இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் என்ன செயல்பாட்டில் உள்ளனர்?

 இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும். அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலை போராட்டம் தொடங்கி பல்வேறு பகுதியில் தீர மிக்க போராட்டங்கள் தெலுங்கான தொடங்கி நக்சல்பாரி வரையிலான தியாகிகளின் போராட்டம் புரட்சி தீயில் தன்னைப் புடம் போட்டது மிகவும் மதிக்கத்தக்கதாகும்; இந்திய வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியவை. அவை, அவர்களின் உயர்வான பணி தியாகம் மற்றும் செயல் பற்றி பேசும் அதே நேரத்தில் அவர்களின் புரியாமல் செய்த தவறான பக்கங்களையும் விரிவாக ஆராயவேண்டிய அவசியம் உள்ளது. கடந்த காலத்தை வெறுமனே தெரிந்து கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தை பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை, கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு தற்போதைய காலத்திலும், எதிர்காலத்திலும் நாம் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பதற்கும் நாம் முன்புசெய்த சரியான விசயங்களை மேலும் செழுமைப்படுத்தி செயல்பட வேண்டும், அதற்காகவே மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளை வாசிக்கிறோம் இங்குள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறோம் எங்கள் குறை இருப்பின் சுட்டிக்காட்டலாம் மனபூர்வமாக ஏற்க தயார். இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் குழுக்கள் கம்யூனிசத்தை நேசிக்கும் தனிநபர்கள் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் நாம் தெளிவடைய வேண்டியது...

கம்யூனிஸ்டுகள் யார்? அவர்களின் பணி என்ன?

மார்க்ஸ் எங்கெல்ஸ் தோற்றிவித்த தத்துவ போதனையை நடைமுறையாக்கிவர் லெனின் அவர் தன் நாட்டிற்கு மட்டுமல்லாது உலகிற்கு பாட்டாளி வர்க்க கட்சி புரட்சி பற்றி மிகத் தெளிவாக பாட்டாளி வர்க்க கட்சி கட்டி புரட்சி நடத்தினார் அவைதான் உலகில் பல நாடுகள் பின்பற்றி புரட்சி நடத்தியது. அவை முன் அனுபவம் இன்மை மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பயன்படுதுவதில் அச் சமூக நிலைமைகளை கட்டுகுள் வைதுக்கொள்வதில் ஏற்பட்ட பின்னடைவு சோசலிசம் தற்காலியகமாக தொல்வி கண்டது அதற்கு பின்னான திருத்தல்வாதிகள் சமாதான முறையில் சமூகத்தை மாற்ற முடியும் என்ற 19ம் நூற்றாண்டின் நிலையில் உள்ளதை புரிந்து செயலாற்ற முடியாமல் ஆளும் வர்க்கதின் பின் அணி சேர்வதா? அல்லது ஆளுக்கொரு வகையில் பயணிப்பதா என்று எதிரிக்கு எதிரான போரில் பலமுடன் இல்லாதைவே இன்றைய எதார்தம் ஆக நாம் நமக்கான படிப்பினை பெற மார்க்சிய ஆசான்களிடம் செல்வோம்.  

19ஆம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌, தொழிற்‌ புரட்சியினால்‌ ஏற்பட்ட கருத்துகள்‌ பொருளாதார சமூக தீமைகளினால்‌ சோசலிசக்‌ கருத்துகள் மக்களிடையே பரவ ஆரம்பித்தன. இங்கிலாந்தில்‌ ஓவன்‌, சார்லஸ்‌ஃபோரியர்‌, புரட்சியினால்‌ தாம்சன்‌ செயின்ட்‌ போன்றோரும்‌ பிரான்சு நாட்டில்‌ ஏற்பட்ட தோழிற் புரட்சி போன்றவையும் இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தீமைகளைத்‌ தத்துவரீதியாக ஆராய்ந்து தொழிலாளர்களின்‌ துன்பத்தைப்‌ போக்கும்‌ வழிகளைத்‌ தேடினர்‌. ஆனால்‌, இவர்களின்‌ தத்துவங்கள்‌ எந்தவிதச்‌ சிறந்த பயனையும்‌ அளிக்கவில்லை. ஏனெனில்‌, அவர்களின் போதனைகள் முதலாளிகளையே நம்பி இருந்தன. உதாரணமாக நம் நாட்டில் தினம் தோன்றும் ஓட்டு கட்சிகள் மக்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைப்பு தருவதாக கூறி இதே அமைப்புமுறையை கட்டிக்காக்க உதவுகின்றனர் உண்மையில் இந்த அமைப்பின் நடைமுறை உள்ள அமைப்பு முறையை கட்டிக் காக்கதானே அதாவது ஏற்றதாழ்வான வர்க்க சமூக அமைப்பை கட்டிக்காப்பதுதானே?

