தோழர்களுக்கு வணக்கம். நாங்களும் புரட்சியாளர் ஒருங்கிணைப்பு குழுவும்(CCR) விவாதித்து (11-07-2025 மற்றும் 12-07-2025) ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.
இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கட்சிகள் மற்றும் புரட்சி பேசும் குழுக்கள் என்னென்ன செயல்பாட்டில் உள்ளது? உழைக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை போக்குவதில் அவர்கள் ஏன் தீர்மானகர சக்தியாக இல்லை? எங்கே உள்ளது இதற்கான அடிப்படை பிரச்சினை என்று தேடும் பொழுது நாங்கள் கண்டடைந்த முடிவு... இவர்கள் மார்க்சிய ஆசான்களின் அடிப்படைகளை ஆம் மார்க்சிய லெனினிய தத்துவத்தை அரசியல் பொருளாதார நிலைமைகளை நம் நாட்டில் பொருத்திபார்த்து முடிவெடுப்பதில் பின்னடைந்துள்ளனர். ஆகையால் எல்லோரும் கற்று தேற தொடர் கல்வி இயக்கத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம். அந்த கல்வியானது மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படைகளை விளக்கி பாட திட்டத்தை முன்வைத்து நேரடி மற்றும் இணைய வழி மற்றும் எழுத்து வடிவில் எல்லோரையும் சோசலிச சிந்தனை உள்ளவர்களாக பொதுவுடமை நோக்கிய பயணத்தில் தெளிவான கண்ணோட்டத்தில் இயங்க மார்க்சியத்தை கசடற கற்று தேற எல்லாவித வழிமுறைகளையும் பின் பற்றி கல்வி இயக்கத்தை நடத்த உறுதி பூண்டுள்ளோம் உங்களின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.
தோழமையுடன்
மார்க்சிய லெனினிய கல்வி கழகம்
No comments:
Post a Comment