ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். பாகம் – 1. லெனின்

 முகவுரை

புரட்சிகரமான காலப்பகுதியில் நிகழ்ச்சி களோடு சம நடையிட்டுச் செல்வது மிகக் கடினம்;அந்நிகழ்ச்சிகள் புரட்சிகரமான கட்சிகளின் போர்த்தந்திர முழக்கங்களை மதிப்பீடு செய்வதற்குத் திகைப்பூட்டும் அளவிலேயே புதிய விசயாதாரங்களை கொடுக்கிறன. இக்குறுநூல் ஒதேஸ்ஸா நிகழ்ச்சிகள் (பத்தியோம்கின் எனும் கவசப்போர்க்கப்பலில் நடந்த எழுச்சியை இவை குறிப்பிடுகின்றன) (1907 பதிப்புக்கு ஆசிரியர்எழுதிய குறிப்பு----ர்நிகழுமுன் எழுதப்பட்டது. நாம் ஏற்கனவே புரொலிட்டாரி எனும் பத்திரிக்கையில் (குறிப்பு -புரொலிட்டாரி (பாட்டாளி)-- சட்டவிரோதமான போல்ஷ்விக் வாரப் பத்திரிக்கை,...தொ.கட்சி மூன்றாவது காங்கிரஸ் தீர்மானத்தின்படி அக்கட்சியின் மையப் பத்திரிக்கையாக நிறுவப்பெற்றது. 1905 மே முதல் நவம்பர் வரை மொத்தம் 26 இதழ்கள் ஜினீவாவிலிருந்து வேளியாயின) (இதழ் 9 “புரட்சி கற்றுக்கொடுக்கிறது”)சுட்டிக்காட்டியிருக்கிறோம்.: அதாவது, புரட்சி எழுச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வுப் போக்குஎனும் தத்துவத்தைப் படைத்து ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கம் வேண்டும் என்பதை பிரச்சாரம் செய்வதை நிராகரித்த சமூக ஜனநாயகவாதிகளும் கூட தங்களின் எதிராளிகளின் பக்கம் உண்மையாகவே போய்விடவோ போகத் தொடங்கவோ இந்நிகழ்ச்சிகள் கட்டாயப்படுத்தியுள்ளன,என்று அரசியல் வளர்ச்சி அமைதியாக நடந்துவரும் காலப் பகுதிகளில் நம்மவொண்ணாததாகத் தோன்றும் அளவுக்கு விரைவாகவும் முழுநிறை வாகவும் புரட்சி கற்றுக்கொடுக்கிறது என்பதில் ஐய்யமில்லை.

மேலும்,புரட்சி என்பது தலைவர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் கற்றுக் கொடுக்கிறது எனும் விசயம் குறிப்பாக முக்கியமானதாகும்.

ரஷ்யாவில் திரள் திரளான தொழிலாளிகளுக்கு சமூக ஜனநாயகத்தைப் புரட்சி கற்றுக் கொடுக்கும் எள்ளவும் ஐயமில்லை. சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களின் உண்மையான இயல்பையும் நம் ஜனநாயகத்தின் முதலாளி வர்க்கத்தின் தன்மையையும் விவசாயி மக்களின் உண்மையான விருப்பங்களையும் புரட்சி வெளிப்படுத்திக் காட்டுவதன் வழியாக சமூகஜனநாயகவாதத்தின் வேலைத்திட்டத் தையும் போர்த்தந்திரங்களையும் நடைமுறையில் உறுதிப்படுத்தும்.விவசாயி மக்கள் முதலாளி வர்க்க ஜனநாயகத்தின் அர்த்தத்தில் புரட்சிகரமானவர்களாக இருக்கிற அதே நேரத்தில் சமுதாயமாக்கல்எனும் இலட்சியத்தை தம்முள் ஏந்திச் செல்பவர்களாக இல்லை.விவசாயி மக்கள் முதலாளி வர்க்கத்துக்கும் கிராமப்புறத்து தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள ஒரு புதிய வர்க்கப் போராட்டத்திற்குரிய விதை களைத்தான் ஏந்திச் செல்கிறார்கள். பழைய நரோத்தியத்தின் (குறிப்பு - நரோதியம் -1860 களிலும் 1870 களிலும் ரஷ்யாவின் புரட்சி இயக்கத்தில் இருந்த ஒரு சிறுமுதலாளித்துவப் போக்கு. எதேச்சிகாரத்தை ஒழித்து நிலப்பிரபுக் களின் நிலத்தை விவசாயிகளுக்கு மாற்றித்தர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.பொருளாதார விதிகளின்படி ரஷ்யாவில் முதலாளித்துவ உறவுகள் வளர்ந்து வருவதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்;இதையொட்டி விவசாயி மக்கள்தாம் முதன்மையான புரட்சிச் சக்தி, பாட்டாளி வர்க்கம் அல்ல,என்று கருதினர்கிராமப்புறத்துச் சமூகம் சோசலிசத்தின் கரு என்று கருதினர்.எதேச்சிகார முறைக்கு எதிராகப் போராடச் செய்ய விவசாயிகளை தட்டியெழுப்பு வதற்காக அவர்கள் கிராமங்களுக்குச் சென்றனர்,ஆனால் அங்கே ஆதரவு கிடைக்கவில்லை.