இந்த வழிமுறைகள்‌ முதலாளிகளின் வழிமுறைகளைக்‌ கடைப்பிடிப்பதால்தான்‌ தொழிலாளர்களின்‌ துன்‌பங்கள்‌ குறைய வாய்ப்பேயில்லை. ஆனால்‌, கார்ல்‌ மார்க்ஸின்‌ புரட்சிகான நடைமுறை சோசலிச வழிமுறை, சோசலிசத்‌ தத்துவத்தில்‌ மாபெரும்‌ மாற்றத்தை ஏற்படுத்தித்‌ தந்தது.

இந்‌ தத்துவங்களை சூழ்நிலை விரிவாகப் படிப்படியாக எவ்வாறு இருந்தது 19ம் நூற்றாண்டில்‌ தொழில்‌ நுட்பத்துறை வளர்ச்சிக்குப்‌ பெரும்பங்காற்றின இவ்‌ வளர்ச்சியின்‌ பலன்கள்‌ சிலர்‌ பெரும்‌ செல்வ நிலையையும்‌, பலர்‌ துன்பம் துயரங்களுக்கும் இல்லா நிலையையும்‌ அடைந்தனர்‌. இந்த பெரும்‌ துன்பம் மதத்திற்கும்‌ அதன்‌ கருத்து கட்கும்‌ முன்பு இருந்த கவர்ச்சி அப்பொழுது இல்லை. இதன்‌ விளைவாக முன்பு நிலபிரப்புத்துவ அமைப்பில் சில பிரிவினர் அடிமைகளாக இருந்ததுபோல்‌ இல்லாமல் தொழிலாளர்கள்‌ பெருகினர்‌. பணம் படைத்த கூட்டமும் பணம் இல்லாத கூட்டமும் மூலதன ஆதிக்கம் எல்லா மனிதர்களிடையே பணம்‌ உயர்விலும் உயர்வானாதாகியது இதனை விளக்கி விவரித்து வளர்ந்த தத்துவம்தான் மார்க்சியம் அது அடைய வேண்டிய பொதுவுடமை சமூகம் கம்யூனிச சமுகம் என்பர் அதற்காக பாடுபடுவோர் கம்யூனிஸ்டுகள்.

மார்க்ஸீயம்‌ என்பது . உலக தொழிலாளர்‌ வர்க்கத்தின்‌. உலகக்‌ கண்ணோேட்டமாகும்‌.

இது தொழிலாளி வர்க்கத்தின்‌ வரலாற்று வளர்ச்சியில்‌ தோன்றி வளர்ச்சி பெற்றது. வரலாற்று ரீதியான தொழிலாளர்‌ வர்க்கம்‌ புரட்சிகரமான வர்க்கம்‌ ஆனதால்‌ அதன்‌ புரட்சிகரமான படைப்பான தத்துவமாய்‌ மார்க்சியம் உள்ளது.

