சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்- 3

 சாதி தோன்றியதை புரிந்துக் கொள்ள

சாதி அமைப்பு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, இது ஒரே ஒற்றை வரலாற்று நிகழ்வில் உருவாகவில்லை. ஆனால் வெவ்வேறு சமூக தோற்றங்களைக் கொண்ட வளர்ச்சி போக்கில் ஒரு ஒழுங்கற்ற அமைப்பாகும், அவை அனைத்தும் காலப்போக்கில் கலந்தன. மனிதர்கள் ஆரம்பத்தில் அனைவரும் சிறியகுழுக்களிலோ அல்லது பழங்குடியினராகவோ இருந்துள்ளனர், மற்ற குழுக்களுடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. பல்வேறு வட்டார பிரிவுகளும் தங்களுக்குள் இயங்குதலுக்கான தொழில் முறையுடன் காணல் அவசியம்.

அன்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட போர்கள் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் ஒன்றுகலத்தல், இவ்வாறாக ஒரு பகுதியில் உள்ள முறைமைகள் நல்லவையோ தீயவையோ ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் தேவைக்காக அனுசரிக்கப்பட்டு, சட்ட திட்டங்களாக மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கும் சக்தியாக அன்றைய நிறுவனமயமாக்கப்பட்ட மத கோட்பாடுகள் முன்னுக்கு வந்தது அதன் நீட்சியாக காணலாம்.

சாதி என்பது நிலஉடைமை உற்பத்தி முறை அல்லது முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்திமுறை கொண்ட ஒரு சமூகத்தின் மேல்கட்டுமானமாக மார்க்சிய அறிஞர் டி.டி. கோசாம்பி கருதுகிறார்.

வெள்ளைக்காரர்களின் பீரங்கிகள், துப்பாக்கிகள், தூக்குக் கயிறுகள், சிறைச்சாலைகள்தாம் இந்தியாவை உருவாக்கின. இந்தியா என்று புதிய பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நாடு என்ற பெயரில் உருவாக்கியவர்கள் அந்த வணிக வேட்டையாடிகளே. பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவுக்குப் பிறந்ததே இந்தியா! இந்தியாவின் உண்மையான தந்தைமார் ஆங்கிலேயப் படைத்தளபதியான இராபர்ட் கிளைவு முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் கவர்னர் ஜெனரல்களும்தான்! சாதியின் நிலைத்திருப்பை புரிந்துக் கொள்ள அங்கிருந்தே புரிந்துக் கொள்ள வேண்டும்.

சாதி இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானது அல்ல(22). உலகின் பலப்பகுதிகளில் சாதி இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில், பிஜி, ஜப்பான், தொங்கா, சாமுவா, தென்பசிபிக் தீவுகள் முதலான பகுதிகளில் சாதி இருந்தது இன்று அவர்களிடையே இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சாதியின் மேலாதிக்கம் இருப்பதுபோல் இல்லை. ஆனால் அங்கும் அந்நாடுகளில் மக்களிடையிலான பாகுபாடும் ஒடுக்கு முறையும் வேறுவழியில் தொடரத்தான் செய்கின்றன. வர்க்க சமூகத்தில் ஏற்றதாழ்வை பராமரித்து உழைக்கும் மக்களை சுரண்டி உழைக்காத வர்க்கம் வாழும் விழியே இவை.

சாதியை குறித்து முதலாளிய ஆய்வாளர்கள் ஆங்கிலேய கள ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்களில் பலர் சாதியை உற்பத்தி முறையோடு தொடர்புபடுத்தி காணவில்லை. இந்தியாவில் சாதி குறித்த பல விவரங்களை ஏகாதிபத்திய ஆட்சி அதிகாரிகள் திரட்டிக் கொண்டிருந்த அதே காலகட்டத்திலேயே இந்திய சமூக பொருளாதார நிகழ்வுகளை ஆராய்ந்த காரல் மார்க்ஸ் உற்பத்தி முறையோடு தொடர்புபடுத்தி காண்கிறார். சாதியத்தை இந்திய கிராமங்களில் அடிப்படை அம்சங்களை பற்றி மார்க்ஸ் கருத்துரைக்கையில் சில சாதிகளின் கைவினைஞர்களும் சேவையாள்களும் ஒட்டுமொத்தமாக கிராமத்துக்கு தாங்கள் ஆற்றும் கடமைகளுக்காக பண்டமாக அல்லது நிலஒதுக்கீடுகளாக பெரும்மரபுவழியிலான உரிமைகளை குறிப்பிட்டு அவர்களின் வேலை பிரிவினை பற்றி குறிப்பிடுகின்றார் மார்க்ஸ் மூலதனம் முதல் தொகுதியில் பக்கம் 331. (22) (குறிப்பிட்டுள்ளார் கோ.கேசவன்).

சாதியின் தோற்றத்தில் அரசின் பங்கு தன் அதிகாரத்தை காக்க தனக்கான கோட்பாட்டு நியமங்களை பின்பற்றி தன் தேவையை ஒட்டி அடக்கி ஒடுக்கியும் அவர்களை அரவணைத்தும் சென்றதை வரலாற்றில் காணலாம். அதில் அரச அதிகார மையங்களில் இருந்தோர் உயர்ந்தும், அவர்களுக்கு சேவகம் செய்வோர் தாழ்ந்தும் போயினர். இந்த சமூக வளர்ச்சியில் அரசதிகாரம் ஆம் அரசின் பங்கு மிக முக்கியமானது. அரசின்றி ஓர் அசைவும் இல்லை. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதே சமூகம். ஆகையால் சமூக பிரிவான சாதியினை கட்டிக்காப்பதில் அரசின் முக்கிய பணி உள்ளது (22).

அன்றைய அதிகார வர்க்கம் தங்களின் சுரண்டலை அடக்குமுறையை ஒடுக்குமுறையை மூடிமறைக்க மதம் மற்றும் அரசதிகாரத்தின் மூலம் தொடரத்தான் செய்தனர். நாட்டில் கட்டப்பட்டுள்ள அரண்மனைகளும் கோயில்களும் உழைப்பை சுரண்டி கட்டப்பட்டதல்லவா? அதாவது உழைக்கும் மக்களின் உதிரத்தால் உண்டாக்கப்பட்ட பல பழைய அடையாளங்கள் அரசின் வலிமை கொண்டல்லவா நடந்தேறி இருக்கும்? 

தொடரும் 


நூல் தேவைக்கு அழைக்க :- 7010134299
நூல் விலை 225 தற்போதைய விலை ₹110 கூடுதல் 50 ரூபாய் கொரியர் இதற்கான தொகையை 9095136356 என்ற எண்ணிற்கு அனுப்பிவிட்டு தகவல்களை 7010134299 எண்ணிறிகு வாட்சாபில் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்