நரோதிய சோசலிசம் கற்பனா சோசலிசமாக இருந்தது,ஏனெனில் அது எதார்த்த சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக் கவில்லை.புரட்சிகரமான ஜனநாயகத்துவம் முதல் மிதவாதம் வரை பல கட்டங்களை நரோதியம் கடந்த 1880=90 களில் நரோதியம் எதேச்சிகார முறையுடன் சமரசம் செய்து கொள்ளும் பாதையில் இறங்கிவிட்டது. “குலாக்கள் என்கிற பணக்கார விவசாயிகளின் நலன்களை வெளியிட்டு மார்க்சியத்தை எதிர்த்துப் போராடியது)பழைய பிரமைகள் அனைத்தையும்- எடுத்துக்காட்டாகரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பற்றிய பிரச்சனை குறித்தும் நம் சமுதாயத்தின்ஜனநாயகத் தன்மை பற்றிய பிரச்சனை குறித்தும் விவசாயப் புரட்சியெழுச்சியின் முழுமையான வெற்றியின் குறிபொருள் பற்றிய பிரச்சனை குறித்தும் சோசலிஸ்ட் புரட்சியாளர் கட்சியின்” (சோசலிஸ்டு-புரட்சியாளர்கள்--ரஷ்யாவில் 1901 றுதியிலும் 1902துவக்கத்திலும் பல்வேறு நரோதியக் குழுக்களும் வட்டங்களும் ஒன்று கலந்ததின் விளைவாகத் தோன்றிய ஒரு சிறுமுதலாளித்துவக் கட்சி.அவர்கள் சோசலிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்ட போதிலும் அவர்களுடைய சோசலிசத்துக் கும் மார்க்சியம் எனும் விஞ்ஞான சோசலிசத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.அது சிறுமுதலாளித்துவ கற்பனா சோசலிசம்.அவர்கள் சமமான விநியோகம் என்கிற அடிப்படையில் உழவர்களுக்கு நிலத்தை மாற்றிக் கொடுத்து நிலத்தை சமுதாயமாக்குவதைச்சாதிக்க விரும்பினர். உண்மையில் பார்க்கும்போது,முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை நீடித்துக் காத்து வந்தபடியே நிலத்தை சமுதாயமயமாக்குவதுசோசலிசத்துக்குக் கொண்டுபோய்விடாதுஅது கிராமப்புறத் திலுள்ள அரைநிலப்பிரபுத்துவ உறவுகளை மட்டும் ஒழித்துவிட்டு முதலாளித்துவம் வேகமாக வளர்வதில் கொண்டு போய்விடும்.

சோசலிஸ்டுபுரட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயி மக்களுக்கும் இடையே வர்க்க வேறுபாடுகளைப் பார்க்கவில்லை.விவசாயிகளிடையேயுள்ள  உழைக்கும் விவசாயிகளுக்கும் பணக்கார விவசாயி களுக்கும் இடையேயுள்ள வர்க்கப் பிரிவுகளையும் முரண்பாடுகளையும் மெருகிட்டு மறைத்தனர், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை நிராகரித்தனர். தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்கள் ஜார் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்குக் கையாண்ட முதன்மையான வழி.

1905-07ல் முதல் ரஷ்யப் புரட்சி தோற்றபின் சோசலிஸ்டு புரட்சியாளர்களில் பெரும் பகுதியினர் முதலாளித்துவ மிதவாதிகளாயினர்.1917பிப்ரவரியில் முதலாளித்துவ  ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர்களும் மென்ஷ்விக்கு களும் சேர்ந்து எதிர்ப்புரட்சி வகைப்பட்ட தற்காலிக அரசாங்கத்துக்கு ஆதாரத் தூணாக இருந்தனர்; சோசலிஸ்டுபுரட்சியாளர் கட்சியின் தலைவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர்.

நிலப்பிரபுக்களின் உடமையை ஒழிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை சோசலிஸ்டு-புரட்சியாளர் களின் கட்சி ஆதரிக்க மறுத்தது. தற்காலிக அரசாங்கத்தில் அங்கம் வகித்த அதன் அமைச்சர்கள் நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றி வந்த விவசாயி களுக்கு எதிராக இராணுவத்தை ஏவிவிட்டனர். அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பின் சோவியத் அதிகாரத்தை எதிர்த்து அக்கட்சியினர் போராடின.) நகல் வேலைத்திட்டத்தில் இவை எவ்வளவோ தெளிவாக தெரிகின்றன-- இந்தப் பிரமைகள் அனைத்தையும் புரட்சி முற்றாக ஈவிரக்கமின்றி ஒழித்துவிடும். முதல் தடவையாக,அது இந்த பல்வேறு வர்க்கங்களுக்கு உண்மையான அரசியல் ஞானஸ்தானத்தை செய்து வைக்கும்.இந்த வர்க்கங்கள் புரட்சியிலிருந்து ஒரு திட்டவட்டமான அரசியல் முகத் தோற்றத்துடன் வெளிப்படும்.