மார்க்ஸ்‌ வெறும்‌ பொருளை விளக்கும்‌ தீர்க்கதரிசியாகத்‌ தத்துவத்தையே நம்பி இருந்தாரேயானால்‌ இவ்வளவு தூரத்திற்கு வெற்றி பெற்றிருக்க மாட்டார்‌ என்பது திண்ணம்‌. சமூக வரலாற்று வளர்ச்சியைத்‌ தத்துவ முறையுடன்‌ அறிவியல்‌ முறைப்படி ஆராயந்து இயக்கவியல் பொருள்முதல் வாதத்தை வரலாற்று பொருள் முதல்வாதம் என்று சமூக நடைமுறைக்கு பொருத்தினார். உழைக்கும் மக்கள்தான் மகத்தானவர்கள் அவர்களின் உழைப்பை சுரண்டிதான் சுரண்டல் வர்க்கம் வாழ்கிறது என்பதனையும் மூலதன சொந்தகாரன் முதலாளி தொழிலாளியின் உழைப்பை சுரண்டிதான் தன்னை பெருக்கிக் கொள்கிறான் என்பதனை விவரித்து உபரி மதிப்பு கோட்பாட்டை உலகுக்குத் தந்தார்.

மார்கஸ் கூறிய அறிவியல் எல்லோருடைய வெறும்‌ தத்துவப்‌ போதனையாக இருந்திருந்தால்‌ ஒரு சிலரது கவனத்தையே கவர்ந்திருக்கும்‌. ஆனால் அவரின் போதானை உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழிகாட்டி அவரது வெற்றிக்கு இதுவும்‌ ஒரு முக்கிய காரணமாகும்‌. மார்க்ஸிய தத்துவங்கள்‌, “மார்க்ஸின்‌ முக்கிய படைப்புகள்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி அறிக்கை (Communist manifesto 1848), மூலதனம், தத்துவத்தின்‌ வறுமை (The Poverty of Philosophy), இன்னும் சில இப்‌ புத்தகங்களின்‌ மூலமாக மார்க்ஸ்‌ தொழிலாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கை பிரச்சினையின் உண்மையான தகவல்களை தந்‌தார்‌. தொழிலாளி வர்க்கம்‌ ஒன்றுபட வேண்டும்‌ எனக்‌ கூக்குரலிட்டார்‌. புரட்சியன்றி வேறு எந்தவிதச்‌ சீர்திருத்தத்திலும்‌ இவர்‌ நம்பிக்கை கொள்ளவில்லை. புரட்சி வேண்டும்‌ என்று கூறினார்‌. அதற்கான கோட்பாடுகளை வகுத்தளித்தார். மார்க்சியக்‌ கோட்பாட்டில்‌ தொழிலாளர்‌ வர்க்கம்‌ விழித்து எழுவதற்கான வழிமுறை மட்டும்‌ இல்லை. நாம் வாழும் சமூக அவலங்கள் ஏற்படுவதற்கான நெருக்கடியான சூழ்நிலைகள்‌வேண்டிய வழிமுறைகளை விளக்கி முதலாளித்துவத்தை எங்ஙனம்‌ வீழ்த்த வேண்டும் என்னும்‌ விளக்கம்‌ கூறியதோடு இதுவரை செயல்பாட்டில் இருந்த கற்பனாவாத சோஷலிசத்தை தத்துவ ரீதியாக விஞ்ஞான சோசலிசமாக மார்க்ஸ்‌ மாற்றி விடுகிறார்‌. மார்க்சியமானது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவமாக உலக மக்களுக்கு நடைமுறையில் உள்ளது.

நிலப்பிரபுத்துவ சமுதாயம் வீழ்த்தப் படுகையில் உலகெங்கும் பரபரப்பு நிலவிய அந்தக் காலங்களில் பாட்டாளி வர்க்கம் தன் சொந்த லட்சியங்களை எட்டுவதற்காக மேற்கொண்ட முதல் நேரடி முயற்சிகள் தவிர்க்க முடியாதவாறு தோல்வியடைந்தன. காரணம், பாட்டாளி வர்க்கத்தின் அப்போதைய வளர்ச்சியுறாத நிலை. அத்துடன், அது விடுதலை பெறுவதற்கான பொருளாதார நிலைமைகள் அப்போது நிலவவில்லை. அத்தகைய நிலைமைகள் இனிமேல்தான் தோற்றுவிக்கப்படவிருந்தன. வரவிருந்த முதலாளித்துவ சகாப்தம் மட்டுமே அந்த நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தொடக்க கால இயக்கங்கள் பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர் களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர் களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு,

ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. சரியான சோஷலிச, கம்யூனிசக் கருத்தமைப்புகள் என்று சொல்லப்பட்ட, சான் சிமோன், ஃபூரியே, ஓவன் மற்றும் பிறரின் கருத்துகள், பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித் துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் வளர்ச்சியுறாத தொடக்கக் காலகட்டத்தில் தோன்றி நிலவியவையே. இந்த வகைப்பட்ட சோஷலிஸ்டுகள், வர்க்கப் பகைமைகள் அனைத்துக்கும் மிகமிக மேலானோரா கத் தம்மைத்தாமே கருதிக் கொள்வதற்கு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அத்தோடு கூட அவர்களின் சொந்தச் சுற்றுச் சார்புகளும் காரணமாயின. சமுதாயத் தின் ஒவ்வோர் உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவரின் நிலையையுங்கூட, மேம்படுத்த அவர்கள் விரும்பினர். எனவே, வர்க்க வேறுபாடு கருதாமல் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுப்பதை, சரியாகச் சொல்வதெனில், முன்னுரிமை தந்து ஆளும் வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினை ஒருவர் புரிந்து கொண்டபின், சமுதாயத்தின் சாத்தியமான நிலைகளுள் மிகச்சிறந்த நிலையை எய்துவதற்குரிய, சாத்தியமான திட்டங்களிலேயே மிகச் சிறந்த திட்டம் அது என்பதை அவர் காணத் தவற முடியுமோ?

எனவே, அவர்கள் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும், குறிப்பாக அனைத்து புரட்சிகரச் செயல்பாடு களையும் நிராகரிக்கின்றனர்; சமாதான வழிகளில் தம் லட்சியங்களை அடைந்திட விரும்புகின்றனர்; நிச்சயமா கத் தவிர்க்க முடியாத தோல்வியில் முடிகிற சிறு பரிசோதனை கள் மூலமும், முன்மாதிரி (அமைப்புமுறையின்) சக்தியைக் கொண்டும், புதிய சமூக வேதத்துக்குப் பாதை வகுத்திட அவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர். வருங்கால சமுதாயத் தைப் பற்றிய இத்தகைய கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நிலையில், ஆனால் அதனுடைய சொந்த நிலைகுறித்துக் கற்பனையான கருத் தோட்டம் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தீட்டப்பட்டவையாகும். அவர்களின் உயரிய நோக்கம் எதுவாக இருந்தாலும் உள்ள சுரண்டலுக்கு தீர்வாக இல்லை.

கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாயபிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவ தில்லை. 

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

மேல் காணும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் நோக்கம் நாம் அறியாதவர்கள் அல்ல?

தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து மூன்று அரங்கங்களில் போராடுகிறது.

1. பொருளாதாரப் போராட்டங்கள் .

2. அரசியல் போராட்டங்கள் .

2. தத்துவார்த்தப் போராட்டங்கள் .

பொருளாதாரப் போராட்டங்களில்தான் தொழிலாளி வர்க்கம் , அதன் தோற்றக் காலத்திலிருந்து ஈடுபட்டு வந்துள்ளது. தற்காலத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெறாத தொழிலே கிடையாது. உலக ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பரவலான அளவில் நடைபெறுகின்றன. தொழிலாளி வர்க்க நலன்களையும் ஒற்றுமையையும் பொருளாதாரப் போராட்டங்கள் பாதுகாக்க உதவுகின்றன. ஆயினும் இவற்றால் மட்டும் முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படைகள் நொறுங்கி விடுவதில்லை.

