மார்க்சியவாதிகளைப் பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு சொல்கிறார், "மார்க்சின் மேற்கோள்களை எடுத்து அப்படியே கையாள்பர் மார்க்சியவாதிகள் அல்ல, அந்த இடத்தில் மார்க்ஸ் இருந்தால் எப்படி சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திப்பவே மார்க்சியவாதி" என்பார்.
மார்க்ஸ் உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ரெடிமேடாக பதிலை விட்டுச் செல்லவில்லை, ஒருவேளை அவ்வாறு விட்டுச்சென்றிந்தால் அது மார்க்சியமே ஆகாது.
மார்க்ஸ் கற்றுக்கொடுத்தது இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது, அதன் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யும் முறையையும், அதன் அடிப்படையில் ஆய்வு செய்து (மூலதனம் நூலில் முதலாளித்துவ பொருளுற்பத்தி இயங்கும் முறை) நமக்கு வழிகாட்டியதுதான்.
அவர் ஆய்வு செய்வதற்கு "இயங்கவியல் பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவத்தையே அடிப்படையாக கொண்டார்.
அப்படியிருக்க மார்க்சியத்தின் அடிப்படையையே மறுக்கும் இந்த திறந்தநிலை மார்க்சியவாதிகள் என்ன சொல்கின்றனர் பாருங்கள் தோழர்களே...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"திறந்தநிலை மார்க்சியம் - தொகுதி நூல்கள் விவாதிக்கும் போது நடைமுறையோடு பொருத்தி விவாதிப்பது என்ற வரையறைக்குள் இந்திய துணைக்கண்டத்திற்கே உரித்தான பல்வேறு உள்விவகாரங்கள் குறித்தும் நாம் திட்டத்திற்கு உட்பட்டு விவாதிப்போம். அதற்கு முன்பாகவோ அல்லது திறந்தநிலை மார்க்சியத்தின் பேசுபொருளுக்கு வெளியிலோ விவாதிக்க முயலும் தோழர்கள் தங்களது கருத்துக்களை துண்டு துண்டாக பேச வேண்டாம். குறைந்தபட்சம் படிக்கும் பிற தோழர்களுக்கு அடிப்படை தெளிவினை முன்வைக்கும் வரைவு போன்று தங்கள் கருத்துக்களை தொகுப்பாக முன்வைக்கவும். அதற்கேற்ப விவாதங்களுக்கான நிகழ்ச்சி நிரலை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்துவிட்டு, பின்னர் வரிசைக்கிரமமாக நாம் திட்டமிட்டு கொள்ளலாம்". இவை ஒரு ட்ராட்ஸ்கியவாதி போட்டுள்ள பதிவு.
இந்த நூலை தொகுத்தவர் எழுதுகிறார், "திறந்தநிலை மார்க்சியம் என்பதை அறிமுகம் செய்யும் பகுதி (நூல் தொகுதிகளின் பதிப்புரையிலிருந்து)
மானுட விடுதலைக்கான தத்துவமாக 19-ம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்தின் இன்றைய நிலை என்ன? குறிப்பாக, 1990-களில் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிகள் வீழ்ந்த பிறகு, முதலாளித்துவத்துக்கு எதிரான கோட்பாடாக மார்க்சியம் காலாவதியாகிப் போனதா என்ற கேள்வி உலகமெங்கும் எழுந்தது. சோவியத் ஒன்றியம் இருந்தபோதே அதனுடன் முரண்பட்டு வேறு பாதை சமைத்த மாவோயிசம், யூரோ கம்யூனிசம் போன்ற மாற்றுகளும் வெற்றி பெறவில்லை என்பதால் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றது. மறுபுறத்தில் சோசலிச மாற்று முகாம் என ஒன்று இல்லாத நிலையிலேயே முதலாளித்துவம் தன் உள்ளார்ந்த முரண்பாடுகளில் சிக்கித் தவிப்பதும் மேலும் தெளிவாகியது. மூன்றாம் பாதையென்றெல்லாம் பேசிய ‘சமூக ஜனநாயக’ வகைகளும் முனை மழுங்கி சில இடங்களில் ஃபாசிச சக்திகளுக்கும் சில இடங்களிலும் ‘புதிய இடதுசாரி’ வகைகளுக்கும் இடம் விட்டு காலாவதியாகின. இவை எல்லாம் சரியான மார்க்சிய மாற்றைக் கண்டறிவதை இன்றைய கால கட்டத்தின் அறிவார்ந்த தளத்தின் தலையாய பணியாக மாற்றியுள்ளன. மார்க்சிஸ்டுகள் தரப்பிலும் மார்க்சியத்தின் எதிரிகளிடமிருந்தும் இதற்கான எதிர்வினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டன, அரசியல் களத்திலும் கோட்பாட்டு விவாதங்களிலும் போராட்டங்கள் நடந்தன. தத்துவத்துறையில் பின்நவீனத்துவம் என்ற போக்கைக் குறிப்பாக சொல்லலாம்.
