சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?லியு ஷாவோகி எழுதியதன் தமிழாக்க நூலை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நூல் விவாதித்தற்கான தேவை இன்று கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் அறிந்துக் கொள்ளாமல் தங்களை தாங்களே கம்யூனிஸ்ட் என்று புகழாரம் சூட்டிக் கொள்கின்றனர் உண்மையில் அவர்களிடம் உள்ள குறைகளை விமர்சன பூர்வமாக அணுகி அவர்களை உண்மையான கம்யூனிசத்தின் அவசியத்தை உணர வைக்க ஒரு முயற்சிதான் இந்த நூல் தொடர் வாசிப்பு தோழர்களே!
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? என்ற நூல் மொத்தம் 9 தலைப்புகளை கொண்டுள்ளது.
- கம்யூனிஸ்டுகள் சுய பயிற்றுவித்தலை ஏன் மேற்கொள்ள வேண்டும்?
- மார்க்ஸ், லெனின்-க்கு தகுதியுள்ள மாணவர்களாக இருப்போம்.
- கம்யூனிஸ்டுகளின் சுய கற்றலும், மக்கள் திரளின் புரட்சிகர நடைமுறையும்.
- கோட்பாட்டு ஆய்வுக்கும், சித்தாந்த சுய கற்றலுக்கும் இடையிலான ஐக்கியம்.
- கம்யூனிசத்தின் லட்சியம், மனித குல வரலாற்றில் மிகப் பெரியதும், மிகக் கடினமானதுமான ஒரு முயற்சியாகும்.
- ஒரு கட்சி உறுப்பினரின் தனிப்பட்ட நலன்கள், நிபந்தனையின்றி கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும்.
- கட்சியில் இருக்கும் தவறான சித்தாந்தத்துக்கான உதாரணங்கள்.
- கட்சியில் தவறான சித்தாந்தத்துக்கான தோற்றுவாய்கள்
- கட்சியில் இருக்கும் தவறான சித்தாந்தம் தொடர்பான அணுகுமுறையும், உட்கட்சி போராட்டமும்.
முதல் தலைப்பில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை சுருக்கமாகச் சொல்லி விட்டு பாட்டாளி வர்க்கம் நீண்ட நெடிய சமூக புரட்சிகர போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கும், தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொள்வதற்கும் அவசியமானதாக உள்ளது.
கம்யூனிஸ்டுகள் அப்பழுக்கற்ற, கசடுகள் அற்ற மனிதர்கள் இல்லை. அவர்கள் இந்த சமூகத்திலிருந்து வந்தவர்கள், இந்த சமூகத்தில் நிகழும் வர்க்கப் போராட்டத்தின் தாக்கம் அவர்கள் மீது தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உணர்வு ரீதியாக திட்டமிட்டு தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பாட்டாளி வர்க்க சித்தாந்தத்துக்கு முரணான அனைத்தையும் ஒவ்வொன்றாக களைந்து கொள்வது அவசியம்.
புரட்சிகர போராட்டங்களில் ஈடுபடுவது மட்டும் போதாது. பல தோழர்கள் ஒரே போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதன் தாக்கம் வெவ்வேறாக உள்ளது. ஒரு சிலர் வேகமாக முன்னேறிச் செல்கின்றனர். ஒரு சிலர் ஊசலாட்டத்தில் சிக்கி பின்னடைவை சந்திக்கின்றனர்.
இந்த சுய பயிற்றுவித்தலில் கோட்பாட்டு ரீதியான வாசிப்பும், அதை கோட்பாட்டு ரீதியாக நடைமுறையில் இணைப்பதும் அவசியமானதாகும். புரட்சி வெற்றிகரமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் காலத்திலும் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இரண்டாவது தலைப்பில் மார்க்ஸ், லெனினின் பணிகள் பற்றியும், அவர்களது படைப்புகளில் இருந்தும், வாழ்க்கையிலிருந்தும், புரட்சிகர நடைமுறையிலிருந்தும் எவ்வாறு கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் விளக்குகிறார்.
“மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புரட்சியாளர்” “போராட்டம் அவருக்கு அடிப்படையானதாக உள்ளது. அவர் உணர்ச்சி பொங்கவும், உறுதியாகவும், வெற்றிகரமாகவும் போராடினார். அவருக்கு நிகராக போராடுபவர்கள் வெகு சிலரே” – எங்கெல்ஸ்
“நம் யாருக்கும் மார்க்சின் விரிந்த பார்வை இல்லை. அதன் மூலம் அவர் வேகமாக செயல்பட வேண்டிய நேரங்களில் சரியான விஷயத்தை செய்து தீர்மானகரமான பிரச்சனையை கையிலெடுத்தார்” – எங்கெல்ஸ்
மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற புரட்சிகர மேதைகள் போல நாமெல்லாம் ஆக முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், மார்க்சிய-லெனினிய முறையியலை கற்றுத் தேர்ந்து வேலை செய்வதில் மார்க்ஸ, லெனினின் வேலை பாணியை பின்பற்றுவது சாத்தியமே.
