"புரட்சிகரக் கோட்பாடு இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது."
- புரூதோனின் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களுக்கு எதிராக "வறுமையின் தத்துவம்" (The Poverty of Philosophy) நூலை எழுதினார்.
- ஜெர்மன் தொழிலாளர் கட்சி சமரசத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட போது, அதைத் தயவுதாட்சண்யமின்றி விமர்சித்து "கோத்தா திட்டத்தின் மீதான விமர்சனம்" (Critique of the Gotha Programme) எழுதினார்.
- பக்குனின், வெய்ட்லிங் போன்றோரின் தவறான திசைவழிக்கு எதிராக சர்வதேசத் தொழிலாளர் கழகத்தில் (First International) இடைவிடாத சித்தாந்தப் போராட்டத்தை நடத்தினார்.
- அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியம் ஆளும் வர்க்க அரசு இயந்திரத்தைத் தகர்ப்பதையோ, சொத்துடைமை அமைப்பை மாற்றுவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பிற்குள்ளேயே சீர்திருத்தங்களையும் சலுகைகளையும் கோரின.
- லெனின் தெளிவுபடுத்துகிறார்: சீர்திருத்தவாதம் என்பது முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் பாட்டாளி வர்க்கத்தைச் சிறைவைக்கும் கருவி. முதலாளித்துவ அரசு அமைப்பைத் தூக்கியெறியாமல், அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமே அல்லது வெறும் பண்பாட்டுத் தளத்தில் மட்டும் சீர்திருத்தம் கோருவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தற்காலிக மாயையைத் தருமே தவிர நிரந்தர விடுதலையைத் தராது.
புரட்சிகரக் கோட்பாட்டைத் தூய்மையாகப் பேணிப் பாதுகாப்பதும், சீர்திருத்தவாத மாயைகளைத் தகர்ப்பதும் களப்போராட்டத்திற்கு எதிரானவை அல்ல; மாறாக, உண்மையான பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி மக்கள் திரளை வழிநடத்துவதற்கான முதல் நிபந்தனை அதுவே ஆகும்..
இங்கு கீழ் உள்ள விமர்சனதிற்கு பதிலே மேலே உள்ளவை...
பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் மக்களுக்கு தங்களால் இயன்ற பணிகளை தற்காலிக தீர்வாக முன் வைத்து செய்தார்கள். அவ்வளவுதான். அதனால் மக்களுக்கு சில தற்காலிக வாழ்வியல் முன்னேற்றம் கிடைத்ததா இல்லையா. இல்லை .மார்க்சியத்தை விட தங்கள் கருத்து மட்டுமே உயர்ந்தது என்று அவர்கள் சொன்னார்களா. இன்றைக்கு வறட்டுமார்க்சியவாதிகள் படித்து அதை வெளிப்படுத்தினால் போதும் மக்களிடம் செல்லாத நிலையில் இருப்பது சரியா. செயலின்று இருந்தால் எல்லாம் சரியாகப் போய்விடுமா. 100 ஆண்டுகள் போயின. இன்னும் எவ்வளவு ஆண்டுகள். எதனால். மக்களை நேசிக்கும் ..மார்க்சியத்தை மக்கள் போராட்டங்களுக்கு உரிய கருவியாக மாற்றுவதை யார் தடுத்தது. எந்த கம்யூனிஸ்ட் குழு பெரியார் அம்பேத்கர் கருத்துகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி எவராவது சொன்னாலும் ஒதுக்கி விடுங்களேன். உங்களுக்கு சீர்திருத்தவாதிகளின் கருத்துகள் ஏற்புடையது அல்லவெனில் அவற்றை புறந் தள்ளி போங்களேன். அதை விட்டுவிட்டு நீங்க அவர்களை விட பெரிய புரட்சியாளர்..மக்களுக்காக உழைக்கும் மாமனிதர் என்பது போல் தொடர்ந்து அவர்களை தாக்கி எழுதவேண்டிய அவசியத்தை உங்களுக்கு யார் தந்தது. அவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் என்பதை உணர்ந்த கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட் இயக்க செயல்பாடுகளில் வேகமாக ஈடுபடுவார்கள். மக்களுக்கு விளக்கி மார்க்சியக் கருத்துகளை ஊன்றி அவர்களோடு அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கான போராடுவார்கள். நிரந்தர தீர்வுக்காக தங்களது பணியை அர்ப்பணிப்பர். இல்லை இவற்றை விட எனக்கு அம்பேத்கர் பெரியாரைப் பற்றி எழுவதுதான் பணி எனில் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு..ஏன் அனைத்து மக்களுக்கும் உங்க பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் . என்று சொல்லி எழுதிக்கொண்டே இருங்கள். புரட்சி மலர்ந்திடும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக