இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களும் நடைமுறையும் ஓர் தேடல் -சிபி

நேற்றைய வகுப்பினை ஒலி வடிவில் கேட்க்க கீழகாணும் லிங்கினை அழுத்தி ஒலி வடிவில் கேளுங்கள் தோழர்களே

ஒலி வடிவில் நேற்றைய வகுப்பு

அறிமுகம்:- இன்றைய வகுப்பிற்க்கு செல்வதற்கு முன் சில வரலாற்று நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கிறேன் தோழர்களே.

ரசிய சோவியத் ஆட்சி அதிகாரம் பாட்டாளி வர்க்கதின் கைக்கு வந்த பின் தோழர் லெனின் தன்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றார். அதில் கல்வி, தொழிற்நுட்பம், விவாசாய கூட்டுறவுமுறை, பெண்கள் மேம்பாடு, எல்லா உழைப்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு, விவாசாயிகளுக்கான வாழ்க்கைமுறை, தொழிற்துறை வளர்ச்சி இப்படி திட்டமிட்டு மக்களை மேம்படுத்த அய்ந்தாண்டு திட்டத்தை தீட்டி உலக நாடுகளுக்கு ஓர் முன்னுதாரணமாக செயல்படுகிறார். அதனை பின் பற்றியே இந்தியாவிலும் நேரு தலைமையிலான அரசு அய்ந்தாண்டு திட்டத்தை கொணர்கிறது. 

 பொருளாதார திட்டமிடலின் நோக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதலாகும். ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து [முன்னால் சோவியத் ரஷ்யா (USSR)] தருவிக்கப்பட்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டுத் திட்டங்களைத் செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே(2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டது.நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014இல் அமைந்தவுடன்  திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.

இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக்  (NationalInstitutionforTransformingIndia)  மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது  இவை அரசு செய்ய வேண்டியதை ஒரு கமிட்டியிடம் கொடுத்து தன் இயால நிலையை காட்டிக் கொண்டது.

சரி வாருங்கள் பார்ப்போம் இன்றைய வகுப்பில்...

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றி ஒரு பார்வை

இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.(இன்று இல்லை)
1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.
1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத்துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, அப்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.
அமைப்பு:
திட்டக்குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தில் துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தினர்கள்.
பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுநர்களே நிரந்தர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். இதன் மூல நிறுவனம் இந்திய நிதி அமைச்சகம் ஆகும்.

திட்டக் குழுவின் நோக்கம்:

1. நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.

2. செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.

3. விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.

4. சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.

தேசிய வளர்ச்சிக் குழு:

1. தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

2. தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.

3. தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.

1.முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 – 1956

1. முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் ஹரோல்டு தோமர்

2. முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.

3. சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.

4. வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:

·   தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.

2.இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 – 1961

1. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.

2. முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:

1. ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.

2. பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.

3. ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.

4. தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

5. அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.

3மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 – 1966

1. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் – P.G.மஹல நாபிஸ்.

2. மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.

3. பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்

4. சீன போர், பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.

ஆண்டுத் திட்டம்: 1966 – 1969

1. இது திட்ட விடுமுறை காலமாகும்

2. இக் காலக்கட்டத்தில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

3. முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.

4.நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 – 1974

1. நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.

2. பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.

5.ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்1974 – 1979

1. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.

2. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.

3. ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக் கொள்ளப்பட்ட திட்டமாகும்.

4. இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

5. கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுழற்சி திட்டம்: 1978 – 1980

1. இது ஜனதா அரசு திட்டமாகும்.

2. முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம்  அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அளித்தல்.

3. குடிசை மற்றும் சிறுதொழிலை மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம் பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.

6.ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 – 1985

1. ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்

2. வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்.

3. குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.

7.ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 – 1990

 ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்

1.   உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன, தற்சார்பு ஆகியவை பெருகுதல்.

2.   ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

3.   வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

4.    முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆண்டுத் திட்டம்: 1990 -1992

1. இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.

2. இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக சந்தையில் நுழையத் தொடங்கியது.

8.எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 – 1997

·     எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:

1.   முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி.

