இடதுசாரிகள் ஏன் ஒற்றுமை இல்லை மற்றும் சனநாயக புரட்சியா? சோசலிச புரட்சியா?

 இலக்கு ஆசிரியர் குழுவின் பகுதி

கேள்வி :- இந்தியாவில் உள்ள கம்யூனிச குழுக்களின் தேக்கத்திற்கும், பிளவிற்கும், பின்னடைவிற்கும் அடிப்படையான காரணம் என்ன?

அதற்கான எங்களின் பதில்

1). மார்க்சிய அமைப்புகள் மார்க்சிய போதனைகளின் அடிப்படையை புரிந்துக் கொள்ள தவறினார்கள்

2). மார்க்சிய அடிப்படையில் சமூக வர்க்க ஆய்வு நடத்த தவறினார்கள்.

இந்திய சமுக பொருளாதார அரசியல் வரலாற்றை புரிந்துக் கொள்ள தவறினார்கள்.

3). இந்திய சமூக மாற்றதிற்கான விஞ்ஞான பூர்வமான திட்டத்தை உருவாக்க தவறினார்கள்

4). அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்தை சோதித்து அதில் உள்ள குறைகளை புரிந்துக் கொள்ளவும் தவறினார்கள்.

5). திட்டத்தில் காணப்பட்ட குறைகளை களைந்து புதிய செழுமை படுத்தப்படுத்தப்பட்ட திட்டத்தை உருவாக்கவும் தவறினார்கள்.

 

6). அரசு பற்றி மார்க்சிய போதனைகளை உள்வாங்கி அணிகளுக்கு போதித்து அதன் அடிப்படையில் நடைமுறை வகுத்து செயல்பட மறுத்தார்கள்.

7). நிலவுகின்ற அரசமைப்பு மக்களுக்கு எதிரானது இதனை தகர்க்க வேண்டும் என்று மக்களுக்கு போதிக்கவும் மறுத்தார்கள்.

8). இந்த நிலவுகின்ற பிற்போக்கு அரசிற்கு மாற்று புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசே என்பதை மக்களுக்கு போதித்து அதற்காக மக்கள் பாடுபட வேண்டுமென்று மக்களை அணித்திரட்ட மறுத்தார்கள்.

9). தொழிலாளர்களை தொழிற்சங்க வகைப்பட்ட பொருளாதார போராட்டங்களிலே ஈடுபடுத்தி வர்க்க அதிகாரதிற்கான போராட்டங்களில் ஈடுபடுத்த தவறி தொழிலாளி வர்க்கத்தின் பாட்டாளி வர்க்க உணர்வை மழுங்கடித்தனர்.

10). இந்த பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுத்து  நிழவுகின்ற அரசமைப்பை பாட்டாளி வர்க்கம் தனது நலனுக்கு பயன்படுத்த முடியாது என்ற பாரீஸ் கம்யூன் அனுபவதை முற்றிலும் நிராகரித்த பாராளுமன்றத்தை  முழுமையாக பயன்படுத்த  முடியும் என்ற திருத்தல்வாத நிலை எடுத்து செயல்பட்டனர்.

11). இதற்கு நேர் எதிராக மா-லெ கட்சியினர் மக்களின் நம்பிக்கையை பெற்ற தேர்தல் நிராகரித்து தேர்தலில் கலந்துக் கொண்டு இந்த பாராளுமன்ற ஆட்சி முறை மக்களுக்கனது அல்ல. என்பதனை மக்களிடம் அம்பலபடுத்த தவறினர் அதனால் மக்களிடமிருந்து இவர்கள் தனிமைபட்டனர்.

12). தேர்த்தல் முறைகள் மூலம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று கருதி ஆட்சிக்கு வந்தவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளின் விருப்பங்களை நடைமுறை படுத்துவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் மக்களிம் மீது தாக்குதல் தொடுத்து மக்களிடம் அம்பலப்பட்டு மக்களின் செல்வாக்கை இழந்தனர்.

13). பாட்டளி வர்க்க கொள்கை கோட்பாடுகளை முன் வைத்து ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக  வளர்க்காமல் முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு வைத்து  மக்களின் நம்பிக்கை இழந்தனர்.

14). கட்சி அமைப்பில் உள்ள தோழர்களிடம் பாட்டாளி வர்க்க பண்பை வளர்க்காமல் அவர்களை உள்ள சமூக நிலைமைகளை புரிய வைக்கவில்லை.

15). கட்சிகுள் உருவான கருத்து வேறுபாடுகளை உட்கட்சி சித்தாந்த போராட்டம் நடத்தி தீர்வுகாண தவறினார்கள்.

16). உட்கட்சி போராட்டம் என்றாலே தனிநபர்கள் மீதும் நடத்தும் தாக்குத்தலாகவும் தனிநபர்களை கட்சியிலிருந்து தூக்கி எறிவதற்கான போரட்டமாகவே அல்லது கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கையாகவே இருந்தது.

17). கருத்து வேறுபாடுகளை எதிர்த்து கட்சியை ஒற்றுமை படுத்துவதற்கான முயற்சி சிறிதும் இல்லை.

