கம்யூனிஸ்ட் கட்சியும் ஊழியர் கொள்கையும்- 2 - சிபி

 முந்தைய இதழின் தொடர்ச்சி ...


ஒரு ஒரு அமைப்பில் பணியும் கடமைகளும் தெளிவாக வகுக்கப்படவில்லை என்றாலோ, வேலை பிரிவினை முறையாக செயல்படவில்லை என்றாலோ வேலை முறையும் பொறுப்புகளை வழங்குதலும் ஒன்றாக வரையறை செய்யப்படவில்லை என்றாலோ பல்வேறு பகுதிகளுக்கு இடையில் உறவுகள் சரியாக இல்லை அவற்றுக்கிடையில் நல்லிணக்கமும் இல்லை என்றாலோ அதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நபரும் செயலாற்றவராகவோ அல்லது திறமை அற்றவராகவோ ஆகிவிடக் கூடும். ஏனெனில் அவ்அமைப்பு ஒரு பலவீனமான அமைப்பாக இருக்கின்றது . நாம் அமைப்பு பணியை செம்மையாக செய்தால் ஒழிய, அமைப்பை நன்றாக புரிந்து கொண்டு அதை உறுதியாக கட்டுப்படுத்தினால் ஒழிய நம்மால் ஊழியர் பணியை செம்மையாக செய்ய முடியாது.ஊழியர் பணி அமைப்பு பணியோடு நெருக்கமாக இணைந்து இருக்கின்றது மறுபுறம் ஒரு அமைப்பை எவ்வாறு நடத்த வேண்டும் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறும்போது ஒரு அமைப்பின் கட்டுமானம் நிறுவனம் நபர்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதையும் இயக்குவதையும் பற்றி மட்டுமே கூறவில்லை. அத்துடன் அவ்வமைப்பின் பணி கடமை வழி நோக்கம் மற்றும் அதன்வேலைமுறையாகியவற்றை நாம் ஆழமாக உணர்ந்து இருக்க வேண்டும் தெளிவாக கிரகித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இருக்கும் போது தான் ஊழியர் பணியை செம்மையாக செய்ய முடியும். என்னென்ன பணிகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை ஊழியர்கள் எந்த வகையான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற வினாவிற்கு விடை காண்பது ஊழியர்களைப் பற்றிய சரியான முடிவை அடைவதற்கு துவக்க புள்ளியாகும்.

அமைப்பின் தேவைகளின் அடிப்படையில் ஊழியர்களை அமர்த்தும் போது தான் நபர்களைப் பற்றி நாம் முழுமையாகவும் துல்லியமாகவும் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய நபர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை (அளவுகோல்களை) சரியாக வகுக்க முடியும்.

என்ன வேலைகளை எத்தனை வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும். எதையெல்லாம் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். என்ன விதிமுறைகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். யாருக்கு அவர்கள் பொறுப்பாளி அவர்களுடைய பொறுப்புகளும் அதிகாரங்களும் என்ன?. பிற ஊழியர்களுடன் அமைப்புகளுடன் அவர்களை எவ்வாறு சம்பந்தப்பட்டிருக் கிறார்கள்? அவர்களை நியமிப்பதற்கும் விலக்குவதற்கும் உரிமை பெற்றவர் யார்?. இன்னும் பிற இந்த விதிமுறைகளை நடைமுறையில் பிரயோகிப்பதன்மூலமாகத்தான் நம்மால் ஒரு ஊழியரை கண்காணிக்கவும் சோதிக்கவும் அவருடைய திறமைகளையும் தகுதிகளையும் ஒழுக்க நெறிகளையும் அறிந்து கொள்ள முடியும்.

ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையிலும் ஊழியர்களுக் கும் அமைப்பிற்கும் இடையிலும் ஊழியர்களுக்கும் புரட்சிகர வெகுஜன இயக்கத்திற்கும் இடையிலும் நிலவுகின்ற நெருங்கிய ஒரு இயக்கியல் ரீதியான உறவுகளைப் புரிந்து கொண்டு தோழர் மாவோவினால் வகுத்து கொடுக்கப்பட்ட ஊழியர் கொள்கையை நாம் குறிப்பாக நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்படுத்த வேண்டும் .

மேலும், மாவோவினால் முன்வைக்கப்பட்ட ஊழியர் கொள்கைகள் முக்கியமான அம்சமாக ...

1). தலைமை உறுப்பினர்களுக்கு இரண்டு பொறுப்புகள்

தலைமை உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைப்பது ஊழியர்களை உபயோகிப்பது என்று இரண்டு பொறுப்புகள் உண்டு.

"கருத்துக்களை முன்வைக்கும்" வகையை சேர்ந்தவை : திட்டங்களை வகுப்பது தீர்மானங்களை எடுப்பது கட்டளைகள் உத்தரவுகள் பிறப்பிப்பது போன்றவை கருத்துக்களை முன் வைக்கும் வகையை சேர்ந்தவை.

"ஊழியர்களை நன்கு உபயோகிப்பதை" சேர்ந்தவை: இக்கருத்துகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் நாம் ஊழியர்களை அய்கியப்படுத்தி செயலில் இறங்கும்படி அவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும். இது ஊழியர்களை நன்கு உபயோகிப்பதை சேர்ந்தவையாகும்.

ஊழியர்களை உபயோகிப்பது என்ற விஷயம் சம்பந்தமாக நேர் விரோதமான இரண்டு மார்க்கங்கள் இருந்து வந்துள்ளன . ஒன்று திறமைக்கேற்ற ஆட்களை நியமித்தல் மற்றொன்று விருப்பத்திற்கு ஏற்ற ஆட்களை நியமித்தல் இவற்றில் முன்னையது நேர்மையானது பின்னையது நேர்மையற்றது.

2). ஊழியர் கொள்கை பிரயோகிக்க வேண்டிய வரையறை.

கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஊழியர் கொள்கை பிரயோகிக்க வேண்டிய வரையறை யாதெனில் ஒரு ஊழியர் கட்சி மார்க்கத்தை அமல் நடத்துவதில் உறுதியாகஇருக்கின்றாரா இல்லையா? , கட்சி கட்டுப்பாடுகளின் படி ஒழுகுகின்றாரா இல்லையா? பொதுமக்களுடன் நெருங்கி தொடர்புகள் வைத்திருக்கிறாரா இல்லையா ?

சுதந்திரமாக வேலை செய்யும் திறமை உடையவராய் இல்லையா? கடின உழைப்புடையவரா, சுயநலம் அற்றவராக இருக்கிறாரா இல்லையா? என்பதாகும் .

3). ஊழியர்களை மதிப்பீடும் செய்யும் முறை :

ஊழியரின் வாழ்வின் ஒரு குறுகிய காலகட்டத்தை அல்லது ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மாத்திரம் கொண்டு நாம் அவரை மதிப்பீடு செய்யக்கூடாது. அவருடைய வாழ்வையும் வேலையும் நாம் முழுமையாக நோக்க வேண்டும். இது ஊழியர்களை மதிப்பீடு செய்யும் பிரதான முறையாகும்.

4). ஊழியர்களை நன்றாக கவனிக்கும் முறை

அப்படி செய்வதற்கான வழிமுறைகள் என்னவென்றால்?

முதலாவதாக அவர்களுக்கு வழி காட்டுவது.

இரண்டாவதாக அவர்களுடைய கருத்தை உயர்த்துவது.

மூன்றாவதாக அவருடைய வேலையை சரி பார்ப்பது.

நான்காவதாக தவறுகள் இழைத்த ஊழியர்களை பொறுத்தவரையில் பொதுவாக அறிவுறுத்தி இணங்க செய்யும் முறை.

ஐந்தாவதாக அவர்களுடைய கஷ்டங்களில் கவனம் செலுத்துவது..