ஏனெனில், அவை தத்தம் சித்தாந்த வாதிகளின் வேலைத்திட்டம்போர்த்தந்திர முழக்கங்கள் ஆகியவற்றிலே மட்டுமின்றி மக்களின் பகிரங்கமான அரசியல் செய்கைகளிலும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

புரட்சி நமக்கு கற்றுக்கொடுக்கும்,திரளான மக்களுக்கும் கற்றுக்கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.ஆனால் இன்று ஒரு போராடும் அரசியல் கட்சியின் முன் நிற்கும் கேள்வி இதுதான்புரட்சிக்கு நாம் எதையாவது கற்றுக்கொடுக்க இயலுமாபுரட்சி மீது பாட்டாளி வர்க்க முத்திரை இடுவதற்கு,சொல்லளவில் அல்லாமல் செயலில் புரட்சியை ஒரு உண்மையானநிர்ணயமான வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கு,ஜனநாயகப் போக்குள்ள முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடின் மையும் அரைமனத் தன்மையையும் துரோகத் தன்மையையும் செயல் சக்தியற்றதாக செய்வதற்கு,நம் சமூக ஜனநாயகப் போதனையின் தவறின்மையை யும் முழுவதும் புரட்சிகரமான ஒரே வர்க்கமாகத் திகழும் பாட்டாளி வர்க்கத்துடன் நமக்குள்ள பிணைப்பையும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள இயலுமா?

என்பதே இக்குறிக்கோளை நோக்கியே நம் முயற்சிகள் அனைத்தையும் செலுத்த வேண்டும்.

ஒருபுறத்தில்,அரசியல் நிலைமையைப் பற்றிய நம் மதிப்பீடு சரியாக இருப்பதையும் நம்போர்த்தந்திர முழக்கங்கள் சரியாக இருப்பதையும் பொருத்தும்,மறுபுறத்தில் திரள் திரளான தொழிலாளிகளின் உண்மையான போராடும் சக்தி இந்த முழக்கங்களை ஆதரிக்குமா?என்பதை பொருத்தும் இக்குறிக்கோளை சாதிப்பது இருக்கும். நம் கட்சியின் எல்லா அமைப்புகளின், எல்லா குழுக்களின் வழக்கமான, முறையான, நடைமுறை வேலையும் பிரச்சாரம்,கிளர்ச்சிஒழுங்கமைப்பு சம்பந்தப்பட்ட வேலையும் மக்களோடுள்ள பிணைப்பு களைப் பலப்படுத்தி விரிவாக்கு வதில் செலுத்தப்படுகிறது. இந்த வேலை எப்போதும் அவசியமேயாயினும் கூட புரட்சி காலத்தில் இது போதும் என்று கருத முடியாது. இப்படிப்பட்ட நிலைமையில் தொழிலாளி வர்க்கம் வெளிப்படையான புரட்சி செய்கைக்கு உள்ளியல்பாக வேட்கை கொள்கிறது. இச்செய்கையின் குறிக்கோள் களை நாம் சரிவர வகுத்தளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், பிறகு இக்குறிக்கோள்களை முடிந்தவரை விரிவாக அறிவிக்கவும் புரிந்துகொள்ளச் செய்யவும் வேண்டும். மக்களுடன் நமக்குள்ள பிணைப்புகளைப் பற்றி இன்று நிலவும் நம்பிக்கையின்மை புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரத்தைப் பற்றிய முதலாளி வர்க்கப் போக்கான கருத்துக்களை மூடிமறைக்கத்தான் மிக அடிக்கடிப் பயன்படுகிறது. என்பதை மறக்கக் கூடாது. தொழிலாளி வர்க்கத்திற்குப் போதனை அளித்து ஒழுங்கமைப்பதற்கு இன்னும் நாம் நிறைய வேலை செய்தாக வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சாராம்சத்தில் இன்றுள்ள கேள்வி இதுதான்:இந்தப் போதனை, ஒழுங்கமைப்புப் பணியில் அரசியல் ரீதியிலே முக்கியமானதாக எதை வலியுறுத்திக் காட்ட வேண்டும்? தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டப்பூர்வ மான சங்கங்களையா,அல்லது ஆயுத மேந்திய புரட்சி எழுச்சியையா, புரட்சிகரமான படையும் புரட்சிகரமான அரசாங்கத்தையும் படைக்கும் பணியையா? தொழிலாளி வர்க்கத்துக்குப் போதனை அளித்து ஒழுங்கமைப்பதற்கு இரண்டும் தான் பயன்படுகின்றன. உண்மையி லேயே இரண்டும் அவசியம்தான். ஆனால் இன்றைய புரட்சியில் பிரச்சனை மொத்தத்தில் இதுதான்:தொழிலாளி வர்க்கத்துக்குப் போதனை அளித்து ஒழுங்கமைக்கும் பணியில் எதை வலியுறுத்த வேண்டும்? முந்தியதையா, பிந்தியதையாதொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்துக்குது துணைபோகும் படை என்கிற பாத்திரத்தை வகிக்குமா (இந்தத் துணைபோகும் படை எதேச்சிகார முறையைத் தாக்கும் சக்தியில் வலிமை மிக்கதாய் இருந்தாலுங்கூட அரசியல் ரீதியிலே சக்தியற்றது), அல்லது அது மக்கள் புரட்சியில் தலைவனாக பாத்திரம் வகிக்குமா என்பதைப் பொருத்துத்தான் புரட்சியின் விளைவு இருக்கிறது. அரசியல் உணர்வுள்ள முதலாளி வர்க்கப் பிரதிநிதிகள் இதை நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.எனவேதான் ஒஸ்வபஷ்தேனியே (ஒஸ்வபஷ்தேனியே (விடுதலைரஷ்ய மிதவாத முதலாளி வர்க்கத்தினரின் பிரதிநிதியான பி.ஸ்துருவேயை ஆசிரியராகக் கொண்டு வெளிநாட்டிலிருந்து (1902-1905) வெளிவந்துகொண்டிருந்த திங்களிருமுறை பத்திரிக்கை; மிதவாத - முடியரசுவாதக் கருத்துக்களை விடாமல் பிரச்சாரம் செய்து வந்தது.

