ஏகாதிபத்திய காலகட்டத்தில் புரட்சிக்கான பாதை பாராளுமன்றமா பாட்டாளி வர்க்க போராட்டமா?- சிபி

ரஷ்ய முதலாளித்துவ வளர்சியின் போதுகுருசேவ் வகையறாக்கள் கூறியது "தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகள் பல முதலாளித்துவ நாடுகளில் சமாதான முறையில் சோசியலிச புரட்சி நடத்த பாட்டாளி ர்க்கதிற்கு சாதகமாக உருவாகி  வருகின்றன" என்கின்றனர். (மாபெரும் விவாதம் நூல் 677 பாரா 3).

இதைத்தான் நமது இந்திய நாட்டில் உள்ள இடதுசாரஇயக்கங்கள்  சமாதான முறையில் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதைப் பற்றி செயல்பட்டுக் கொண்டுள்ளனர் இதில் இன்றுள்ள சி பல மார்க்சிய லெனினிய  குழுக்களும் கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவை திருத்தல்வாதம்தான் என்பத்னை புரிய வைக்கவும் உலகளவில் ஏகாதிபத்தியத்தின் சூழ்சிகள் வலைபின்னல் நடவடிக்கைகள் சிலவற்றை அவர்களுக்கு புரிய வைக்க அவர்கள் நிலைப்பாட்டின் மீது கேள்வியாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இத்ன் மீதான விமர்சனத்தை வரவேற்கிறேன்.

 "ஏகாதிபத்தியம் மூர்க்கத்தனமானது என்று நாம் சொல்லும் போது,அதன் இயல்பு ஒருபோதும் மாறாது என்பதையும்,இறுதிவரை ஏகாதிபத்தியவாதிகள் தங்களது கசாப்பு கத்தியை கீழே போட மாட்டார்கள் என்பதையும்,அவர்கள் தங்கள் அழிவை சந்திக்கும் வரை ஒருபோதும் புத்தராக மாற மாட்டார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றோம்" மாவோ (தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தொகுதி 4 பக்கம் 428).

ஏகாதிபத்தியமும் பிற்போக்கு வாதமும் என்றுமே தனது இயல்பை மாற்றிக் கொள்ளமாட்டாது என்ற விதியை மா- வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். ன் நாட்டின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப புரட்சிக்கான தயாரிப்புகளை செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு மாறாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கணக்கில் கொண்டு புரட்சியை கைவிட்டு ஏகாதிபத்தியத்தின்சதிதனத்தைபுரிந்துக்கொள்ளாமல்  சமாதான முறையில் வர்க்கப் போராட்ட விதிகளை மாற்றிவிடலாம் என்றும் மார்க்சிய லெனினிய கொள்கை இன்று மாற்ற வேண்டும் முடிவுக்கு வருவது திருத்தல்வாதமே அன்றி மார்க்சிய லெனினியமல்ல.

ஆகவே குருசேவின் வாரிசுகளான இன்றைய திருத்தல்வாதிகளுக்காக எதார்த்த நிலைமையோடு அறிதல் வேண்டும் அல்லவா?

இரண்டாம் உலக யுத்திற்கு பின் ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் எல்லா இடங்களிலும் கொடூரமான முறையில் மக்களை அடக்கி ஒடுக்க தங்களின் அடக்குமுறை இயந்திரங்களை பலப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தங்களின் ராணுவ மற்றும் போலீஸ் படையை பன்மடங்கு பெருக்கி உள்ளது ஏன் ஏகாதிபத்தியம் இல்லாத முதலாளித்துவ நாடுகளும் கூட மிகப்பெரிய அளவில் ஆயுதப்படைகளையும் போலிஸ் படைகளையும் அதிகரிப்பதில் விதிவிலக்காக இல்லையே. 

இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆயுதப் போட்டியும் பலாத்கார அடக்குமுறை கருவிகளும் விரிவாக்கப்பட்டு ப்பட்டுக் கொண்டுள்ளது காண முடிகிறது.

எதற்காக இந்த முதலாளித்துவ வாதிகள் சமாதான காலத்தில் தனது ராணுவ போலீஸ் படைகளை விரிவாக்கி பெரிதுபடுத்திக் கொண்டுள்ளனர்.

உழைக்கும் மக்களின் வெகுஜன இயக்கங்களை ஒடுக்குவது அன்றி சமாதான முறையில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாக அவர்களின் நோக்கம் இருக்க முடியுமா?  

இதுவரை நடந்தேறிய பல்வேறு போராட்டங்களில் வேலை நிறுத்தங்களில் ஜனநாயக உரிமைக்கான போராடும் மக்களை இந்த போலீசும் ராணுவமும் கடுமையாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது அல்லவா???

