மனித குலத்தின் வரலாறு (சமூக விஞ்ஞானம்) - சிபி.

 மனித குலத்தின் வரலாறு (சமூக விஞ்ஞானம்) - சிபி.

மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும்அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும்அல்லது சித்தாந்தமாகும்இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும்மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்னஅது ஏன் மாறுகிறதுஇதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும்இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்லஅவை சில நுண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறதுஅது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளதுசமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன?  எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொது உண்மையை,  பொதுவான வழிகாட்டு தலையை,  பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது.  இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறதுஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லைஅதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்யசீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாதுஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும்ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள்அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது,மேலும் அங்குள்ள மதங்களையோ,  மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறதுஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும்அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.  ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலைஅவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர் வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால்,  அதற்கு உணவுஉடைஇருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும்ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.

மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்.  ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்ததுஅதனால் மக்களிடையே வர்க்கப் பிரிவுகளோ ஏற்றத் தாழ்வுகளோ இல்லை.  உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறுவேலைப் பிரிவினைகள் தோன்றியதுஅதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ள வர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்ததுஇந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் தனியுடமையாக கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர்இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின.  இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறதுஇதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம்இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறதுஇதனை ஆய்வு செய்து மாற்றி யமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கமாகும்இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறதுஇந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்கு கிறார்கள்இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்தவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங் களையும் மேல்தளம் என்கிறோம்.

1. புராதன பொதுவுடைமைச் சமூகம்

மனித சமுதாயம் எப்பொழுதும், இப்பொழுது இருப்பது போலவே இருந்தது இல்லை. அது பல காலங்களில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு வளர்ந்து வந்து உள்ளது. அது தன் பயணத்தைப் பொதுவுடைமைச் சமூகமாகவே தொடங்கியது. இதனை நாம் ஆதி பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமை சமூகம் என்றழைக்கிறோம். மனிதன் வேட்டையாடி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது அவர்களில் யாருக்கும் எந்த விதமான சொத்துரிமையும் இருந்தது இல்லை. வேட்டைக் கருவிகள் உட்பட அவர்களிடம் இருந்த அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக இருந்தன. தனியுரிமையைப் பற்றி அவர்களால் கற்பனையும் செய்ய முடியாது இருந்தது.

உழைக்கும் வயதில் உள்ள யாரும் உழைக்காமல் இருக்க முடிந்தது இல்லை. உழைக்காமல் இருப்பதைப் பற்றிக் கற்பனை செய்யவும் முடிந்தது இல்லை. அச்சமூகத்தில் திருட்டு இல்லை; ஏமாற்று வித்தை இல்லை. மக்களுக்குள் இடையே ஏதாவது பிணக்குகள் தோன்றினால், அவை மூத்தவர்களின் தலையீட்டில், அவர்களுடைய கண்டிப்பில் தீர்த்து வைக்கப்பட்டன. அங்கு அரசன் இல்லை. காவல் துறை இல்லை. அரசு என்ற அமைப்பின் எந்த ஒரு அங்கமும் அங்கு இல்லை.

அச்சமூகத்தினால், தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவையான அளவிற்கு மட்டுமே பொருட்களை ஈட்ட முடிந்தது.

அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தினாலும் முயற்சியினாலும், வேட்டைக் கருவிகளைச் செம்மைப் படுத்தினர். விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்வதைக் கண்டு விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்களின் உற்பத்தித் திறன் வளர்ந்த போது அவர்களால் தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவைப்படும் பொருட்களை விட அதிமான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்தனர். உற்பத்திக் கருவிகள் மேலும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு வளர்ச்சியடைந்தநிலையில், மனிதனால், முதன்முறையாக, உபரியாக, அதாவது தனக்கு அத்தியாவசியமானதற்கும் மேலாக, உற்பத்தி செய்ய முடியுமாயிற்று. இவ்வாறு சுரண்டலுக்கான அடிப்படை வந்து சேர்ந்தது.   

2.ஆதிபொதுவுடைமைச் சமுதாய வீழ்ச்சியும் அடிமை சமூக பிறப்பும்

போரி சிறைப்பிடிக்கப்பட்டோர் கொல்லப்பட வில்லை, மாறாக வென்றவர்கட்காக வேலை செய்வதற்காக அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர். இவ்வாறு அடுத்த சமுதாய வடிவம், அதாவது அடிமைச்சமுதாயம் எழுந்தது. அடிமைகளுக்குச் சொந்தமானவர்களுக்கும் அடிமைகட்கும் மோதல் நிகழ்ந்தது. ஜூலியஸ் சீசர் எவ்வாறு இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினார் என்றும் வெற்றியுடனும் சங்கிலியால் தன் தேர்ச்சில்லுக்குப் பிணைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றிய அடிமைகளுடன் ரோமாபுரிக்கு மீண்டாரென்றும் முதலாளித்துவ வராலாற்று பக்கங்களில் வாசித்திருப்பீர்கள்.