இவற்றுக்கான மார்க்சிய எதிர்வினையின் ஒரு பகுதியாக, ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த வெர்னர் போன்ஃபெல்ட், ரிச்சர்ட் குன் ஆகியோரும், ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த காஸ்மாஸ் சைக்கோபீடிசும் இணைந்து திறந்தநிலை மார்க்சியத்தின் முதல் இருதொகுதிகளை 1992-ம் ஆண்டு வெளியிட்டனர். ‘இயங்கியலும் வரலாறும்’ என்ற முதல் தொகுதியில் தொகுப்பாசிரியர்களின் அறிமுகமும் மார்க்சின் இயக்கவியலை கான்ட், ஹெகல் ஆகியோரில் தொடங்கி மீட்டமைப்பது, அரசு பற்றிய விவாதங்கள் ஆகியவை தொடர்பாக வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றன. கோட்பாடும் நடைமுறையும் என்ற இரண்டாவது தொகுதியில், தொகுப்பாசிரியர்களின் அறிமுகத்தோடு வரலாற்றுப் ’பொருள்முதல்வாதம்’ என்ற பெயரில் வளர்த்தெடுக்கப்பட்ட மார்க்சின் ’வரலாறு குறித்த பொருள்முதல்வாத கருத்தாக்கம்’ (materialist conception of history) மீதான விமர்சனமாக இரண்டு கட்டுரைகளும் வர்க்க நோக்குநிலையைப் பற்றிய மூன்று கட்டுரைகளும் இடம் பெற்றன.
திறந்தநிலை மார்க்சியம் என்ற சிந்தனைப் போக்கின் முதல் வெளிப்பாடான இந்த இரண்டு தொகுதிகளில் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற வரையறையை இதன் ஆசிரியர்கள் பகுப்பாய்விற்கு உள்ளாக்குகின்றனர். அரசு பற்றிய லெனினிய கோட்பாட்டையும் பகுப்பாய்வு செய்கின்றனர். மரபுரீதியான மார்க்சியத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட வரையறைகளாக கருதப்பட்டவற்றை விமர்சனப் பார்வையுடன் மீளாய்விற்குத் திறப்பதைதான் திறந்தநிலை மார்க்சியத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளனர், அதன் ஆசிரியர்கள். தமது விமர்சன பகுப்பாய்வையும் விவாதத்துக்குட்படுத்தி சரி, தவறுகளை பரிசீலித்து மார்க்சியத்தை வளர்த்தெடுக்கும்படி அழைக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து 1995-ம் ஆண்டு திறந்தநிலை மார்க்சியத்தின் மூன்றாவது தொகுதியான மார்க்சின் விடுவிப்பு என்பதைத் தொகுப்பதில் எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் ஹாலவேயும் இணைந்தார். இதில், தொகுப்பாசிரியர்களின் அறிமுகத்துடன், மார்க்சின் இயக்கவியல் முறைபாடு பற்றியும், உரிமைகள் பற்றிய தத்துவம் தொடர்பாகவும் ஆழமான கட்டுரைகளோடு , பின்நவீனத்துவம், வரலாற்றின் முடிவு, பின்-கீனீசியம், வேபரியனிசம் போன்ற சமூகவியல் கோட்பாடுகளை கூர்மையாக விமர்சிக்கும் கட்டுரைகளும் உழைப்பின் மையநிலையை நிறுவும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு வெடித்த முதலாளித்துவ நெருக்கடி, அமெரிக்காவில் வால்வீதி ஆக்கிரமிப்பு தொடங்கி, ஆப்பிரிக்காவிலும் அரபு நாடுகளிலும் முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் ‘வண்ணப் புரட்சிகளாக’ மாற்றப்பட்ட மக்கள் எழுச்சிகளும் வெடித்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சமூக ஜனநாயக அரசியல் வளர்ச்சியடைந்தது. நெருக்கடியையும் போராட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளில் பிற்போக்கு அரசியல் ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், திறந்தநிலை மார்க்சியத்தின் முதல் மூன்று தொகுதிகள் வெளியான 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொடரின் நான்காவது தொகுதியை அனா சிசிலியா டீனர்ஸ்டெய்ன், அல்ஃபோன்சோ கார்சியா வேலா, எடித் கோன்சால்ஸ், ஜான் ஹாலவே ஆகியோர் தொகுத்து