இலக்குப் 12 இணைய இதழ் PDF வடிவில்

இலக்கு 12 இணைய இதழை இங்கே அழுத்தி PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் 

"நிலம், ரொட்டி, சமாதானம்" என புரட்சியின் போது லெனின் கொடுத்த முழக்கம் வெறும் வாய்ப் பந்தல் அல்ல என்பதை நடைமுறை மூலம் சோவியத் நிரூபித்தது . அனைவருக்கும் வேலை கல்வி மருத்துவம் வாழ்க்கை பாதுகாப்பு உரிமை உள்ளிட்ட உலகு அனுபவிக்கும் பலவற்றை கொடையாகத் தந்தது சோவியத் புரட்சி.
இன்று முதலாளித்து வத்தின் நோய் முற்றிக் கொண்டே இருக்கிறது இதிலிருந்து தப்பிக்கும் மருந்து மார்க்ஸ் என்கிற சமூக விஞ்ஞான மருத்துவனிடமே இருக்கிறது.


உலக பாட்டளி வர்க்க கீதம்

பட்டினி கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதரே

பாரில் கடையரே எழுவீர் வீறுகொண்டு தோழரே

கொட்டு முரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமிறிட

கொதித்தெழு புது உலக வாழ்வில் திளைத்திட!!

பண்டைய பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது

பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது

இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்

இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்!!

முற்றிலும் தெரிந்த முடிவான போர் இதாகுமே

முகமலர்ச்சியோடு உயிர் தியாகம் செய்ய நில்லுமே

பற்றுக்கொண்ட மனித சாதி யாவும் ஒன்றாகுமே

பழையன கழிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே!

பாரதோர் மமதையின் சிகரத்தின் மாந்தமே

பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே

கூறிடில் அன்னார் சரித்திரத்திலென்று கண்டதே

கொடுமை செய்து உழைப்பின் பயனை கொள்ளை கொண்டு நின்றதே!!

மக்களின் உழைப்பெல்லாம் மறைத்து வைத்து ஒரு சிலர்

பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிந்திடுவீர்

இக்கணம் அதை திரும்ப கேட்பதென்ன குற்றமோ

இல்லை நாம் நமக்குரிய பங்கை காட்டி கேட்கிறோம்!!

தொன்றுதொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்

தோழராயினோம் உழைப்பவர் யாவரும் ஓர் குலம்

உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்கு சொல்லலாம்

உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்!!

வேலை செய்ய கூலி உண்டு வீணர்களுக்கு இடமில்லை

வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங்கு இடமில்லை

நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகளுக்கும் இங்கு இடமில்லை

நாம் உணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கும் இடமில்லை!!

பாடுபட்டு உழைத்தவர் விளைத்ததை தின்ற கழுகுகள்

பறந்தழிந்து போதல் இனி திண்ணமே பாடும் நம் விடுதலை எங்குமே

காடுவெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்

கவலையற்ற போக வாழ்வு சகலருக்கும் உண்டாக்குவோம்!!

நன்றி : தமிழ்நாடு மக்கள் கலை மன்றம்




2 comments:

  1. தோழர் வடிவமைப்பு மிகவும் மோசம் தோழர். அனைத்து வகையான போன்களிலும் தெளிவாகப் பார்க்கும் வகையில் இதழை வடிவமைக்கவும்.

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்