எனினும், உற்பத்தி உபகரணங்கள் தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வந்தன. இவ்வாறான வளர்ச்சி நிலையில் அடிமைகள் தொடர்ந்தும் பொருத்தமானவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் எசமான் தனது இஷ்டப்படி விற்கவோ சுடவோ முடியுமானபடி எசமானின் தனிச் சொத்தாக இருந்த அடிமைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்வதற்கான தூண்டுதல் எதுவும் இருக்கவில்லை. அவனது உற்பத்திக்கும் அவனுடைய ஊதியத்திற்கும் எதுவிதமான உறவும் இருக்கவில்லை.

இவ்வாறு உற்பத்தியில் மனிதரிடையிலான புதியதொரு உறவுக்கான தேவை - மேலும் அதிக உற்பத்தி செய்யுமாறு தூண்டுதலுடைய மனிதருக்கான தேவை - எழுந்தது. ஸ்பாட்டகஸ் தலைமை தாங்கியது போன்ற அடிமைகளின் கிளர்ச்சிகள் இந்தப் போக்கைத் துரிதப்படுத்தின. அடிமையின் இடத்திற்கு வந்த பண்ணையாள் நிலத்திற்குப் பிணைக்கப்பட்டு நிலவுடைமைக் காரனின் நிலத்தில் குறிப்பிட்ட நாட்களிலும் தேவையான போதும் பணியாற்றுமாறான கட்டாயத்துக்குப் பட்டிருந்தார். எவ்வாறாயினும் அவருக்குத் தனது உற்பத்தியின் பயனை அனுபவிக்கும் படியாக ஒரு சிறிது நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

3.அடிமைச் சமுதாய வீழ்ச்சியும் நிலபிரபுதுவத்தின் பிறப்பும்

இத்தாலி அடிமைச் சகாப்தத்தின் கேந்திரமாக விளங்கிற்று. கணக்கற்ற அடிமைகளை வைத்திருந்த ரோமஎஜமானர்கள் பெருமளவில் விவ சாயம் செய்து கொள்ளைலாபம் சம்பாதித்தனர். அன்று அடிமைகளின் முதுகெலும்பின் மீது செல்வம் எனும் மாளிகை கட்டப்பட்டது. உண்மையில்அடிமைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தனர் ரோம எஜமானர்கள்.

உரிமைகளும் உற்பத்திக் கருவிகளும் இல்லாத அடிமைகள் அவமதிக்கப்பட்டனர். செக்குமாடுபோல் உழைக்கும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். துன்பம் நிறைந்த வாழ்க்கை அவர்களின் ஜீவசக்தியை உறிஞ்சியது. வாழ்க்கை எனும் சுமையை சுமக்க முடியாமல் அவர்கள் துன்பக் கண்ணீர் வடித்தனர். கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் தப்பி ஓட முயன்றனர். எனவே இரவில் அவர்களுக்கு எஜமானர்கள் விலங்கிட்டினர். குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அடிமைகள் கல்யாணம் செய்யக்கூடாது எனும் நியதி அமுலில் இருந்தது. கல்வி கற்கவும் அடிமைகள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அறிவு அடிமைகளின் அறிவுக் கண்களைத் திறக்கும் ன்பது எஜமானர்களுக்குத் தெரியும். அடிமைகள் மீது எஜமானர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினர். அடிமைகளை அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். அடிமைகளை அவர்கள் சித்திரவதை செய்யலாம்; உருக்குலைக்கலாம்; கொலை செய்யலாம். பல நாட்கள் பட்டினிபோடப்பட்ட சிங்கத்துடன் எந்த விதமான ஆயுதமுமின்றி போர் புரியும்படி அடிமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இதுபெரிய வேடிக்கையாக மதிக்கப்பட்டது, எஜமானர்களின் இன்பத்துக்காக, அவர்களின் நன்மைக்காக அடிமைகள் தங்குதடையின்றிப் பலியிடப்பட்டனர். எஜமானர்கள் கிழிக்கும் கோட்டைக் கடந்து செல்லத் துணியும் அடிமையின் கதி அதோ கதிதான். அவன் எஜமானுக்கு ஏதும் தீங்கு செய்தால் அவன் மாத்திரமல்ல, அவனைச் சேர்ந்தவர்கள் கூட நிர்மூலம் செய்யப்படுவார்கள். அடிமைச் சகாப்தத்தில் இந்த நிலைமை எங்கும் குடிகொண்டிருந்தது.