2.   புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது.

3.   பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

9.ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 – 2002

·    ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்.

1.   வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி.

2.   ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி மற்றும் சமத்துவம்.

3.    ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

10.பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 – 2007

·     பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:

1.   நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.

2.    தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்தல்.

3.    கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.

4.    2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16 சதவிகிதம் குறைத்தல்.

11.பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 – 2012

1. மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்தல்.

2. வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் அதிகரித்தல்.

3. 70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்

4. வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.

கல்வி:

1. ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.

2. 7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.

12.பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 2012 – 2017

·            பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.

பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் பொருளாதார வளர்ச்சி:

1. மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8 சதவிகிதம்.

2. விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்

3. உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்

4. தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்

5. சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:

1. 10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்

2. 50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்

கல்வி:

1. 2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்

2. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக் குறைத்தல்.

12-ஆவது ஐந்தாண்டு திட்டம்

வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும்போது, தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில், 11-ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. ஆனால், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது பொருளாதாரம் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

இந்தியாவின் வளர்ச்சி செயல்பாடுகள்

1960-களிலும், 1970-களிலும் இந்திய பொருளாதாரத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி 3.5 விழுக்காடாகவே இருந்தது. அந்த நேரத்தில் உலகின் மற்ற வளரும் நாடுகள் அதிவேக வளர்ச்சியை அடைந்தன. 1980-களில் தான் அதிவேக வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக அந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5. 6 விழுக்காடு என்ற அளவுக்கு விரைவுபடுத்தப்பட்டது. உலக மய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான விரிவான நடவடிக்கைகள் 1991-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. சந்தை சக்திகளுக்கு அதிக அதிகாரமளித்தல், நிதித்துறையை படிப்படியாக தாராள மயமாக்குதல், உலகளவிலான வணிகம் மற்றும் முதலீடு களுக்காக இந்திய பொருளாதாரத்தை திறந்துவிடுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக 1990-களில் முதல் 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் வேகம் பெற்றது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தது. இதன் பயனாக அந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 5.7 விழுக்காடு என்ற அளவிலேயே வளர்ச்சி அடைந்தது. இது 1980-களுடன் ஒப்பிடும்போது பெரிய அளவிலான முன்னேற்றம் அல்ல.

பொருளாதார வளர்ச்சி மேம்பாடு

1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட முறையான சீர்திருத்தங்களின் பயனாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது. 2002-03 முதல் 2006-07 ஆண்டு வரையிலான 10-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 8 விழுக்காடு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஐந்தாண்டுகளில் 7. 8 விழுக்காடு வளர்ச்சி எட்டப்பட்டது. 2007-08 முதல் 2011-12 வரையிலான 11-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் 9 விழுக்காடு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த ஐந்தாண்டில் முதல் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.3 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. ஆனால், 2008-ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2008-09-ஆம் ஆண்டில் 6.8 விழுக்காடாக குறைந்துவிட்டது. இருப்பினும், மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனாக, இந்தியப் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 8 விழுக்காடு, 8. 6 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. 2011-12-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொருளாதார வளர்ச்சி 8. 5 விழுக்காடு என்றளவில் குறைவாகவே இருந்தது.

அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியின் பல பரிமாணத் தன்மை

அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியின் பல பரிமாணத் தன்மையை, தற்போதைய சூழல்களுடன் தொடர்புடைய பல்வேறு பரிமாணங்களை பட்டியலிடுவதன் மூலம் வெளிப்படுத்தலாம். வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான காரணிகளில் மிகவும் முக்கியமானது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு குறைந்திருக்கிறது என்பதுதான். அதே நேரத்தில், தனிநபர் நுகர்வு அளவின் அடிப்படையில், வறுமைக்கோட்டிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கருதப்படும் பல குடும்பங்கள், கல்வி, சுகாதாரம், தூய்மையான குடிநீர், துப்புரவு போன்ற அடிப்படை வசதிகளைக்கூட பெறமுடியாத நிலையில்தான் உள்ளனர். அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சி என்பது, இந்த சேவைகளையும் எளிதாகப் பெறும் வகையில் ஏழை மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதாகும்.