இவை உள்நாட்டு போலீஸ் ராணுவத்தின் செயல் என்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் பல நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைக்க உடன்படிக்கை செய்து முதலாளித்து உலகின் அனைத்து பகுதிகளிலும் கிட்டத்தட்ட 2,200 (இன்று கூடுதலாக இருக்கலாம்) ராணுவ  தளங்களையும் படை முகாம்களையும் அமெரிக்க உருவாக்கியுள்ளது.10 லட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் அமெரிக்காவை விட்டு வெளி நாடுகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  இவர்களின் தரைப்படை விமானப்படை உலகின் எந்த இடத்துக்கும் அனுப்பி மக்களுடைய புரட்சி அடக்கி ஒடுக்க தயாறாக இருந்து வருகிறது.

இரண்டாம்உலகப்போருக்குபின் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் பல்வேறு நாடுகளில் உள்ள பிற்போக்குவாதிகளுக்கு உதவியும்,ஆதரவும் வழங்கியதோடு மக்களின் புரட்சிகளை அடக்குவதற்கும் உதவியும் செய்துள்ளனர். எண்ணற்ற எதிர் புரட்சி ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்புகளையும் தலையீடுகளையும் நேரடியாக திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் அதாவது எதிர் புரட்சியை அவர்கள் ஏற்றுமதி செய்து கொண்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான தன்னாட்டுப் படைகள் பல்வேறு நாடுகளின் உள்விவாகாரங்களில்  தலையிட்டும் தாக்குதல் செய்தும் ஆக்கிரமிப்பு போரை கட்டவிழ்த்து விட்டு உள்ளது.

 கிரீஸ் தொடங்கி உக்ரேன் வரை உள்நாட்டுப் போரை தொடர்ந்து நடத்த ஆயுத உதவி செய்து பிற்போக்குவாதிகளை வளர்பதும், அந் நாடுகளில் நடக்கும்  இறையாண்மைக்கான பாதுகாப்பிற்கான நியாயமான தற்காப்பு போராட்டங்களை கூட ஆயுதப் படை கொண்டு அடக்குவது தான் இவர்களுடைய செயலாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய மக்களின் புரட்சிகளையும் தேசிய சுதந்திரத்தான இயக்கங்களையும் அடக்கவும் தலையிடவும் உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு தேசியத் தன்மையின் சாயல்கள் காணப்படும் முதலாளித்துவ நாடுகளின் ஆட்சிகளை கூட அப்புறப்படுத்த முயல்கிறது.

அமெரிக்க அரசாங்கம் ஆசிய,ஆப்பிரிக்க,இலத்தீன் அமெரிக்காவின் எண்ணற்ற நாடுகளில் எதிர் புரட்சிகர ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளையும் ஏற்பாடு செய்துள்ளது. தானே உருவாக்கிய பொம்மை அரசுகள் தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது போய்விட்டால் அவற்றை நீக்குவதற்கு பலாத்காரத்தை கூட பயன்படுத்தி உள்ளது. ஈரத் தொடங்கி ஆப்கான் வரை கண்முன் கண்டது தானே.

இன்றைய காலகட்டத்தில் புரட்சிகளை வெற்றிகரமாக நடத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் நாடுகளின் விடுதலை சாதிக்க உள்நாட்டில் உள்ள பிற்போக்கு ஆளும் வர்க்களின் கடுமையான ஒடுக்கு முறைகளை எதிர்த்து  நின்று சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல்,  

ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆயுத தலையிட்டையும் எதிர்த்துப் போராட முழுமையாக தயாராக இருக்க வேண்டி இருக்கும் என்பதைத்தான் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் நமக்கு விளக்குகின்றன. இதுபோன்ற தயாரிப்புகள் இல்லாமல் எதிர்ப்பு புரட்சிகளின் பலாத்காரத்தை அவசியமானபோது புரட்சிகர பலாத்காரத்தால் தீர்க்கமாக முறியடிக்காமல் புரட்சி என்பது சாத்தியம் இல்லை. வெற்றி என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லை.

