Employment Linked Incentive

 வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தைசிஐடியு எதிர்க்கிறது. பொது நிதியை முதலாளிகளுக்கு மடைமாற்றம் ஒரு ஏமாற்றுத் திட்டம்.

* மோடி தலைமையிலான அரசாங்கம் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்தை (Employment Linked Incentive) மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு அதற்காக ரூ.99446 கோடி மடைமாற்றம் செய்திருப்பது ஏமாற்றுத் திட்டம்.
இது, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற பெயரில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட முந்தைய ரூ.1.97 லட்சம் கோடி உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Production Linked Incentive) மற்றும் ரூ.76000 கோடி மூலதனச் செலவு ஊக்கத் திட்டம் (Capex) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.
உற்பத்தித் துறையில் 14 தொழில்களுக்காக உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் 2020 இல் தொடங்கப்பட்டது. இது பின்னர் 6 மில்லியன் வேலைகளை உருவாக்கும் நோக்கத்துடன் மொத்தம் 17 தொழில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அப்போதைய 15.4% பங்கிலிருந்து 25% ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 7 லட்சம் வேலைகள் கூட உருவாக்கப்படவில்லை.
2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பின் பங்கு 14.2% ஆகக் குறைந்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதிலில், இந்தத் திட்டத்திற்கு ரூ.1.97 லட்சம் கோடி செலவாகும் என்றாலும், பயனாளிகள் அதாவது நிறுவனங்கள் கூடுதலாகச் செய்த முதலீடு ரூ.1.76 லட்சம் கோடி மட்டுமே என்று தெரியவந்துள்ளது. இதேபோல், குஜராத்தில் உள்ள சனந்த் இடத்தில் உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைக்கும் மூலதன செலவீன ஊக்கத்தொகை, அமெரிக்கன் மைக்ரான், டாடாஸ், முருகப்பா குழுமம், ஜப்பானிய மற்றும் தைவான் நிறுவனங்கள் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு, செமிகண்டக்டர் அதாவது குறைக்கடத்தி ஆலைகளை அமைப்பதற்காக சுமார் ரூ.3.25 கோடி மானியத்தை வழங்கியது. இந்த ஊக்கத் திட்டங்கள், பொது மக்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி மூலம் சேகரிக்கப்பட்ட பொது நிதியின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுச் செலவு, உற்பத்திச் செலவுகளுக்கு மானியம் வழங்கும் திட்டங்களாக மாறிவிட்டன.
இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய ELI திட்டம், பொது நிதியிலிருந்து தொழிலாளர் செலவு மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டத்தின் கீழ் முதலாளிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகளை மேலும் மானியமாக வழங்குகிறது. மகாத்மா காந்தி ஊரக தொழிலாளர் உத்தரவாத திட்டம் (MNREGA) மற்றும் பிற திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆண்டுதோறும் வெகுவாகக் குறைக்கப்படும் அதே வேளையில், அத்தகைய மானியங்கள் முதலாளிகளின் வர்க்கத்திற்கு விரிவுபடுத்தப்படுகின்றன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த ELI, 20024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் கோடி ELI திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது உடல் உபாதைகளக் ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆபத்தான இயல்புடைய வேலைகளை உருவாக்க முதலாளிகளுக்கு அளிக்கும் சட்டப்பூர்வ மானியமாகும்.
20024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் கோடி ELI திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த ELI, தொழிலாளர் செலவுகள் மற்றும் முதலாளிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகளுக்கு மானியம் வழங்கும் பலவீனமான மற்றும் நிலையற்ற இயல்புடைய வேலைகளை உருவாக்குகிறது.
இந்த மோசமான ஏமாற்று திட்டத்தை சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை, அப்போதே எதிர்த்து வருகிறது. மேலும், முந்தைய PLI மற்றும் மூலதனசெலவீன திட்டங்களால் உருவாக்கப்பட்ட வேலைகள் மற்றும் அடையப்பட்ட இலக்குகள் பற்றிய விவரங்களைக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியது.ஆனால் மோடி தலைமையிலான அரசு அதைப் புறக்கணித்து, இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்ற பெயரில் இந்தத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இது பொது நிதியை முதலாளிகளின் வர்க்கநலனுக்கானதாக மாற்றுவது என்பது சலுகைசார் முதலாளித்துவமாகும்.
இந்த ஏமாற்றுத் திட்டங்களை நிராகரிக்கவும், இதுபோன்ற ஏமாற்று கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு தளத்தின் சார்பாக நடைபெறும் இயக்க போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க உழைக்கும் மக்களை வலியுறுத்துகிறது.
தபன்சென்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்