1903ல் இப்பத்திரிக்கையைச் சூழ்ந்து ஒஸ்வபஷ்தேனியே சங்கம்தோன்றி 1904 ஜனவரியில்

திட்டமான உருவம் பெற்று 1905 அக்டோபர் வரை இருந்து வந்தது. பின்னால் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் அரசியல் சட்ட-ஜனநாயகக் கட்சி” (காடேட்டுகள்) --ரஷ்யாவில் மிதவாத-முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் தலைமையான கட்சி -அமைவதற்கு மூலக்கருவாக இருந்தனர்.) அக்கீமவ் வாதத்தையும், சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் பொருளாதார வாதத்தையும்” (“பொருளாதாரவாதம்” -- 19ஆம் நூற்றாண்டு முடிந்து 20ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு மத்தியில் ரஷ்யாவின் சமூக - ஜனநாயக இயக்கத்தில் நிலவிய சந்தர்ப்பவாதப் போக்கு. இது சர்வதேச சந்தர்ப்பவாதத்தின் ஒரு வகை.

சம்பள உயர்வு, வேலை நிலைமைகளில் மேம்பாடு, முதலியவற்றுக்காகப் பொருளாதாரப் போராட்டங்கள் நடத்துவ தோடு பாட்டாளி வர்க்கத்தின் பணிகளை அவர்கள் குறுக்கி வரம்பிட்டனர். அரசியல் போராட்டம் மிதவாத முதலாளி வர்க்கத்தினரைச் சேர்ந்தது என்று அடித்துக் கூறினர். பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை மறுத்தனர்.

அவர்கள் தொழிலாளர் இயக்கத்தின் தன்னியல்பான தன்மையைப் போற்றிப் புரட்சிகரமான தத்துவத்தின் முக்கியத்துவத்தைச் சிறுமைப் படுத்தினர். மார்க்சிய கட்சி மூலமாக சோசலிச உணர்வை தொழிலாளர் இயக்கத்தில் புகுத்துவதின் அவசியத்தை நிராகரித்து அதன் வழியே முதலாளித்துவச் சித்தாந்தத்துக்கு வழிசெய்து கொடுத்தனர். அவர்கள் சமூக - ஜனநாயக இயக்கத்தில் ஒற்றுமையின்மையையும் தேர்ச்சிநயமற்ற வேலையையும் ஆதரித்துப் பேசினர்,ஒரு மையப்படுத்தப்பட்ட தொழிலாளி வர்க்க கட்சியை அமைப்பதின் அவசியத்தை எதிர்த்தனர்.

அக்கீமவ்வாதம் -- வி.பெ.அக்கீமவ் (மஹ்னோவித்ஸ்) பெயர் தாங்கிய போக்கு; அவர் ஒரு பிரபலமான பொருளாதாரவாதிதீவிர சந்தர்ப்பவாதி). புகழ்ந்து பேசுகிறது; இந்தப் போக்கு இன்று தொழிற்சங்கங் களையும் சட்டப்பூர்வமாக இருந்துவரும் சங்கங்களையும் முன்னணியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. எனவேதான், புதிய இஸ்கராவாதத்தில் (குறிப்பு -புதிய-இஸ்க்ராவாதிகள் மென்ஷ்விக்குகள் புதிய-இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆதரவாளர்கள். இஸ்க்ரா-- முதன்முதலான அனைத்து ரஷ்ய மார்க்சியப் பத்திரிக்கை, சட்டவிரோதமாக வெளிவந்து கொண்டிருந் தது. அதன் நிறுவகர் வி..லெனின்; 1900 ஜனவரியில் வெளிநாட்டிலிருந்து துவங்கப் பெற்று இரகசியமாக ரஷ்யாவில் வினியோகிக்கப்பட்டு வந்தது. ரஷ்யாவிலுள்ள சமூக - ஜனநாயக வாதிகளைத் தத்துவார்த்த வகையிலே ஒன்று திரட்டுவதிலும் சிதறிக்கிடந்த உள்ளூர் அமைப்புகளை எல்லாம் ஒரு புரட்சிகரமான மார்க்சியக் கட்சியாக ஒன்றுபடுத்துவதைத் தயாரிப்ப திலும் இஸ்க்ரா மகத்தானபாத்திரம் வகித்தது.

...தொ. கட்சி 1903ல் இரண்டாவது காங்கிரஸில் போல்ஷ்விக்குகள் என்றும் மென்ஷ்விக்குகள் என்றும் பிளவுண்டபின் மென்ஷ்விக்குகளின் கையில் இஸ்க்ரா விழுந்தது; லெனின் வழிப்பட்ட பழைய இஸ்க்ராவினின்று வேறுபடுத்திக் காட்டு வதற்காக இதழ் 52 முதல் அது புதிய-”இஸ்க்ராஎன்று அழைக்கப் பெற்றது. அத்துடன் அது புரட்சிகரமான மார்க்சியத்தின் பத்திரிக்கையாக இருக்கும் நிலை ஒழிந்து மென்ஷ்விக்குகளின் கையில் மார்க்சியத்தையும் கட்சியையும் எதிர்த்துப் போராடும் பத்திரிக்கையாகவும் சந்தர்ப்பவாதப் பிரச்சாரத்திற்குரிய பத்திரிக்கையாகவும் ஆகிவிட்டது). காணும் அக்கீமவ் வாதத்துக்குரிய கோட்பாடு ரீதியான போக்கை (ஒஸ்வபஷ்தேனிய, இதழ் 72-ல்) திரு ஸ்துருவே வரவேற்கிறார்.