ஏகாதிபத்தியம் மற்றும் எல்லா பிற்போக்குவாத ஆட்சியின் அரசியல் அஸ்திவாரம்  "போலீஸ் படை " இதைத் தவிர வேறொன்றுமில்லை. அஸ்திவாரம் வலிமையாக அசைக்க முடியாமல் இருக்கும் வரையில் வேறு எதுவும் முக்கியமில்லை சாத்தியமில்லை. அவர்களுடைய ஆட்சியையும் அசைக்க முடியாது. முதலாளிகள் தங்களின் ஆட்சி பாதுகாக்க பலாத்காரத்தை சார்ந்துள்ளார்கள் என்ற உண்மையை மறைக்கும் "நவீன திருத்தல்வாதிகள் " முதலாளித்துவம் மிகவும் ஏற்புடைய சமாதான மாற்றம் என்பது புரட்சி எதிர்ப்பதில் ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய நண்பர்களாக செயல்படும் தங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓடுகாளி காவுஸ்தகி பற்றி தனது விமர்சித்தல் லெனின் கூறினார் " 1870 களில் மார்க்ஸ் இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம்  சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபட்டையே ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும்  இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும்  குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றுப் பெயர்களில் வேலையாகும்.  மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார்  இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை  மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம்  முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்கவில்லை ."( லெனின் நூல் திரட்டு  23 பக்கம் 233).

அடுத்து இரண்டாம் உலக யுத்ததிற்கு பிறகுஅதாவது சீனாவில் இருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள்  விதிவிலக்கன்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே  ஏகாதிபதிக்கு எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும்  தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன ( மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம்  வெளியீடு ).

1945 ஆகஸ்டில் வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.

    1953ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள்  கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆதரவாளர்களை தூக்கி எறிந்து புரட்சிகரமான  ஆட்சி நிறுவினர் .

     இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன .

      ஆக நமது  படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே ...

       பாராளுமன்ற பாதைக்கு மறுப்பு         இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதிகளால்  விளம்பரப்படுத்தப்பட்ட பாராளுமன்ற பாதை  என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது  நீண்ட காலத்திற்கு முன்பே செல்லாக்காசாகிவிட்டது . ( அதே நூல் பக்கம் 682 ).

இரண்டாம் உலகப்போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள்  பாராளுமன்ற பாதையை நம்பி பாராளுமன்றமாயை என்ற தீர்க்க முடியாத நோய்க்கு பலியாகி விட்டனர்  அவர்கள் இயல்பாகவே எதையும் சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாத படி திருத்தல்வாத சகதியில் புதைந்து  பாட்டாளி வர்க்க புரட்சி இலட்சியத்தை சீரழிப்பவர்கள் என்பதை தான் காட்டுகின்றன .

                   முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து  மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும்  மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது 

                    முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும்  புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும்  உதவும் குறிப்பான சூழ்நிலைகளில்  பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்  என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும்  தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும்  ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக  பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது  அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம்  சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது  அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .

                     லெனின் கூறினார் 

                      "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு  முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும்  தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும்  அவ்வாறு செய்ய முடியும்  ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது  பாராளுமன்ற  போராட்டத்தை உயர்ந்த பட்ச  தீர்மானகரமான வடிவமாக்கி  அனைத்துப் போராட்ட வடிவங்களையும்  இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும்  எதிராக முதலாளி தினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்"  ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான  தேர்தலும் பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம்  பக்கம் 36  ஆங்கில  பதிப்பு   மாஸ்கோ).

-------------------------------------------- --------------------------------

உலகமயம் 1980 இல் துவங்கியது இது ஒரு பன்முக நிகழ்ச்சி போக்கு. பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் உலகமயமானது ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படுகிறது. இந்த உலகமயமானது உலக நாடுகளையே தீர்மானிக்கும் சக்தியாக பொருளாதார  மாற்றங்களில் விளங்குகின்றன.

 

இன்றைய உலகமயமானது ஏகதிபத்தியத்தின் உலக மையம் இது முதலாளித்துவதற்கான ஒரு புதிய கட்டமாகும்.

உலகம் மயம்பற்றிய  அரசியல் பொருளாதார ஆய்வை முதலாளித்துவத்தின் இயல்புகளில் ஒன்றாக அணுகி விலக்கியவர்கள் காரல் மார்க்சும் எங்கல்ஸ் மட்டுமே.

 

உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேலும் மேலும் உற்பத்தி திறன் உள்ளதாக  மாற்றி அதன் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றி .... சமூகத்தின் ஒட்டுமொத்த உறவுகளை மாற்றினால் .... என்று தொடங்கும் சமூக விதிகளை பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசித்த முதலாளித்துவம் தனக்கான விதிகளை உலகமயமாக்கல் மூலம் செயல்படுத்திக் கொண்டுள்ளது.

