தோழர்களுக்கு வணக்கம்
இங்குள்ள கட்சிகள் குழுக்கள் எப்படி உள்ளன?
1) அவர்களின் பணி சில மார்க்சியத்தை மறுப்பவையாகவும் இன்னும் சில மார்க்சியத்தின் சிலவற்றை ஏற்று நடப்பதாகவும் உள்ளது ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பணியையும் செய்யும் கட்சி நம்மிடையே இல்லை என்பது உண்மை.
2). குறுங்குழுக்கள் கட்சியாக இல்லாத பொழுது
கட்சிக்கான பணி செய்ய முடியாது அதேபோல் மார்க்சியத்தை மறுத்து விட்டு மார்க்சியம்
பேசி பயனில்லை தோழர்களே.
3). அரசும் புரட்சியும் நூல் பக்கம் 114 லில் எங்கெல்ஸ் “தன்னையும்
தன் அருமை தோழரையும்” தாங்கள் “கம்யூனிஸ்ட்”
என்றும் “சமூக ஜனநாயகவாதிகளான” புரோதோனியவாதிகளையும் மற்றும் லஸ்ஸாலியர்களும் தங்களை சமூக ஜனநாயாகவாதிகள்
என்பதாய் அழைத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் எங்கெல்ஸ் சர்வதேச
பிரச்சினைகள் குறித்து 1870-80 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய
கட்டுரைகளில் எழுதியுள்ளார். விஞ்ஞான வழியில் “சமூக ஜன நாயகவாதி” என்னும் பதம் தவறானதென்று நிலை
நாட்டுகையில் “கம்யூனிஸ்ட்” எனும்
பதத்தை உபயோகித்ததாகவும் லெனின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏப்ரல் அறிக்கையில் ‘கட்டுரை பிராவ்தா இதழ் எண் 26
ல் ஏப்ரல் நான்காம் தேதி 1917 ல் வெளியானது’. இதில் லெனின் குறிப்பிடுவதில் சில
அ). அரசு அதிகாரம் பாட்டாளி
வர்க்கத்திற்கும் அதனுடன் இணைந்து நிற்கும் விவசாயிகளில் மிகவும் ஏழ்மையான
விவசாயிகளின் கைகளுக்கும் மாற வேண்டும்.
ஆ).நாட்டில்
உள்ள நிலங்கள் தேசியமயமாக்கப்படும்;
உள்ளூர் விவசாய தொழிலாளர் சோவியத்துக்களும், விவசாய பிரதிநிதிகள்
சோவியத்துக்களும் நிலங்களை அளிப்பார்கள்;
ஏழை விவசாயிகளுக்கு தனியாக சோவியத் செயலபடும். பெரும் நிலங்களில்
மாதிரி பண்ணைகள் அமைக்கப்படும்..இப்பண்ணைகள்
விவசாயத் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
இ). எல்லா
வங்கிகளும் இணைக்கப்பட்டு ஒரே தேசிய வங்கி உருவாக்கப்படும்; அவை தொழிலாளர்
சோவியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும்.
5). கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிசத்தை கற்றறிய வேண்டும் அதற்கு
மார்க்சிய ஆசான்களிடமிருந்து கற்று தேற நிறையவே உள்ளன, அவற்றை கற்றுதேறுவதோடு
நடைமுறைபடுத்துவதற்கான நமக்கான அறிவை அவர்களிடமிருந்தே நாம் பெற்றால் மட்டுமே
சிறப்பாக இருக்கும். அவைதான் சரியானவையாகவும் இருக்கும். அவையின்றி இரவல் வாங்கும்
முதலாளித்துவ தத்துவங்கள் உழைக்கும் மக்களை ஏய்க்க மட்டும்தான். நமக்கான தத்துவ மார்க்சியம்
மட்டும்தான் அவைதான் நமக்கான நடைமுறையாகவும் இருக்கும் தோழர்களே.