முதுகெலும்பு முறிய வெயிலிலும் மழையிலும் வேலை செய்த அடிமைகளுக்குக்கிடைத்த ஊதியம் சவுக்கடி. கடுமையான உழைப்பால் தளர்ந்த அடிமைகள் உழைக்கும் சக்தியை இழந்தனர். வேலை செய்யும்படி அவர்களைத் தூண்டுவதற்காக கங்காணிகள் இடைவிடாது அடித்தனர். இவ்வாறான துன்பத்தைச் சகிக்க முடியாமல் அடிமைகள் ஈசலப்போல மடிந்தனர். காலப்போக்கில் அடிமைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. யுத்தக்கைதிகளை அடிமைகளாக மாற்றும் முறையும் அன்று அமுலில் இருக்கவில்லை, சகிக்க முடியாத வறுமையும், பொருளாதார பேதமும் அடிமை முறைக்கு உலைவைத்தன. துன்பத்தால் விறைத்த அடிமைகளின் இதயத்தில் துணிச்சல் பிறந்தது, அவர்கள் கொடுமையை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.

அடிமைமுறை, வளர்ந்து வரும் விவசாய முறைக்குக் குறுக்கே நின்றது. உற்சாகமின்றி அடிமைகள் உழைத்ததால் விவசாயம் தடைப்பட்டது. எஜமானர்களின் வருவாய் குறைந்தது. அடிமைகளைக் கொண்டு விவசாயம் செய்வது இலாபத்தைத்தராது என்று அவர்கள் உணர்ந்தனர். அடிமை உழைப்பால் சமூகத்தின் உழைப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியும் தேவையும் முட்டி மோதின. பழைய முறைக்கு விடை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிலத்தை வைத்திருந்த எஜமானர்கள் தமது நிலங்களைத் துண்டுபடுத்தி, அந்தத் துண்டுநிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைத்தனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தனர்.

வர்த்தகம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் நகரங்கள் தோன்றின. நகரத்தில் வாழ்ந்த வர்த்தகர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினர். வர்த்தகம் தலை தூக்கியதும் சாமான்களின் தேவை அதிகரித்தது. தலை தெறிக்கும் வேகத்தில் வர்த்தகம் விருத்தியடைந்தது. ஆயினும் ஒர் எல்லைக்கு உட்பட்ட அடிமைகளின் உழைப்பு உற்பத்திசெய்த பண்டங்கள் வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே வர்த்தகம் தேங்கி நின்றது. அதே சமயத்தில் வர்த்தகர்களிடமும், வட்டித் தொழில் செய்வோரிடமும் செல்வம் மலைபோல் குவிந்துகிடந்தது. வர்த்தகம் தேங்கி நின்றதைத் தொடர்ந்து நகரவாசிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடினர். வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் மக்களைச் சித்திரவதை செய்தன. வளர்ந்துவரும் சமூகத் தேவையும் பழைய உற்பத்திமுறையும் முட்டிமோதின. பழைய சமூகமுறை சாகவேண்டும் என்று சரித்திரம் தீர்ப்புச் சொல்லியது. அது செத்தது.

ஐந்தாம் நூற்றாண்டில் அடிமை சகாப்தம் மரணநிலையை அடைந்தது. அடிமைமுறையை அடித்தளமாகக் கொண்டிருந்த ரோமசாம்ராஜ்யம் தளர்ந்தது. இதனைத்தொடர்ந்து அதன் அரசியல் அமைப்பும் நிலைகுலைந்தது. இராணுவ ஆட்சி எங்கும் தலைதூக்கியது. அந்தக்காலத்தில் அடிமை முறையை எதிர்த்து அடிமைகளும் வளர்ந்துவரும் வர்த்தகர்களோடு போர்புரிந்தனர். அத்துடன் ஜெர்மனியர் ரோமசாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்தனர், முன்னரே தளர்ந்திருந்த ரோம சாம்ராஜ்யம் இடிந்துநொருங்கியது. அத்துடன் அடிமைசகாப்தமும் செத்தது. மனித சமூகம் நிலபிரபுத்துவ சகாப்தத்தைக் கொட்டுமேளத்துடன் வரவேற்றது.

4. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 

ஏகாதிபத்திய விரிவுரைக்குரிய வகையில் கைத்தொழில் முதலாளித்துவ நாடுகளிலும் நகரங்கள் விரிவடைந்து வளர்ச்சி பெற்றன. காலனித்துவ நாடுகளிலிருந்து பெருமளவு உழைப்பு தலைநகர நாடுகளில் குவிந்து கொண்டிருந்தது. இதனால் மூலதனத்தின் உலகபரிமாணம் மேலும் மேலும் விருத்தியடைந்தது. இதன் விளைவாக ஏகாதிபத்திய நாடுகளின் இயந்திர தொழில் நுட்பமும், பணித்துறையாட்சி நுட்ப மும் துரிதமாக விருத்தியடைந்தன. இதனல் தலைநகர நாடுகளுக்கும் துணைக்கோள் நாடுகளுக்குமிடையே தொழில் நுட்ப இடைவெளி மேலும் மேலும் அதிகரித்தது. தலைநகர நாடுகளில் ஏற்பட்ட விரை ந்த தொழிநுட்ப விருத்தியானது அந்நாடுகளின் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கும். அதன் விளைவாக தொடர்ச்சியான கூலிமட்ட அதிகரிப்புக்கும் வழிவகுத்தது. இதேவேளை அத்தொழிலா ளர்களின் மிகை உழைப்பு விகிதமும் அதிகரித்தது. இத்தொழிற்பாடா னது தலைநகர துணைக்கோள் நாடுகளின் தொழிலாள வர்க்கத்திடையே யான வருமான இடைவெளியினை (பணிரீதியிலும் மெய்ரீதியிலும்) பாரிய அளவில் அதிகரிக்கச் செய்தது.

தொழிலாள வர்க்கத்தின் கூலிமட்டம் பணித்துறையாட்சியின் படி நிலைக்கேற்ப பெருமளவு வேறுபட்டது. இதனுல் தொழிலடிப்படையி லான சமூக உறவுகளும், தொழிலாள வர்க்கப் பிரிவினைகளும் வளர்ச்சி யடைந்தன. ஏகாதிபத்தியம் தொழிலாள வர்க்கத்தின் உணர்வின் மீதும் சமூக உறவிலும் கூடுதலான அக்கறை கொண்ட ஓர் அமைப் பாகும். தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்திக் கையாழ்தல் என் பதில் மேலும் மேலும் சிறப்புத் தேர்ச்சியடைகின்றது. இந்நிலைமை கள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் திரிபுவாதங்கட்கு உட்படுவதற்கும பாட்டாளி வர்க்கப் புரட்சிச் சூழ்நிலைகள் பிற்போடப்படுவது நிலைமைகளை வளர்த்தன. முதலாளித்துவமானது ஏகாதிபத்திய நிலைக்கு உயர்ந்ததன் மூலம் தன் நோக்கத்தைத் தற்காலிகமாக நிறைவேற்றிக் கொணடது.

ஏகாதிபத்திய பொருளாதார செயன்முறை மிகத் துரிதமானதாகச் செயற்பட்டது. ஆனல் அதேவேகம் அதனைக் குறுகிய காலத்தில் 1930களில் ஏகாதிபத்தியம் நெருக்கடியாகச் சந்திக்கும் நிலையைத் தோற்றுவித்தது. இலாபவீதம் இழிவுநிலை மட்டத்தை அடைந்தது. மிகப் பாரிய அளவு வேலையின்மை ஏற்பட்டது. உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் தேக்கமடைந்தன. இந் நிலைமைகள் இதுகாலவரை முதலாளித்துவம் கொண்டிருந்த தலையிடாக் கொள்கை என்பதனை முடிவுக்குக் கொண்டு வந்தது, இதன் விளைவு அரச முதலாளித்துவத்தைத் தோற்றுவித்தது. கெயின்சியவாதம் ஏகாதிபத்திய நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்வதற்கு எப்போதும் உதவக் கூடிய மருந்தாக-புரட்சிக் கருத்தாகக் கூறப்பட்டது. எனினும் நெருக்கடியானது தவிர்க்க முடியாதபடி இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தோற்றுவித்தது.

ஏகாதிபத்தியவாதிகள் புதிய சந்தைகளைப் பிடிப்பதிலும், தமது சந்தையைக் காப்பாற்றுவதிலும் ஈடுபட்டிருந்த உலக யுத்த வேளையில் சீனாவையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சக்திகளிடமிருந்து பறித்தெடுத்துக் கொண்டது. காலனித்துவ நாடுகள் பலவற்றின் தேசியவாதிகள் தமது அரசியற் சுதந் திரத்தைப் பறித்தெடுத்துக் கொண்டனர். இரண்டாம் உலக மகாயுத்த களத்தைத் தனது சந்தையாகப் பயன்படுத்திக் கொண்டே அமெரிக்கா, இராணுவ பொருளாதார பலத்தில் முதன்மை ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொண்டது. யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்களிற்குத் தலைமைத்துவம் வகிக்கத் தொடங்கியதுடன் ஏகாதிபத்தியத்தை நவீன வடிவில் செயற்படுத்தத் தொடங்கியது.