 

செய்தி தொடர்பு சாதனங்களின் மிகப் பரந்த அளவில் மேம்பாடு அடைந்துள்ளதால் முதலாளித்து வர்க்கமானது எல்லா நாடுகளையும் மிகவும் பின்தங்கி அநாகரிக நாடுகளைக் கூட நாகரீகத்துக்கு கட்டி இழுத்து வருகிறது அதன் உற்பத்தி பண்டங்களின் மலிவான விலைகள் சீன சுவர் போன்ற பெரும் தடை சுவர்களை தகர்த்தெறியும் பீரங்கிகள். அதை வேற்று நாட்டின் பால் அநாகரிக மக்கள் கொண்டுள்ள மிகவும் பிடிவாதமான முகத்தைக் கூட மண்டியிட செய்கின்றன ஏற்காவிடில் அழிவது உறுதி என்று அச்சுறுத்தி எல்லா நாடுகளையும் முதலாளித்துவ பொருளுற்பத்தி  முறையை ஏற்க வலியுறுத்துகிறது. அவ் வர்க்கம்   எதை நாகரிகம் என்றும் கருதுகிறதோ அதை அவர்களிடம் புகுத்துகிறது. சுருங்கச் சொன்னால் தன் சாயலாகவே ஒருவரைப் படைத்து விடுகிறது.

நவீன உற்பத்தி பொருள்களுக்கு வேண்டிய சந்தை சந்தையை தேடிய உலகப் பயணம் விளைவு உற்பத்தியும் விநியோகமும் நுகரும் உலகெங்கும் முதலாளித்து தன்மையில் ஆனதாக மாற்றப்படுகிறது.

 

மக்கள் தொகையும் உற்பத்தி சாதனங்களும் சொத்தும் சிதறுண்டு கிடக்கும் நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கண்டு வருகிறது. அது மக்களை ஓரிடத்தில் குவித்துள்ளது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தி உள்ளது. ஒரு சிலர் கைகளில் சொத்தை குவித்துள்ளது. இதன் இயல்பான கட்டாய முடிவாக அரசியல் அதிகாரமும் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டு விட்டது (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).

 

முதலாளித்துவிட்டு அடிப்படைகளை ஆராய்ந்த மார்க்சிய  ஆசான்கள் உலகமயத்தின் முதல் காலகட்டத்தின் அடிப்படைகளை முதலாளித்துவத்தின் இயல்பாகவே விளக்கினர்.

 

முதலாளித்தும் உலகமயமும் மூலம் உருவாக்கிய உற்பத்தி உறவுகள் தொழில் வாணிப நிலைகள் சதா வளக்கப்படும் உற்பத்தி சக்திகள் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகிறது. இதுவே மூலதனத்தின் இயல்பாகும்.

 

ஒருபுறம் முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் பெரும் பகுதியை பலவந்தமாக அளித்தும் மறுபுறம் புதிய சந்தைகளை கைப்பற்றியும் பழைய சந்தைகளின் மேலும் ஆழமாக சுரண்டியும் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை) , மேலும் மேலும் நெருக்கடிகளை சம்பாதித்துக் கொள்ளாமல் முதலாளித்துவத்தால் ஒரு அடி கூட வைக்க முடியாது.

இதனால் சமூகமயமாக்கப்படும் உற்பத்திக்கும் தனிநபர் அபகரிப்பிற்கும் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான மோதல் முரண்பாடு முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்து கொண்டே இருக்கிறது. இது வர்க்கப் போராட்டத்தில் விதியாக்கி விடுகிறது. மூலதனக் குவியல் செல்வத்தை சிலரிடம் கூவிப்பதும் வறுமையை பெருமளவு மக்களுக்கு பரிசாக அளிப்பதுமே ஆகும். மூலதனக் குவியலே அனைத்துக்கும் காரணமாகி விடுகிறது.

லெனின் ஏகாதிபத்தியின் 5 அடிப்படைய இயல்புகளை விளக்கினார் .

1). ஏக போகங்களை உருவாக்கும் படியான உயர்ந்த கட்டத்திலான உற்பத்தி மூலதன குவியல் வளர்ச்சி.

2). வங்கி மூலதனம் தொழில் மூலதனத்துடன் கலந்து நிதி மூலதனத்தின் அடிப்படையில் நிதி ஆதிக்க கும்பலை உருவாக்குதல்.

3).மூலதனை ஏற்றுமதி உற்பத்தி.

4). சர்வதேச ஏகபோக கூட்டுகள் உருவாகி உலகை தமக்கிடையே பங்கிடுதல்.

5). மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே உலக பரப்பு பங்கிட்டு கொள்ளுதல் (ஏகாதிபத்தியங்களுக்கு இடையே) .

இதை சந்தேகத்துக்கு இடம் இன்றி முதலாளித்து வளர்ச்சியின் ஒரு தனிக்கட்டம் என்றார் லெனின்.

