உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு பற்றிய

 உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு பற்றிய 14/11/2022 நடந்த வகுப்பின் தொடர்ச்சியே இன்றைய வகுப்பு.

உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு கிளப் அவுஸ் லிங்க் ஒலி வடிவில் இந்த லிங்கை அழுத்தி கேட்க்க முடியும் உங்களின் ஆண்டோய்ட் முபைலில்

இந்த சட்ட திருத்தம் மற்றும் தீர்பானது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும்.இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சாதி தீண்டாமை கொடுமைகளாலும் சமூக ஒடுக்குமுறையாலும் கல்வி மற்றும் அரசுப்பணிகளில்  வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட -  தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள்  வழங்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்அரசியல் அமைப்புச் சட்டமும் இதையேதான்  வலியுறுத்துகிறதுஇடஒதுக்கீட்டின் மூலம் சற்று முன்னேறிய மிகவும்  பிற்படுத்தப்பட்ட,  தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட சமூக ஒடுக்குமுறையில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடாத நிலைதான் உள்ளது.  ஆனால் சமூகசாதி ஒடுக்குமுறைக்கு உட்படாத உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின்  அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது

இனி தோழர் ரவீந்திரன் அவர்கள் பேசுவார்.



இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் எப்படி பார்த்து, எப்படி மதிப்பீடு

செய்வது?


மக்களின் நலனை தனது லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசானது, அனைத்து மக்களுக்கும்,கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை தனது லட்சியமாகக் கொண்டிருக்கும்.இத்தகைய லட்சியத்தை கொண்டிருப்பதோடு, அதற்காக திட்டமிட்டு செயல்படக் கூடிய அரசைத்தான் மக்களின் அரசு என்று சொல்ல முடியும்.அனைத்து மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை லட்சியமாகக்கொண்ட அரசாக இருந்தாலும், அந்த அரசினால் உடனடியாக அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது எதார்த்த நடைமுறைஉண்மையாகும். ஆகவே அத்தகைய மக்கள் அரசும் திட்டமிட்டு தொடர்ந்து அதற்காகசெயல்பட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்யை சிறிது சிறிதாக ஏற்படுத்தி பல காலங்களுக்குப்பிறகுதான் அனைத்து மக்களுக்கும் முழுமையாக கல்வி, வேலை வாய்ப்பை வழங்க முடியும்.இவ்வாறு சிறிது சிறிதாக கல்வி வேலை வாய்ப்பை மக்கள் அரசு ஏற்படுத்தும் போது,உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கல்வி மற்றும் வேலைக்கான நிறுவனங்களில், அனைத்துமக்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத சூழலில், கல்வி, வேலை வாய்ப்பில் யாருக்குமுன்னுரிமை கொடுப்பது என்ற பிரச்சனை எழுகிறது. இந்தியா போன்ற நாடுகளில்இப்பிரச்சனையில் காலங்காலமாக சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவைத்தான் மக்கள் அரசு எடுக்க வேண்டும். அதுதான் சமூக நீதியாகும். இதில்எவ்விதமான சந்தேகமும் வேண்டாம். அதே வேளையில் இந்த முன்னுரிமையானது மக்கள் அரசுதொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு ஒரு கட்டத்தில்அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிலையை அடையவேண்டும். அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்வரைஒடுக்கப்பட்ட சாதியினருக்கு முன்னுரிமை கொடுக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரவேண்டும். ஒரு அரசு மக்கள் நலன் காக்கும் மக்கள் அரசாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை இந்த கண்ணோட்டத்தில்தான் செயல்படுத்தும். மக்கள் அரசின் நீண்டகால லட்சியம், அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை வழங்குவது. அதன் குறுகியகால லட்சியம் அந்த அரசால் உருவாக்கப்படும் கல்வி, மற்றும் வேலைக்கான நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவது. ஆகவே மக்கள் அரசானது குறுகியகால மற்றும் நீண்டகால லட்சியங்களை செயல்படுத்தினால் மட்டுமே அது மக்கள் அரசாக இருக்க முடியும்.

லெனின், மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய சோசலிச சோவியத் அரசானது ரஷ்யாவிலுள்ள அனைத்து மக்களையும் கல்வி அறிவு பெற்ற மக்களாக வளர்த்தது. அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த சாதனைகளின் மூலம் ரஷ்ய சோசலிச சோவியத்து அரசானது ஓர் அரசானது அனைத்து மக்களுக்கும் கல்வி வேலை வாய்ப்பைஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியது. இத்தகைய ரஷ்ய சோசலிச சோவியத்து அரசைத்தான் மக்கள் அரசு என்று சொல்வதற்கான தகுதி பெற்ற அரசாகும்.

ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் பரிசீலித்து விவாதிக்கும்போது, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும் அரசையும், அதன்கொள்கைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

இந்தியாவை ஆண்ட அரசுகளான, பிரிட்டீஷ் ஆட்சி தொடங்கி, பிரிட்டீஷார் வெளியேறிய பின்பு உருவான நேரு தலைமையிலான காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், ஆட்சிகளும், தற்போதைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சிவரை இவர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய மக்களுக்கு எதிரான அரசுகள்தான் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை

நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது கிழக்கு ஐரோப்பியாவிலுள்ள பல நாடுகளிலும்,சீனாவிலும் நடந்துகொண்டிருந்த மக்களுக்கு எதிரான ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி உருவானது. மேலும் ஏகாதிபத்தியவாதிகளின் சொந்த நாட்டில் உழைக்கும் வர்க்கங்கள் அந்த ஆட்சிக்கு எதிராக கம்யூனிச ஆட்சியை உருவாக்கப் போராடினார்கள். ஏகாதிபத்தியவாதிகளின் காலனி, அரைக்காலனி, புதிய காலனி நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஏற்பட்டது. மேலும் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட பல ஏகாதிபத்திய நாடுகள் அவர்களது மூலதனத்தை இழந்து நெருக்கடியிலிருந்தார்கள். அவர்களது நெருக்கடியிலிருந்து மீளவும், கம்யூனிச அபாயத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ளவும் அதுவரை அவர்கள் பின்பற்றிய தனியார்மயக் கொள்கையை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு அரசு தலையிடும் கொள்கையான கீன்சிய பொருளாதாரக் கொள்கையை ஏகாதிபத்தியவாதிகள் அவர்களது நாடுகளிலும் அவர்களை சார்ந்து இருக்கும் காலனி நாடுகளிலும் பின்பற்றினார்கள்.

இந்தியாவிலும் ஆட்சியிலிருந்த புதியகாலனிய தாசர்களின் ஆட்சியிலும் இதே கொள்கை பின்பற்றப்பட்டது. அதன் காரணமாகவே நேருவின் ஆட்சியில் பல கல்வி நிலையங்களும்,

பொதுத்துறை தொழில் நிறுவனங்களும் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைத்து மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதல்ல, மாறாக மக்கள் கம்யூனிஸ்டுகளின் பக்கம் போய்விடாமல் தடுப்பதற்கும், மக்கள் இவர்களது ஆட்சியை எதிர்த்து போராட விடாமல் திசைதிருப்புவதற்கும், பெருமுதலாளிகளும், அந்நிய நிதிமூலதன முதலாளிகள் அவர்களது மூலதன நெருக்கடியிலிருந்து மீண்டுவரவும் அரசு மூலதனத்தை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்வதற்காகவே கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை இந்த ஆட்சியாளர்கள் கடைபிடித்தார்கள். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பிரபலப்படுத்தி இந்த அரசை மக்களுக்கான அரசாகக் காட்டி மக்களை இந்த அரசியல்வாதிகள் ஏமாற்றினார்கள்.

அதற்குப் பின்பு இந்த முதலாளிகள் நெருக்கடியிலிருந்த மீண்ட பின்பு உலகில் மூன்றில் ஒருபகுதில் ஆட்சியிலிருந்த கம்யூனிச அரசுகள் வீழ்ந்த பிறகு, இந்த ஏகாதிபத்தியவாதிகளை தட்டிக்கேட்க்கவும், எதிர்த்துப் போராடவும் யாரும் இல்லாத சூழலில் இவர்கள் இதுவரை கடைபிடித்துவந்த கீன்சிய கொள்கையை கைவிட்டுவிட்டு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றகொள்கையை முன்கொண்டுவந்து வெளிப்படையாகவே மக்களுக்கு எதிரான ஆட்சியைநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அரசே கல்வி நிறுவனங்களை நடத்தும்கொள்கை கைவிடப்பட்டு, கல்வியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஆகவே இனிவரும்காலத்தில் மக்களுக்கு இலவசமாக கல்வி கொடுப்பதற்கு இந்த ஆட்சியாளரிடம் எதுவும்இருக்காது. ஆகவே இட ஒதுக்கீட்டின் மூலம் மக்களுக்கு கல்வி வாய்ப்பை இந்தஆட்சியாளர்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதேபோல் பொதுத்துறை தொழில்நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆகவே மக்களுக்குவேலை வாய்ப்பை வழங்கவும் இவர்களால் இனிமேல் முடியாது. ஆகவே மொத்தத்தில் இடஒதுக்கீட்டு கொள்கை என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும் நடைமுறை செயலில், அதுஇருக்காது. இத்தகைய மோசமான சூழலை ஏற்படுத்தியதற்கு காரணம் இந்த அரசானது மக்களின்நலனை லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசு அல்ல. மாறாக ஏகபோக முதலாளிகள் மற்றும்அந்நிய முதலாளிகளின் நலன் காக்கும் மக்கள் விரோத முதலாளிகள் அரசாக இருக்கின்றது.

