போராடும் குணத்தை ஆளும் வர்க்கம் மட்டும் மழுக்கடிக்கவில்லை மக்களுக்காக வாழ்பவர்களாக நடிக்கும் கூட்டம் மக்களை பல்வேறு பிரிவினை செய்து அவர்களுக்கு ஏற்படும் நேரடி சுரண்டலுக்கு கூட வாய் திறக்க முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டது எப்படி?
சற்று சிந்தித்து பாருங்கள்!!!???
சோசலிச உணர்வு தொழிலாளி வர்க்கத்தில் தோன்றும்போதுதான் பொருளாதாரப் போராட்டம் , அரசியல் போராட்டமாக மாற்றம் பெறுகிறது. அப்பொழுதே தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தோடு, வர்க்கங்கள் என்ற நிலையில் ஒன்றையொன்று முழுமையாக எதிர்த்து நிற்கின்றன.
அரசியல் போராட்டங்களே வர்க்கப் போராட்டத்தின் பிரதானமான வடிவமாகும். மற்றெல்லாப் போராட்டங் களும் அரசியல் போராட்டத்திற்கு அடங்கிய முக்கியத்துவ முடையவைதான். மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைமையில் , தொழிலாளி வர்க்கம் , முதலாளித்துவ சட்டங்களையும் எதிர்த்து தனது சுதந்திரங்களுக்காகப் போராடுகிறது. தனது உரிமைகளை விஸ்தரித்துக் கொள்ளவும் முடிவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் போராடுகிறது.
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் , அரசியல் சீர்திருத்தங்களுக்காக அல்லாமல் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான நோக்கமுடையதாக இருந்தால்தான் அது புரட்சிகரமான போராட்டமாக இருக்கும்.
தொழிலாளி வர்க்க இயக்கத்தில் விஞ்ஞான சோசலிச தத்துவ அறிவையும், மார்க்சிய தத்துவ சிந்தனையையும் இணைக்காமல், அதனைப் புரட்சிகரமான போராட்டமாக உயர்த்த முடியாது, இக்கடமைகளை நிறைவேற்றுவகற்குத் தடையாக இருப்பது நம் நாட்டில் உள்ள பல்வேறு வித கண்ணோட்டங்களான தத்துவங்களுமாகும்.
நம் மத்தியில் கோலோச்சும் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு தத்துவ கண்ணோட்டங்களும் அதன் சாதி,மத கசடுகளும், இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவ கருத்தியல்கள் முழு முயற்சியோடு பரப்பப்படுகின்றன.
இதில் குறிப்பாக கம்யூனிஸ எதிர்ப்பு, சோவியத் மற்றும் சீன சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக அமெரிக்க அரசு, கோடிக்கணக்கான டாலர் செலவழிக்கிறது. தங்கள் நாட்டில் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களில் மார்க்சிய எதிர்ப்பு, சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பு ஆராட்சியின் பெயரில் பல்வேறு மார்க்சியமல்லாத கருத்துகளை தாங்கிய வெளியீடுகள் மற்றும் பல்வேறு நாடுகளில் கம்யூனிச விரோத கருத்துகளை பரப்பும் பத்திரிக்கைகள் மூலம் உலக நாடுகளில் வினியோகிக்கப்பட்டு மார்க்சியத்தை மறுக்கும் பணியில் கோடிக்கணக்கான டாலர்களை செலவிடுகிறது.
அதன் வெளிப்பாடு சமாதான வகையில் சோசலிச நிறுவ எதிரிவர்க்கத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ள பாராளுமன்ற வாத கட்சிகள் பாராளுமன்றத்தை எதிர்பதாகக் கூறிக் கொண்டு ஆளுக்கொரு குழுவாக சிதறி போயுள்ள புரட்சி பேசும் குழுக்கள்... இவை எவையுமே ஆளும் வர்க்கம் தொடுத்துள்ள கொடூரமான வரிக்கு எதிரான போரில் உழைக்கும் மக்களுக்காக நிற்கும் திறன் படைத்தவையே.
ஏனெனில் ஆளும் வர்க்கம் தன் அரசு கருவிகளின் மூலம் பலம் கொண்டு உழைக்கும் மக்களை ஒடுக்குவதும் சுரண்டுவதும் நடைபேரும் பொழுது அதற்கெதிரான போராட்டத்தை கூட நடத்த ஆளும் வர்க்க தயவை நாடும் இவர்கள் உழைக்கும் மக்களை நம்பி இறங்க தயார் செய்ய இயலாதவர்களே....
ஆக உழைக்கும் மக்கள் போரட அவர்களின் துயர் துடைக்க அவர்களுக்கான ஒரு மார்க்சிய கட்சி வேண்டும் அவை ஆளும் வர்க்க சித்தந்தங்கள் பின் அணி திரளும் சந்தர்ப்பவாத கட்சிகளாக இருக்க கூடாது! மார்க்சிய தோழர்களை சகோதர மனபான்மை அரவணைக்க தெரியாத, குறுங்குழுவாதிகளும் தாங்கள் செய்யும் பணி ஆளும் வர்க்கம் நீடிக்க செய்யதான் என்பதனை அறியாதவர்கள் அல்ல!?
ஊழைக்கும் மக்களின் துன்ப துயரங்களுக்கு விடியல் இந்த அரசு வடிவில் இல்லை அவை அவர்களின் விடுதலையை விரும்பும் பொதுவுடைமை சமூகத்தில்தான் சாத்தியம் அதனை பற்றி தொடர்ந்து பேசும் ....
No comments:
Post a Comment