எனவேதான், ரஷ்யாவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் முடிவுகளின் வெறுப்புகளான புரட்சிப் பார்வையின் குறுகிய தன்மையை அவர் அவ்வளவு பலமாகத் தாக்குகிறார்.

தற்சமயம் சமூக-ஜனநாயகவாதிகள் மக்களுக்குத் தலைமைதாங்கி நடத்திச் செல்வதற்குப் பிழையற்ற போர்த்தந்திர முழக்கங்கள் பெற்றிருப்பது சிறப்பான முக்கியத்துவமுள்ள விசயமாகும். புரட்சிக் காலப்பகுதியில் கோட்பாடு ரீதியிலே சரியான போர்த்தந்திர முழக்கங்களின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்துவது போல் அபாயகரமானது வேறொன்று மில்லை. எடுத்துக்காட்டாக, இஸ்கரா இதழ் 104-ல் சமூக ஜனநாயக இயக்கத்திலுள்ள தன் எதிராளிகளின் பக்கம் உண்மையிலே போய்விடுகிறது; என்றாலும், காலத்தின் முன்னோடுகிறவையாயும் பல தோல்விகள், தவறுகள் முதலியவற்றை கண்டபோதிலும் முன் சென்று கொண்டிருக்கும் இயக்கத்தின் பாதையைக் காட்டுகிறவையாயும் உள்ள முழக்கங்களின், போர்த்தந்திர முடிவுகளின் முக்கியத்துவத்தை அது இழித்துப் பழித்து பேசுகிறது. மாறாக வெறுமனே நிகழ்ச்சிகளின் வழிப்போக்கில் பின்ன டைந்து நடக்காமல் உறுதியான மார்க்சிய கோட்பாடுகளின் உணர்ச்சியில் பாட்டாளி வர்க்கத்தை வழிசெலுத்த விரும்பும் கட்சிக்கு சரியான போர்த்தந்திர முடிவுகளைத் தயாரிப்பது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் தீர்மானங்களிலும் சரி, இக்கட்சியினின்று பிரிந்து சென்றுவிட்ட பகுதியினர் நடத்திய மாநாட்டின் தீர்மானங்களிலும் சரி, மிகச் சரிநுட்பமான, கவனமாகச் சிந்தித்துத் தெளிந்த, முழுநிறைவாக உருப்பெற்றுள்ள போர்த்தந்திரக் கருத்துக்களைக் காண்கிறோம். இவை யாரோ தனித்தனி எழுத்தாளர்கள் போகிற போக்கிலே வெளியிட்ட கருத்துக்கள் அல்ல; சமூக-ஜனநாயகவாதத்தைச் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தின் பொறுப்புள்ள பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துக்கள் இவை. நாம் கட்சி மற்றெல்லாக் கட்சிகளையும் விட முன்னால் நிற்கிறது; ஏனெனில் அதனிடம் ஒரு சரிநுட்பமான, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் உள்ளது. ஒஸ்வபஷ் தேனியேயைச் சேர்ந்த

ஜனநாயகப் போக்குள்ள முதலாளி வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தினின்றும் சோசலிஸ்டு புரட்சியாளர்களின் புரட்சிகரமான சொற்சிலம் பத்தினின்றும் வேறுபட்டதாயுள்ள நிலையில் தன் போர்த்தந்திரத் தீர்மானங்களைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கும் போக்கைக் கொண்டிருப்பதில் அது மற்ற கட்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். புரட்சி நடந்து வரும்போதுதான் அக்கட்சிகள் ஒரு நகல்வேலைத் திட்டத்தை முன்வைப்பதைப் பற்றி திடீரென்று சிந்திக்கத் தலைப்பட்டன, தம் கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருப்பது ஒரு முதலாளித்துவப் புரட்சிதானா என்று ஆராய்ந்தறிவது பற்றியும் முதன் முறையாகச் சிந்திக்கத் தலைப்பட்டன.

ரஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசுக்கு(லண்டனில்1905 மே மாதத்தில் நடந்தது) போல்ஷ்விக்குகள் மட்டுமே வந்திருந்தனர். (அதே காலத்தில் ஜெனீவாவில் நடந்த) “மாநாட்டில்மென்ஷ்விக்குகள் (மென்ஷ்விக்குகள் -- ரஷ்யாவின் சமூக - ஜனநாயக இயக்கத்தில் நிலவிய ஒரு சந்தர்ப்பவாதப் போக்கு.

1903ல் ...தொ. கட்சியின் இரண்டாவது காங்கிரஸில் மத்திய உறுப்புகளுக்கு நடந்த தேர்தலில் லெனின் தலைமையிலிருந்த புரட்சிகரமான சமூக ஜனநாயகவாதிகள் பெரும்பான்மையான வாக்குகள் பெற்றனர். (பெரும்பான்மை யோர் என்பதற்கு ரஷ்ய மொழியில் போல்ஷின்ஸ்துவோ என்பார்கள், இதிலிருந்து போல்ஷ்விக்குகள் என்ற பெயர் வந்தது),சந்தர்ப்பவாதிகள் சிறுபான்மை வாக்குகளே பெற்றனர் (சிறுபான்மையோர் -- மென்ஷின்ஸ்துவோ).

