உட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்கவியல் அணுகுமுறை- மாவோ

 


தீவிர கம்யூனிஸ்ட் எதிரி கலகக்காரர் என்று அடையாளம் காணப்பட்டவர்களை தவிர ஒவ்வொரு தோழர்களும் ஒற்றுமை பேண வேண்டும் என்பது நமது அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் -மாவோ நவம்பர் 18,1957.

ஒரு சிறு தவறு கூட செய்யாத மனிதன் உலகில் ஒருவரை கூட காட்ட முடியாது -லெனின்.

கட்சிக்கு விசுவாசமான சக தோழரையும் மார்க்சிய விரொதிகளோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. சோவியத் யூனியனின் ட்ராட்ஸ்கி சீனாவின் சென்- டு- சியு காவ் காவ் போன்றவர்கள் வலதுசாரிகள் இவர்களுக்கான தலைவர்கள் ஹிட்லர் சியாங்க ஷேக் ஜார் போன்றவர்கள். இவர்களை திருத்த முடியாது இவர்களை வரலாற்றின் குப்பை கூடையில் தூக்கி எறிய வேண்டிய நபர்கள். ஆனால் இயக்கம் சார்ந்த தோழர்களை நாம் அணுகுமுறை வேறு விதமாக இருக்க வேண்டும்.

தோழர்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படும் சூழ்நிலை வரலாம் அப்போது ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினால் பூசல்கள் தீரும் .

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டால் போதும் ஒருவர் ஞானி ஆகிவிடுவார் தவறு செய்ய மாட்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள் கட்சியும் அப்படியே அது ஒரு பேரியக்கம்.. எல்லாவற்றையும் கடந்தது சோதனைக்கு அப்பாற்பட்டது என்றும் எனவே பேச்சு வார்த்தைகள் கருத்து பரிமாற்றங்கள் தேவையில்லை என்றும் கருதுகின்றார்கள். மார்க்சியவாதிகளில் பல வகையாக உள்ளனர் . 100% மார்க்சியவாதி,90,80,70,60,50 % மார்க்சியவாதிகள் இருக்கிறார்கள் ஏன் 20%,10% மார்க்சியவாதிகளும் கூட இருக்கிறார்கள். ஆக மார்க்சிய லெனினிய தத்துவத்திற்க்கு குந்தகம் ஏற்படாதவரை அடுத்தவர்களின் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே போல் உங்களிடம் உள்ள வேண்டப்படாத கருத்துகளை விட்டொழிப்பதிலும் தவறில்லை ஆக தவறு செய்த ஒரு தோழரிடம் நீங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை கையாள வேண்டி உள்ளது .(மாவோவின் தேர்ந்தெடுகப் பட்ட படைப்புகள் தொகுப்பு 5 பக்கம் 752லிருந்து.).முதலில் அவர் தனது தவறான சிந்தனையில் இருந்து வெளியே வர நாம் போராட்டத்தை துவக்க வேண்டும்.

இரண்டாவது அவருக்கு நாம் உதவ வேண்டும். ஒருபுறம் அவருடன் போராட்டமும் மறுப்புரம் அவருடன் தோழமை உணர்வேன் என்ன நெருக்கமாக்குதல் வேண்டும். போராட்டம் என்பது மார்க்சிய லெனினிய தத்துவத்தை உயர்த்தி பிடிப்பதற்கும் மேலும் மார்க்சியத்தை சரியாக புரிய வைப்பதற்தானதாக இருக்க வேண்டும். அவருடன் இணைந்து நிற்க வேண்டும் ஏனென்றால் அவரை இழந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அவருடன் சமரசமாக இணக்கமாக செல்ல வேண்டும் தத்துவமும் இணக்கமும் இணைந்து செல்வதும் மார்க்சிய தத்துவமே. அது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவே.

எந்த மாதிரியான உலகமானாலும் எந்த மாதிரியான வர்க்க சமூகமானாலும் அது முரண்பாடுகளின் குவியலாக தான் இருக்கும்.

முரண்பாடுகளை தேடி நீங்கள் அலைய வேண்டாம் அது இருக்கவே செய்கின்றது. முரண்பாடுகள் இல்லாத இடம் எது நீங்கள் சொல்லுங்கள்? . அதேபோல் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் இவர்கள் என்று யாரையாவது நீங்கள் காட்ட முடியுமே? ஒருவரை திருத்தவே முடியாது என்று நீங்கள் முடிவு கட்டினால் அது கருத்தியல் வாத அணுகுமுறையாகும். அணு என்பது என்ன எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு தானே? எலக்ட்ரான் என்பது எதிர் மின்னோட்டம் கொண்டது, புரோட்டான் என்பது நேர் மின்னூட்டம் கொண்டது இது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவு தானே.

இயக்கவியல் தத்துவம் ஏதோ அறிஞர்களின் தொடர்புடையது அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று நினைப்பது தவறு அது ஒரு விஞ்ஞான தத்துவம் சாமானிய மக்களிடம் சென்று சேர வேண்டிய தத்துவம். இந்த விஷயம் விவாதம் பரந்த அளவுக்கு செல்ல வேண்டும். அரசியல் தலைமை குழு மத்திய குழு கூட்டங்களிலும் கீழ்மட்ட கமிட்டி குழு கூட்டங்களிலும் இது பற்றி விவாதிக்க வேண்டும்.கட்சி கிளை செயலாளர்கள் இயக்கவியலை குறித்து புரிதல் உள்ளவர்கள் தான் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். 

கட்சிகளை கூட்டங்களில் அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் இரண்டு விஷயங்களை முக்கியமாக பதிவு செய்வார்கள் ஒன்று சாதனைகள் மற்றது குறைபாடுகள்.(மாவோவின் தேர்ந்தெடுகப் பட்ட படைப்புகள் தொகுப்பு 5 பக்கம் 752லிருந்து 756 வரை.).

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்