5.இன்றைய ஏகாதிபத்தியம்

இரண்டாம் உலகமகா யுத்தத்தைத் தொடர்ந்து உலகம் மூன்று மண்டலங்களாக இயங்கத் தொடங்கியது. நவீன ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றுடனான சுரண்டல் உறவை நவகாலனித்துவ வடிவத்துக்கு மாற்றியது. இவ்வடிவிலான உறவை அமெரிக்கா உலகின் பல நாடுகளோடு-குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளோடு முன்னரேயே கொண்டிருந்த மூன்றாம் உலக நாடுகளின் தேசியவாதிகளைப் பொறுத்த வரையிலும் அவர்கள் நவகாலனித்துவத்திற்குப் பலியாகும் பொருட்டுத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் தவிர்க்க முடியாததாயிற்று. இந்நவகாலனித்துவ சுரண்டல் உறவை நடைமுறைப் படுத்துவதற்குரிய சர்வதேச பொருளாதார உற்பத்தி நிறுவனங்கள் பல்தேசியக் கம்பனிகளின் வடிவில் செயற்படத் (CIAயும்) தொடங்கின நவீன ஏகாதிபத்தியத்துக்கு அவசியமான சர்வதேச நிதி நிறுவனங்கள் உருவாகின. ஆயினும் 1950 களின் பிற்பகுதியில் ஏகாதிபத்தியமானது சர்வதேச வர்த்தக நெருக்கடிகளைச் சந்தித்தது. இவ்வேளை கியூபாவில் புரட்சி வெற்றி பெற்றது. 1970 களின் நடுப்பகுதியில் ஏகாதிபத்தியம் நாணய நெருக்கடிக்குள்ளாகியது. இவ்வேளை வியட்னாமையும் அங்கோலாவையும் தொழிலாளர்கள்  வென்றெடுத்துக் கொண்டனர்.

 

மான்செஸ்டர் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொருளியல் மைப்புதுறை பேராசிரியர் உலக முதலாளித்துவத்தின் ன்றைய நிலை பற்றிப் பின்வருமாறு கூறினார்.

பிரித்தானியாவின் கைத்தொழில் உற்பத்தி 10 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையைவிடக் கீழ் நிலையில் இருக்கின்றது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1979 ல் நின்று விட்டது. மேற்கு ஜேர்மனிப் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக வளர்ச்சியடைய வில்லை. ப்பானிய கைத்தொழில் உற்பத்தி கடந்த ஒரு வருடமாகத் தேக்கமடைந்துள்ளது.(பொருளாதார மந்தநிலையை குறிப்பிடுகிறார்). 

1979ல் அமெரிக்க பொம்மை மன்னன் ஷாவுக்கு எதிரான ஈரானிய மக்கள் புரட்சி, 1980 ல் வெற்றிகரமான நிகாரகுவாப் புரட்சி, அந்த மூன்று ஆண்டுகளாக ஏகாதிபத்திபத்துக்கு எதிராக மத்திய அமெரிக்கா முழுவதும் புரட்சிக் கொந்தளிப்பு, முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் இலாப விகிதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றமை, பணவீக்கமும் வேலையின்மையும் உற்பத்திப் பொருட் தேக்கமும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றமை என்பன காணப்படுகின்றன. .எம்.எப், .பி.ஆர்.டி. போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள், செயலிழந்து நிற்கின்றன. அவற்றின் சீர்திருத்தங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. யு.என்.-ம் அதன் உறுப்புகளும் தமது இயலாநிலையை ஒத்துக் கொண்டுவிட்டன. ன்நாட்டுக் கம்பெனி முதலாளிகள் எந்த நாட்டிலும் நம்பிக்கையில்லாமல் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அடிக்கடி தாவிக் கொண்டிருக்கின்றனர். (இப்பகுதி 1985 ல் வெளியான பத்திரிக்கையை அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது, கட்டுரையின் ஆதாரத்தில் எழுதப் பட்டவை மூலம் குமரன் கொழும்பு).

இன்றைய உலகின் இந்நிலைமைகள் வெறுமனே உலகின் தனித்தனியான தோற்றுவாய்கள் அல்ல. இவையனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஏகாதிபத்தியவாதிகள் மேற்கண்ட நோய்களைத் தீர்ப்பதற்குத் தனித்தனியாகவும் மொத்தமாகவும் மீண்டும் மீண்டும் வெவ்வேறுபட்ட வைத்தியங்களைச் செய்து பார்த்துக் கொண்டிருக் கின்றன. அவை எதுவும் ஏகாதிபத்தியத்தின் நோய்கள் எதனையும் தீர்த்துவிடுவதற்கான அறிகுறி எதனையும் காட்ட வில்லை. நோய்களை மேலும் மேலும் பரப்பிக் கொண்டும் விரிவாக்கிக் கொண்டும் உள்ளன.

இவ்விசயங்கள் அனைத்தையும் வரலாற்று ரீதியில் உற்று நோக்கும் போது தற்போதைய ஏகாதிபத்தியம் மேலும் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரப்போவதையும் தொழிலாள வர்க்கம் பல நாடுகளில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்துக்குச் சாவுமணி அடிக்கப்போவதையும் இவை கட்டியம் கூறி நிற்கின்றன எனலாம்.