அது வச்சு முதலாளிதுவத்தின் உச்சகட்டம் என்று பிரகடனப்படுத்திய லெனின் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும் சுரண்டலும் பன்மடங்கு தீவிரமடைந்துள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.

 

ஏகாதிபத்திய மையங்கள் அந்த நாடுகளின் அமைப்பாக உலக வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம் காட் பன்னாட்டு பாசுர கம்பெனிகள் என்ற நிதி நிறுவன அமைப்புகளில் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய  மூலதனக் குவியல் செயல்பட்டு கொண்டுள்ளது.

 

இன்றைய உலகமயமானது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் புரட்சியின் அடிவொற்றி மின்னணுவியல் உயிரியல் இணையதள வளர்ச்சி விண்வெளி கண்டுபிடிப்புகள் இன்று உலகை ஒரே குடையின் கீழ் ஒட்டுமொத்த உலகின் அறிவு ஒரே சமூகமாய் ஓர் உலக உற்பத்தி விநியோகம் நுகர்வுக்கான தேசங்கள் கடந்த சமூகமாய் மாறியுள்ளது.

இன்றைய உலகமயத்தின்  மற்றொரு அம்சம்  உலகப் போர் ஏற்படாமலேயே முதலாளித்துவ அமைப்பின் கீழ் உலகின் பொருளாதார அரசியல் வரைபடம் மாற்றப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அரசின் தலைமையிலான ஓர் உலக ஏற்பாடு என்ற ஏகாதிபத்திய கனவு அமலாக்கப்பட்டு வருகிறது.இன்றைய உலகமயமானது நிதிமூலதன  ஆதிக்க கும்பலின் உத்தரவு படியான உலகமயம்.

 

அறிவியல் தொழில்நுட்ப ஏகபோகம் உலகளாவிய நிதி சந்தையில் நிதி மூலதன ஆதிக்கம். இயற்கை வளங்கள் மீதான ஏகபோகும் . தகவல் தொழில்நுட்ப ஏக போகம் ஆயுத ராணுவ ஏகபோகம். ஆகிய ஐந்து வகைபட்ட ஏகபோகங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் உலகமயமான  சமூக வயப்பட்ட உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு தற்போதைய உலக மையத்தின் அடிப்படை முரண்படாக எழுந்துள்ளது.

முதலாளித்துவத்தின் வரலாற்றில் என்றும் காணாத அளவுக்கு முதலாளித்தும் மனித குலத்தை தனது உற்பத்தி உறவு முறைக்குள் அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி இருக்கிறது மூலதனக் குவியலின் வேகம் வர்க்க வேறுபாடுகளை தீவிரமாகியதோடு வறுமைக்கும் வளமைக்குமான இடைவெளி பெருமளவு அதிகரித்து விட்டது.  ஏகாதிபத்தியத்தின் நாகரிக மனிதர்கள் என்பவர்கள் நாகரிகம் மற்ற மூன்றாம் உலக மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது இன்றைய உலகமயத்தில் ஏகாதிபத்திய புல்லுருவித்தனத்தில் ஒன்றாக முதிர்ந்து விட்டது.

 

இதனைக் கீழ்காணும் புள்ளி விவரங்களில் இருந்து அறியலாம்.

உலக நாடுகளில் வாழும் பணக்காரர்கள் 20% மக்கள் உலக வளங்களில் 86% அனுபவிக்கின்றனர். 20% ஏழைகள் 1.3 சதவீதம் மட்டுமே நுகர்கின்றனர்.

20% பணக்காரர்கள் வசதியானவர்கள் 50 சதவீதமான உணவை உட்கொள்கின்றனர். கீழ் நிலையில் உள்ள 20 சதவீதம் உடைய ஏழைகள் பட்டினியால் வாழ்வில் துவள்கின்றனர். 200 பெரும் பணக்காரர்களின் செல்வம் பல்கி பெருகிவிட்டது. அதே சமயத்தில் வேலையின்மையும் வறுமையும் உலகமயமாக பட்டுவிட்டது. ஒரு பணக்காரனுக்கு 95 ஏழைகள் என்றாகிவிட்டது. உலகில் 85 சதவீதம் மக்கள் மீது 15 சதவீத உயர் குடிமக்களின் ஆதிக்கம் நிறுவப்பட்டுள்ளது.  

இவை மூலதனகுவியலின் விளைவுகள்.

தனியார் மையம் தாராள மையம் சுதந்திர சந்தை என்ற உலக ஏகாதிபத்திய உலகமயமாக்கல் ஆனது

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்