இதுவரை வெளியான இலக்கு இணைய இதழ்களை அதற்குறிய எண்ணை அழுத்தி பத்திரிக்கையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து வாசிக்க முடியும் மேலும் தேவைப்படும் பகுதியை PRINT செய்துக் கொள்ள முடியும் தோழர்களே...
மாதமும் இருமுறை வெளியாகும் இலக்கு இணைய இதழ் மார்க்சிய- லெனியத்தின் அடிப்படை புரிதலை உருவாக்குவதும் அதனூடாக மார்க்சிய அறிவுஜீவிகளிடையே விவாதிப்பதும் என்ற அடிப்படயில் தொடங்கிய இதழ் ஓராண்டை நெருங்கிவிட்டது ஆரம்பகட்டத்தில்குறுங்குழுவாதிகளிடமிருந்தும் தனிநபர்வாததிலிருந்தும் சில விவாதங்கள் வந்தன அவை விமர்சனம் அல்ல காழ்புனர்ச்சியே. அதற்கு பதிலளித்த பின்னர் ஏனோ யாரும் நேரடியாக விவாதிக்க வருவதில்லை?
இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஒன்றுபட்ட இடதுசாரி இயக்கங்களின் அவசியமுள்ளது, எல்லோரும்தான் பேசுகின்றனர் ஆனால் ஒன்றிணைய தயக்கம் ஏனோ?
ஒரே அமைப்பிலிருந்து வெளியேறிய மா-லெ குழுக்கள் பல்வேறு பெயர்களில் இயங்குவதன் பயன் என்னவோ? ஆளும் வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணிக்கு தயாராகும் கட்சி, "பாராளுமன்றம்" பற்றி என்ன வரையறையோ தெரியவில்லை "நாங்களும் நக்சல்பாரி" பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு தெரியும் என்பவர்கள் நமது ஆசான்களின் வழிகாட்டுதலை ஏற்றதாக தெரியவில்லை. நேரமிருந்தால் பாராளுமன்றத்தில் பங்கு கொள்வதை பற்றி நமது ஆசான்களின் கோட்பாடுகளை பாராளுமன்றத்தை கையாளுவதை பற்றி (இந்த பகுதியை அழுத்தி கட்டுரையை வாசிக்கவும்).
இது போன்ற அப்பப்பொழுது எழும் சிக்கலை குறித்து இலக்கில் விவாதித் துள்ளோம் அதன் நிறைகுறைகளை சுட்டிக் காட்டுங்கள். கட்டுரை எழுதி அனுப்புங்கள். மார்க்சிய அடிப்படையில் இந்த சமூக சிக்கலை அணுக ஆங்கில கட்டுரைகளை மார்க்சியத்தை வளர்க்க பயன்படுமாயின் அனுப்பி வையுங்கள் தோழர்களே.
முயற்சி செய்தால் முடியாதது இல்லை எங்களை நாங்களே வளர்த்துக் கொண்டு எழுதி பயிற்சி பெற்றும் மார்க்சிய லெனினிய புரிதலோடு அணுகவும் முயற்சித்துக் கொண்டுள்ளோம்.
நாளைய விடியலை நோக்கி எங்கள் பயணத்தை துவங்கியுள்ளோம் அதன் வெற்றி நிச்சயம் நடைமுறையில் சாதிக்கும்.
நம் இணையதளத்தில் இருந்தே எல்லா படைப்புக்களையும் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பகிரலாம் கருத்திடலாம் லைக் செய்யலாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நேரடியாக நூல் வடிவில் வாசித்துக்கொள்லாம்.
தங்கள் நிறை குறைகளை CPALANI.CPALANI@GMAIL.COM என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள் அல்லது WHATAPP எண் 9095136356 என்ற எண்ணிலும் உங்கள் கருத்துகளை பகிரலாம்.
தோழமையுடன் இலக்கு ஆசிரியர் குழு.
No comments:
Post a Comment