 

20 ம் நூற்றாண்டின் முடிவில் முதலாளித்துவ வளர்ச்சியின் நவீன போக்கின் உண்மை நிலையை இன்று காண்கிறோம். (தொழில்களில் முதலீடுசெய்யும் வாய்ப்புகள் உலககெங்கும் குறைவாக உள்ளது என்பது ப்பானிய நிபுணரின் கூற்று) உலக நிதி அமைப்பு பலூன் போல வீங்குவது போல உள்நாட்டிலும் நடைபெறுகிறது. முதலளித்துவ வர்க்கத்தின் ஊகாப் பொருளாதார, அரசியல் ஆதிக்கம் ஏற்றமடைகிறது. உண்மைநிலை உற்பத்திமுறை தேக்கமடைகிறது. வேலையின் மையும் அதன் சமூகத் தாக்மும் - முதலாளிததுவ நாகரிகத்தின் ஆத்மீகமற்ற குழப்பம், சிறப்பான எதிர்கால நம்பிக்கை தன்னம்பிக்கை இன்மையும் - எதிர்கால சமுதாயத்துக்கு பாதுகாப்பும் பூரண திருப்தியும் தரத்தக்க கண்ணோட்டமின்மை, மனிதப் பண்பின்மையும் முதலாளித்துவ தரிசனமாகும்.

இப் பின்னணியில் முதலாளித்துவம் அண்மை நிலை போலவே நீண்டகாலம் நிலைப்பதற்கு வாய்ப்பில்லை. அதன் அமைப்புள்ளேயே அதை அழிக்கும் சக்திகள் செயலாற்றுகின்றன. 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் யில் பாதை,தொழிற்ப் புரட்சி போன் பெரிய முதலீட்டுக்குரிய முன்னணி அமைப்புக்கள் ஏற்படுத்தி நிலைமையை மாற்றும் வாய்ப் புக்களையும் இன்று காண முடியவில்லை.

சில சமகாலத்து விஞ்ஞான - தொழில் நுட்பப் புரட்சியில் நம்பிக்கை வைத்துள்ளனர். இது யதார்த்த நிலையை துரிதப்படுத்தலாம். ஆனால் இயற்கை, உயிரியல் விஞ்ஞானத்தில் புதுமை படைப்பதற்கு அதிக மூலதனம் தேவைப்படாதது மட்டுமல்ல எதிர்விளைவும் ஏற்படக்கூடும்; புதிய தொழில்நுட்பம் தொழிலாளர் உழைப்பையும் வேதனைகளையும் குறைத்துவிடாது.

முதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்க டியும் தொடர்ந்து ஏற்படப் போவதையும் பார்த்து அது வீழ்ச்சியடைந்து ஒழிந்து விடும் என்று எண்ணக் கூடாது. நெருக்கடி ஏற்படும் சமூக அமைப்புகளுக்கு அவ்வாறு ஏற்பட்டுவிடுவதில்லை. அது தொங்கிக் கொண்டு சிலவேளை நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம்; மாற்றாக புரட்சி  போன்ற புற சக்திகள் வீழ்த்தி அவ்விடத்தில் புதிய அமைப்பை ஏற்படுத்தும் வரை நீடிக்கலாம். இவ் வாறே முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டலாம்; வாய்ப்பானதும் இதுவே. ஆனால் அண்மையில் அது புத்துயிர் பெறும் வாய்ப்பில்லை. முடிவற்ற நெருக்கடியும் அது நிலைபெறும் முயற்சியும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இனி சோஷலிசத்தின் நீண்டகால வாய்ப்பை பார்ப்டோம்.

வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படி சில நூற்றாண்டுகள் நீண்ட காலமல்ல. சோஷலிசம் தோன்றி குறுகிய காலமே ஆனது. ஈடாட் டத்துடன் அது தோன்றிய போது எனக்கு ஏழு வயதே. ஒழுங்கான மனித சமுதாய அமைப்பிற்கு சோஷலிசமே வழிகாட்டும் என்ற அடிப்படைக் கருத்தில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இக்கட் டான வாய்ப்பற்ற சூழலில் சோஷலிசத்தைக் கட்டுவதில் தோல்வி ஏற்படுவதையிட்டு நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடப் போவதில்லை.

20-ம் நூற்றாண்டு முடிவடையும் இக்கால கட்டத்தில் வழமையான வரலாற்றுப் போக்கில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நாலேநூற்றாண்டின் முதலாளித்துவம் உலகத்தை முந்தைய ஆயிரமாண்டு கால வரலாற்று  காலத்திலும் காட்டிலும் வேகமாக மாற்றியமைத்துள்ளது: மனித சமூகத்தை பூமியோடும் பிற வாழ் விலங்கினங்களோடும் ஒப்பிடும் போது அளவற்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. உலக் மக்கள் தொகையாகட்டும் தனிநபர் பயன்படுத்தும் வளமும் வியப்புறும் வகையில் அதிகரித்துள்ளது அதே வேகத்தோடு ஆயிரமாண்டு இயற்கைச் சுழலையும் சீர் செய்ய முடியாத அளவில் மோசமடைந்து வருகிறது. முதலாளித்துவ அமைப்பிலேயே இப்போக்கு வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு தசாப்தத்திலும், நிலைமை மேலும் மோசமடையும் போக்கையே காண்கிறோம்.

