ஜனநாயகத்தின் பெயரில் என்னே நடந்துக் கொண்டிருக்கின்றது?

 "வர்க்கம் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் வர்க்க தன்மையற்ற சித்தாந்தமும் வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது அதாவது ஒன்று முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோசலிச சித்தாந்தம் இதற்கு அப்பால் பட்ட எவையும் முதலாளித்துவ சித்தாந்த பலப்படுத்துவதே ஆகும்" என்றார் லெனின்.

ஆக வர்க்க சமூகத்தில் வர்க்க ஜனநாயகம் மட்டுமே பேசமுடியும். "தூய ஜனநாயகம்" என்பது வர்க்க போராட்டத்தையும் மற்றும் அரசின் இயல்பு ஆகியவற்றை பற்றி அறிவில்லாத அப்பாவிதனமாகும்-லெனின்.

இங்கே நமது பெரும்பாலான தோழர்கள் புரிந்துக் கொண்டுள்ளது தேர்தல் ஜனநாயகம் பற்றியதே அதனை பற்றி சற்று அறிவோம் முதலில் தோழர்களே.

முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பது ஆளும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே. சுரண்டல் தன்மையுள்ள, அடிமைப்படுத்தும் முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறும் எல்லாவிதமான சீர்திருத்தங்களும் வெறும் ஒட்டு வேலைகள்தான் - கிளாரா ஜெட்கின், (5 ஜூலை 1857 - 20 ஜூன் 1933) .

இதோ ஜனநாயகம் பூத்து குலுங்கும் நாட்டில் மக்கள்.



மக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக சிந்திக்கின்றனர் ஆட்சியாளர்கள், அந்த ஓட்டை பெருவதற்காகவே இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நகர்வும் உள்ளது. ஓட்டை பெருவதும் நாட்டில் ஆட்சியை பிடிப்பதும் நோக்கமாக கொண்ட இந்த ஓட்டரசியல்கட்சிகள் இங்குள்ள மக்கள் உண்பதை பற்றியோ வாழ்வதை பற்றியொ தவறியும் பேசுவதில்லை.

பல தேசிய இனங்கள் எண்ணற்ற சமூகப்பிரிவினர் உள்ள இந்திய நாட்டில் நடைபெறும் தேர்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யபவர்கள் யாரின் நலனில் ஆட்சிக்கு வருகின்றனர்? யாருக்காக ஆட்சி புரிகின்றனர் என்பதிலிருந்தே உண்மைதன்மை புரிந்துக் கொள்ள முடியும்.

 இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் (இடதுசாரி கட்சிகள்  தவிர்த்து)  தனிநபர் ஆதிக்கத்தின் கீழ் உள்ள கட்சிகளாக இருக்க முடிகின்றது? இக்கட்சிகளில் எதிலும் உட்கட்சி ஜனநாயகம் அறவே இல்லை என்பதும் இக்கட்சிகளின் தலைமைகளே கட்சியின் நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் முதல் வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் வரை அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இக்கட்சிகளின் மூலம்தான் நடுவண் மற்றும் மாநில ஆட்சிகள் நடைபெறுகின்றன என்கின்றபோது இந்நாட்டின் குடியாட்சி முறை மீதே கேள்வி எழுகின்றது.

உலக அரசியலமைப்பு சட்டங்களிலேயே உன்னதமான அரசியலமைப்பு சட்டம் என்று கூறப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அச்சட்டத்தின்படி மக்களாட்சி முறையில் ஆட்சி நடத்த வேண்டிய அரசியல் கட்சிகளின் அமைப்பு, நிர்வாகம் மற்றும் உட்கட்சி ஜனநாயகம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் பிரதிநித்துவ சட்டத்திலும் இக்கட்சிகளின் உட்கட்சி நிர்வாகம் குறித்து எந்த விதிமுறைகளும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் பதிவு செய்யப்படும் ஒரு சங்கத்திற்கு இருக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துகூட‌ சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் கட்சிகளின் நிர்வாகம் குறித்தோ அக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதி செய்தோ எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என்பது இங்கு இணைத்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

 இப்பிரச்சினைகளுக்கும் அவற்றோடு நெருங்கிய தொடர்புடைய நடைமுறையில் உள்ள தேர்தல்முறை குறித்தும் மாற்றுதேர்தல் முறை குறித்தும் ஆராய வேண்டியிருக்கின்றது. 

இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் தேர்தல் முறை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒருவரை மட்டும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பது என்பதும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கின்றது.  இது உலகத்தில் குடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது உருவாக்கப்பட்டதாகும். இதனையே குடியாட்சி தேர்தல் முறையின் ஒரே முறை என்பது போன்றும் இதற்கு மாற்றான வேறு சிறந்த முறை எதுவும் இல்லை என்பது போன்றும் பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட குறைபாடுகளுக்கும் இத்தேர்தல் முறைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் இம்முறைக்கு மாற்றான தேர்தல் முறைகள் குறித்தும் அவற்றின் தேவை அல்லது பொருத்தப்பாடு குறித்தும் இந்நாட்டின் ஜனநாயகம் குறித்து தம்பட்டம் அடித்துகொள்ளும் இந்திய ஊடகங்கள் முறையான தகவல்களை மக்களுக்கு அறவே தெரிவிப்பதில்லை. 