சோசலிஸ உணர்வு தொழிலாளி வர்க்கத்தில் தோன்றும்போதுதான் பொருளாதாரப் போராட்டம் , அரசியல் போராட்டமாக மாற்றம் பெறுகிறது. அப்பொழுதே தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தோடு, வர்க்கங்கள் என்ற நிலையில் ஒன்றையொன்று முழுமையாக எதிர்த்து நிற்கின்றன. அரசியல் போராட்டங்களே வர்க்கப் போராட்டத்தின் பிரதானமான வடிவமாகும் மற்றெல்லாப் போராட்டங் களும் அரசியல் போராட்டத்திற்கு அடங்கிய முக்கியத்துவ முடையவை தான். மார்க்சிய லெனினியக் கட்சிகளின் தலைமையில் , தொழிலாளி வர்க்கம் , முதலாளித்துவ சட்டங்களை யும் எதிர்த்து தனது சுதந்திரங்களுக் காகப் போராடுகிறது. தனது உரிமைகளை விஸ்தரித்துக் கொள்ளவும் முடிவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் போராடுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங் கள் , அரியல் சீர்திருத்தங்களுக்காக அல்லாமல் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான நோக்கமுடையதாக இருந்தால்தான் அது புரட்சிகரமான போராட்டமாக இருக்கும் .

தொழிலாளி வாக்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வரலாற்றுப் போக்தின் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி என்பதை உணர வேண்டும்” என்ற கருத்தே கம்யூனிசத்தின் புரட்சிகரமான முடிவாகும்,

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் குறிக்கோள்களையும், கடமைகளையும் தெளிவாக உணர்த்துகிற லெனினுடைய பின்வரும் வாசகத்தை கம்யூனிஸ்டுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தை அங்கீரிப்பவர் கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்லர் அவர்கள் முதலாவித்துவ அரசியல் சிந்தனையுடையவர்களாகவும் இருக்கலாம், மார்க்சியத்தை வர்க்கப் போராட்டம் என்ற கருத்தமைப்புக்குச் சுருக்கி விடுவது, மார்க்சியத்தின் பரப்பைச் சுருக்குவதாகும். இது ஒரு திரிபாகும். இதை முதலாளிகள் கூட ஒப்புக் கொள்ளுவார்கள். கம்யூனிஸ்ட் என்ற பெயருக்குத் தகுதிபெற வேண்டுமானால் ஒருவா் வர்க்கப் போராட்டத்தை ஒப்புக் கொள்வதோடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஓப்புக்கொள்ள வேண்டும். இதுதான் மார்க்சிய சிந்தனைக்கும், குட்டி - முதலாளித்துவ சிந்தனைக்கு முள்ள வேறுபாடு”.

வர்க்க போராட்டத்தின் மூன்றாவது அரங்கம் தத்துவார்த்தப் போராட்டமாகும். இன்னும் தொழிலாளி வர்க்கம் உள்பட மக்கள் மனத்தில் ஆதிக்கம் செலுத்துவது முதலாளித்துவக் கருத்துக்களும், கருத்தமைப்புகளுமாகும், அவற்றை எதிர்த்து சோசலிச கருத்தமைப்பை தொழிலாளி வர்க்கத்தின் மனத்தில் புகுத்துவதும், மார்க்சிய சிந்தனையை அவா்கள் மனத்தில் வளர்ப்பதும், கொள்கைப் போராட்டம் அல்லது தத்துவார்த்தப் போராட்டம் எனப்படும் ,

தொழிலாளி வர்க்கத்தின் நலன்கள், கடமைகள், குறிக்கோள்களையும் பற்றிய விஞ்ஞானக் கண்ணேட்டத்தை மனத்தில் பதித்துக்கொள்ளாமல், ஆளும் வர்க்கத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் தெளிவான போராட்டத் திசைவழியை வகுத்துக்கொண்டு போராட முடியாது.

தொழிலாளி வர்க்க இயக்கத்தில் விஞ்ஞான சோசலிஸ தத்துவ அறிவையும், மார்க்சிய தத்துவ சிந்தனையையும் இணைக்காமல், அதனைப் புரட்சிகரமான போராட்டமாக உயர்த்த முடியாது, இக்கடமைகளை நிறைவேற்றுவகற்குத் தடையாக இருப்பது நம் நாட்டில் உள்ள பல்வேறு வித கண்ணோட்டங்களான தத்துவங்களுமாகும், நிலப்பிரபுத்துவ பிற்போக்கு தத்துவங்களும் அதன் சாதி, மத கசடுகளும், இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவ கருத்தியல்கள் முழு முயற்சியோடு பரப்பப்படுகின்றன. கம்யூனிச எதிர்ப்பு சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக அமெரிக்க அரசு, கோடிக்கணக்கான டாலர் செலவழிக்கிறது. தங்கள் நாட்டில் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களில் மார்க்சிய எதிர்ப்பு, சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பு ஆராட்சியின் பெயரில் மார்க்சியம் அல்லாத பல்வேறு கருத்துகளை தாங்கிய வெளியீடு கள் மற்றும் பல்வேறு நாடுகளில் கம்யூனிச விரோத கருத்துகளை பரப்பும் பத்திரிக்கைகள் மூலம் உலக நாடுகளில் வினியோகிக்கப்பட்டு மார்க்சியத்தை மறுக்கும் பணியில் கோடிக்கணக்கான டாலர்களை செலவிடுகிறது.