வெளியிட்டுள்ளனர். அந்தத் தொகுதியில் திறந்தநிலை மார்க்சியத்தை இத்தாலியிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நடந்த நடைமுறை போராட்டங்களுடன் இணைக்கின்றனர். இதற்கு வெர்னர் போன்ஃபெல்ட் முன்னுரை எழுதியுள்ளார். அந்தப் போராட்ட அனுபவங்கள் திறந்தநிலை மார்க்சியத்தின் கோட்பாட்டு சிந்தனையோடு எப்படி இணைகின்றன (திறந்தநிலை மார்க்சியமும் விமர்சனக் கோட்பாடும்), அரசு பற்றிய திறந்தநிலை மார்க்சியத்தின் விமர்சனத்தை மீள்பரிசீலனை செய்வது (அரசு, மூலதனம், நெருக்கடி), 21-ம் நூற்றாண்டில் நடக்கும் போராட்டங்களில் எழும் கேள்விகள் (ஜனநாயகமும் புரட்சியும் விடுவிப்பும்) என தொகுப்பாசிரியர்களின் அறிமுகத்துடன் மூன்று பிரிவுகளாக 11 கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மூலதனத்துக்கு எதிரான உயிர்த்துடிப்பான கோட்பாடாக மார்க்சியம் மட்டுமே தொடர்கிறது, மார்க்சியத்தை அதன் வறட்டுவாத, மூடுண்ட வடிவங்களில் இருந்து விடுவித்து அதன் விடுவிக்கும் உயிர்சக்தியை மீட்டெடுத்து அதை புரட்சிக்கான ஆயுதமாக கூர் தீட்டுவது இன்றைய புரட்சியாளர்களின் கடமையாக உள்ளது. திறந்த மனநிலையுடன் மார்க்சியத்தின் கருத்தினங்களை அணுகுவதைக் கோருவது இந்த நூல் தொகுதி மட்டும் இல்லை, கடந்த 100 ஆண்டுகால புரட்சிகர இயக்கத்தின் அனுபவங்களும் பின்னடைவுகளும் அதைக் கோருகின்றன. அந்த உணர்வில் மார்க்சியத்தை வறட்டுவாத மூடுபனியில் இருந்து விடுவிக்கும் பணிக்கு இந்த நான்கு தொகுதிகளின் 30 கட்டுரைகள் தமிழில் வெளியாவது பங்களிக்கும் என்று நம்புகிறோம்". இவை அவரின் கருத்து.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலும் மா.சிவக்குமார் அவர்களின் முன்மொழி இந்திய சமூகம் பற்றி மார்க்ஸ் நிறைய எழுதியுள்ளார். அவரது நியூயார்க் டிரிபியூன் கட்டுரைகளைத் தவிர, மூலதனம் நூலில் பல இடங்களில் இந்தியாவைக் குறிப்பாகச் சொல்லி, இந்திய கிராம சமூகங்கள் பற்றியும் ஆசிய சமூகங்கள் பற்றியும் தனது கருத்துக்களை வைத்துள்ளார் (அவற்றை நான் விரைவில் தொகுத்து வைக்கிறேன்). கூடுதலாக, மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் எடுத்த குறிப்புகள் அடங்கிய குறிப்பேடுகளில் மேற்கு ஐரோப்பாவுக்கு வெளியில் உள்ள சமுதாயங்கள் பற்றி நிறைய எழுதி வைத்திருக்கிறார். அது இப்போது Marx Engels Gesamptausgabe (MEGA) என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வருகிறது (இது சோவியத் ஒன்றியம் வெளியிட்ட தொகுதி நூல்களை விட கூடுதலாக மொத்தம் 120 தொகுதிகள் வரை வரும்).
இந்தக் குறிப்புகளையும், நியூயார்க் டிரிபியூன் கட்டுரைகளையும் மூலதனம் நூலின் கருத்துக்களையும் தொகுத்து, MEGA திட்டத்தில் வேலை செய்யும் கெவின் ஆண்டர்சன் "விளிம்புநிலை மக்கள் பற்றி மார்க்ஸ்" என்ற நூலை எழுதியுள்ளார் (Marx at the Margins). இந்நூல் இப்போது தமிழில் மொழிபெயர்த்து இன்று வெளியிடப்பட்டு விட்டது. தோழர்கள் அதையும் படித்துப் பார்க்கலாம்.
என்னுடைய புரிதல் - நிலைப்பாடு :
==
மார்க்சிய அணுகுமுறையில் பார்க்கும் போது தத்துவார்த்த ரீதியாகவும் சரி, மார்க்சின் ஆசியபாணி சமூகம் என்ற கருத்தாக்கத்தில் இருந்தும் சரி, எங்கெல்சின் இனக்குழு/குலக்குழு வரையறைகளில் இருந்தும் சரி, அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளும் பணியும் அதன் தொடர்ச்சியாகவே அமைகின்றன. அதனை வளர்த்தெடுத்து செழுமைப்படுத்துவதே மார்க்சிஸ்டுகளின் கடமை, நிராகரிப்பதோ, பகைநிலையில் பார்ப்பதோ இல்லை.
