பூர்ஷ்வா ஜனநாயகமும் சோஷலிச ஜனநாயகமும்-புரிந்துக் கொள்ள. பூர்ஷ்வா சமூக பொருளாதார அமைப்பில் வாய்ப்பாக வாழும் சிறுபான்மையினர் மட்டும் பெறும் ஜனநாயக உரிமையே பூர்ஷ்வா ஜனநாயகமாகும். பரந்துபட்ட பெரும்பான்மை மக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகி சமத்துவமற்று வாழும் நிலை. சோஷலிசத்தில் கிட்டும் ஜனநாயகம் பரந்துபட்ட மக்கள் பெறும் ஜனநாயக உரிமை யாகும். அங்கு சமத்துவமும் சமநீதியும் அனைவருக்கும் கிட்ட வழி வகுக்கப்படும்.
லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் இவ்வுண்மையை பின்வருமாறு_விளக்குவார்:முதலாளித்துவ சமுதாயத்தில் கிட்டும் ஜனநாயகம் கட்டுப் படுத்தப்பட்ட, கொடுமையான, பொய்மையான, ஜனநாயகமாகும், சிறுபான்மையினரான பணக்காரருக்கே ஜனநாயகம், கம்யூனிசத்திற்கு செல்லும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாட்டாளியின் சர்வாதிகாரம் முதல் தடவையாக , பெரும் பான்மையான மக்களுக்கு ஜனநாயகம் கிட்டும் அவ்வேளை, சுரண்டும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர் (இதையே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பர்) . கம்யூனிசம் மட்டுமே முழுமையான ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியும்; முழுமையாக அனைவர்க்கும் ஜனநாயகம் கிட்டியதும் எவ்வித (பாட்டாளி சர்வதிகாரம்) அடக்குமுறைகள் தேவையற்று தானே உலர்ந்துவிடும் (ஏனெனில் வர்க்க சமூகம் மறைந்திருக்கும்).
லெனின் மேலும் பின்வருமாறு விளக்கிக் கூறினார்:வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் முதலாளித்துவத்தில் 'அரசு" அதன் முழு அர்த்தத்திலும் நிலவுகிறது. ஒருவர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்க உள்ள விசேடயந்திரம் உள்ளது; சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கும் அரசுயந்திரம். இயல்பாகவே பெரும்பான்மையினரைச் சுரண்டும் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்குவதற்கு வேண்டிய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டி முறைகள் தேவைப்படுகின்றன. அடிமை, கொத்தடிமை, கூலிஅடிமை நிலைகளை நிலைநாட்ட இரத்த ஆறுதேவைப்படுகிறது.மேலும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலகட்டத்திலும் ஒடுக்குமுறை தேவைப்படுகிறது; ஆனால் இத்தடவை சுரண்டப்பட்ட பெரும்பான்மையினர் சுரண்டிய சிறுபான்மையினர் மேல் காட்டும் அடக்குமுறையாகும்.'அரசு’ என்று கூறும் அடக்குமுறை என்ற விசேட யந்திரம் இன்னும் தேவைப்படுகிறது. இது இடைப்பட்ட கால அரசு. முதலாளித்துவத்தில் அமையும் 'அரசு” யந்திரமல்ல. சுரண்டும் சிறுபான்மையினரை அடக்குவதற்கு, பெரும்பான்மையான கூலி அடிமையாக இருந்தவர்கள் அடக்குமுறையை கையாள்வது முந்திய நிலை யோடு ஒப்பிடும்போது எளிமையானதே. எழுச்சியுற்ற அடிமைகளையும் கொத்தடிமைகளையும் கூலி அடிமைகளையும் அடக்கி ஒடுக்குவதற்கு கொட்டப்பட்ட இரத்தத்திலும் மிகக் குறைவானதாகவே இது இருக்கும். அதற்கு இணைவாக குடித் தொகையில் பெரும் பான்மையானவர்கட்கு ஜனநாயகம் விரிவாக்கப்படுவதோடு ஒடுக்கு முறையான 'அரசு” யந்திரமும் காலப்போக்கில் மறைத்து போவதற்கும் வழிவகுக்கும்.ஜனநாயகம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கவே முடியாது ஏனென்றால் நாம் வாழும் வர்க்க சமூகத்தில் உள்ள வர்க்கத்தின் நலனிலிருந்தே எல்லாம் தீர்மானிக்கப் படும் பொழுது, பொதுவாக ஜனநாயகம் பற்றி பேசுவது எந்த வர்க்கத்திற்கானது என்று அவசியம் ஒரு மார்சியவாதி அறிந்திருப்பான்.
வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் தூய ஜனநாயகம் பற்றி பேச முடியாது. வர்க்க ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும்.
தூய ஜனநாயகம் என்பது உழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் மிதவாதிகள் பயன்படுத்தும் ஒரு பொய்யான தொடராகும்.மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும், அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியாயும் மோசடியாகவும் நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாகும்.
உண்மையில் அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு ஏதுமல்ல இது முடியரசில் போலவே சற்றும் குறையாத அளவில் ஜனநாயகக் குடியரசிலும் கண்கூடு.(மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு போர் என்ற நூலுக்கு எங்கெல்ஸ் முகவுரையில்).
நவீன அரசுகளின் அடிப்படையில் நியதிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றின் ஆட்சி நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கூட்டம் சேரும் சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம், சட்டத்தின்முன் எல்லா குடிமக்களின் சமத்துவம் - என்னதான் பேசினாலும் சுரண்டப்படும் வர்க்கம் தனது அடிமைத்தனத்துக்கு எதிராக நடக்க முயலுமானால் அவர்களுக்கு எதிராக வன்முறையாக அரசு எந்திரம் செயல்படும். ஆக முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சிறுபான்மையாக முதலாளி நலன் காப்பதே. இங்கே எல்லோருக்கும் சமமானது அல்ல.
ஜனநாயக குடியரசான அமெரிக்காவின் உலகெங்கும் கொலை களமானது கணக்கில் கொண்டாலே அவை யாருக்கான ஜனநாயகம் என்று புரிந்து கொள்ள முடியும்.ஜனநாயகத்தூண்களான முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகம் எவ்வளவு அதிகம் உயர்வாக வளர்ச்சி அடைகிறது அவ்வளவு அதிக அளவில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் பங்கு மார்க்கெட் மற்றும் வங்கி அதிபர்களால் ஆட்படுத்தப்படுகின்றன. ஆக முதலாளிகளால் வழங்கப்படும் ஜனநாயகம் ஆனது ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கானவை அல்ல .
இந்த முரண்பாட்டை முதலாளித்துவத்தின் அழுகல் தன்மையை பொய்மையை ஏமாற்று தனத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
தூய ஜனநாயகம் அதிகமாக வளர வளர இவை மேலும் அதிக தந்திரமும் திறனும் உடையதாககின்றது. மக்களை ஆட்சி நிர்வாகப் பணிகளில் இருந்தும் பத்திரிகை சுதந்திரத்திலும் இருந்தும் கூட்டம் சேரும் சுதந்திரத்தில் இருந்தும் விரட்டு வெளியேற்றி விடுகின்றனர். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் இது முக்கியமான பிரச்சினைகளை என்றுமே முடிவு செய்வதில்லை. இவை பங்கு மார்க்கெட் மற்றும் வங்கிகளால் முடிவு செய்யப்படுகின்றன. முதலாளித்துவ நாடாளுமன்றம் ஏழை எளிய மக்களுக்கு அந்நியமாக இருப்பதும் பாட்டாளிகளை முதலாளிகள் ஒடுக்குவதற்கான கருவியாக பகைமை வர்க்கத்தின் சுரண்டும் சிறுபான்மையினரின் நிறுவனமாக இருப்பதை உழைக்கும் ஏழை எளிய மக்கள் நன்றாக அறிகின்றார்கள் உணர்கிறார்கள் காண்கிறார்கள் அனுப்பப்படுகிறார்கள்...
பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த முதலாளித்து ஜனநாயகத்தை விட பன்மடங்கு அதிக ஜனநாயகமானது இவை பெரும்பான்மையான மக்களின் ஜனநாயகம் ஆகின்றது.
உழைக்கும் மற்றும் ஏழை எளிய சுரண்டப்படும் மக்கள் அனைவரையும் அவர்களின் முன்னணி படையான பாட்டாளி வர்க்கத்தின் கீழ் ஒன்று திரட்டுகிறது. பழைய முதலாளித்துவ பொறியமைவு அதிகார வர்க்கம் செல்வம் முதலாளித்துவ கல்வி சமுதாய உறவுகள் மற்றும் தனி உடமைகள் அனைத்தையும் அனைத்து மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கே உழைக்கும் ஏழை எளிய பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையினர் அவர்களின் பத்திரிகை முதல் எல்லா சுதந்திரமும் இன்று வரை ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் கோணத்தில் இருந்து பிரச்சனை முன்வைக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்க ஜனநாயகமானது ஏழை எளிய உழைக்கும் மக்களின் ஜனநாயகமாக இருக்கிறது.