ஏகாதிபத்தியம் பலதுறைகளில் கம்யூனிசத்தையும் , சோவியத் வாழ்க்கையை யும் எதிர்க்கிற ஆராய்ச்சிகளும் வெளியீடு களும் வெளியிட ஊக்குவிக்கப்படுகின்றன - இத்த வெளியீடுகளைப் பல நாடுகளில் ஏகபோகப் பத்திரிகைகள் முதலாளித்துவ பத்திரிகைகள் மூலமாகவும் டாலர் காதலர்களின் பிரசுரங்கள் மூலமாகவும்

கடமையாக பரப்புகின்றது. இதனை எதிர்த்து மார்க்சிய தத்துவத்தையும் விஞ்ஞான சோசலிசத்தையும் பரப்புவதும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும், விஞ்ஞான சோசலிச சிந்தனையையும் இணைப்பகுற்குரிய பணியை புரட்சியை விரும்பும் கம்யூனிஸ்ட்கள் அதன் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். தற்கால கம்யூனிச அரசியல் கட்சிகளில், உலக வியாபகமுடையவையும், புரட்சிகரமான வையும் சிறந்த ஸ்தாபன அமைப்புடையவும், ஓவ்வொரு நாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக இருப்பவையும், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமல்லாமல், உலக உழைக்கும் மக்களின் சுரண்டல் அற்ற வாழ்விற்காக நற்பணிபுரிபவையும் மார்க்சிய லெனினியக் கட்சிகளே, அவை அதற்கான பணியாற்ற வேண்டும்.

பெரும்பான்மையான நாடுகளில் இவை “கம்யூனிஸ்டுக் கட்சி” என்ற "பெயரில் இயங்கிவருகின்றன. சில நாடுகளில் வரலாற்றுக் காரணங்களினால் வேறு பெயர்களில் செயல்படுவதும் உண்டு, “தொழிலாளர் கட்சி, சோசலிசக் கட்சி, தொழிலாளர் - விவசாயிகள் கட்சி, உழைக்கும் மக்கள் கட்சி” என்ற பெயர்களில் பல்வேறு கட்சிகள் பல்வேறு செயல்படுகின்றன.

மார்க்சிய லெனினிய ஆசான்களின் போதனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து போராடி மார்க்சிய விரோதிகளையும் மார்க்சிய விரோத கருத்துகளையும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

தற்பொழுது இந்திய சமூக மாற்றதிற்கு மார்க்சியம் மட்டும் போதாது என்றும் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளையும் மார்க்சிய கருத்துகளோடு களந்து செயல்பட வேண்டும் எனற கலைப்புவாத கொள்கை முடிவுகளுக்கு தத்துவார்த்த பதில் தர கம்யூனிஸ்டுகள் கடமை பெற்றுள்ளனர்.

ஆசான் மார்க்ஸ் தொடங்கி மாவோ வரை மனித குல விரோத சுரண்டல்முறைக்கு தீர்வாக உள்ள சமூக அமைப்பை மாற்றி அமைக்க கூறினர். அதற்கு உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டி எதிரிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிக்கான பாதையினை வழிகாட்டியுள்ளனர். அதனை பின்பற்றாமல் ஆளுக்கொரு பெயரில் கட்சி நடத்தி சாதிக்க போவதும் ஒன்றுமில்லை. இவை அதேவேளையில் உழைக்கும் மக்கள் விரோத செயலே.

 

தொடரும்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்