சாருவின் தியாகமும் இன்றைய பிழைப்புவாதிகளும்

இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும். அதிலும் குறிப்பாகப் புரட்சிக்காகப் போரிட்ட நக்சல்பாரி தியாகிகளின் போராட்டம் புரட்சி தீயில் தன்னைப் புடம் போட்டது மிகவும் மதிக்கத்தக்கதாகும்;இந்திய வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியவை. அவை, அவர்களின் உயர்வான பணி தியாகம் மற்றும் செயல் பற்றி பேசும் அதே நேரத்தில் அவர்களின் புரியாமல் செய்த தவறான பக்கங்களையும் விரிவாக ஆராயவேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த காலத்தை வெறுமனே தெரிந்து கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தை பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை, கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு தற்போதைய காலத்திலும், எதிர்காலத்திலும் நாம் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பதற்கும் நாம் முன்புசெய்த சரியான விசயங்களை மேலும் செழுமைப்படுத்தி செயல்பட வேண்டும், அதற்காகவே

 

சாரு மஜூம்தார் (15 மே 1918 – 28 சூலை 1972) இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். தேபாகா என்ற இடத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் நடைபெற்ற விவசாயிகளுக்கு நிலம் வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கு பெற்றவராவார். பின்னாளில் நக்சல்பாரி என்ற ஆயுதமேந்திய போராட்டக் குழுவை உருவாக்கி தலைமை தாங்கியவர் ஆவார்.

இந்தியப் புரட்சி வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்றது நக்சல்பாரி எழுச்சி. அதன் சிற்பி தோழர் சாருமஜூம்தாரின் பங்களிப்பை அவரை வெறுப்பவர்களும், விமர்சிப்பவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக 1967, 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், சிபிஎம் கட்சியின் சார்பாக மேற்குவங்கத்தில் குறிப்பாக, கல்கத்தாவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொலைசெய்த கவுதம் தேப்கூட ஒரு கட்டத்தில், சாருமஜூம்தாரை இந்தியாவின் சே குவேரா என்று வர்ணித்ததாக தி வீக் ஆங்கில வார ஏட்டில் கூறியுள்ளார்.

தனது கல்லூரிக் காலங்களில், சிபிஎம் கட்சியின் மாணவர் அணியான எஸ்எஃப்ஐ தலைவராக இருந்த கவுதம் தேப், நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக அன்றைய காலகட்டத்தில் வெடிகுண்டுகளைத் தயாரித்ததாகவும், கல்லூரி மாடியிலிருந்து குண்டுகளை வீசியதையும், கத்திக் குத்துக்கு உள்ளானதையும் கூறியுள்ளார். ஆனால் அன்றைய 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், கல்கத்தா நகரில் உள்ள கல்லூரிகள் நக்சல்பாரி கோட்டையாக இருந்த உண்மையைக் கூறவில்லை. அன்றைய தெற்கு கல்கத்தா மாநிலக் கல்லூரி, மத்திய மருத்துவக் கல்லூரி, ஜதாவப்பூர் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்விச் சாலைகளை வரிசையாகக் கொண்டிருந்தது. அந்தக் கல்லூரிகளில் எல்லாம் நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனைகளை ஏந்திய மாணவர்களும், மாணவிகளும் நிறைந்திருந்தனர். அப்போது, மேற்குவங்கத்தை ஆண்டுவந்த சிபிஎம் உள்ளடங்கிய பங்களா காங்கிரஸ் கூட்டணியில், 1967இல் ஜோதிபாசு உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் நக்சல்பாரி புரட்சியாளர்களை அடக்க, மத்திய சிறப்புக் காவல்படையை கொண்டுவந்து கல்கத்தா நகர வீதிகளை வங்காள இளைஞர்களின் இரத்தத்தால் நனைத்தார். அன்று, தெற்கு கல்கத்தாவின் ஒவ்வொரு கல்லூரியையும் தங்கள் வசம் வைத்திருந்த நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனையுள்ள மாணவர்கள், ‘மொலோடோவ் காக்டைல் என்ற பெட்ரோல் குண்டுவகைகளை, சாலையில் வரும் ராணுவத்துக்கு எதிராக எறிந்தனர். ஒரு பெரும் போர்க் காட்சியை ஏற்படுத்திக் காட்டினர். துணை ராணுவம் பயந்து ஓடியது.

