாளிகளில் சிலர் அவர்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள்,ஆனால் லெனினது இந்த வழிகாட்டுதலையும் ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களையும் ஏற்க மறுத்து,லெனின் சொன்னவைகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று சொல்லி அவர்களை நம்பி பின்பற்றும் அணிகளை ஏமாற்றி காவுத்ஸ்கியவாதிகளைப் போல் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே கம்யூனிசத்தை உண்மையில் விரும்பும் தொழிலாளி வர்க்கமானது கம்யூனிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் எப்போது எப்படி பங்கேற்பது, எப்போது எப்படி தேர்தல்களை புறக்கணிப்பது என்பது போன்ற பிரச்சனைகளைக்கு லெனினது வழிகாட்டுதலை புரியவைப்பதற்காக லெனினால் எழுதப்பட்ட இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலை தொடர் கட்டுரையாக இலக்கு கொண்டுவருகிறது. தோழர்கள் இதனை படித்து லெனினைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், லெனினை பின்பற்ற வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்துசெயல்படுமாறு இலக்கு விரும்புகிறது........... தேன்மொழி.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்