மணிப்பூரில் வன்முறை இணையதள சேவை துண்டிப்பு- ஏன்?

உண்மையில் போரளிகளையும் போராட்டத்தையும் புரிந்துக் கொள்ள அந்த போராட்டதின் வர்க்க அடிப்படை புரிந்திருக்க  கண்டிருக்க வேண்டும்.

இன்று மணிபூர் பற்றி எறிகிறது, அதன் போராட்ட களத்தை நீங்கள் அறிந்திருந்தால் இன்றைய பின்னடைவு பழங்குடிகளுகிடையில் இந்த மோதல் புரிந்துக் கொள்ள முடியும்.

வட கிழக்கு மாகாணங்கள் பூகோள ரீதியிலும் சமூக ரீதியிலும் வேறானவை மற்ற இந்திய பகுதியை விட. இங்கே சாதிகளுக்கிடையே சண்டை மூட்டிக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கம் அங்கே பழங்குடி மக்களுகிடையில் பூசலை உண்டாக்கி அவர்களிக்கிடையில் மோத வைத்துள்ளது.

இங்கே தமிழ் தேசியம் பேசுவோர் அல்லது தனித் தமிழ்நாடு பேசுவோர் சற்று இங்கே என்ன நடந்தது என்றாவது புரிந்திருந்தால் சிறப்பு.

ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருந்த மக்களை இன்று பிரித்து வைத்து மோத வைத்த தந்திரத்தை அறிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் கற்பனையில் மிதக்க வேண்டியதுதான்.

இம்பாலை தவிர்த்து மற்ற பகுதி மலை பகுதிகளே. தமிழாங்க் என்றொரு மாவட்டமுள்ளது அடுத்து மோரேதான் ஆம் பர்மா தமிழர்கள்.

மணிபூரில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

அதற்கு அடுத்து தடௌஸ்(குக்கி) மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது

சரி தோழர்களே செய்திதாளில் உள்ள செய்திகளே  கீழே.... இவை விமர்சன பூர்வமாக புரிந்துக் கொள்ளுங்கள் தோழர்களே ....

செய்திதாள் எவ்வளவு பொய்யாக பேசுகிற்து பாருங்கள்.

 மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மைத்தி என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது.

மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இம்பால், மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் உள்ள மாவட்டமான சவ்ரசந்திரபூரில் இரு தரப்புக்கும் இடையே நேற்று கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது. இந்த மோதலின் போது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. தெருக்களில் இருந்த கார்கள், பைக்குகள், கடைகளுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இந்த வன்முறை மெல்ல அண்டையில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறை சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் கலவரம் தொடர்பான காட்சிகளும் பகிரப்பட்டதால் கலவரம் மெல்ல மெல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது.  இதனை தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரம் தொடர்பான வீடியோக்கள், போலி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்