மக்களிடையே நிலவும் சமத்துவமின்னை குறித்த கவலைகளை போக்கும் அளவுக்கும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சி விரிவுப்படுத்தப்பட வேண்டும். ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், சமத்துவமின்மை என்பது ஒரு பொருட்டல்ல என்று சில நேரங்களில் வாதிடப்படுகிறது. ஏழை மக்களின் வருமானம் வேகமாக அதிகரிக்கும்போது, சமத்துவமின்னை சிறிதளவு அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது ஓரளவு உண்மைதான். எனினும், சமத்துவமின்மை அதிகளவில் பெருகுவதும், ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் ஓரளவு மட்டும் உயர்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்த கோணத்தில் பார்க்கும்போது, சமத்துவமின்னை என்பது, தனிநபர்களின் வருமானம் அல்லது நுகர்வுத்தன்மை மட்டும் சார்ந்தது            அல்ல. மாறாக மாநிலங்களுக்கிடையே, சில நேரங்களில் ஒரு மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கிடையே நிலவும் சமத்துவமின்மையையும் சார்ந்ததாகும்.

அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை இந்திய கோணத்தில் பார்க்கும்போது, பட்டியலினத்தவர், பழங் குடியினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினர் மீது சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். இப்பிரிவினர் குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினராக இருப்பதால், வறுமை ஒழிப்பு அல்லது சமத்துவமின்மையை களைவதற்கான சிறப்பான உத்திதான் இப்பிரிவினரின் கவலைகளை போக்கும். எனினும், அனைவருக்கும் பயனளிக்கும் தன்மை என்பது இவர்களை சமூகத்தின் பிற பிரிவினருக்கு இணையாக உயர்த்துவது என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொரு வகையான வருவாய் ஈட்டும் பிரிவினரிலும் இவர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும்.

பணவீக்கம் மற்றும் பெருநிலை சமநிலை

இந்தியாவில், வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சி சார்ந்த அண்மைக்கால பொருளாதார செயல்பாட்டின் பலவீனமான பகுதி என்னவென்றால், கடந்த ஆண்டுகளில் பணவீக்க அழுத்தம் அதிகரித்திருப்பது தான். பணவீக்கம் மிதமான அளவில் அதிகரிப்பது சகித்துக் கொள்ளக்கூடியது தான். அதுமட்டுமன்றி, தவிர்க்க முடியாத விலை மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு இது அவசியமானதும் ஆகும்.  மத்திய அரசாலும்,  ரிசர்வ் வங்கியாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி பணவீக்கம் அதிகரிப்பது என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். இது அனைவரையும் பாதிக்கும்.

பணவீக்க காரணங்கள்

ஒட்டுமொத்த பணவீக்கத்தை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் எதிர்வீக்கம் (GDP Deflator) ஆகும். இந்த முறைப்படி மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி 11-ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பணவீக்கம் சராசரியாக 7. 4 விழுக்காடு என்றளவில் இருந்துள்ளது. 10-ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இது 5.3 விழுக்காடு என்றளவில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உணவு விலைகள், குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பால், முட்டை ஆகியவற்றின் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கம் மிகவும் கவலை அளிப்பதாகும். இந்த வகை பொருட்கள் சார்ந்த பணவீக்கம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் அளவிடும் போது இரட்டை இலக்கத்தில் இருப்பது கவலை அளிக்கும் ஒன்றாகும். இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது, உலகளவில் கச்சா எண்ணெய், உணவு தானியங்கள் மற்றும் உலோகங்களின் விலை அதிகரித்து வருவது; இரண்டாவது, உணவு தானியங்களைத் தவிர்த்த உணவுப் பொருளாதாரத்தில் உள்நாட்டு விநியோகம் சரியாக இல்லாததுமூன்றாவது உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக அதிக அளவில் நிதிச் சலுகைகள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு காரணமாக விலை உயர்ந்தது ஆகும். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்ததற்கு இந்த மூன்றுமே காரணங்களாக இருக்கலாம்.