ஊழியர்களை பயிற்றுவித்தல்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தன் ஊழியர்களை பயிற்றுவித்தல் என்பது அவர்களை அரசியல் மற்றும் அமைப்பு ரீதியில் தேர்ச்சி பெற செய்வதே.

கட்சி ஊழியர் அரசியல் தத்துவப் போராட்டத்தில்தான் வென்றெடுக்கப்படுகிறார் ஒழிய நடைமுறை போராட்டத்தின் மூலம் அல்ல ...

கட்சியின் அரசியல் ஏட்டிற்கு இதில் முக்கிய பங்கு உண்டு .

ஊழியர்களை எல்லாவிதமான தகுதி களையும் பெற்றவர்களாக வளர்த்தல் என்பது இரு அம்சங்களில் அடங்கியுள்ளது.

1).தத்துவ போதனை

2). அனுபவத் தொகுப்புதத்துவ போதனை என்பது அருவமாக அடிப்படை மார்க்சியத்தை போதித்தல் என்பதாக இருக்க இயலாது. அவ்வாறு போதிக்கவும் முடியாது . மாவோ கூறுகின்ற இலக்கை நோக்கி அம்பு எய்தல் முறையில் போதிக்க வேண்டும்.

போதனை என்பது பொதுவாக கோட்பாடுகளுடன் இந்திய வரலாறு இந்திய சமூக அமைப்பு அதன் வளர்ச்சி விதிகள் இவற்றை உணர்த்தி ஒவ்வொரு வர்க்கமும் உற்பத்தியில் தனக்குள்ள இடம் காரணமாக பின்பற்றுகின்ற அணுகுமுறையையும் வழியையும் உணர்த்தி இறுதியாய் பாட்டாளி வர்க்கம் கடைப்பிடிக்க வேண்டிய வழி என்ன அணுகுமுறை என்ன என்பதாக அமைய வேண்டும். இவ்வாறு குறிப்பான உள்நாட்டு வரலாறு மற்றும் இயங்கியலின் அடிப்படையில் இயங்கியல் வரலாற்று பொருள் வாதத்தை போதிப்பது தத்துவ போதனையாகும். எனவே இது கட்சியின் அரசியல் வழியிலிருந்து பிரிக்க முடியாதது என்பது தெளிவு. இத்தகைய தத்துவ போதனையை கட்சி ஒழுங்காக செய்ய அரசியல் கல்வியான பாடத்திட்டமும் மேற்கூறிய ஒவ்வொன்றையும் பற்றி எளிமையான புத்தகங்கள் தயாரிக்கப்பட வேண்டும் உரிய போதகர்கள் குழுக்களும் வெவ்வேறு மட்டத்தில் அமைக்கப்பட வேண்டும். அத்தகைய போதகர் இல்லையேல் குறைந்தது முழு நேர ஊழியர்களை கொண்டு போதிப்பதற்கான வேலையை குழுவிலிருந்து தொடங்க வேண்டும். அடுத்து போல்ஷ்விக் கட்சிக்கு லெனின் வெளிநாட்டில் பள்ளி நடத்துகின்ற வடிவத்தை கண்டுபிடித்தது போல இங்கும் கட்சி அமைப்புகளில் பள்ளி நடத்துவதற்கான வடிவங்களை கண்டறிய வேண்டும்.

அடுத்ததாக அனுபவ தொகுப்பு என்பது கட்சியின் நேரடி நடவடிக்கைகளின் படிப்பி னையை தொகுத்து தருவதும் வரலாற்று சம்பவங்களின் அனுபவத்தை தொகுத்து தருவதும் என இரண்டாக அமையும். கட்சியின் அனுபவத்தை தொகுத்து தருவதன் வெற்றி ஒவ்வொரு தோழரையும் அமைப்புப்படுத்துவதிலும் அமைப்பிற்குள் வெகுஜனமார்க்கம் கடைப்பிடிக்கப்படு கின்றதாலும்தான் அடங்கியுள்ளது.வரலாற்று சம்பவங்களின் அனுபவ தொகுத்தல் என்பது கண்கூடாக நடந்தேறி வரும் வரலாற்றில் கட்சி அணிகள் நேரில் புரிதலுடன் முன் முயற்சித்துடன் பங்காற்றும்போதே வெற்றிகரமாகும்.