1905-                                       1907 புரட்சியின் போது மென்ஷ்விக்குகள் புரட்சியில் தொழிலாளி வர்க்கத் தலைமையை எதிர்த்தனர், பாட்டாளி வர்க்கம், விவசாயி மக்கள் ஆகியவற்றிடையே கூட்டணியையும் எதிர்த்தனர், மிதவாத முதலாளி வர்க்கத்தினரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் -- மிதவாத முதலாளி வர்க்கத்தினர்தாம் புரட்சிக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்று கருதினர்

1905 07புரட்சி தோற்றதைப் பின்தொடர்ந்து பிற்போக்கு கோலோச்சிய காலத்தில் பெரும்பாலான மென்ஷ்விக்குகள் கட்சிக் கலைப்புவாதிகள் ஆயினர்.

சட்டவிரோதமான புரட்சிக் கட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோரினர். 1917 பிப்ரவரியில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றபின் மென்ஷ்விக்குகள் தற்காலிக முதலாளித்துவ அரசாங்கத்தில் கலந்து கொண்டு அதன் ஏகாதிபத்தியக் கொள்கையை ஆதரித்தனர், தயாரிக் கப்பட்டு வரும் சோசலிசப் புரட்சியை எதிர்த்துப் போராடி வந்தனர்.

அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப்பின் மென்ஷ்விக்குகள் பகிரங்கமான எதிர்ப் புரட்சி கட்சியாக வளர்ந்தனர்.அது சோவியத்து அதிகாரத்தை வீழ்த்து வதற்கான சதிகளையும் கலகங்களையும் செய்து வந்தது). மட்டுமே கலந்து கொண்டனர். இக்குறுநூலில் பின்சொன்னமென்ஷ்விக்குகள் புதியஇஸ்கரா குழுவினர்என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்ஏனெனில், அவர்கள் இஸ்கராவைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவாறே,அன்று அவர்களுடன் ஒற்றைகருத்துடையவனாக டிராட்ஸ்கி மூலம் பழைய இஸ்கராவுக்கும் புதிய இஸ்கராவுக்கும் இடையே அகழி இருப்பதாக அறிவித்தனர். (பதிப்பு ஆசிரியர் எழுதிய குறிப்பு. -- -ர்)

எனவேதான்,ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் போர்த் தந்திர தீர்மானங் களையும் மாநாட்டின் போர்த்தந்திர தீர்மானங்களையும் கவனமாகப் பயில்வதும்,அவற்றிலேயுள்ள மார்க்சியக் கோட்பாடு களினின்று வழுவிய திரிபுகள் என்று வரையறுத்துக் கொள்வதும்,ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதத்தைச் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான பணிகளைப் பற்றி தெளிந்த ஞானம் பெறுவதும் புரட்சிகரமான சமூக ஜனநாயகவாதிகளின் மிகமிக அவசரமான பணி என்று நாம் கருதுகிறோம்.இந்தப் பணியின் நிமித்தமாகத் தான் இக்குறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.ரஷ்யாவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி முழுவதும் எதிர்காலத்தில் முற்றாகஒன்றுபடுவதற்கு அடிப்படையாகப் போர்த்தந்திர ஒற்றுமைக்குச் சொல்லளவில் இணங்கச் செய்வதோடு நின்றுகொள்ளாமல் நடைமுறையில் அதற்கு வழியைச் செப்பனிடவிரும்புகிறவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடு களின் நிலையிலிருந்தும் புரட்சியின் படிப்பினைகளின் நிலையிலி ருந்தும் நாம் போர்த்தந்திரங்களைச் சோதித்து அறிவதும் அவசியம்.

 

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

புரட்சிகரமான சூழல் நிலவும் போதும்,புரட்சி நடந்துகொண்டிருக்கும் போதும்,உழைக்கும் மக்களும் தொழிலாளர் வர்க்க கட்சிகளும் பலவிதமான புதிய விசயங்களைகற்றுக்கொள்வார்கள். அதாவது புரட்சியானது நமக்கு கற்றுக்கொடுக்கும்.

புரட்சிகரமான எழுச்சிகள் நடக்கும் போது சமூகஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படும் திருத்தல்வாதிகளும் சீர்திருத்தவாதிகளும் ஒன்று புரட்சிகர வர்க்கங்களோடு இணைந்து எதிர்ப் புரட்சிகர முதலாளித்துவ வர்க்கங்களை எதிர்த்துப் போராட முன்வரலாம் அல்லது முதலாளி வர்க்கங்களோடு சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்துக்கு வெளிப்படையாகத் துரோகம் செய்யலாம். அதாவது ஒரு மனிதனுக்கு நெருக்கடி வரும்போது அவருடைய உண்மையான நண்பர்களையும் போலியான நண்பர் களையும் அடையாளம் காண முடியும் அல்லவா,அது போலவே புரட்சி நடக்கும் போது உழைக்கும் மக்கள் தங்களுடைய உண்மையான நண்பர்கள் யார்? நண்பர்கள் போல் நடித்து உழைக்கும் மக்களை ஏமாற்றுபவர்கள் யார்? என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும்.