இதுதான் இன்றைக்கு விவாதத்துக்கு உரிய பொருள். இதில் குறுங்குழுவாத, கட்சி கட்டி நடத்தும் குத்தல்கள், கிண்டல்கள் முற்றிலும் உதவா. அதை நாம் வேறு இடங்களில் அரசியல் கூட்டங்களில் வைத்துக் கொள்ளலாம். இங்கு அரசியல் கோட்பாட்டு விவாதங்களை இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் நடத்துவோம்.
==
தோழர் திவாகரன் அவர்களின் பதில் இந்த நூலை விவாதிக்க
மார்க்ஸை, மார்க்சியவாதிகளை விமர்சிப்பவர்களின் கவனத்திற்கு:
மார்க்ஸ் சாதியை பற்றி பேசினாரா, அவர் ஜெர்மானியர், இந்தியாவை பற்றி அவருக்கு தெரியுமா என்றெல்லாம் பேசுவது அடிப்படையில்லாத வாதங்கள் அல்லது விதண்டாவாதம்.
மார்க்சியவாதிகளைப் பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு சொல்கிறார், "மார்க்சின் மேற்கோள்களை எடுத்து அப்படியே கையாள்பர் மார்க்சிஸ்டு அல்ல, அந்த இடத்தில் மார்க்ஸ் இருந்தால் எப்படி சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திப்பவே மார்க்சியவாதி" என்பார்.
மார்க்ஸ் உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ரெடிமேடாக பதிலை விட்டுச் செல்லவில்லை, ஒருவேளை அவ்வாறு விட்டுச்சென்றிந்தால் அது மார்க்சியமே ஆகாது.
மார்க்ஸ் கற்றுக்கொடுத்தது ஒன்றுதான். இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது, அதன் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யும் முறையையும், அதன் அடிப்படையில் ஆய்வு செய்து (மூலதனம் நூலில் முதலாளித்துவ பொருளுற்பத்தி இயங்கும் முறை) நமக்கு வழிகாட்டியதுதான்.
அவர் ஆய்வு செய்வதற்கு "இயங்கியல் பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவத்தையே அடிப்படையாக கொண்டார்.
மார்க்சியவாதிகளை விமர்சிப்பவர்கள் இரண்டு விடயங்களை மட்டுமே கைகொள்ள முடியும்:
1. இயங்கியல் பொருள்முதல்வாதம் தவறு என்று நிறுவ வேண்டும்.
2. (இங்குள்ள) மார்க்சியவாதிகள் மார்க்ஸ் கைகொண்ட தத்துவத்தை முழுமையாக புரிந்துகொள்வதில் உள்ள தவறையோ அல்லது அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள தவறையே தவறு என்று நிறுவ வேண்டும்.
-(அம்பேத்கரைப் போல்) இயங்கியல் பொருள்முதல்வாதம் தவறு என்று கருதிக்கொண்டால் இரண்டாவது விமர்சனத்திற்கு போகவேண்டியதில்லை.
மேலும் மார்க்சியத்திற்கு முன்பு சமூகத்தை யாரும் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. மார்க்சியத்திற்கு பிறகே அது 100% சரியானதாக அறிவியல் பூர்வாக உள்ளது. பிரெஞ்சு புரட்சி செய்தவர்கள்கூட எந்த சமூகத்தை கட்டமைக்கப்போகிறோம் என்று புரிந்துக்கொண்டு செய்யவில்லை, தன்னெழுச்சியாக செயல்பட்டனர். முதல் தொழிலாளர் புரட்சியான 1871 பாரிஸ் கம்யூன்கூட 'உணர்வுபூர்வமாக' புரிந்துக்கொண்டு செய்ததல்ல.
ஆனால் ரஷ்ய சோசலிச புரட்சியோ, சீனப் புரட்சியோ எந்த சமூகத்தை கட்டமைக்கப் போகிறோம் என்பதை திட்டமிட்டு 'உணர்வுபூர்வமாக' நடத்திய புரட்சியாகும்.
மார்க்சியம் வெறும் தத்துவமாக இல்லாமல் நடைமுறையில் பிரயோகித்து சரிபார்க்கப்பட்டது. மார்க்சியத்திற்கு முன்பும் பின்பும் வேரொரு தத்துவம் இத்தகைய அறிவியல் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது.
நிச்சயமாக உங்கள் பார்வையை படித்த பிறகு பதிவிடுங்கள் தோழர்
ReplyDeleteஇதில் குறிப்பிட்டுள்ள பகுதியில் மா.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளவை தவறா தோழர் அவை PDF ல் உள்ளன தோழர்
Delete