தோழர்களே நான் ஜாதியம் பற்றிய தொடர் எழுத ஆரம்பிக்கும் பொழுது எனக்கு அருகாமையிலிருக்கும் தோழர்களே எதிர்ப்பு தெரிவிக்கவே சேகரித்தவையை அப்படியே விட்டுவிட்டேன் தொடர்ந்து இலக்கில் எழுத தேடிக் கொண்டிருக்கும் பொழுதும் அகழ்வாரய்ச்சி பற்றி வகுப்பு நடத்துவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் கலந்துக் கொள்ளுங்கள் என்று ஒரு அறிவிப்பு அதை பயன்படுத்திக் கொள்ள தூண்டியது இறுதியில் அவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிலும் 50 பேர் மட்டுமே ஏற்றுக்கொண்டனர். பின்னர் எங்களை போன்றோரின் வலியுறுத்துதலால் அதே பாட திட்டத்தை ஆன்லைன் வகுப்பாகவும் நடத்தினர். அதில் நான் பல கற்க பயன்பட்டது அவை இன்றைய ஜாதியம் தேடலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிலிருந்தே பகிர்கிறேன் தோழர்களே.
நாலு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் முதன்முதலாக இரண்டு கால்களில் நடக்கின்றன (ஆஸ்ட்ரலோபிதிகஸ்).
1.5 மில்லியன் முதல் 0.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு - முழுமையான மனித இனம் (ஹோமோ எரக்டஸ்) கல் மர எலும்பு ஆயுதங்கள் . ஆரம்ப பழையகற்காலம் .
400000 முதல் 300000 ஆண்டுகளுக்கு முன்பு. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நியாண்டர்தால் மனிதர்கள் கலாச்சாரத்தின் அறிகுறி மொழி பயன்படுத்திருக்கலாம்.
150000 ஆண்டுகளுக்கு முன்பு-முதல் நவீன மனிதர்கள் (ஹோமோ சேபியன்) ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கலாம் இரை தேடி வாழ்தல் (வர்க்கம் அரசு பாலின ஒடுக்குமுறை இல்லாமல் சிறு நாடோடி குழுக்களாக) மத்திய பழைய கற்காலம்.
80000 முதல் 14000 ஆண்டுகளுக்கு முன்பு - நவீன மனிதர்கள் மத்திய கிழக்குக்கு வருகை (80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) .ஆஸ்திரேலியாவை தாண்டுதல் (40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ).ஐரோப்ப வருகை ( 30 ஆயிரம் ஆண்டுக்கு முன் ).அமெரிக்க உருவாதல் (14,000 ஆண்டுகளுக்கு முன்). பிற்கால பழைய கற்காலம் .
13000 ஆண்டுகளுக்கு முன்பு சில 100 பேர் உள்ள குழுக்களாக மனிதர்கள் கிராமங்களில் வசிக்க பருவநிலை அனுமதிக்கிறது அவர்கள் தொடர்ந்து இரைதேடி தான் வாழ்கிறார்கள் மத்திய கற்காலம் (மிஸோ லித்திக் ).
10000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் விவசாயிப் விவசாய புரட்சி தாவரங்களை விலங்குகளை பழக்கி வசப்படுத்துதல். புதிய கற்காலம் ( நியோ லித்திக்). கிராம வாழ்க்கை பரவுதல் குழுக்களிடையே முதன்முறையாக போர் இப்போதும் அரசு வர்க்கம் என்ற பிரிவினை தோன்றவில்லை.
7000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கலப்பை பயன்படுத்தப்படுகிறது விவசாயம் வடமேற்கு ஐரோப்பா அடைகிறது. சில குழுக்களில் தலைவர் இருக்கிறார் ஆனால் வர்க்கங்களோ அரசுகளோ இல்லை.
6000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நைல் நதிக்கரை சமவெளிகளில் "நகரப் புரட்சி" சிலர் செம்பை பயன்படுத்துகின்றார்கள்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 3000) -மெசபடோமியாவிலும் பழைய ராஜ்ஜியமான எகிப்திலும் அரசுகள் உருவாக்கம். முதல் எழுத்துக்கள் வெண்கலம் கண்டுபிடிப்பு. சமூகம் வர்க்கங்களில் மதம் தொடர்பான படிநிலைகளில் கோவில்களில் தெளிவான பிரிவுகள்.
4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 2500 முதல் 2000 வரை )
சிந்து சமவெளி நகர அரசுகள் வளர்தல் மத்திய கிழக்கு ஒன்று படுத்த சர்கோன் முதல் பேரரசை உருவாக்குதல். மேற்கு ஐரோப்பாவில் எகிப்திற்கு தெற்கே நூபிய நாகரிகம் தோன்றியிருக்கலாம்.
4000 ஆண்டுகளுக்கு முன்பு (சுமார் கி.மு 2000 ).
இருண்ட காலம் மெசப டோமியா அரசும் எகிப்திய பழைய அரசும் சிதைதல். ஆசிய மைனாரில் தாதுவிலிருந்து இரும்பு எடுக்கப்படுதல்.
4000 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்பு ( கி.மு 2000 முதல் 1600 வரை).
கிரிஸில் மினோ நகரத்தின் தோற்றம் மத்திய அரசின் மூலம் எகிப்தும் ஹமுராபியின் கீழ் மெசபடோமிய அரசும் புத்ததுயிர் பெறுதல். வடக்கு சீனாவில் நகர நாகரிகம் வேகம் பெறுதல் கிரேகத்தில் மைசீனிய நாகரீகம் .