அமைதியான காலங்களில் உழைக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாத பல உண்மைகளையும் புரட்சி காலங்களில் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

புரட்சிகரமான போராட்டங்களில் மக்கள் ஈடுபடும்போது போராட்டத்தில் ஈடுபடும் வர்க்கங்களின் உண்மையான விருப்பங்களும் வர்க்கங்களின் நோக்கங்களையும் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்உதாரணமாக பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் ஓர் ஆண்டுக்கு மேலாக நடந்தது,அந்தப் போராட்டத்தை ஆய்வு செய்தால் இந்தியாவிலுள்ள விவசாய வர்க்கங்களின் விருப்பங்களையும்,அவர்களின் நோக்கங் களையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக விவசாய வர்க்கங்கள் ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் உறுதியாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் பின்னால் உறுதியாக நிற்ப்பார்கள்.ஆனால் சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பொதுவுட மைக்காகப் பாடுபட முன்வரமாட்டார்கள்.

விவசாய வர்க்கங்கள் ஆளுகின்ற பெருமுதலாளி வர்க்கங்களுக்கும் கிராமப்புற தொழிலாளிவர்க்கங்களுக்கு இடையில் ஊசலாடுபவர்களாகவே இருக்கிறார்கள்.ஆனாலும் இந்தவிவசாய வர்க்கங்களை கம்யூனிஸ்டுகள் சரியாக கையாண்டால் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் அணியில் சேர்த்து முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராட முடியும்.

புரட்சியில் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் மட்டும் அல்லது கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் மட்டும் ஈடுபடுவதில்லை பெருவாரியான உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களும் ஈடுபடுவார்கள். ஆகவே சமூகத்தில் நிலவும் அநீதிகளை புரட்சியானது முற்றிலும் ஒழித்துவிடும். மேலும் சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களுக்கு சிறந்த அரசியல் அறிவைக் கொடுக்கும்.

புரட்சியானது நமக்கு மட்டுமல்லாது பெருவாரியான மக்களுக்கும் கற்றுக் கொடுக்கும். ஆனால் புரட்சிக்கு கம்யூனிஸ்டுகளாகிய நாம் எதையாவது கற்றுக்கொடுக்க முடியுமா? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும்.உதாரணமாக ஓராண்டாக போராடிய விவசாயிகளின் போராட்டத்திலிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொண்டு எதிர்காலப் புரட்சிக்காக உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்டுகள் வழிகாட்ட முடியுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும்.இந்தக் கேள்விக்கு சரியான விடையை கண்டுபிடித்து உழைக்கும் மக்களை புரட்சிக்காக திரட்டுபவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டு ஆவார்கள்.

கம்யூனிஸ்டுகள் தங்களது லட்சியத்தில் வெற்றிபெற வேண்டுமானால் சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தை விஞ்ஞானப் பூர்வமான முறையில் மதிப்பீடு செய்வதும்,அதன் அடிப்படையில் போர்த்தந்திர செயல்தந்திரத் திட்டங்களை வகுத்து செயல்படுவதும், இந்தப்போர்த்தந்திர முழக்கங்களை மக்கள் ஆதரிப்பதற்காக பாடுபடுவதும் அதற்குப் பொருத்தமான முறையில் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்புகளையும்,மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்குவதும் ஆகிய பணிகளில் சமூக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலமே கம்யூனிஸ்டுகள் தங்களது லட்சியத்தை அடைய முடியும்.. தொழிலாளி வர்க்கத்திற்கும் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும் மார்க்சிய போதனை அளித்து அவர்களை ஒழுங்கமைப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.அத்தகைய போதனைகளின் மூலமே புரட்சிகர வர்க்கங்களை அணிதிரட்டி மக்களின் எதிரிகளை எதிர்த்துப் போராட முடியும்.இத்தகைய போதனை மற்றும் ஒழுங்கமைப்பதில் அரசியல் ரீதியாக நாம் எதனை முதன்மையாக கருத வேண்டும் என்ற கேள்வி நம்முன் உள்ளது.

தொழிற்சங்க வகைப்பட்ட சட்டப்பூர்வமான போராட்டங் களை முதன்மையாக கருத வேண்டுமா? ஆயுதமேந்திய புரட்சிகர எழுச்சிப் போராட்டங்களை முதன்மையாக கருத வேண்டுமா? புரட்சிகரமான படையையும் புரட்சிகரமான அரசாங்கத் தைப் படைப்பதற்கான செயல்பாடுகளை முதன்மையாக கருத வேண்டுமாஎன்ற கேள்விக்குப் பதில் ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது அனைத்துவகையானப் போராட்டங்களையும் நடத்திட மக்களுக்கு போதனை அளித்து பயிற்சி கொடுப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

தொழிற்சங்கவாதப் போராட்டங்களை மட்டும் நடத்துவதன் மூலம் தொழிலாளி வர்க்கமானது முதலாளி வர்க்கத்துக்கு துணை போக வேண்டுமா அல்லது புரட்சிகர வர்க்கங்களுக்கு தலைமை தாங்கிப் புரட்சிகரமான அரசியல் போராட்டங்களை தொழிலாளி வர்க்கம் நடத்தி தொழிலாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டுமா? என்ற கேள்விக்குப் பதில் தொழிற்சங்க வகைப்பட்ட போராட்டங்கள் நடத்துவதோடு கூடவே புரட்சிகர அரசியல் போராட்டத்தையும் தொழிலாளி வர்க்கம் நடத்திட வேண்டும்.திருத்தல்வாதிகள் பொருளாதாரப் போராட்டங்களையே புரட்சிகரப் போராட்டங்களாக்க கருதுகின்றனர்.