ரவிச்சந்திரன் சென்னை ..டி-யில் தனது விஞ்ஞானி படிப்பை முடித்துவிட்டு, கான்பூர் ..டி-யில் போய்ச் சேர்ந்தார். இந்தளவுக்கு கல்கத்தா வீதிகள் புரட்சிகர மாணவர்களின் எழுச்சியில் இருந்தபோது, ‘தேசப்பிரதி என்ற நக்சல்பாரி கட்சியின் அதிகாரபூர்வ வார ஏட்டில், அதன் ஆசிரியர் சரோஜ் தத்தா ஒவ்வொரு வாரமும், கடைசிப் பக்கத்தில் தீட்டிய கட்டுரைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தீயை உருவாக்கின. அப்படி அந்தக் கட்டுரைகளில் என்ன இருந்தது?

கரம்சந்த் காந்தி, இந்திய சுதந்திரத்துக்கு ஆங்கிலேயருடன் சேர்ந்து எப்படி துரோகமிழைத்தார் என்பதும், 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர் என்று கார்ல் மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட போரில், ஆங்கிலேயரை எதிர்த்து மங்கல் பாண்டே தலைமை எடுத்தார் என்பதும் இருந்தன. காந்தியாரின் சிலைகளை அகற்றிவிட்டு, மங்கல் பாண்டேக்கு சிலையை நிறுவுங்கள் என்று சரோஜ் தத்தா தீட்டிய கட்டுரைகள் எடுத்துரைத்தன. மாணவர்களும் உடனடியாக செயல்களில் இறங்கினார்கள். கல்கத்தா நகரம் மட்டுமல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் அந்தப் பணியை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். ஆந்திராவில் ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் வாரங்கல் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்..சி.), ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகம் என ஒவ்வொன்றும் நக்சல்பாரிகள் கோட்டைகளாக மாறின. தமிழ்நாட்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சி..டி.பொறியியல் கல்லூரி, நெல்லை மாவட்டத்தின் அனைத்து கலைக்கல்லூரிகள், சென்னை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி என எல்லாமே நக்சல்பாரி புரட்சிகர மாணவர்களின் கோட்டைகளாக அல்லது செல்வாக்கு மண்டலங்களாக உருவானது. எல்லா கல்லூரிகளிலும், மாணவர்கள் கல்கத்தாவிலிருந்து வந்த லிபரேஷன் என்ற புரட்சிகர கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில ஏடான விடுதலை யை வாங்கிப்படித்து அதில், ‘தேசப்பிரதி ஏட்டில் வெளியான தோழர் சரோஜ் தத்தாவின் வங்காளக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு அந்தந்த மாநிலங்களில் பண்பாட்டுப் புரட்சியை நடத்தும்பொருட்டு, காந்தியாரின் சிலைகளை அகற்றத் தொடங்கினர்.

தோழர் சரோஜ் தத்தாவின் அத்தகைய ஆழம்பொதிந்த வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்ட வீர வரிகள், இந்திய துணைக்கண்டமெங்கும் பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்தியதால்தான் சரோஜ் தாத்தாவை கைது செய்தபோது, வங்காள காவல்துறை அவரை அதிகாலையில் கல்கத்தா கடற்கரையோரம் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றது. அதை நேரில்பார்த்த சாட்சியாக, வங்க பிரபல திரைப்பட நடிகர் இப்தா (இந்தியன் புபிள்ஸ் தியேட்டர் அசோசியேசன்) வின் தலைவர் உத்பல் தத், வெளியேவந்து கூறியதால் அது உலகுக்குத் தெரிந்தது. இவ்வாறு புரட்சிகர எழுத்துகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். எண்ணிப்பார்த்தால், இதே நிலைதான் இன்றைக்கு ஈழத் தமிழனுக்கும் அவர்களது விடுதலைக்கான போராளிகளுக்கும் என்பது புரியும்.

மேலேகூறியுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஏன், நக்சல்பாரி கருத்துகள் செல்வாக்குச் செலுத்தின? பொறியியல் கல்லூரி மாணவர்கள், இந்தியாவை தொழில்மயமான நாடாக சொந்தக் கால்களில் நிற்கவைக்க தங்களது படிப்பு உதவும் என நம்பியிருந்தனர். ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தில் அது எப்படி சாத்தியமாகும்? பண்ணையார்களையும், பண்ணை அடிமைகளையும் கொண்ட கிராமங்கள் நிறைந்த இந்திய துணைக் கண்டத்தில், உற்பத்திக்கான ஆலைகள் நிறைந்த சூழலை உருவாக்க முடியுமா? இந்த நாட்டை ஆள்வோர் அதற்குச் சம்மதிப்பார்களா? ஆளும் அவர்கள் யார்? இந்தியாவின் ஆளும்வர்க்கம், இந்த நாட்டை கொள்ளையடிக்கும் அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் அடிமைகளாக சார்ந்து நிற்கிறார்களே? நிலவுகிற நிலவுடைமை அமைப்புமுறையும், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளாலும்,. அவர்களைச் சார்ந்துவாழும் இந்திய முதலாளிகளாலும் பாதுகாக்கப்படுகிறதே? அத்தகைய நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறியாமல், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளை இந்த நாட்டைவிட்டு விரட்ட முடியாதே? அதன்பிறகுதான் இந்தியாவை சொந்த நாட்டு மூலதனத்தைக்கொண்டு சொந்த நாட்டு முதலாளிகள், ஆலைகளைக்கட்டி உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை வளர்க்க முடியும்? அப்படியானால், அதற்கு ஆணிவேராக இருக்கும் நிலவுடைமை உறவுகளை அறுத்தெறிய வேண்டுமே? விவசாயப் புரட்சியால் மட்டும்தானே அது சாத்தியம்? சீனா அத்தகைய புரட்சியை நடத்தி வெற்றிகண்டதால்தானே தொழிலில் முன்னேறி வருகிறது? அந்த வழிதானே இந்தியாவும் எடுக்க வேண்டும்? அதற்கு ஒரேவழி நக்சல்பாரி வழி புரட்சிதானே? இப்படியாக, தாங்கள் படிக்கும் கல்விக்கு ஒப்ப சிந்தித்ததால், பொறியியல் கல்வி படிப்போர் அதிகமாக இதில் ஈர்க்கப்பட்டனர். அத்தகைய கல்லூரிகளும், அதன் விடுதிகளும், புரட்சியாளர்களின் கோட்டைகளாக மாறின.

இத்தகைய சிந்தனையை செயல்வடிவில் கொடுத்தவர்தான் சாரு மஜூம்தார். அதனால்தான், சாரு மஜூம்தாரின் புரட்சிகர கருத்துகள் நெருப்புபோல மாணவர்கள் மத்தியில், இந்திய துணைக் கண்டமெங்கும் பரவியது. அவர் எப்படி இத்தகைய கருத்துகளை உருவாக்கினார்? ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில், 1920இன் காலங்களில் இந்தியாவில் உருவான பொதுவுடைமை கட்சி, புரட்சியை நடத்தி நாட்டை தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கரங்களில் கொண்டுவர பாடுபட்டது. ஆள்வோரின் அடக்குமுறைகளுக்கு உள்ளானது. இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு, மீண்டும் கம்யூனிஸ்டுகள் போராட்டங்களையும், ஆயுதப் புரட்சியையும் நடத்த முனைந்தனர். கட்சி தடை செய்யப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் புரட்சியை முன்னெடுக்க முனைந்தது. 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்கத்தில், டார்ஜிலிங் மாவட்ட கட்சி செயலாளர் தோழர் சாரு மஜூம்தாரும் கைதானார். விடுதலையானவுடன் நேராக கட்சி அலுவலகத்துக்கு வந்த சாரு, அங்கிருந்த அகில இந்தியச் செயலாளர் எஸ்..டாங்கேயின் படத்தை இழுத்து கீழேபோட்டு, ‘இனி, நான்தான் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறியதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு கட்சியில் இருந்த புரட்சியாளர்களுக்கு, தலைமைசெய்த துரோகத்தின்மீது கோபம்.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த தோழர் அப்பு, ‘மார்க்சிய புரட்சியாளர்கள் என்ற பெயரில், தோழர் ராமுண்ணியுடன் சேர்ந்து தீக்கதிர் என்ற ஏட்டை கொண்டுவருகிறார். பிற்காலத்தில் அப்பு, தமிழ்நாட்டு நக்சல்பாரி தலைவராகவும், ராமுண்ணி கேரள நக்சல்பாரித் தலைவராகவும் ஆனார்கள் என்பது வரலாறு. அதன்பிறகு பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, .எம்.எஸ்., .கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, சுந்தரய்யா போன்ற தலைவர்கள் எல்லாமே இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறி, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனத் தொடங்கினர். மக்கள் ஜனநாயகப் புரட்சிதான் தங்கள் பாதை என்று அறிவித்தனர்.