இங்குள்ள ஜனநாயகமானது உழைக்கும் ஏழை எளிய பெரும்பான்மையான மக்களின் ஜனநாயமாகும்.
ஆக பொதுவாக வர்க்கங்கள் பற்றி பேசாமல் வெறும் ஜனநாயகம் என்பது வர்க்கத்தை மறந்து விட்டு வர்கத்துக்கு அப்பால் ஜனநாயகத்தை தூக்கி பிடிப்பதாகும் .
எல்லா குடிமக்களுக்கும் சமத்துவம் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை.
சுரண்டப்படுபவருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியுமா?.
சுரண்டலாளர்கள் மக்கள் தொகையில் வெறும் சிறு பகுதியினரே.
சுரண்டப்படுவோர் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர்.
சர்வாதிகாரம் என்றால் என்ன?
சர்வாதிகாரம் என்பது எல்லையற்ற அதிகாரம் என்பதாகும்.அது சட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை வன்முறையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் பெரும்பான்மையோர் மீது நடத்துகின்ற சர்வாதிகராம். குறைவான எண்ணிக்கையில் உள்ள போலீஸ்கள் பெருந் திரளான மக்கள் மீது நடத்தும் சர்வாதிகாரம்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன?.
பாரிஸ் கம்யூன் படிப்பினைகளிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ் கருத்துக்கள் கீழே, தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை தமது புரட்சிகர சர்வாதிகாரத்தினால் மாற்றீடு செய்யும் போது..... முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்காக ..... தொழிலாளர்கள் அரசுடன் ஒரு புரட்சிகரமான மற்றும் இடைமாற்றமான வடிவத்தை இணைவிக்கிறார்கள் .....
மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார்,... தமது விரோதிகளை பலப் பிரயோகம் மூலம் அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தில், புரட்சியில் பயன்படுத்தப்படும் ஓர் இடைக்கால நிறுவனமே அரசு என்பதால் .... பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் அரசு தேவைப்படும் வரையில் அதற்கு அரசு தேவைப்படுகிறது சுதந்திரத்தின் நலங்களுக்காக அல்ல மாறாக அதன் விரோதிகளை அடக்கி வைப்பதன் பொருட்டே ஆகும். ...
மேலும் மார்க்ஸ் எங்கெல்ஸே விளக்கம் தருகிறார்கள்.
= முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்காக
=பிற்போக்காளர்களுக்கு அச்சம் ஊட்டுவதற்காக
=முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்களின் அதிகார பலத்தை கட்டி காப்பதற்காக.
=பாட்டாளி வர்க்கம் பல பிரயோகம் மூலம் தனது விரோதிகளை அடக்கி வைப்பதற்காக.
தெளிவாக புரிந்து கொள்வதற்கு ...
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தால் சுரண்டுப்படுவதற்கான சாத்திய கூறுகள் யாவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் ஒழிய மெய்யான நடைமுறையில் உள்ள சமத்துவம் இருக்க முடியாது.
சுரண்டலாளர்களை ஒரே அடியில் அழித்துவிட முடியாது. எந்த ஒரு பெரிய நாட்டிலும் எல்லா நிலப்பிப்புகளையும் முதலாளிகளையும் ஒரே அடியில் உடைமை நீக்கம் செய்வது என்பது சாத்தியமல்ல . உடைமை நீக்கம் மட்டுமே ஒரு சட்டப்பூர்வ அல்லது அரசியல் நடவடிக்கை என்ற முறையில் இந்த விவகாரத்தை வெகு தொலைவுக்கு தீர்த்து விடாது. காரணம் நிலப்பிரப்புக்களையும் முதலாளிகளையும் உண்மையிலேயே உயர்நிலையில் இருந்து அகற்ற வேண்டும்.... புரட்சிக்குப் பிறகு நீண்ட காலம் சுரண்டலாளர்கள் பல மாபெரும் நடைமுறை சாதகங்களை தவிர்க்க முடியாதபடி நீடித்து வைத்து இருப்பார்கள் : அவர்களிடம் பணம் மற்றும் பதவி அனுபவம் கல்வி அனுபவம் பல்வேறு மட்டங்களில் உள்ள தொடர்பு ... ஆக ஏக காலத்தில் பல்வேறு நாடுகளில் புரட்சி நடந்து சுரண்டலாளர்களை ஒடுக்கினால் மட்டுமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பயனுள்ளதாக இருக்கும்...
