மணிபூரில் என்ன நடக்கிறது

 மணிபூர் மக்கள் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பெரும் போராட்டம் நடத்தி வெளியேற்றினர். இன்றோ அங்கே துணை இராணுவப் படையான அசாம் ரைப்பில்ஸ் உள்ளது. அவையும் குறிக அளவிலே. அன்று இந்திய வெளியேற்ற போராடிய மக்களையே இன்று இராணுவத்தை அனுப்பி வைத்து எங்களை காப்பாற்றுங்கள் என்கின்றனர்... இந்த சதியை நீங்கள் எப்படி புரிந்துக் கொள்வீர்கள்????


பிஜேபியின் இட ஒதுக்கீடு திட்டம் என்பது "பிரிதாளும் சூழ்சியை" புரிந்துக் கொள்ளாமையே. முதலில் அங்கிறிருந்த பழங்குடிகளுக்கிடையில் முரணை ஏற்படுத்தி மோதவிட்டது. பின் ஒருத்தரை ஒருதர் கொன்று குவித்தபின் குற்றம் யார் மீது சுமத்துவது???

மக்களுக்கு நிலையான வேலை வாய்ப்பை வழங்க வக்கற்ற இந்த ஆட்சியாளர்கள் மக்களை இந்த இடஒதுக்கீடு என்ற தூண்டிலில் சிக்க வைத்து ஏமாற்றி கொண்டுள்ளனர். எல்லோரையும் வாழ வழிவகை செய்யும் வேலை உத்தரவாதம் கொடுக்க முடியாத அரசு மக்களுக்கான அரசே அல்ல.
அதனை புரிந்து செயல்பட வேண்டாமோ????
+++++++++++++++++
இனி செய்திதாளிலிருந்து
நாங்கூம் கிராம அபிவிருத்திக் குழுவின் தலைவர் இபுங்கோபி செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், இன மோதல் தொடங்கியதில் இருந்து, தீவிரவாதிகள் எப்போது தாக்குவார்கள் என்று தெரியாமல் கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

வகுப்புவாத மோதல் தொடங்கியதில் இருந்து, கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படவில்லை என்றார். பகல் நேரத்தில், சில மாநில கமாண்டோ படைகள் குறுகிய நேரம் ரோந்துக்காக கிராமத்திற்கு வந்தன, ஆனால் இரவில் அவர்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகள் இல்லை என்றார்.

தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய சிலர், அதிநவீன ஆயுதங்களுடன் அருகிலுள்ள மலையுச்சியில் காணப்படுவதாக அவர் கூறினார்.

தற்போதைக்கு கிராமத்தில் மாநில அல்லது மத்திய துணை ராணுவப் படைகளை வழங்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், கிராம மக்களின் பாதுகாப்பிற்காக நிரந்தர போலீஸ் அவுட்போஸ்ட் அமைக்க மாநில அரசை வலியுறுத்தினார்.
முழுமையாக செய்திதாளில் வாசிக்க..............
https://www.ifp.co.in/manipur/manipur-unrest-helpless-against-militant-attack-nongshum-villagers-demand-security-post

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்