ஒட்டுமொத்த பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பாரம்பரியமான ஆயுதம் பணக்கொள்கை ஆகும். இக்கொள்கை நாளுக்குநாள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. எனினும், முறையான நிதிக்கொள்கையின் ஆதரவு இருந்தால்தான் இந்த முயற்சி வெற்றிப் பெறும்.

அன்னிய முதலீட்டின் நேரடி தளம்

காலங்காலமாக நமது நடப்புக் கணக்கின் நிதிப்பற்றாக் குறை, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பில் சுமார் 2 விழுக்காடு என்ற அளவில் இருப்பதுதான் நமக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய அளவு ஆகும். கட்டமைப்புத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்கான நாம் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, மத்திய அரசின் நடப்புக் கணக்கில் உள்ள பற்றாக்குறை, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு என்ற அளவுக்கு உயரும்

மூலதன வளர்ச்சி

மூலதன வளர்ச்சி என்பது முதலீட்டு அளவை சார்ந்துள்ளது. முதலீட்டு அளவு என்பது, ஒரு நாட்டில் நிலவும் முதலீட்டிற்கு ஏற்ற சூழலையும், உள்நாட்டு சேமிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வருகையைக் கொண்டு இத்தகைய முதலீடுகளுக்கு எந்த அளவுக்கு நிதி வழங்க முடியும் என்பதையும் சார்ந்ததாகும். நிதி வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை களைவதில் அதிக கவனம் செலுத்தப்படும் போதிலும், தனியார் துறை முதலீட்டின் அடிப்படையில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய நிலையில், முதலீட்டிற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்தால்கூட, அந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் இல்லா விட்டால் எந்தவிதமான முதலீடும் செய்யப்படாது.

தொழிலாளர்கள் எண்ணிக்கை

இந்தியாவில் அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கையும் சாதகமாக உள்ளது. இந்தியாவில் பணியாற்றக் கூடிய வயதில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். தொழில்மயமான நாடுகளிலும், சீனாவிலும் இந்த அளவு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குடிமையியல் அடிப்படையில் சாதகமான அம்சம் என்று கருதப்படும் போதிலும், இந்த அளவு தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்குத் தேவையான உற்பத்தியை பெருக்கும் அளவுக்கு போதுமான முதலீட்டை செய்வது இவர்கள் வேலை பெறும் அளவுக்கு கல்வியையும், பயிற்சியையும் வழங்குவது  ஆகிய இரண்டையும் செய்தால்தான் இது உண்மையிலேயே சாதகமான அம்சமாக இருக்கும். இந்த இரண்டையும் செய்யாவிட்டால், பணியாற்றும் வயதில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவர்களுக்குத் திறமை இல்லாததால் வேலை கிடைக்காத நிலைமை ஏற்பட்டு, நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், அதன் காரணமாக ஏற்படும் போராட்டங்களும் அதிகரிப்பதற்குத்தான் வழிவகுக்கும்.  புதிதாக உருவாகும் பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் அளவுக்கு பயிற்சி  அளிப்பதும் இதனை நாம் பரிசீலக்க வேண்டும். நமது கல்விமுறையானது திட்டமிட்ட முறையில் நடப்பதில்லை அதேபோல் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அரசு தன் பணியை செய்ய தவறி தனியாரிடம் மக்களை வேலைக்கு காத்திருக்க சொல்கிறது, இவை திட்டமிடலின் பயன் மக்களுக்கு சென்றடையவில்லை என்பதனை தெளிவாக்குகிறது.

அரசின் கல்விக்கான நடவடிக்கை

தொடக்கக் கல்வியை பரவலாக்குதல், கல்விபெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது, இடைநிலைக் கல்வியை விரிவுபடுத்த பெரிய அளவிலான திட்டத்தைத் தொடங்கியது, உயர்கல்வியை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டது இருந்தும் அரசு தனியாரிடம் கல்வியை ஒப்படைத்து விட்டது ஏற்புடையவை அல்ல.

