இந்திய இடதுசாரி இயக்கங்களுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

இடதுசாரி இயக்கங்களில் உள்ள சிக்கல்கள் வகுப்பை ஒலி வடிவில் கேட்க்க இந்த லிங்கை அழுத்தி கேட்க்க முடியும் தோழர்களே

தோழர்களுக்கு வணக்கம் இன்றைய வகுப்பில் நாம் இடதுசாரி இயக்கங்கள் இன்று சந்தித்துக் கொண்டுள்ள பல்வேறு சிக்கல்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். இடதுசாரி கட்சி மற்றும்  இயக்கங்களுக்குள்ளும் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்குகள் மேலோங்கி உள்ளதையும், ஒரு புரட்சிகர கட்சி அதன் அமைப்பு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் என்று விவாதிக்க உள்ளோம்.

முதலில் கட்சி அமைப்பு முறை பற்றிய நமது ஆசான்களின் கருத்துக்களை பார்ப்போம்.1).கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சி அடைந்து பிரிவாகும்;இது அந்த வர்க்கத்தின் முன்னணி படையாகும் அந்த முன்னணி படையின் வலிமை அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஒரு 100 மடங்கு அதிகமானதாகும் நூறு மடங்கு அதிகமானதாகும்.( லெனின் தொகுப்பு நூல்கள் தொ19. ப 406 ).

வரலாற்றில் தனக்குரிய பாத்திரத்தை உணர்ந்து கொள்கிற பாட்டாளி வர்க்கம், மற்ற சுரண்டப்படும் வர்க்கங்களின் முன்னணி படையாக தன்னை அமைத்துக் கொள்கிறது. இந்த வர்க்கங்களில் முதன்மையானது குட்டி முதலாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் அவ்வர்க்கங்களுக்குரிய தலைமையை வழங்குகிறது ; அவர்களது ஆதரவை வென்றெடுக்கிறது அதேவேளை அந்த வர்க்கங்கள் தம்முடன் இயக்கத்துக்குள் கொண்டு வரும் ஊசலாட்டங்களையும் திசை விலகல்களையும் எதிர்க்கிறது. பாட்டாளி வர்க்கமே ஒரு சுதந்திரமான பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையின் கீழ் அமைப்புக்குள்ளாக்கப்பட்டு இருந்தால் தான் அதை சாதிக்க முடியும். (லெனின் தொகுப்பு நூல்கள் தொ 7 , ப 415 ).

முன்னணி படை என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக கட்சியானது பாட்டாளி வர்க்கத்துக்கும் குட்டி  முதலாளி வர்க்கத்திற்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளே இருக்கிற பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். (லெனின் தேர்வு நூல்கள் தொ 31, ப 74 ).

ஜனநாயக மத்தியத்துவம் 

கட்சிக் கட்டுப்பாடு மத்தியத்துவப் படுத்தப்பட்ட தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இம்முறையில் விவாத சுதந்திரமும் விமர்சன சுதந்திரம் செயல் ஒற்றுமையுடன் இணைக்கப்படுகின்றன. கீழ் அமைப்புகள் மேல் அமைப்புகளை தேர்ந்தெடுக்கின்றன மேல் அமைப்புகளுக்கு கட்டுப்படுகின்றன. பெரும்பான்மையோர் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு வர்க்க உணர்வு உள்ள தொழிலாளியும் தொழிற்சங்கப் போராட்டத்தில் பெற்ற அனுபவத்துக்கு பொருத்தமாக கோட்பாடுகள் அமைகின்றன.

செயல் ஒற்றுமை விவாத சுதந்திரம் விமர்சன சுதந்திரம் இத்தகைய கட்டுப்பாடு தான் வளர்ச்சி அடைந்த வர்க்கத்தின் ஜனநாயக கட்சியின் மதிப்புக்கு  உகந்தது. பாட்டாளி வர்க்கத்தின் வலிமை அதன் அமைப்பில் பொதிந்துள்ளது. மக்கள் திரளினர் அமைப்புக்குள் கொண்டுவரப்படாவிட்டால் பாட்டாளி வர்க்கம் ஒன்றும் இல்லாததாக இருக்கும்...

அமைப்பு என்பது செயல் ஒற்றுமை நடைமுறை காரியங்களில் ஒற்றுமை எனவே விவாதிப்பதற்கும் விமர்சிப்பதற்கான சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை என்பதை பாட்டாளி வார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. (லெனின் தேர்வு நூல்கள் தொ 11, ப 320).

குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிற பல்வேறு பலவீனங்களை கொண்டுள்ளது என்பது மட்டுமல்ல பாட்டாளி வர்க்க தலைமையை இழக்கும் போது தாராளவாத முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கின் கீழ் அது அடிக்கடி திசை மாறி வீழ்ந்து அவர்களது கைதி ஆகிறது.