அதை நம்பிய புரட்சிகரத் தோழர்களான சாரு மஜூம்தார், அப்பு, ராமுண்ணி போன்றோர் அந்தக் கட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். தீக்கதிர் ஏட்டையும் அந்த கட்சிக்குக் கொடுத்துவிட்டனர். அந்த மார்க்சிஸ்ட் கட்சியும், 1967இல் தேர்தலில் பங்குகொள்ள முதன்மை கொடுத்தது. மேற்குவங்கத்தில், வங்காள காங்கிரஸ் உடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியைக் கட்டியது. தேர்தலில் வென்றது. இதுதான், மாசேதுங் கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணி என்றது. கடுப்பாகிவிட்டார் தோழர் சாரு மஜூம்தார். இனி, இவர்களை நம்பியும் பயனில்லை. இன்னமும் புரட்சிக்கான சூழல் உருவாகவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி கூறியதால், புரட்சிகர சூழல் நிலவுவதை நிரூபிக்க தோழர் சாரு மஜூம்தார் எத்தனித்தார்.

- இவை மின்னம்பலம் பகுதியிலிருந்து(தோழர் TSS மணி அவர்களின் கட்டுரையின் சில பகுதி)

சாருவை சாடுவோர் நக்சல்பாரி இருந்துதான் எல்லாம் தொடங்கியதாக பேசுவோர் உண்மையில் நக்சல்பாரியும் அதன் தொடர்ச்சியும் ஒரே இரவில் நடந்து விடவில்லை

அதன் அடிப்படைகள் இந்தியாவின் விவசாய இயக்கத்தின் போர்க்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் இது தெளிவான ஆழமான வேர்களைக் கொண்டிருந்தது. பிரிக்கப்படாத வங்காளத்தின் உழைக்கும் விவசாயிகளின் நிலம் மற்றும் பயிர் உரிமைகளை
மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா இயக்கத்தின் முன்னணி அமைப்பாளர்களுள் ஒருவரான சாரு மஜூம்தார், 1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது அந்தக் காலத்தின் பல கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, வடக்கு வங்காள மாவட்டங்களான டார்ஜிலிங், ஜல்பைகுரியில் நடந்த தெபாகா போராட்டத்திற்கு அவர் திரும்பினார். தெபாகா நாட்களில் இருந்து தொடர்ந்த போர்க்குணமிக்க விவசாயிகள் இயக்கத்துடனான இந்த ஆழமான நீடித்த தொடர்புதான் நக்சல்பாரியில் விவசாயிகளின் எழுச்சியும் அதனை பரந்த விவசாயப் புரட்சியை நோக்கி வழிநடத்த சாரு மஜூம்தாருக்கு வழிகாட்டியக அமைந்தது

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடந்த மாபெரும் விவாதத்தில் ஏதாவது ஒரு தரப்பை ஆதரிப்பது பற்றிய கேள்வி அவருக்கு முக்கியமானதாக இருக்கவில்லை; மாறாக மிக முக்கியமாக, இந்தியாவிற்கான வர்க்கப் போராட்ட அரங்கில் பெரும் புரட்சிகர ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவது பற்றியதாக இருந்தது. அங்கேதான் தத்துவத்தை போதித்து நடைமுறையாக்குவதில் அவருக்கான போதாமை எனலாம்.

நக்சல்பாரியின் விவசாயிகளின் எழுச்சி மாணவர்களிடையே மாபெரும் புரட்சிகர விழிப்புணர்வை ஏற்படுத்தியபோது, சாரு மஜும்தார் மாணவர்களை உடனடியாக கிராமங்களுக்குச் சென்று நிலமற்ற ஏழைகளுடன் ஒன்றிணையும்படி அழைப்பு விடுத்தார். உண்மையில் அவர் தனது இளமைக் காலத்தில் கடந்து வந்த பாதையிலேயே மறுபடியும் பயணித்தார். இளைஞர்கள், இந்தியாவின் உழைப்பாளிகள் மற்றும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான்.

