கீன்சியம் செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றி தோழா் ஸ்டாலின் வார்த்தையில்

 கீன்சியம் செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றி தோழா் ஸ்டாலின் வார்த்தையில்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவு சீரமைக்கப்பட்டு கீன்சியம் செயல்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் தோழா் ஸ்டாலின் அந்நாட்டு அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கையை பற்றி கூறுகையில்:
“தற்போதைய முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கையானது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்து வதற்கானது அல்ல. மாறாக ஏகபோகங்களுக்காக உற்பத்தியாளா்களிடமிருந்து உச்சப்பட்ச லாபத்தை பிழிந்தெடுப்பதே ஆகும்.”
அவா் மேலும் கூறுகையில் “ஏகபோக மூலதனத்தின் நோக்கம் ஏதேனும் லாபத்தை பெறுவதல்ல. மாறாக உச்சபட்ச லாபத்தை அடைவதே அதன் முதன்மையான நோக்கம். அதுதான் நவீன முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார விதியாகும். நவீன முதலாளி த்துவத்தின் அடிப்படை பொருளாதார விதியின் முக்கியமான அம்சங்கள் மற்றும் தேவைகளை கீழ்க்காணும் வகையில் வகைப் படுத்தலாம்.
சுரண்டலின் மூலமாக அதிகபடியான முதலாளித்துவ லாபத்தை பெறுவது, குறிப்பிட்ட நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை அழித்து ஏழ்மைக்கு உள்ளாக்குவது, பிற நாடுகளின் மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையை நிறுவனமாக்குவது, குறிப்பாக பின்தங்கிய நாடுகளை மற்றும் கடைசியாக தேசிய பொருளாதாரத்தைபோர் மற்றும் இராணுவமயமாக்குவது. அவற்றை உச்சபட்ச லாபத்தை பெறுவதற்கு பயன்படுத்துவது” என்றார்.
ஏகபோக முதலாளித்துவத்தின் இந்த அடிப்படை விதிகளை கீன்சியத்தால் மாற்றி விட முடியாது.
அதே வேளையில் “முற்போக்கு முதலாளித்துவத்தின்” துவக்கமாக கீன்சியத்தை பிரதிநித்துவப் படுத்தவும் முடியாது. அது “அழுகிப் போன முதலாளித்துவ அமைப்பின் பிற்போக்கு வடிவமாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பொதுநெருக்கடியில் உருவான கீன்சியத்தால் நெருக்கடியை தீா்க்க முடியாது. மாறாக தீவிரப் படுத்தவே செய்தது”. இதுதான் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும்.
அதே சமயத்தில் முதல் உலகப் போருக்கு யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் போது சோவியத் ரஷ்யாவானது எந்த அந்நிய ஏகாதிபத்தியத்தின் துணையின்றி மற்றும் எந்த நாட்டையும் அடிமைப் படுத்தி எந்தவிதமான சுரண்டலில் கொள்ளையடித்தலில் ஈடுபடாமல் ஒரு சுயேச்சையான தொழிலாளா் விவசாயிகளுக்கான ஒரு வளா்ச்சி பெற்ற சோசலிச சமூகத்தை வெற்றிகரமாக கட்டியமைத்து கொண்டிருந்தது. ஒரு நாடு பிறநாட்டைச் சுரண்டாமலும் தன்னை பிறநாடுகள் சுரண்ட அனுமதிக்காத நிலையில் சுதந்திரமான பொருளாதார வளா்ச்சியை அடையமுடியும் என்று மார்க்ஸியம் முன்வைத்த வரலாற்று வளா்ச்சியை பற்றிய கோட்பாட்டை ரஷ்யாவில் குறிப்பாக செயல்படுத்தி நடைமுறை ரீதியில் மெய்ப்பித்ததை தோழா் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்.
“முதலளித்துவ பொருளாதார வளர்ச்சிக்காக முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த பாதைகளான குறிப்பாக ஒன்று, காலனிகளை கைப்பற்றி மற்றும் கொள்ளையடித்து பொருளாதார வளர்ச்சியை அடைந்த பிரிட்டனைப் போலவோ, இரண்டாவதாக, ஒரு நாட்டை மற்றொரு நாட்டை படைபலத்தால் தோற்கடித்து தோல்வியடைந்த நாட்டின் மீது அபராதம் போட்டு தனது தொழிற்துறையை வளர்த்த ஜெர்மனியைப் போலவோ, மேலும் மூன்றாவதாக ,மூலதனத்தில் பின்தங்கிய நாடுகள் மூலதனத்தில் முன்னேறிய நாடுகள் கடுமையான நிபந்தனையின் அடிப்படையில் கொடுக்கும் கடனைக் கொண்டும் நமது பொருளாதாரத்தை வளர்க்க முடியாது எனவும் , ஏனென்றால் அவை அனைத்தும் பெருவாரியான உழைப்பாளி மக்களை கொள்ளையடிப்பதன் மூலமாகவும் அவர்களைச் சுரண்டுவதன் மூலமாகவும் வளர்ந்து செல்லக் கூடிய பாதை. எல்லா வழிகளும் முதலாளித்துவ தொழிற்துறை அரசுகள் உருவாவதை நோக்கியே செல்கின்றன. “பழைய வழியிலான தொழில்மயமாக்கப் பாதைகள் எதுவும் நமக்கு ஏற்புடையதல்ல என்ற நிலையில் அடிமைத்தனமான நிபந்தனைகள் எதுவுமின்றி புதிய முதலீடுகள் உள்வரவு என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் சோவியத் அரசு என்ன செய்யும்?
