இலக்கு 11 இணைய இதழ் PDF வடிவில்

லக்கு 11 இணைய இதழ் PDF வடிவில் இந்த பகுதியை அழுத்தி இதழை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் தோழர்களே 




மார்க்சியவாதிகள் இரு பிரிவினராக உள்ளனர். இரு பிரிவினருமே மார்க்சியக் கொடியின் கீழ்தான் வேலை செய் கின்றனர். இரு பிரிவினரும் தம்மையே “உண்மையான” மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொள்கின்றனர். இருந்த போதிலும், அவர்கள் எந்த விதத்திலும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மேலும், அவர்களுக்கிடையில் மலைக்கும் மடுவுக் குமான பெருத்த வேறுபாடு உள்ளது. ஏனெனில், அவர்களது வேலைமுறைகள் ஒன்றுக்கொன்று நேரெதிரானவையாக உள்ளன. முதல் பிரிவினர், வெளிப் பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்; இவர்கள் மார்க்சியத்தின் பெயரில் ஒப்புக்கு சூளுரைப்பவர்களாக உள்ளனர். மார்க்சியத்தின் சாரத்தை கிரகித்துக் கொள்ள இயலாதவர்களாக அல்லது விருப்ப மற்றவர்களாக அவர்கள் உள்ளனர்; மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த இயலாதவர்களாக அல்லது விருப்ப மற்றவர்களாக அவர்கள் உள்ளனர். இதனால், மார்க்சியத்தின் உயிரோட்டமான – புரட்சிகரமான கோட்பாடுகளை, உயிரோட்டமற்ற – பொருளற்ற சூத்திரங்களாக அவர்கள் மாற்றி விடுகின்றனர்.


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்