மார்க்சிய லெனினியத்தின் சாராம்சத்தை கிரகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மார்க்சிய லெனினிய சொல்லாடல்களை புலம்பித் திரியும் சிலர் தங்களை மார்க்ஸ், லெனின் போல கருதிக் கொண்டு கட்சியில் தங்களுக்கு அத்தகைய மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கு மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் மாணவர்களாக, மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை கருத்துடன் கற்று, அதன் சாராம்சத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
மூன்றாவது தலைப்பில், சுய கற்றலையும் எவ்வாறு புரட்சிகர நடைமுறையுடன் இணைப்பது என்பது பேசப்படுகிறது. தோழர்கள் தமது பின்னணி, தன்மை இவற்றை கருத்தில் கொண்டு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். தொழிலாளி வர்க்க, உழைக்கும் வர்க்க பின்னணி கொண்ட தோழர்கள் கோட்பாட்டு கல்வி மீது அதிக கவனம் செலுத்த உணர்வு ரீதியாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். குட்டி முதலாளித்துவ படிப்பாளி பின்னணியிலிருந்து வரும் தோழர்கள் நடைமுறை புரட்சிகர போராட்டங்களில் இணைந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் சரியான முறையில் இணைப்பதுதான் மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையாக உள்ளது.
நான்காவது தலைப்பில் கோட்பாட்டு கல்வியும், சித்தாந்த சுய கற்றலும் என்பது. உறுதியான, கறாரான பாட்டாளி வர்க்க சித்தாந்த நிலைப்பாடு இல்லாமலேயே மார்க்சிய லெனினியத்தின் கோட்பாடுகளையும், முறையியலையும் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைப்பது தவறு. இந்த இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன.
உதாரணமாக நடைமுறையில் முதலாளியால் சுரண்டப்படும் தொழிலாளிகள் மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாட்டை பிற தோழர்களை விட வேகமாக புரிந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் அதனாலேயே பிறவி மார்க்சிய-லெனினியவாதிகள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இன்னொரு பக்கம் தனிநபர் வாதம், சொந்த லாப நஷ்டங்கள் இவற்றை கணக்கு போட்டு சிந்திக்கும் பின்னணியிலிருந்து வந்த தோழர்கள் பாட்டாளி வர்க்க சித்தாந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதில்லை.
இந்த பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை தொடர்ந்து வளர்த்துச் செல்வதற்கே மார்க்சிய லெனினியத்தை பயில்வது அவசியமானதாக உள்ளது.
ஐந்தாவது தலைப்பில் கம்யூனிசத்தின் லட்சியம்தான் மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிக கடினமானதுமான ஒரு முயற்சியாகும் என்பது.
மார்க்சிய லெனினிய கோட்பாட்டு சுய பயிற்றுவித்தல் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. சுய பரிசீலனை செய்கிறேன், மார்க்சிய லெனினிய படைப்புகளை படிக்கிறேன், அதை நடைமுறையுடன் இணைக்கும் விதமாக போராட்டங்களில் கலந்து கொள்கிறேன் என்பது மட்டும் போதாது. இதற்கு மேல், இவை அனைத்தையும் இணைக்கும் விதமாக பாட்டாளி வர்க்க சித்தாந்த அடிப்படை கொண்டிருக்க வேண்டும். இதை வலியுறுத்துகிறார்.
இந்த மூன்றையும் இணைப்பது சித்தாந்த அடிப்படைதான். இல்லை என்றால் படிப்புக்கும், போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் இணைப்பு இருக்காது, போராட்டத்தில் கலந்து கொள்வதும் சுய பரிசீலனையும் துண்டித்து போய் விடும். பழைய கலாச்சாரத்தின் தாக்கம், வர்க்கப் பின்னணியால் பல உறுப்பினர்கள் பாட்டாளி வர்க்க சித்தாந்த அடிப்படையை கடைப்பிடிக்க முடியாமல் போய் விடும். இன்னொரு பக்கம் பாட்டாளி வர்க்க சித்தாந்த அடிப்படை மட்டும் இருந்தால் போதும், மார்க்சிய லெனினிய கோட்பாட்டை பயில வேண்டாம் என்று கருதுகின்றனர். வர்க்கப் பின்னணியே போதுமானது என்று கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டம், சர்வதேசிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதைத் தொடர்ந்துதான் கம்யூனிச லட்சியம் மனித குல வரலாற்றில் மிக மகத்தானதும், மிகவும் கடினமானதுமான முயற்சி என்ற தலைப்பு.
தனிப்பட்ட கட்சி உறுப்பினர்கள் தமது விருப்பங்களையும், நலன்களையும் கட்சியின், சமூகத்தின், புரட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரம் கட்சியும் ஒரு தோழரின் தனித்திறமைகளையும் விருப்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வேலை ஒதுக்க வேண்டும். இறுதிக் கணக்கில் கட்சியின் தேவைகள் தீர்மானகரமானவையாக இருக்கின்றன. தனிப்பட்ட விருப்பங்கள், கட்சியின் நலன்களோடு இயைந்து செல்ல வேண்டும். அதிலிருந்து தனித்த ஒரு லட்சியத்தை வைத்துக் கொள்ளக் கூடாது.