இவை நமக்கு நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழி தோழர்களே
மேலே கூறியது போல ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் வளர்ச்சி அடைந்து வருவதை கண்டு முதலாளித்துவ வர்க்கத்தினரும் தொழிலாளர் அமைப்புகளில் இருக்கும் அவர்களது கை ஆட்களும் சுரண்டலாலர்களின் ஆதிக்கத்தை தாங்கி ஆதரிப்பதற்கான சித்தாந்த மற்றும் அரசியல் விவாதங்களை இடதுசாரி இயக்கங்களுகுள் மூர்க்கமான முயற்சிகள் செய்து வருகின்றனர்.
பொதுவான ஜனநாயகத்தை ஆதரிப்பதும் பொதுவாக சர்வாதிகாரத்தை பற்றி பேசுவதும் வர்க்க சார்பில்லாத வர்க்கத்துக்கு மேலானதாக சோசலிசத்தின் ஆதாரத் தத்துவத்தை கேலி வர்ணனை செய்வதும் இவர்களின் போக்காக உள்ளது.
முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளிவர்க்கம் விடுதலையடைவதும் மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலமாக - சீர்திருத்தங்கள் மூலமாக சாத்தியமில்லை
அதற்கு மாறாக முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதன் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான் அவை சாத்தியமாகும். கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் புரட்சியாளனாக இருந்து தீரவேண்டும், சிர்திருத்தவாதியாக அல்ல. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதும், முதலாளித்துவத்தின் சொத்துக்களை சமூக சொத்தாக மாற்றுவதும், சமாதான முறைகளினால் சாதிக்க முடியாது. பாட்டாளிவர்க்க புரட்சியின் மூலம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதனால் மட்டும்தான் இவற்றை சாதிக்க முடியும்.
முதலாளித்துவ தத்துவம், அல்லது சோசலிச தத்துவம் இவ்விரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இவ்விரண்டிற்கு நடுவே வேறு வழி கிடையாது. ஆகவே எந்த விதத்திலாவது சோசலிச தத்துவத்தை குறைத்து மதிப்பிட்டாலும், அதிலிருந்து ஒரு மாத்திரை அளவு விலகி சென்றாலும் முதலாளித்துவ தத்துவத்தை பலப்படுத்துவது என்றே அர்த்தம்.
தொழிலாளி வர்க்கம் அரைகுறை அற்பசொற்ப கோரிக்கைகளுக்காக போராடவில்லை, சீர்த்திருத்தங்களுக்காக போராடவில்லை, ஜார் ஆட்சியில் இருந்து சகல ஜனங்களையும் விடுதலை செய்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறது என்று போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்ட புரட்சிகரமான வேலை நிறுத்த இயக்கமும், ஆர்பாட்டங்களும் காட்டின. ஒரு புதிய புரட்சியை நோக்கி தேசம் முன்னேறிக் கொண்டிருந்தது.
ஆனால் இரண்டாம் அகிலத் தலைவர்கள் உள்நாட்டில் தொழிலாளருக்கும், முதலாளிகளுக்கு மிடையே வர்க்கப் போராட்டத்திற்கு பதில் 'வர்க்க சமாதானம்' நிலவ வேண்டுமென்றும் வெளிநாட்டில், மற்ற தேசங்களுடன் யுத்தம் நடக்க வேண்டும் என்றும் இந்த பேர்வழிகள் பிரச்சாரம் செய்தனர். உண்மையான பொறுப்பாளி யார் என்பதை மறைத்தனர், மக்களை ஏமாற்றுவதற்கு இரண்டாவது அகிலத்தை சேர்ந்த சந்தர்ப்பவாதிகள் முதலாளிகளுக்கு உதவிபுரிந்தனர்.
(லெனின் தேர்வு நூல்கள் 9 பக்கம் 11 முதல் 51 இதன் சாரம்தான் இவை).