வர்க்க நிலைப்பாடும் புரட்சிகர பண்புகளும்

வரலாற்று வளர்ச்சியின் விதிகளுக் கேற்ப்ப புரட்சியின் மூலம் உலகையும் சமூகத்தையும் மற்றும் மனிதனை மாற்றி அமைக்கும் தத்துவமாக விளங்கும் மார்க்சிய-லெனினிய சீடர்கள் என்ற முறையில் நாம் ஒழுக்க நெறிகளை ஒழுக்கநெறிகள் ஆகவே கருதவில்லை வர்க்க நிலைப்பாட்டையும் நாம் சரியாக ஒரு விஞ்ஞான ரீதியில் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் .

வர்க்கம் என்பதை நாம் தனித்தனியான நபர்களின் கூட்டுத் தொகையாக கருத வில்லை. அதற்கு மாறாக சமுதாய உற்பத்தி முறையில் ஒரு திட்டவட்டமான இடத்தை வகிக்கும் ஒரு சமூகக் குழுவே வர்க்கம் என நாம் கருதுகிறோம். பாட்டாளி வர்க்கம் கூட அது தானேயான ஒரு வர்க்கமாக இருந்தலிருந்து தனக்கேயான ஒரு வர்க்கமாக மாறிய பிறகே அதாவது அது வர்க்க உணர்வு பெற்ற பிறகே பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கமாகக உருவெடுத்தது.

இந்த உணர்வும் கூட தனிநபர் உணர்வுகளின் ஒரு எளிமையான கூட்டுத்தொகை அல்ல அதற்கு மாறாக இது முழு வர்க்கத்தின் வரலாற்று ரீதியான நிலைமையையும் மற்றும் அதன் கடமையும் பற்றிய உணர்வே ஆகும். ஆகையால் வர்க்க நிலைப்பாடு என்பது அவ்வர்க்கதத்தின் அரசியல் நிலைப்பாடு ஆகும். வர்க்க உணர்வு என்பது அவர்களின் ஒட்டுமொத்தமான அடிப்படையான மற்றும் நீண்ட கால நலன்களைப் பற்றிய உணர்வும் இந்த நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அது கொண்டுள்ள திடமான உறுதியும் ஆகும்.

தொழிலாளி வர்க்கத்தை பொறுத்த மட்டில் அது தனது வரலாற்று ரீதியான நிலையையும் கடமையை உணர வேண்டுமானால் அது தன்னை மார்க்சிய-லெனினியதால் ஆயுத்தம் செய்துகொள்ள வேண்டும். சமூக வளர்ச்சி விதிகளை சரியாக பிரதிபலிக்கின்ற மா-லெ தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக இருப்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாட்டின் உண்மையான விஞ்ஞானபூர்வமான உள்ளடக்கமாகவும்அமைந்திருக்கின்றது. தொழிலாளர் இயக்கம் மார்க்சிய-லெனினியத்துடன் இணையும் போதுதான் அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியாக அமைகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வும் வர்க்க நிலைப்பாடும் அதி உயர்ந்த முழுமையான முதிர்ச்சி அடைந்த நிலையின் வெளிப்பாடுதான் கட்சி அமைப்பாகும். முன்னேறிய தத்துவமான மா -லெ ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு கட்சியின் மூலம் மட்டுமே தொழிலாளி வர்க்கம் புரட்சி தலைமை பாத்திரத்தை வழங்கும் ஒரு முன்னோடி வர்க்கமாக திகழ முடியும். அத்தகைய நிலையில்தான் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு உண்மையாக உருவாக முடியும். மா-லெ பற்றியும் புரட்சிகர விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இன்றி தொழிலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு முன்னோடி வர்க்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியாது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு என்பது மா-லெ நிலைபாடு ஆகும். தவிர இந்தத் தத்துவத்தினால் ஆயத்தம் செய்யப்பட்ட கட்சியின் அரசியல் வழியும் நடவடிக்கைகளும் தான் அந்த நிலைப்பாட்டின் குறிப்பானா தெளிவானவெளிப்பாடுகளாகும். சுருங்கக்கூறின் வர்க்க நிலைப்பாடு என்பது மார்க்சிய லெனினியத்தால் ஆயத்தம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் வழியையும் அவ்வழியை நடைமுறைப்படுத்துவதற்கான புரட்சிகர நடவடிக்கைகளையும் சரியான புரட்சிகர முறைகளையும் உள்ளிட்டதே ஆகும்.