பொதுவாக முதலாளிகள், குறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு குறைந்தகூலியை கொடுத்து அதிக லாபம் பெறுவதையே விரும்புவார்கள். அதற்கு தொழிலாளர்களில்பலர் வேலையில்லாதவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வேலை கிடைத்தால் போதும்என்ற மனநிலை தொழிலாளர்களிடையே ஏற்பட்டு, அவர்களுக்கு வேலை கிடைத்தால் போதும்கூலி எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த முதலாளிகளிடம் வேலைக்குச்சேருவார்கள். அதன் மூலம் முதலாளிகள் மிகமிக அதிக லாபத்தை அடைவார்கள். ஆகவே இந்தமுதலாளிகள் அவர்களது நலன் காக்கும் அரசுகளை மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திகொடுக்கவிடாமல் தடுப்பார்கள். இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முதலாளிகளின்பேச்சைக் கேட்டு, மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்களைஉருவாக்காமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைகளை செய்வார்கள்.

ஆகவே நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனைஒருபோதும் தீர்க்கப்பட மாட்டாது. அதாவது வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனைஎப்போதும் நிலவிக்கொண்டே இருக்கும்.

இதே போலவே மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்று எது சரி, எது தவறு என்று சிந்திக்கும்திறன் பெற்றவர்களாக வளருவதை இந்த முதலாளிகள் விரும்புவதில்லை. ஏனென்றால் மக்கள்அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்ற அறிவாளிகளாக மாறிவிட்டால், இந்த முதலாளிகளின்பொய்களையும், சூழ்ச்சிகளையும் மக்கள் புரிந்துகொண்டு இந்த முதலாளிகளுக்கு எதிராகவும் அவர்களது ஆட்சிக்கு எதிராகவும் போராடுவார்கள் என்று இந்த முதலாளிகள் கருதுகிறார்கள்.

மேலும் பெரும்பான்மையான மக்கள் மூடர்களாக இருந்தால்தான் அவர்களை ஏமாற்றி குறைந்தகூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்றும் கருதுகிறார்கள்.ஆகவே இந்தமுதலாளிகள் பெரும்பான்மையான மக்களை கல்வி அறிவற்ற மூடர்களாகவே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஆகவே முதலாளித்து நலன் காக்கும் இந்த ஆட்சியாளர்களை கட்டாயப்படுத்தி மக்களுக்கு கல்வி வழங்கும் அரசின் கொள்கையை செயல்படுத்தவிடாமல் தடுக்கிறார்கள். அதே வேளையில் பணம் படைத்த செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதன் மூலம், அவர்களைக்கொண்டு இந்த ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

ஆகவேதான் அரசுக் கல்வி நிலையங்களை மூடுவதன் மூலம் ஏழைகளுக்கு கல்வி கற்க்கும்உரிமையை பறிக்கிறார்கள். அதே வேளையில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் கல்விகொள்கையை செயல்படுத்துகிறார்கள். மேலும் இந்த தனியார்மயக் கல்விக் கொள்கையின் மூலம்கர்வி நிறுவனங்களை நட்தும் முதலாளிகள் கோடிகோடியாக கொள்ளையடித்துக்கொண்டுஇருக்கிறார்கள். இந்த சூழலில் இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கல்விகொடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்த அரசு இழந்துவிட்ட பின்பு, இந்த அரசுஎங்கிருந்து ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுக்க முடியும்? உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் சிந்திக்க வேண்டும்.

இன்னும் ஒலி வடிவில் உள்ள கிளப் அவூஸ் லிங்கில் கேட்கவும் தோழர்களே.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்