இப்படி இருப்பதன் மூலம்தான் ஒரு கம்யூனிஸ்டுக்கு உயர்ந்த கம்யூனிச அறம் இருக்கும், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை எடுக்க முடியும், திரிபுகளை எதிர்த்து சமரசமின்றி போராட முடியும். மிகப் பெரிய புரட்சிகர துணிச்சல் அவரிடம் இருக்கும். சுயநல நோக்கங்கள் இல்லாததால் அவர் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவரால் எப்படி மார்க்சிய-லெனினியத்தை மிகச் சிறந்த முறையில் உள்வாங்க முடியும், நடைமுறை பிரச்சனைகளுக்கு அதை பொருத்தி தீர்வுகளை காண முடியும். மிகவும் விசுவாசமான, வெளிப்படையான, மகிழ்ச்சியான மனிதர் அவர். அவருக்கு மிக உயர்ந்த சுய மரியாதையும், சுய மதிப்பும் உள்ளது. எனவே, யாரும் அவரை இழிவுபடுத்தி விட முடியாது.
7-வது தலைப்பில் கட்சியில் நிலவும் தவறான சித்தாந்தங்களுக்கான உதாரணங்கள் என்று பட்டியலிடுகிறார்.
சில உறுப்பினர்களிடம் தனிநபர் வாதமும், சுயநலமும் வெளிப்படுகிறது. இரண்டாவதாக, குறுங்குழுவாதம், தனது குழு, தனது அரங்கு பற்றி மட்டும் சிந்திப்பது, செயல்படுவது. மூன்றாவதாக, தனிநபர் சாகசம், புகழ், ஹீரோ ஆக வேண்டும் என்று நினைப்பது, வேலையை செய்வது நமது கடமை. நமது சாதனைகளை பற்றி பீற்றிக் கொள்ளக் கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத்துவ முயற்சி. ஒருவர் தனியாக புரட்சியை செய்ய முடியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
கட்சிக்குள் இது போன்ற போக்குகள் இருப்பதை நாம் மூடி மறைத்து விட முடியாது.
இந்த தவறான சித்தாந்தம் தொடர்பாகவும், உட்கட்சி போராட்டம் பற்றியும் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்.
தவறுகளை, குறைகளை, விரும்பத்தகாத அம்சங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.
சில உறுப்பினர்கள் தவறான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, தவறான முன் உதாரணங்களை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.சிலர் தவறுகளை திருத்துவதற்கு எதுவும் செய்யாமல் அக்கறையின்றி இருப்பார்கள்.சிலர் கடும் வெறுப்புடன் தாக்கி தகர்க்க முயற்சிப்பார்கள். பேரழிவை ஏற்படுத்தி விட்டுச் செல்வார்கள். இவர்கள் இந்த குறைகள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
தாராளவாதம், அதிகாரத்துவம் மூலம் தவறுகளை கையாளக் கூடாது. அவற்றின் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்காக போராட வேண்டும்.
கம்யூனிஸ்ட் என்பவர் உலகைப் பற்றி வியாக்கியானம் சொல்வதாக மட்டும் இல்லை, அவர் உலகை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, உலகை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கட்சியில் உறுப்பினராக செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?
கட்சியின் நலன்களுக்கும், புரட்சியின் நலன்களுக்கும், சமூகத்தின் நலன்களுக்கும் தன்னுடைய சொந்த நலன்களையும் விருப்பு வெறுப்புகளையும் நிபந்தனையின்றி கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வேலைகள் செய்வதில் இருக்கும் தயக்கம், சுணக்கத்தை களைந்து கொள்ள வேண்டும். எல்லா வேலைகளும், மேடையில் பேசுவதோ, பத்திரிகைக்கு எழுதுவதோ, ஆவணங்களை பராமரிப்பதோ, சமைப்பதோ எல்லாமே புரட்சிக்கு பங்களிக்கின்றன என்ற வகையில் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அவற்றை அவ்வாறு மதிக்க வேண்டும், முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
அதன் பிறகு 3 அத்தியாயங்கள் கட்சியில் நிலவும் தவறான சித்தாந்தங்கள், அவற்றின் தோற்றுவாய்கள், அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி. அற்பவாதம், தாராளவாதம், கம்யூனிஸ்ட் ஆக வளர்வதை புறக்கணிப்பது இவற்றுக்கு உதாரணங்கள். அதிகாரத்துவம், சொந்த நலனுக்காக கட்சிக்குள் வருவது, அதை அடிப்படையாக வைத்து கம்யூனிசத்தை பயில்வது, புகழ், அதிகாரம் இவற்றின் மீது நாட்டம் வைத்து செயல்படுவது, குறுங்குழுவாதம் என்று பல்வேறு போக்குகள் இருக்கின்றன...
இன்னும் வாசித்து தெளிவடைவோம்...
முந்தைய பகுதி விரிவாக அறிந்துக் கொள்ள