தோழர் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்,
“சோவியத் அரசாங்கம் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். வேறு எந்த நாடுகளாலும் பரிசோதிக்கப்படாத பாதை. அந்நிய கடன்களின்றி பெருவீத தொழிற்துறையை வளர்ச்சி அடையச் செய்யும் பாதை. அந்நிய முதலீடுகளின் உள்வரவு அவசியமின்றி நாட்டை தொழில் மயமாக்கும் பாதை. லெனின் தன்னுடைய “மிகச்சிலது ஆனால் சிறந்தது” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள பாதை. “தொழிலாளர்கள் தங்களின் சமூக உறவுகளில் மட்டுமீறிய செலவினங்களைக் குறைத்து சிறந்த முறையில் சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையைதக்க வைத்துக் கொண்டுள்ள ஒரு அரசை, தொழிலாளர்கள், விவசாயிகள் மீதான தங்களது தலைமையை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு அரசை உருவாக்குவதற்கு நாம் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்”. என்று லெனின் கூறுகிறார்.
“நாம் நம்முடைய அரசு இயந்திரத்தை மிக அதிகப்பட்சமான சிக்கனத்திற்கு கொண்டுவர வேண்டும். பொருளாதார வாழ்வில் சாத்தியமான அளவிற்கு அதிகபட்ச சிக்கனத்தை கடைபிடித்து தொழிலாளி வர்க்கம் விவசாயிகள் மீதான தன்னுடைய தலைமையை தக்கவைத்துக் கொள்ள இயலுமானால் நாம் சேமிக்கும் ஒவ்வொரு கோப்பெக்கையும் (ரஷ்ய நாணயம்) நம்முடைய பெருவீத தொழிற்துறை வளர்ச்சிக்கும், மின்மயமாக்கலை மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும்”.
“இந்த ஒரு பாதையைத்தான் நம் நாடு ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. நம்முடைய பெருவீத தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்றாலும் நம் நாடு தன்னை பலம் வாய்ந்த தொழில் வளமிக்க பாட்டாளிவா்க்க அரசாக மலரச் செய்ய வேண்டு மானாலும் அது இந்த பாதையில் தான் தொடா்ந்து முன்னேற முடியும்".
“தேசியமயமாக்கப் பட்ட நிலம், தேசியமயமாக்கப் பட்ட தொழிற்துறை தேசியமயமாக்கப் பட்ட போக்குவரத்து, கடன்கள், அந்நிய வா்த்தகத்தில் ஏகபோகம், அரசாங்கத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட உள்நாட்டு வா்த்தகம் இவை அனைத்தும் “உபரி” மூலனதனத் திற்கான புதிய ஆதாரங்களாக உள்ளன. இவற்றை நாம் நாட்டின் தொழிற் வளா்ச்சிக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆதாரங்களை இதுவரையில் எந்த முதலாளித்துவ அரசும் பெற்றிருக்கவில்லை. பாட்டாளிவா்க்க அரசு ஏற்கனவே இதை பயன்படுத்துவதோடு இது போன்ற புதிய ஆதாரங்களை நமது தொழிற்துறை வளா்ச்சிக்கு பயன் படுத்தியும் வருகிறது. என்பதை நீங்கள் அறிவீா்கள்.
இந்தவழியின் மூலம் நாம் ஏற்கனவே சில வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என்பது சாதாரண முக்கியத்துவம் உடையது அல்ல. அதனால்தான் முதலாளித்துவ அரசுகளுக்கு எந்த வளாச்சி பாதை சாத்தியமற்றதோ “அது” பாட்டாளி வாக்க அரசுக்கு எவ்வளவுதான் இடா்பாடுகளையும் சோதனைகளையும் உண்டாக்கினாலும் அது முழுவதும் சாத்தியமானதே. அதாவது ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பது என்பது பற்றிய பிரச்சினை தேசியப் பொருளாதாரம் முழுவதையும் தழுவியது. அதாவது தொழிற்துறையையும் விவசாயத்தையும் சரியான முறையில் ஒன்றிணைபது பற்றிய பிரச்சினையாகும்.
சோசலிச சமூகம் என்பது தொழிற்துறையிலும் விவசாயத் துறையிலும் பங்கு பெற்றள்ள உற்பத்தியாளாகள் மற்றும் நுகர்வாளர்களின் கூட்டமைப்ப ஆகும். ஆனால் இந்த கூட்டில் தொழிற்துறையுடன் அதற்கு மூலப்பொருள்களையும் உணவையும் கொடுத்து அதனுடைய உற்பத்தி பொருட்களை உள்வாங்கிக் கொள்ளும் விவசாயத்துறையை இணைக்காவிட்டால் தொழிற்துறையும் விவசாயமும் ஒரே முழுமையாக மாறாவிட்டால் எந்தவிதமான சோசலிசத்திற்கும் வாய்ப்பில்லை.
ஒரு தேடுதலில் இருந்து....
No insights to show

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்