பொருளாதாரப் போராட்டங்களுக்குள்ளே யே தொழிலாளர்களை முடக்கி விடுகின்றனர். அவர்கள் நடத்தும் அரசியல் போராட்டம் என்பது தேர்தலில் ஓட்டு சேகரிப்பதற்கு மட்டுமே நடத்துகிறார்கள்,அதற்கு மேல் அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதில்லை.இந்த அரசு அமைப்பு முழுவதுமே உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானது ஆகவே இதனை தகர்த்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்கான அரசை தொழிலாளி வர்க்கம் அமைத்திட வேண்டும் என்ற அரசியலை தொழிலாளி வர்க்கத்துக்கு இவர்கள் ஊட்டுவதும் இல்லை.சாராம்சத்தில் இவர்கள் பொருளாதாரவாதிகளே கம்யூனிஸ்டுகள் இல்லை.

வெறுமனே நிகழ்ச்சிகளின் வழிப்போக்கில் பின்னடைந்து நடக்காமல் உதாரணமாக ஆட்சியில் உள்ளவர்கள் போடும் மக்கள் விரோத சட்டங்களை அவ்வப்போது எதிர்ப்பது போன்று ஆளும் வர்க்கத்தால் வழிநடத்தப்படும் வழியில் செயல்படாமல் உறுதியான மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் புரட்சிகரமான போர்த் தந்திரங்களை வகுத்து அதனை செயல் படுத்துவதற்கு குறிப்பான சூழலை மதிப்பீடு செய்து குறிப்பான செயல்தந்திரத்தின் மூலம் மக்களை வழிநடத்தும் கட்சிதான் உண்மையான பாட்டாளி வர்க்ககட்சியாக இருக்க முடியும் என்ற கருத்தை லெனின் முன்வைத்து ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்கு போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தின் அவசியத்தை உணர்த்துகிறார்.

கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்படும் போர்த்தந்திரங்களை ஒருசிலர் அல்லது ஒரு குழு ஏற்றுக்கொண்டால் போதாது.பாட்டாளிவர்க்க இயக்கத்தைச் சார்ந்த பொறுப்புள்ள பிரதிநிதிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

இங்குள்ள தி.மு.,காங்கிரஸ் போன்ற முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய புரட்சிகரமான கட்சியாக கம்யூனிஸ்டுக் கட்சி இருக்க வேண்டும் என்கிறார் லெனின்.ஒரு புரட்சிகரமான போராட்டங்கள் தன்னியல்பாக நடக்கும் போது இங்குள்ள அரசியல் கட்சிகளின் உண்மையான முகம் என்னவென்று உழைக்கும் மக்களுக்குத் தெரிந்துவிடும்.

அச்சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியானது மக்களின் நலனுக்கான கட்சி என்பதை மக்கள் உணரும்படி கம்யூனிஸ்டுக் கட்சியானது தனித்தன்மையோடு விளங்க வேண்டும். ரஷ்யாவில் லெனின் தலைமையில் செயல்பட்டவர்கள் போல்ஷ்விக் எனப்பட்டனர்.இந்த போல்ஷ்விக்குகளை எதிர்த்தவர்கள் மென்ஷ்விக் எனப்பட்டனர். ரஷ்யாவில் நடத்தப்பட வேண்டிய ஜனநாயகப் புரட்சிக்காக இவ்விரண்டு பிரிவினரும் வெவ்வேறான போர்த்தந்திர திட்டங்களை முன்வைத்தனர்.அவற்றில் போல்ஷ்விக் குகள் முன்வைத்த போர்த்தந்திரமானது மார்க்சியத்தின் அடிப்படையில் உருவாக் கப்பட்டது.மென்ஷ்விக்குகளின் போர்த்தந்திரம் மார்க்சியத்தை மறுத்த திருத்தல்வாதப் போர்த்தந்திரமாகும் என்பதை விளக்குவதற்காகவே லெனின் இந்த நூலை எழுதினார்.இதனை படித்துப் புரிந்துகொள்வதன் மூலமே இந்தியாவில் மார்க்சிய வகைப்பட்ட போர்த்தந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் உண்மையானகம்யூனிஸ்டுக் கட்சி எது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

புரட்சிகரமான போர்த்தந்திரத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதாது. மார்க்சிய கோட்பாட்டு நிலையிலிருந்தும்,புரட்சியின் படிப்பினைகள் அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்ட அனுபவங்களின் அடிப்படையி லிருந்தும் கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட போர்த்தந்திரத்தை நடைமுறைப்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டும். அதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட போர்த்தந்திரம் சரியானதா அல்லது தவறானதா என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.போர்த்தந்திரம் சரியானது என்றால் சோதனையில் வெற்றி கிடைக்கும். போர்த்தந்திரம் தவறானது என்றால் தோல்விதான் கிடைக்கும். சரியான போர்த்தந்திரத்தை தொடர வேண்டும்.போர்த்தந்திரம் தவறானது என்றால் நமது தோல்வியிலிருந்து படிப்பினை பெற்று போர்த்தந்திரத்தைமாற்றியமைக்க வேண்டும். -தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்