உலக மக்களின் விரோதிகளாக உள்ள உலக முதலாளிகள் என்ற உண்மையை எடுத்துகாட்டி வலியுறுத்தி ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றி, ஒவ்வொருவரும் தத்தம் ஆயுதங்களை தத்தம் முதலாளிகளுக்கு எதிராக முதலாளிகளின் மார்பில் திருப்பவேண்டும். இதன் மூலம்தான் யுத்தத்தை முடிக்க முடியும் என்று விளக்கி கூறினர் போல்ஷ்விக்குகள்.யுத்தத்தை எதிர்த்து போல்ஷ்விக்கட்சியின் மத்திய குழு அறிக்கை வெளியிட்டது,மக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக சிந்திக்கின்றனர் ஆட்சியாளர்கள், அந்த ஓட்டை பெருவதற்காகவே இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நகர்வும் உள்ளது. ஓட்டை பெருவதும் நாட்டில் ஆட்சியை பிடிப்பதும் நோக்கமாக கொண்ட இந்த ஓட்டரசியல்கட்சிகள் இங்குள்ள மக்கள் உண்பதை பற்றியோ வாழ்வதை பற்றியொ தவறியும் பேசுவதில்லை.
பல தேசிய இனங்கள் எண்ணற்ற சமூகப்பிரிவினர் உள்ள இந்திய நாட்டில் நடைபெறும் தேர்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யபவர்கள் யாரின் நலனில் ஆட்சிக்கு வருகின்றனர்? யாருக்காக ஆட்சி புரிகின்றனர் என்பதிலிருந்தே உண்மைதன்மை புரிந்துக் கொள்ள முடியும்.இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் (இடதுசாரி கட்சிகள் தவிர்த்து) தனிநபர் ஆதிக்கத்தின் கீழ் உள்ள கட்சிகளாக இருக்க முடிகின்றது? இக்கட்சிகளில் எதிலும் உட்கட்சி ஜனநாயகம் அறவே இல்லை என்பதும் இக்கட்சிகளின் தலைமைகளே கட்சியின் நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் முதல் வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் வரை அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இக்கட்சிகளின் மூலம்தான் நடுவண் மற்றும் மாநில ஆட்சிகள் நடைபெறுகின்றன என்கின்றபோது இந்நாட்டின் குடியாட்சி முறை மீதே கேள்வி எழுகின்றது.
உலக அரசியலமைப்பு சட்டங்களிலேயே உன்னதமான அரசியலமைப்பு சட்டம் என்று கூறப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அச்சட்டத்தின்படி மக்களாட்சி முறையில் ஆட்சி நடத்த வேண்டிய அரசியல் கட்சிகளின் அமைப்பு, நிர்வாகம் மற்றும் உட்கட்சி ஜனநாயகம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் பிரதிநித்துவ சட்டத்திலும் இக்கட்சிகளின் உட்கட்சி நிர்வாகம் குறித்து எந்த விதிமுறைகளும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் பதிவு செய்யப்படும் ஒரு சங்கத்திற்கு இருக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துகூட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் கட்சிகளின் நிர்வாகம் குறித்தோ அக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதி செய்தோ எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என்பது இங்கு இணைத்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
இப்பிரச்சினைகளுக்கும் அவற்றோடு நெருங்கிய தொடர்புடைய நடைமுறையில் உள்ள தேர்தல்முறை குறித்தும் மாற்றுதேர்தல் முறை குறித்தும் ஆராய வேண்டியிருக்கின்றது.
இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் தேர்தல் முறை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒருவரை மட்டும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பது என்பதும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கின்றது. இது உலகத்தில் குடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது உருவாக்கப்பட்டதாகும். இதனையே குடியாட்சி தேர்தல் முறையின் ஒரே முறை என்பது போன்றும் இதற்கு மாற்றான வேறு சிறந்த முறை எதுவும் இல்லை என்பது போன்றும் பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட குறைபாடுகளுக்கும் இத்தேர்தல் முறைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் இம்முறைக்கு மாற்றான தேர்தல் முறைகள் குறித்தும் அவற்றின் தேவை அல்லது பொருத்தப்பாடு குறித்தும் இந்நாட்டின் ஜனநாயகம் குறித்து தம்பட்டம் அடித்துகொள்ளும் இந்திய ஊடகங்கள் முறையான தகவல்களை மக்களுக்கு அறவே தெரிவிப்பதில்லை.