வர்க்க நிலைப்பாட்டையும் ஏதோ ஒரு காலத்திற்கும் களத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான ஒன்றாக நம் கருதக்கூடாது. வர்க்க நிலைப்பாட்டை நாம் ஒரு குறிப்பான வரலாற்று ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.

நமது நிலைப்பாடும் மா-லெ- யத்தால் வகுக்கப்பட்டுள்ள சமுதாய வளர்ச்சி பற்றி விதிகளின் அடிப்படையில் தான் வெல்ல முடியும். இதுவே நமது வர்க்க நிலைப்பாட்டிற்கும் ஒழுக்க நெறி பற்றிய கருத்தாக்கம் அடிப்படையாக அமையும்.

எனவே புரட்சியின் இன்றைய கட்டத்தில் தன்னலம் கருதாமல் நாட்டின் விடுதலைக் காகவும் மக்களின் ஜனநாயகதிற்காகவும்பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் சாதிமுறை ஒழித்து நாட்டு மக்களுக்கிடையில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆண் ஆதிக்கத்தை ஒழித்து பெண்களுக்கு விடுதலை பெறுவதற்காகவும் மக்களின் நல் வாழ்விற்காகவும் போராடுவதில்தான் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் அடங்கியிருக்கின்றது.

வேறுவிதமாக கூறினால் நமது வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் ஏகாதிபத்தியத்தினதும் பெரு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர்களின் கூட்டு சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போரிடுவதில்தான் அடங்கி இருக்கிறது.

நமது கட்சியின் அனைத்து வழிகளும் கொள்கைகளும் இந்த இலக்கை அடைவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் நமது கட்சியின் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் உண்மையிலே கட்சியின் வழியையும் கொள்கையையும் கட்சியின் முன்வைக்கப்படும் கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கான போராடுவதில்தான் அடங்கி இருக்க வேண்டும். விவாதங்களின் தேவையை ஒட்டி தொடரும்....

(பயன்படுத்தப் பட்ட நூலகள் லெனின் ஸ்தபன கோட்பாடுகள், 88 சிறப்பு கூட்ட அறிக்கை- மக்கள் யூத்தம்(த.நா) நகல் அறிக்கை, மாவோவின் நூல் தொகுப்பு 5 லிருந்து மற்றும் பொதுவுடைமை மா-லெ கருத்தியல் இதழ்) .

இவை விவாததிற்குறிய பகுதி ஆகவே மீண்டும் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.

சில கட்சிகள் பிஜேபி ஆள் சேர்ப்பது போல் தங்களின் அமைப்பு பலம் என்பது எண்ணிக்கை என்று நினைக்கின்றனர், உண்மை அதுவல்ல ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் தேவை அதன் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை நமது ஆசான்கள் தெளிவாக கூறியுள்ளதை புரிந்துக் கொள்ளவே இந்தப் பகுதி இன்னும் அடுத்த இதழ்களில் தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்