சமுதாயத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றமும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் வரையறுக்கப்பட்டும் அம்மாற்றங்களைத் தொடர்ந்துமே நிகழ்ந்துள்ளன என நாம் காணலாம். எனவே சமூகத்தின் வரலாறு என்பது பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர்களது வரலாறேயாகும்.

இவ்விடத்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டியவொரு அம்சம் ஏதெனின் உற்பத்தி உபகரணங்களின் வளர்ச்சியும் அதன் விளைவாக மனிதரது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றமும் பழைய சமுதாயத்தினுள்ளே நிகழ்வது மட்டுமன்றி மனிதனது விருப்பு வெறுப்புக்கட்கு அப்பாற்பட்டே நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, தீயையோ இரும்பினது பயனையோ விலங்கினங்களை வசப்படுத்துவதையோ மனிதன் முதன் முதலாகக் கண்டறிந்தபோது, அவற்றையடுத்துச் சமுதாயத்தில் எவ்விதமான மாற்றங்கள் நிகழும் என்பதை உணராதவனாயே இருந்தான். ஆயினும், அதே சமயம் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் வேகத்தை யொட்டி மனிதரின் உற்பத்தி உறவுகள் மாறாதபோது, மாற்றத்தைத் துரிதப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் புதிய சிந்தனைகளும் புதிய கொள்கைகளும் உருவாகின்றன.

 

அரசியற் பொருளாதாரத்தின் விமர்சனம்எனும் தனது நூலுக்கான வரலாற்று முக்கியம் வாய்ந்த முன்னுரையில், மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் சாராம்சத்திற்கான விளக்கத்தைத் தருகிறார்;

தமது வாழ்நாளின் சமூக உற்பத்தியின் போது, இன்றியமையாததும் தமது விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டதுமான திட்டவட்டமான உறவுகட்குள் மனிதர் புகுகின்றனர். இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருள்சார்ந்த உற்பத்திச் சக்திகளின் திட்டவட்டமான ஒரு கட்டத்திறகுப் பொருந்துவன. சட்டமும் அரசியலும் சார்ந்த மேற்கட்டுமானத்தின் எழுச்சிக்கான அத்திவாரமும் சமூக உணர்வு நிலையின் குறிப்பான வடிவங்கட்குப் பொருந்துவதுமான பொருளியல் ஸ்திவாரமுமாக அமைவது இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே. பொருள் சார்ந்த வாழ்வின் உற்பத்தி முறைகளே வாழ்வின் சமூக, அரசியல், ஆய்வறிவு சார்ந்த இயக்கப்பாடுகளைப் பொதுப்படத் தீர்மானிக்கிறது.   

உற்பத்திச் சக்திகள், தமது வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், அதுவரை தாம் எந்த நடைமுறையிலுள்ள உற்பத்தி உறவுகளுக்கு உட்பட்டு இயங்கினவோ, அந்த உறவுகளுடன், சட்ட முறையிலான ஒரு பதத்தைப் பயன்படுத்துவதாயின், சொத்துடைமை உறவுகளுடன், மோதுகின்றன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் வடிவங்கள் என்ற நிலையிலிருந்து இந்த உறவுகள் அவற்றின் தளைகளாக மாறுகின்றன. இதன் பின் சமூகப் புரட்சிக்கான ஒரு யுகம் தொடங்குகிறது. பொருளாதார ஸ்திவாரத்தின் மாற்றத்துடன் ஏறத்தாழ பிரமாண்டமான மேற்கட்டுமானம் முழுவதுமே துரிதமான மாற்றத்துக்குள்ளாகிறது. இத்ததைய மாற்றமொன்றைக் கணிப்பிற்கொள்ளும் போது, இயற்கை விஞ்ஞானத்தின் துல்லியத்துடன் நிர்ணயிக்கக் கூடியதான உற்பத்தியின் பொருளியில் நிலைமைகளில் ஏற்படும் பொருள் சார்ந்த மாற்றத்திற்கும் சட்டம், அரசியல், மதம், அழகியல், மெய்யியல் - சுருங்கக் கூறின் இம் மோதல் பற்றி மனிதரை உணர்வுடையோருக்கும் கோட்பாடுகள் சார்ந்த மாற்றத்திற்கும் இடையே எப்போதும் தெளிவாக வேறுபடுத்த வேண்டும். எவ்வாறு எவர்பற்றியுமான நமது கருத்து அவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கிற எண்ணத்தின் அடிப்படை யிலமைவதில்லையோ, அவ்வாறே, மாற்றம் நிகழும் ஒரு காலத்தை அக்காலத்தில் அதற்குரியதாயிருக்கும் உணர்வுநிலையை வைத்து மதிப்பிட முடியாது. மாறாக, இந்த உணர்வுநிலை, பொருள்சார்ந்த வாழ்க்கையின் முரண்பாடுளினின்றும், இயங்கிக்கொண்டிருந்த சமூக உற்பத்திச் சக்திகட்கும் உற்பத்தி உறவுகட்குமிடையிலான முரண்பாடுகளினின்றுமே விளக்கப்பட முடியும். எந்தச் சமுதாய ஒழுங்கும், அதற்குள் விருத்திபெற இடமுள்ள சகல உற்பத்திச் சக்திகளும் விருத்திபெறும்வரை இல்லா தொழிவதில்லை; புதிய உற்பத்தி உறவுகளின் இருப்புக்கு அவசியமா?