ஊடக பலத்தை கொண்டுள்ள கட்சிகள் பொருட்கள் விளம்பரம் போன்று தங்கள் கட்சிகளை விளம்பரம் செய்து தேர்தல் சந்தையில் முன்னணியில் உள்ள கட்சிகளாக பொதுமக்களுக்கு தங்களை காட்டிக்கொள்கின்றன. அடுத்து, பணத்தைக் கொண்டு வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஆக, தேர்தல் ஒரு வியாபாரமாக நடந்து முடிந்து விடுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், ஆனால் அதன்மூலம் வெற்றி பெற்றவரை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிலைமை.

மேலும்

ஒருவர் 30% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தபோதிலும் முதலில் வந்துவிட்டதால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு வாக்களிக்காத மற்ற 70 சதவீத வாக்குகளுக்கு எந்த பிரதிநித்துவமும் கிடைப்பதில்லை. இவ்வாறு வெற்றி பெற்றவருக்கு எதிராக பெரும்பான்மைக்கும் மேலாக, பலசமயங்களில் 70 சதவீதத்தினர் அளவிற்கு கூட, வாக்களித்திலுள்ளனர் என்பது அறவே கவனிக்கப்படுவதில்லை.

இந்தத் தேர்தல் முறையில்தான், 35 சதவீதத்திற்குள் வாக்குகள் பெறும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமர்கின்றன.

அதேபோன்றுதான் இந்திய அளவிலும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தின் தலைமையை பிடிக்கும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகள் வாக்களித்த வாக்காளர்களில் 20 சதவீதம் அல்லது 25 சதவீதம் வாக்குகளை மட்டுமே, (கவனிக்கவும், நாட்டின் மொத்த வாக்காளர்களில்கூட அல்ல) பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்று விடுகின்றன.

இதுவரை நடந்த தேர்தலில் பிஜேபியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ எந்தத் தேர்தலிலும் நாடுதளுவிய வாக்களித்த வாக்காளர்களின் 50 சதவீத ஓட்டுகளைப் பெற்றதில்லை என்று கடந்த தேர்தல்கள் குறித்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 

கொள்கைகள் அல்லது திட்டங்கள் அடிப்படையில் கட்சிகளின் கூட்டணி என்பது ஏமாற்றே தேர்தல் வெற்றிக்காக மட்டுமே கூட்டணி என்பது உண்மை.

அடுத்ததாக தேர்தலில் சாதி ஆதிக்கம். இடதுசாரிக் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள அதிக அளவில் உள்ள வாக்காளர்களின் சாதியை கணக்கில் கொண்டே வேட்பாளர்களை களமிறக்குகின்றன. இவ்வகையில், சாதி என்பதும் ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. 

தேர்தலில் மாறி மாறி வெற்றிபெற்று வருகின்ற கட்சிகள் அனைத்தும், தேர்தலை எதிர்க்கும் இயக்ககங்களைப் பார்த்து தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அழைப்பதும் இந்நிலையில், அரசியலில் அடிப்படையான மாற்றங்களைக் கோரும் இயக்கங்கள் இத்தேர்தலில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தி இத்தேர்தல் ஓட்டளிக்கும் மக்களுக்கு எந்த அதிகாரமும் அளிக்கவில்லை ஓட்டு போடுவதை தவிர ஆக ஓட்டு போடவும் திருப்பி அழைக்கவும் அதிகாரம் வேண்டும் மக்களுக்கு. கொடுத்த வாக்கை காப்பாற்றதவர்களின் சொத்து பறிமுதல் செய்ய வேண்டும் இத்தியாதி இத்தியாதி.... இப்படி ஏதாவது வழிவகை இந்த தேர்தல் ஜனநாயக்த்தில் உள்ளதா தோழர்களே... மேலும் பின்னர்

ராகுல் கைதும் மற்றும் பிஜேபியின் அராஜக செயலும்

நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ஒலி வடிவில் இந்த லிங்கை அழுத்தி கேட்க்க முடியும் தோழர்களே

இறுதியாக....

... Farewell, our red flag ...

Since our naive childhood, we

played in the "red"

and beat the "white" painfully.

We were born in a country

that no longer exists,

but in that Atlantis

we were,

we loved.

Our red flag

is lying in Izmailovo.

For dollars he is

pushed at random.

I did not take the Winter Palace.

Did not storm the Reichstag.

I'm not a commie.

But I stroke the flag and cry ...

கோர்பச்சே சோவியத்தை தனது அதிகாரத்தால் உடைத்த பொழுது எழுந்த கவிதை.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்