3600ஆண்டுகளுக்கு முன் (கிமு 1600) -மத்திய அரசு இரண்டாம் இடைக்கால காலகட்டத்தில் நுழைந்தது அடுத்த வீழ்ந்ததால் எகிப்தில் பிரச்சனை கிரீடம் சிந்து சமவெளி பின்னர் மைசூன நாகரிகங்கள் வீழ்ச்சியால் இருண்டு காலம் இப்பகுதியில் பகுதியில் எழுத்தறிவு மறைகிறது வெண்கலக் கற்காலம்.
(ஆதாரம் உலக மக்களின் வரலாறு கிரிப்ஸ் ஹார்மன் வெளியீடு பாரதி புத்தகாலயம்) .
இந்திய ஆட்சி அதிகாரம் மாறி நூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை ஏன் மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் கூட முடியவில்லை எத்துனை மாற்றங்கள் இவையெல்லாம் இயங்கியல் ரீதியாக வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டம் இருந்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன் அடிமை பட்டிருந்தமைக்கு வரலாற்று ரீதியாக தேடாமல் கருத்து ரீதியாக தேடி இயங்கா நிலையில் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான் தோழர்களே.
நான் எழுதிக் கொண்டிருக்கும் ஜாதியம் தேடலுக்கு பயனளிக்கும் என்றே இதனை எழுதுகிறேன் தோழர்களே.
பைபிள் மூலமாக உருவான வர்ணபகுப்பு, ஐரோப்பிர இன சித்தாந்தங்களை ஆட்டிப் படைத்தது: பைபிள் மூலங்களில் நோவாவுக்குப் பிறந்தவர்கள் – செம், ஹாம் மற்றும் ஜாபெத் என்ற மூன்று சகோதரர்கள் வர்ண அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள் எப்படி வெவ்வேறான நிறங்களில் – கருப்பு, பழுப்பு, வெண்மை – பிறந்தனர் அல்லது ஜேஹோவா அவர்களை படைத்தார் என்ற ரகசியத்தை வெளியிடவில்லை. அதை தொடர்ந்து, ஐரோப்பியர்கள், பெரிய-பெரிய சித்தாந்திகள், தத்துவவாதிகள் மற்றும் விஞ்ஞானிகளால் ஏற்றுகொள்ளப்பட்டது. பிராங்கோயிஸ் பெர்னியர் 1684ல் அந்த நோவா மூலம் பிறந்த கதையின் படி, மனிதகுலத்தை, புறத்தோற்றங்களினால் பிரித்தார்(ஆதாரம் இந்த இணைப்பில்)). கார்ல் லென்னேயிஸ் அதனை விவரித்து,
- சிகப்பு கலர் முடி கொண்ட வட-அமெரிக்கர்,
- சைகப்பு-பழுப்பு கலர் முடி கொண்ட தென்-அமெரிக்கர்,
- வெள்ளை மற்றும் மஞ்சள் முடி கொண்ட ஐரோப்பியர்.
- கரி நிறங்கொண்ட கருப்பு முடி ஆப்ப்பிரிக்கர்
- பழுப்பு-கருப்பு நிற முடி கொண்ட ஆசியர்.
என்று பிரித்து, அவற்றையே இனமாக மாற்றினார்.

வெள்ளைர் உயர்ந்தவர் என்றால், அவர்களுக்குள் யுத்தம் உண்டானது ஏன்?: யூதமத மூலம் என்றாலும், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் இப்புராணகதைகளை நம்பி, ஆதாரமாகக் கொண்டுள்ளன. அதாவது, ஜெர்மனியில் நிறவெறி சித்தாந்தம் வளர்ந்து ஹிட்லர் மூலம் வெளிப்பட்டு, யூதர்களை கொன்றுக் குவித்ததாக சரித்திரம் எழுதப் பட்டுள்ளபோது, இனவெறி சித்தாந்தம் எப்படி வெள்ளையர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியது என்பதை, அறிவுஜீவிகள் நினைத்துப் பார்ப்பதில்லை. வெள்ளையர்களிடையே ஜெர்மானியர் உயர்ந்தவர்கள் என்று போர்களை உருவாக்கியது ஹிட்லர் என்றால், இங்கிலாந்து ஏன் தொடர்ந்து பிரெஞ்சு நாட்டுடன் போரிட்டுக் கொண்டிருந்தது என்பதனை அறிவிஜீவி பண்டிதர்கள் விளக்கவில்லை. கிருஸ்டோபர் மைனர்ஸ், வெள்ளை காகசஸ் இனத்தவர் தான் உயர்ந்தவர் என்ற புத்தகங்களில் அவற்றைக் காணலாம். போதுவாக தங்களது உயர்வான நிலை, ஞானம் முதலியவற்றைப் பிரகடனப் படுத்திக் கொள்ள அத்தகைய இனவெறி சித்தாந்தங்களை உருவாக்கினாலும், தங்களது காலனிய ஆதிக்கம், அடிமை வியாபாரம், கொள்ளை முதலியவற்றை நியாயப்படுத்த அவை உபயோகப்படுத்தப் பட்டன. காகசஸ் மலையில் உருவாகி வந்தவர் என்ற எண்ணம், நம்பிக்கை அவர்களிடம் அதிகமாகவே இருந்தன. உலக போர்களுக்குப் பிறகு, இனம் கட்டுக்கதை என்று அறிவிக்கப்பட்டது.இந்தியாவில் மட்டுமே அல்ல இன பாகுபாடு உலகளவில் புரிந்துக் கொள்ள இது எழுத்து இவர்களின் கருத்தாக்கங்களே தேவைக் கருதி பயன்படுத்தியுள்ளேன் தோழர்களே.
No comments:
Post a Comment