எனவே மனித இனம் தன்னாற் செய்யக் கூடிய பணிகளையே தனக்கு விதிக்கிறது. ஏனெனில், இவ்விடயத்தைக் கூர்ந்து நோக்குவோமாயின், எப்போதும் ஒரு பணியை நிறைவேற்றுதற்கு அவசியமான நிலைமைகள் ஏற்கெனவே உள்ளபோது அல்லது உருவாகிவருகின்றபோதே அப்பணியும் தோற்றம் பெறுகிறது என நாம் காணலாம்.

எனவே வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிப்பது ஏதெனின், பிற நிகழ்வுகளோ நிறுவனங்களோ பொருளின் பிற வடிவங்களோ போன்று, சமுதாயமும் என்றுமே நிலையாய் நிற்பதில்லை. பிற அனைத்தும் போன்று அதுவும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உட்படுகிறது. எனவே சுரண்டலையும் செல்வர்களும் ஏழைகளும் இருப்பதையும் கொண்ட சமுதாயங்கள் நிலைபேறுடையனவோ, என்றும் நிலைப்பனவோ மாறாதனவோ அல்ல. அவை எல்லாக் காலத்திலும் இருந்தனவுமல்ல.

சமூக உறவுகளில் ஏற்படும் இம்மாற்றங்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்களாலேயே, அதினும் முதலாகவும் முக்கியமாகவும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வளர்ச்சிளாலுமே நிகழுகின்றன என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நமக்குக் கற்பிக்கிறது. பொருளியல் ஸ்திவாரம் மாறியதும், இம்மாற்றங்களைப் பொறுத்தும் அவற்றுக்கு அமையவும், அரசியல், சமூக, சட்ட, சமய, அழகியல், மெய்யியல், வடிவங்களை, வேறு வகையிற் கூறின் கோட்பாட்டு வடிவங்களைக் கொண்ட பிரமாண்டமான மேற்கட்டுமானம் துரிதமாக மாற்றமடைகிறது என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மேலும் கற்பிக்கின்றது.

இச்சமூக மாற்றங்கள் சமுதாயத்தின் உள்இயல்பான முரண்பாடுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன எனவும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கற்பிக்கிறது. தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் தொடக்கக் கூற்றில் மார்க்சும் ஏங்கல்சும் இதை அற்புதமான முறையில் உரைத்துள்ளனர்: “இற்றைவரை வரலாற்றில் இருந்து வந்த சமுதாயம் அனைத்தினதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே. சுதந்திர மனிதன் - அடிமை, உயர்குடியினன் - சாதாரண மனிதன், பிரபு - பண்ணையாள், தொழில் எசமான் - கூலியாள் ஒரே வார்த்தையில் ஒடுக்குவோன் - ஒடுக்கப்படுவோன், ஒருவருக்கு மாறாக மற்றவர் எப்போதுமே நின்று, சில சமயம் மறைவாக, சில சமயம் வெளிப்படையான சண்டையாக, ஒவ்வொரு முறையும் முழுச் சமுதாயத்தினதும் புரட்சிகர புனர்நிர்மாணத்துக்கோ மோதும் வர்க்கங்களின் பொதுவான சிதைவுக்கோ இட்டுச்சென்ற ஒரு சண்டையை நடத்தி வந்துள்ளனர்.”

எனவே, சமுதாயத்தின் வளர்ச்சியின் வரலாற்றின் தோற்றுவாய்கள் பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர்களது வரலாற்றில், உற்பத்திச் செயல்முறையின் பிரதான சக்திகளான உழைக்கும் வெகுசனங்களின் வரலாற்றிலேயே காணப்பட வேண்டும்தொடரும்……..

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்