18). கட்சியில் தலைவர்கள் பற்றியோ அல்லது கட்சியை பற்றியொ யாரும் விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவரை எதிரியாகவும் அந்த விமர்சனத்தை கட்சிக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட்டது.

19). கட்சின் மீதும் தலைமையின் மீதும் வைக்கப்படும்  விமர்சனங்களை பரிசீலித்து அதில் தவறு இருக்குமானல் சுய விமர்சனம் செய்துக் கொண்டு தவறுகளை களைவதற்கு முயற்சி எடுத்ததே இல்லை.

20)  மர்க்சிய லெனினிய ஆசான்களின் போதனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து போராடி மார்க்சிய விரோதிகளையும் மார்க்சிய விரோத கருத்துகளையும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்கவே இல்லை இதன் பயனாய் மார்க்சிய விரோதிகளும் மார்க்சிய விரோதக் கருத்துகளும் மக்களிடம் ஆழமரமாக வேர்விட்டு வளர்ந்திருக்கிறது

தற்பொழுது இந்திய சமூக மாற்றதிற்கு மார்க்சியம் மட்டும் போதாது என்றும் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளையும் மார்க்சிய கருத்துகளோடு களந்து செயல்பட வேண்டும் எனற கலைப்புவாத கொள்கை முடிவுகளுக்கு செயல்படுகின்றனர்.

21). தேசிய சுய நிர்ணய உரிமை என்ற லெனினிய கோட்பாட்டை ஏற்க மறுத்து ஆளும் வர்க்க கருத்தான  ஒற்றை அரசு கோட்பாட்டை கடைபிடித்து செயல்படுகின்றனர்.

22). கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதாரவாளர்களிடம் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு  தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் மத சிறுபான்மையினர் மீது தொடுகப்படும் தாக்குதலுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற உணர்வூட்டி போராட்டம் நடத்த தவறினர்.

23). நிலகின்ற அரசுக்கு மாற்றாக பாட்டாளி வர்க்க அரசில் எந்தெந்த வர்க்கங்கள் பங்குபெற வேண்டும் அதற்கான நிறுவனங்கள் என்னென்ன வேண்டும் அந்த அரசில் உழைக்கும் வர்க்கம் எப்படி பக்குகொள்ள வேண்டும்? அந்த அரசை உழைக்கும் வர்க்கம் எப்படி கண்காணிக்க வேண்டும்? அந்த அரசு தவறு செய்தால் உழைக்கும் வர்க்கம் எந்த வகையில் போன்ற பல பிரச்சினைகளை பற்றி ஆய்வு செய்து அது பற்றிய தீர்மானகரமான முடிவுகளை அணிகளுக்கும் மக்களுக்கும் தெரிவித்து விவாதங்கள் நடத்தி முடிவு காண தவறினர்.

24) கட்சியில் தலைமை பதவிக்கு போட்டி இட்டு கட்சிக்குள் பிளவுவேலைகள் சுயநலவாதிகளால் நடத்தப்பட்டது  அதன் காரணமாக கட்சி பிளவுபட்டது. பிளவுபட்ட கட்சிகளுக்கு இடையில் கொள்கை ஒற்றுமை இருந்த பொழுதும் அந்த கட்சிகள் ஒன்றுபடுவதற்கு தடையாக தலைமை வெறிபிடித்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் கட்சி அணிகளிடையே சோசலிச சிந்தனைமுறையும், சோசலிச வர்க்க உணர்வும் வளர்த்து பயிற்சி அளிக்கப்படாததே காரணம்.

25). சமூக மாற்றதிற்கான மக்களின் எதிரிகள் யார் மக்களின் நண்பர்கள் யார் என்பது பற்றி மிகத் தவறான அதாவது எதிரிகளை நண்பர்களாகவும் நண்பர்களை எதிரிகளாகவும் பார்த்து கொள்கை முடிவெடுத்து செயல்பட்டார்கள்.இவர்களித்தில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் இல்லை.

26) குட்டிமுதலாளித்துவ சிந்தனைப்படைத்த குறுங்குழுவாதிகளின் தலைமை கம்யூனிச இயக்கத்தை பல குழுக்களாக சிதறுட்டது, ஒன்றுபட வேண்டிய மக்களை பிளவுப்படுத்தி எதிரிகள் முன் பலமிழந்த கோழைகளாக மாற்றி விட்டனர். இதற்கு காரணம் இந்த தலைவர்களின் சுயநலம் பதவியின் மீது மோகம் முதன்மையான காரணமாகும். கட்சியின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான சித்தாந்த போராட்டம் நடத்துவதற்கு வக்கற்ற சித்தாந்த ஓட்டாண்டிதனம் ஒரு காராணம்.

இன்னொரு அறிக்கை ஜனநாயக புரட்சியா சோசலிச புரட்சியா என்ற விவாதிற்கான பகுதியே PDF வடிவில் இந்த இணைப்பை அழுத்தி வாசிக்க விவாதிக்க தோழர்களே

++++++++++++++++00000000000000000000000+++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்