ஊடக பலத்தை கொண்டுள்ள கட்சிகள் பொருட்கள் விளம்பரம் போன்று தங்கள் கட்சிகளை விளம்பரம் செய்து தேர்தல் சந்தையில் முன்னணியில் உள்ள கட்சிகளாக பொதுமக்களுக்கு தங்களை காட்டிக்கொள்கின்றன. அடுத்து, பணத்தைக் கொண்டு வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஆக, தேர்தல் ஒரு வியாபாரமாக நடந்து முடிந்து விடுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், ஆனால் அதன்மூலம் வெற்றி பெற்றவரை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிலைமை.
மேலும்
ஒருவர் 30% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தபோதிலும் முதலில் வந்துவிட்டதால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு வாக்களிக்காத மற்ற 70 சதவீத வாக்குகளுக்கு எந்த பிரதிநித்துவமும் கிடைப்பதில்லை. இவ்வாறு வெற்றி பெற்றவருக்கு எதிராக பெரும்பான்மைக்கும் மேலாக, பலசமயங்களில் 70 சதவீதத்தினர் அளவிற்கு கூட, வாக்களித்திலுள்ளனர் என்பது அறவே கவனிக்கப்படுவதில்லை.
இந்தத் தேர்தல் முறையில்தான், 35 சதவீதத்திற்குள் வாக்குகள் பெறும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமர்கின்றன.
அதேபோன்றுதான் இந்திய அளவிலும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தின் தலைமையை பிடிக்கும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகள் வாக்களித்த வாக்காளர்களில் 20 சதவீதம் அல்லது 25 சதவீதம் வாக்குகளை மட்டுமே, (கவனிக்கவும், நாட்டின் மொத்த வாக்காளர்களில்கூட அல்ல) பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்று விடுகின்றன.
இதுவரை நடந்த தேர்தலில் பிஜேபியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ எந்தத் தேர்தலிலும் நாடுதளுவிய வாக்களித்த வாக்காளர்களின் 50 சதவீத ஓட்டுகளைப் பெற்றதில்லை என்று கடந்த தேர்தல்கள் குறித்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
கொள்கைகள் அல்லது திட்டங்கள் அடிப்படையில் கட்சிகளின் கூட்டணி என்பது ஏமாற்றே தேர்தல் வெற்றிக்காக மட்டுமே கூட்டணி என்பது உண்மை.
அடுத்ததாக தேர்தலில் சாதி ஆதிக்கம். இடதுசாரிக் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள அதிக அளவில் உள்ள வாக்காளர்களின் சாதியை கணக்கில் கொண்டே வேட்பாளர்களை களமிறக்குகின்றன. இவ்வகையில், சாதி என்பதும் ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.
தேர்தலில் மாறி மாறி வெற்றிபெற்று வருகின்ற கட்சிகள் அனைத்தும், தேர்தலை எதிர்க்கும் இயக்ககங்களைப் பார்த்து தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அழைப்பதும் இந்நிலையில், அரசியலில் அடிப்படையான மாற்றங்களைக் கோரும் இயக்கங்கள் இத்தேர்தலில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தி இத்தேர்தல் ஓட்டளிக்கும் மக்களுக்கு எந்த அதிகாரமும் அளிக்கவில்லை ஓட்டு போடுவதை தவிர ஆக ஓட்டு போடவும் திருப்பி அழைக்கவும் அதிகாரம் வேண்டும் மக்களுக்கு. கொடுத்த வாக்கை காப்பாற்றதவர்களின் சொத்து பறிமுதல் செய்ய வேண்டும் இத்தியாதி இத்தியாதி.... இப்படி ஏதாவது வழிவகை இந்த தேர்தல் ஜனநாயக்த்தில் உள்ளதா தோழர்களே...
இரண்டாம் உலகப்போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராளுமன்ற பாதையை நம்பி பாராளுமன்றமாயை என்ற தீர்க்க முடியாத நோய்க்கு பலியாகி விட்டனர் அவர்கள் இயல்பாகவே எதையும் சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாத படி திருத்தல்வாத சகதியில் புதைந்து பாட்டாளி வர்க்க புரட்சி இலட்சியத்தை சீரழிப்பவர்கள் என்பதை தான் காட்டுகின்றன .
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும்மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது "முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும் தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும், ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .மேலும் லெனின் கூறினார்,"புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடி வருகிறது ஆனால் கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடி பணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப் போகவும் போராடுகிறார் ( லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95 ).
உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்க கட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் வேறுபட்ட வடிவங் களை ஒன்றிணைக்கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்கு ஏற்ப ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான பாராளுமன்றமுறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப் பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய வாதிகளாய் நாம் எப்போதும் கூறுகிறோம்.
குறிப்பான தனித்தன்மைகளுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.
லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப்பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டு விட்டது ( லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314 ).
திரிப்புவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றி நின்று பாட்டாளி வர்க்க புரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவது தான் இது காட்டுகிறது.
திருத்தல் வாதிகள் லெனினுடைய "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு" எனும் மாபெரும் படைப்பினை தங்களின் தவறான பாதையை நியாயப்படுத்துவதற்காக பயன் படுத்தி மார்க்சிய லெனினியத்தை குறுக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மையில் "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கிய வகைப் பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின். மேலும் அவர் திருத்தல் வாதத்திலிருந்து முழுமையாக முறியடித்துக் கொள்ளாத வரை புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
இன்னொறு போக்கு ட்ராட்ஸ்கியம், பல்வேறு பிரச்சனைகள பல்வேறு விதமாக வெளிப் படுகிறது ட்ராட்ஸ்கியம்; அது அடிக்கடி "தீவிர இடதுசாரி" முகமூடி அணிந்து கொள்கிறது ஆனால் அதன் சாரம் புரட்சியை எதிர்ப்பதும் புரட்சியை மறுப்பதுமேயாகும்.
பாட்டாளி வர்க்க புரட்சியையும் பட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் ட்ராட்ஸ்கியம் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதமும் உண்மையில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் திரும்பத் திரும்ப ட்ராட்ஸ்கியத்தை ஒருவகையில் மென்ஸ் விஸயம் என்றும் காவுட்ஸ்கியதியம் என்றும் சமூக ஜனநாயகம் என்றும் மேலும் எதிர் புரட்சிகர முதலாளிகளின் முன்னேறிய பிரிவு என்றும் கூறினார். திருத்தல்வாதம் சாரத்தில் புரட்சி எதிர்ப்பதாகவும் மறுப்பதாகவும் இருக்கிறது. திருத்தலவாதமும் காவுட்ஸ் கியமும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பது மட்டுமல்ல; புரட்சி எதிர்ப்பதில் ட்ராட்ஸியத்தோடு ஒன்று சேர்கிறது என்பது தர்க்கரீதியான முடிவு .
ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார் " 1870களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம் சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபாட்டை ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள் களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றுப் பேர்வழிகளின் வேலையாகும் ,மார்க்ஸ்முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார் இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்க வில்லை"( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).
தனது அடிப்படை பொருளாதாரக் குணாம்சங்களின் காரணமாக ஏகாதிபத்தி யமானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தின் மீதான அதன் குறைவான பற்றுதலேனாலும் ராணுவ வல்லாட்ச்சி கொள்கையின் அனைத்தும் தெளிவு வளர்ச்சியின் மீதான அதன் அதிகபட்ச பற்றுதலினாலும் பிரித்தாளப்படுகிறது என்று லெனின் கூறினார். சமாதான முறை மாற்றமும் அல்லது பலாத்கார முறை மாற்றம் என்ற கேள்வி பற்றிய விவாதத்தில் இதை கவனிக்க தவறுவது என்பது முதலாளித் துவத்தின் ஒரு சாதாரண அல்லது தோட்டக் காரனை போன்று அடிவருடியின் நிலைக் குத் தாழ்ந்து விடுவதாகும்" ( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 357 ).
1917 அக்டோபரில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் தொழிலாளர்கள் படைவீரர்கள் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு தீர்மானகரமாக தலைமை தாங்கி அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். சிலர் கூறுவதைப் போல் புரட்சியில் ரத்தம் சிந்தாமல் மாற்றம் அதாவது புரட்சி கிட்டத்தட்ட சமாதான முறையில் சாதிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய கூற்றுகள் யாவும் வரலாற்று உண்மைகளுக்கு மாறுபட்டவையாகும் உலகத்தின் முதல் சோசலிச அரசின் உருவாக்குவதற்காக ரத்தம் சிந்திய புரட்சிகர தியாகிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
உலக வரலாறு இதுவரை முதலாளித்து வத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம் தானாகவே நடந்தேறியதாக எந்த முன்மாதிரியும் உருவாகவில்லை என்பது வரலாற்று உண்மை ...
மேலும் பின்னர்
No comments:
Post a Comment