கட்சிக்கு வெளியே உள்ள குட்டி முதலாளிய மக்கள் திரளுடன் உறுதியான பரந்த நேச அணியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் ஒரு புறம் அவர்களை கையாளுவதில் இணங்கிப் போக வேண்டும் . மறுபடியும் அவர்களுடன் நமக்குள்ள கூட்டை வலுப்படுத்துவதற்காக பொருத்தமான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும் (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தொ 3, ப 214 ).

பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே இன்னொரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் முதலில் இந்தப் பக்கமும் பிறகு அந்தப் பக்கமும் சாய்வார் இது எல்லாப் புரட்சிகளும் எப்போதும் நிகழ்ந்துள்ளது.  பெரும் உடமையாளர்களால் அவன்  சுரண்டப்படுவதன் காரணமாக அவன் நாசம் அடைந்து பாட்டாளி வர்க்கத்தினுள் தூக்கி ஏறியப்படும் ஆபத்தில் இருக்கிறான் . போட்டியிடும் இரண்டு முதன்மையான வர்க்கங்களுக்கு இடையே நிலையற்ற இடத்தை பெற்றுள்ள அவனிடம் ஊசலாடும் போக்கு உள்ளது. ஆக பாட்டாளி வர்க்கம் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக குட்டி முதலாளித்துவ போக்கிற்கு எதிரான போராட்டம் அவசியமாகின்றது.  

------

இரண்டாவதாக நாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று குறிப்புகளை பார்க்கும் பொழுது அவர்களின் தியாகம் அர்ப்பணிப்பு என்பது அளப்பரியத்தக்கதாக இருந்தாலும் அவர்களின் செயல்பாடு ஆனது உலக அளவில் நடந்தேறிய வரலாற்று வழியில் இல்லை என்பது கண்கூடானது. பாரிஸ் கம்யூனின் படிப்பினையின் அடிப்படையிலோ ஏன் ரஷ்ய புரட்சி சீனப் புரட்சி இவற்றின் படிப்பினையின்  அடிப்படையிலோ இங்குள்ள இடதுசாரி இயக்கங்கள்  செயல் இல்லை என்பதே இங்கு காணக் கிடைத்தவை.

மூன்றாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்டப்பட்ட அடிப்படையில் சரியானது என்றும் இருப்பினும் கட்சி கட்டப்பட்ட விதம் சரியல்ல அதாவது விஞ்ஞான பூர்வமல்ல என்கிறது மக்கள் யுத்தம் 1988சிறப்பு கூட்ட அறிக்கை. உண்மையில் இந்தியாவில் நிலவும் ஆட்சி முறையையும் மையப்படுத்தப்பட்ட அரசு இயந்திரத்தையும்  

அதனைப் பற்றி தோழர்கள் விரிவாக பேசினார்கள்.

__________________

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டு இருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.

மார்க்சிய தத்துவம் இதர தத்துவங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுகிறது மற்ற மார்க்சியமல்லாத தத்துவங்கள் எல்லாம் அரசியல் அதிகாரத்தில் உள்ள அறிவாளிகளுடன் ஒன்று கூடியுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய மேட்டுக்குடி அறிவாளிகளோடு மட்டுமே சுருங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களது வர்க்க நலனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொருட்டு தமது பிரஜைகள் மீது தமது தத்துவங்களை திணிப்பார்கள். ஆனால் மார்க்சிய தத்துவம் பரந்துபட்ட மக்களுடையது. உண்மையில் இந்த தத்துவமானது பெரும்பான்மையான உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களினுடைய தத்துவ  கண்ணோட்டம் ஆகும்.

பாட்டாளி வந்த சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இந்தத்துவத்தின் பால்  அவர்களை  கிரகித்து அவர்களை புரிய வைத்தலும். உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து ஒரே அடியாகத்  துடைத்தொழிப்பர். மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுடைய பணி என்கின்றோம். 

மக்களிடையேலான் பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல் தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.

ஆக மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் தங்களது அணிகளுக்கு மட்டும் இன்றி பரந்த பட்ட திரளான மக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் உழைக்கின்ற மக்கள் பெருந்திரளாக இந்த கண்ணோட்டத்தை கிரகித்து முதலாளித்துவ கண்ணோட்ட நிராகரிக்காத வரையில் எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.

அதாவது மக்களிடையே நடைமுறை பிரச்சனை என்பது ...

மக்கள் என்பவர் யார்?

மக்களிடையே கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?

மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதில்  என்ன முறைகளை கையாள வேண்டும்?.

எனும் மக்களில் என பணியில் தான்,  மக்கள்தான் உண்மையான இரும்பு கோட்டை இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது என்ற மாவோ கூற்றை புரிந்துகொண்டு இந்த இரும்பு கோட்டை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடக்கி பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்தியாக வாய்ந்த இரும்புக்கோட்டையாக நிறுவ வேண்டும். இவைதான் கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செய்ய வேண்டிய பணியின் முக்கியமானதாகும்.

மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் இவைதான் நமக்கு போதிக்கின்றது ...

--------—


.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்