பொருளாதார ஆய்வாளர்களின் கணிப்பு

1991-ஆம் ஆண்டில் பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டதன் நோக்கமே, அதிவேக ஒட்டுமொத்த காரணி வளர்ச்சி விகிதத்தை எட்ட வேண்டும் என்பதுதான். உற்பத்தித் துறை சார்ந்த ஒட்டுமொத்த காரணி உற்பத்தி வளர்ச்சி குறித்த ஆய்வுகள், சாதகமும் பாதகமும் கலந்த முடிவுகளை தந்திருக்கின்றன. 1990-ஆம் ஆண்டுகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய ஆய்வுகள், அந்த 10 ஆண்டுகளில் எட்டப்பட்ட காரணி உற்பத்தி வளர்ச்சி, அதற்கு முந்தைய 10 ஆண்டு களை விட குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெருநிலை பொருளாதார சம நிலையுடன் திட்டக்காலத்திற்கு நிதி வழங்குதல்

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வழங்கப்பட்ட ஊக்குவிப்பு சலுகைகளால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. இவற்றை தாக்குப்பிடிக்கும் நிலைக்கு கொண்டு வரவேண்டும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. நாட்டின் நிதி பற்றாக்குறை 2010-2011 ஆண்டின் அளவான 5. 1 விழுக் காட்டிலிருந்து 2011-2012-ஆம் ஆண்டில் 4. 6 விழுக்காடாக குறையும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முறையே 0. 5 விழுக்காடு வீதம் இது குறைந்து 2014-2015-ஆம் ஆண்டில் 3 விழுக்காடு என்ற நிலையை எட்டும். அத்துடன் மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையான 2. 5 விழுக்காட்டையும் சேர்த்துக் கொண்டால், 2014-2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை அதன் உற்பத்தி மதிப்பில் 5. 5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்து.

2010-2011-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையான 7. 7 விழுக்காட்டை 2014-2015-ஆம் ஆண்டில் 5. 5 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைக்க வேண்டுமானால், அடுத்த 4 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை 2.2 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க வேண்டும். 2014-2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, 2007-08-ஆம் ஆண்டின் அளவான 4. 8 விழுக்காட்டைவிட அதிகமாக இருக்கும். எனினும், தற்போது நம் முன் ஏற்பட்டுள்ள உண்மையான சவால் என்னவென்றால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்ட செலவு மதிப்பை நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 1. 5 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கும் வேளையில், நிதிப் பற்றாக்குறையை 2. 2 விழுக்காடு அளவுக்குக் குறைப் பதுதான். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் தேவைகளுக்கும், ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும்  அரசு நிதியை போதிய அளவு வழங்க வேண்டுமானால், அதற்கு திட்ட செலவுகளின் மதிப்பை 1. 5 விழுக்காடு அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

சிறந்த வேளாண் வளர்ச்சிக்கான கொள்கைகள்

அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வேளாண்துறை வளர்ச்சி மிகவும்                 அவசியம் என்பதால்,  திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு எட்டப்படாமல் போன தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் அடிப்படையில், நவீன நடைமுறைகளை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு ஹெக்டேரிலும் உற்பத்தித் திறனை 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு உயர்த்த முடியும் என்பதால், வேளாண் துறையில் 4 விழுக்காடு வளர்ச்சியை எட்டுவது சாத்தியமான ஒன்று தான். எனினும், இதற்கு பல்வேறு முனைகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன.


வேலைவாய்ப்புப் பெருக்கம்

12-ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போவது வேளாண் துறைக்கு வெளியே பயனுள்ள வேலைவாய்ப்புகளை அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்துவதை எவ்வாறு உறுதிசெய்வது என்பதுதான். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், வேளாண் தொழிலிருந்து வெளியேறி வேறு தொழில்களுக்கு அதிகம் பேர் வருவார்கள் என்பதாலும், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். வேளாண் துறையில் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாகும். வேளாண் துறை 4 விழுக் காட்டுக்கும் கூடுதலாக வளர்ச்சி அடையவில்லை  என்றால், அத்துறையில் வேலைவாய்ப்பு குறையும். எனவே வேளாண் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதை சரி செய்யவும், ஊதியத்தை அதிகரிக்கவும் வேளாண்துறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.

அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உற்பத்தியை பெருக்குவதன் மூலமாகவே ஏற்படுத்தப்பட வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்தான் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்குபவை ஆகும். இவைதான் புதுமை படைப்பதற்கும், தொழில் முனையும் திறனை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஏற்றவை ஆகும். நியாயமான கட்டணத்தில் தடையற்ற மின்சாரம், சிறப்பாக போக்குவரத்து இணைப்பு வசதி, திறமைப் பெற்றத் தொழிலாளர்கள் ஆகியவையே இப்போதைய தேவையாகும்.

குடிமையியல் கணிப்புகளை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவின் வடமாநிலங்களில்தான் இனிவரும் காலங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் உருவெடுப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இப்பகுதிகள் தற்போது தொழில் ரீதியாக பின்தங்கி இருப்பவையாகும். மண்டல அளவில் காணப்படும் சமநிலையற்ற தன்மையை தொழிலாளர்களின் இடப்பெயர்வு சரி செய்யும். எனினும், எந்தப் பகுதிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமோ அந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான வலியுறுத்தல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அமையும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிலாளர் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் இதனை சாதிக்க முடியும்.

உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு

மின்சாரம், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே போன்ற உட்கட்டமைப்புத் துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை 12-ஆவது ஐந்தாண்டு திட்டம்  அங்கீகரித்துள்ளது.  இரண்டு முக்கிய சவால்களை ஏற்படுத்துகிறது. ஒன்று, இதற்குத் தேவையான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பதாகும். இரண்டாவது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை குறித்தக்காலத்தில் முடிப்பதற்கு தடையாக இருக்கும் நடைமுறை முட்டுக்கட்டைகளை எவ்வாறு நீக்குவது என்பதாகும்.

அரசு மற்றும் தனியார் துறை முதலீடு

முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதியை வழங்கும் விஷயத்தைப் பொறுத்தவரை, அரசுத் துறையிடம் உள்ள நிதி ஆதாரங்கள் மிகவும் குறைவு ஆகும். கிராமப் பகுதிகளிலும், பின்தங்கிய பகுதிகளிலும் முக்கியமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்னொரு முன்னுரிமைப் பணியாகும். எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது முதலீடு  உட்கட்டமைப்பு உத்தியை பின்பற்ற வேண்டும்.

எரிசக்தியின் தீவிரத்தைக் குறைத்தல்

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் எரிசக்திக்காக செலவிடும் தொகையின் அளவை             குறைக்க வேண்டும். இதற்காக எரிசக்திகளின் விலைகளை மாற்றி அமைப்பதுடன், எரிசக்தி திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இந்தியாவின் பணவீக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், எரிசக்தி கட்டணத்தை உயர்த்தக்கூடாது .


நீர்வளங்களை நிர்வகித்தல்

சிறப்பான தண்ணீர் கொள்கையை உருவாக்குவதற்கான முதல் நடவடிக்கையை நாட்டிலுள்ள ஒவ்வொரு படுகையிலும் உள்ள தண்ணீர் வளத்தை அறிவியல் முறைப்படி அளவிடுவதும் அதன்பின்னர், நீர்வள மேலாண்மைக்காக ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் உத்திகளை வகுப்பதும் ஆகும்

நகர்ப்புற வளர்ச்சியை நிர்வகித்தல்

நகர்ப்புற வளர்ச்சி மாற்றத்தை நிர்வகிப்பது அடுத்து வரும் ஆண்டுகளில் சில புதிய சவால்களை ஏற்படுத்தும். இந்தியா மிகவும் மெதுவாக நகரமயமாகி வருகிறது. இனிவரும் காலங்களில் இந்த நிலை மாறி நகரமயமாக்கல் வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப் புறங்களில் உள்ள மக்கள் 30 விழுக்காடு என்றும், இது 2030-ஆம் ஆண்டில் 40 விழுக்காடாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தாவது, தற்போது இந்தியாவில் 35 கோடி மக்கள் உள்ளனர். இது வெகு விரைவில் 60 கோடியாக உயரும். இதற்கு நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை விரிவுப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக, தற்போது நகர்ப்புறங்களில் உள்ளவர்களில் பாதி பேருக்கு மட்டுமே போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில், இதை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

2 comments:

  1. அருமையான தகவல்கள் கட்டுரை சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கருத்திட்டமைக்கு

      Delete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்