 நக்சல்பாரிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து புதிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்தனர். இந்தப் புதிய கட்சியைத் தொடங்கும் போது, சாரு மஜும்தார் அதன் புரட்சிகர மரபு குறித்து வலியுறுத்தினார். அவர், புதிய கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர நீரோட்டமாகக் கண்டார்; இது கேரளாவின் கையூர் மற்றும் புன்னப்புரா வயலார் எழுச்சிகள், ஆந்திராவின் மாபெரும் தெலுங்கானா இயக்கம் மற்றும் பிரிக்கப்படாத வங்காளத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கருதினார்.
அன்றும் இன்றும் அவர் கண்ட கனவு நனவாகமல் உள்ளது அதற்கு தேவை ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவைதான் இல்லை. அவை இன்று பலபெயர்களில் புரட்சியைவிட நிலவும் அமைப்புமுறையில் தங்களை உயர்த்திக் கொள்ள தாங்கள் வாழ போரிட்டுக் கொண்டுள்ளது ஆனால் அவை சாரூவின் பெயரை தேவைப்படும் பொழுது பயன் படுத்திக் கொள்ள தவறுவதில்லை.

1972 சாரு கொல்லப்பட்டதற்கு பிறகு பல பெயர்களில் கட்சி உருவாகி இன்று

குழுக்களாக குறுங்குழுக்களாக இயங்கும் நிலை அவை தேவைக்கு புரட்சியாளர்களின் பெயர்களை உச்சரிக்கின்றது உண்மையில் அவர்களின் செயலோ ஆளும் வர்க்க சேவையில் ஏதோ ஒருவகையில் தொடர்கிறது.
இதோ அப்பு தொடங்கி அதன் வாரிசுகளாக பேசும் பலர் அவர்களின் தியாகம் அர்பணிப்பை பங்கு போட்டுக் கொள்ள நினைக்கும் அர்ப்ப கூட்டம் அவர்களின் செயல்பாடுகளை விமர்சன பூர்வமாக சரியான வழியில் கொண்டு செல்ல யார் உள்ளனர்?

அடையாள அரசியலில் ஒருபக்கம் சிக்குண்ட குழுக்கள் பெயருக்கு நகசல்பாரி செயலோ ஆளும் வர்க்க சீர்திருத்தவாதிகளை ஆரத்தழுவி வாழும் அவலம்.(இதில் அம்பேத்கர் பெரியாரை தூக்கி பிடிக்கும் குழு கட்சி எல்லாவற்றிக்கும் பொருந்தும்).
நாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் புரட்சிக்கானவர்கள் என்று 50 ஆண்டுகளுக்கு மேல் வாழும் குழுக்களின் சாதனை என்ன? அடுதடுத்த உடைவுதானே? ஏன் இவை அவரகள் சிந்தித்துண்டா?

தனிநபர் துதிபாடல் அல்ல இவை புரட்சிக்கான பணி.
அதற்கு சாரூ போன்ற உண்மையான அர்பணிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.
தியாக தோழர்கள் அப்பு பாலன் போன்ற தியாகிகளை அமைப்புதான் வளர்த்தது அவர்களை தனிநபராக பார்க்காதீர் அவர்கள் சார்ந்த அமைப்பின் செயலை பாருங்கள் என்றார் அண்மையில் சந்தித்த தோழர் ஒருவர். அவரிடம் நான் வைத்த கேள்வி சீராளனை, வேலு-ஜெய தம்பதியினர் தியாகத்தை அவர்களின் உண்மையான பணியை நீங்கள் ஏன் மக்கள் மத்தியில் பேச கூட முடியவில்லை? அவர்கள் தாங்கள் இறுதிவரை உண்மையாக வாழ்ந்து தியாகி ஆனார்கள். இந்த தலைவர்களுக்கு அந்த தோழர்களின் அர்பணிப்பிற்கு பிறகு தங்களின் பெயர் பலகையை தொங்கவிட நினைக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த கூட தயங்கும் அர்பர்களே உங்களின் இன்றைய பெயருக்கு உழைத்தவர்கள் அவர்கள்தான் அவர்களை நினைக்க கூட உங்களுக்கு நா கூசுகிறதோ?

தியாகம் அர்பணிப்பு எல்லோரிடமும் உள்ளவை அல்ல அவை உண்மையான புரட்சியை நேசிப்போர் இடம் மட்டுமே உள்ளவை. 

தியாக தோழர்களை குறைகூற அல்ல! அவர்களின் வாழ்க்கையின் பாடங்களை கற்று ஒரு புரட்சிக்கான தாயரிப்பில் கவனம் கொள்ள!


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்