6). நமக்கான வழிகாட்டும் தத்துவம் மார்க்சிய லெனினியம் மட்டுமே
அதற்கான அடிப்படையில்,
“ஏகாதிபத்தியத்தை அழிக்க கையை ஓங்கியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. யார்
யார் ஜாரியத்தை எதிர்க்க கிளர்ந்து எழுந்தார்களோ, அவர்கள்
எல்லோரும் அதே சமயத்தில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்
கிளர்ந்து எழ வேண்டியவர்களாக ஆயினர். ஏனெனில், ஜாரியத்தை
முறியடிப்பதோடு நின்று கொள்ளாமல் அதை அடியோடு வழித்து எறியவும் யாராவது சங்கற்பம்
செய்து கொண்டிருந்தால், ஜாரியத்தை வீழ்த்தும் போதே அவர்கள்
ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த வேண்டியிருந்தது. இவ்விதம் ஜாரியத்தை எதிர்த்துக்
கிளம்பிய புரட்சி, ஏகாதிபத்தியத்தை வீழ்த்தக்கூடிய
புரட்சியின் எல்லையை எட்டியதோடு மட்டுமின்றி, அந்த எல்லையைத்
தாண்டியும் சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக, ஒரு
தொழிலாளி வர்க்கப் புரட்சியாக பனிணமிக்க வேண்டியிருந்தது”.
(ஸ்டாலின்).
மேலும்
அரசும் புரட்சியும் நூலில் லெனின்,
".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி
முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச்
சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."
அரசு என்னும் பொருள் குறித்து மார்க்சியத்துக்குள்ள மிகச்
சிறப்பான, மிக முக்கியக் கருத்துக்களில் ஒன்று, அதாவது "பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்" (பாரிஸ்
கம்யூனுக்குப்பிற்பாடு மார்க்சும் எங்கெல்சும் இப்படித்தான் இதனை அழைக்கத்
தொடங்கினர்.) என்னும் கருத்து, இங்கு வரையறுத்துக் கூறப்படுவதைக் காண்கிறோம். அதோடு அரசைப்
பற்றிய மிகச் சுவையான ஒரு இலக்கணமும் - மார்க்சியத்தின் "மறக்கப்பட்ட
உரைகளில்" இதுவும் ஒன்றாகிவிட்டது - இங்கு நமக்குத் தரப்படுகிறது: "அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி
வர்க்கம்."அதிகாரப்பூர்வமான சமூக - ஜனநாயகக் கட்சிகளது தற்போதைய பிரச்சார, கிளர்ச்சி வெளியீடுகளில் இந்த இலக்கணம் விளக்கப்படுவதே இல்லை. அது
மட்டுமல்ல, வேண்டுமென்றே இது ஒதுக்கித் தள்ளப்படுகிறது காரணம் என்னவென்றால், இந்த இலக்கணம் சீர்திருத்தவாதத்துக்கச் சிறிதும் இணங்காதது
ஆகும் "ஜனநாயகத்தின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சி" என்பதாய் சகஜமாய்
நிலவும் சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களுக்கும் அற்பவாதக் குட்டிமுதலாளித்துவப்
பிரமைகளுக்கும் இது முற்றிலும் புறம்பானதாகும்.
பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு வேண்டும். - எல்லாச்
சந்தர்ப்பவாதிகளும் சமூக - தேசிய வெறியர்களும் காவுத்ஸ்கிவாதிகளும் இதைத்
திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மார்க்ஸ் இதைத்தான் போதித்தார் என்று நம்மிடம்
வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதோடுகூட கூறப்பட வேண்டியதை அவர்கள் கூற
"மறந்துவிடுகிறார்கள்" முதலாவதாக, மார்க்சின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டியது உலர்ந்து உதிர்ந்து
கொண்டிருக்கும் அரசு மட்டுமேதான், அதாவது உடனடியாகவே உலர்ந்து உதிரத் தொடங்குவதாகவும், உலர்ந்து உதிர்வதாய் அன்றி வேறு விதமாய் இருக்கவொண்ணாததாகவும் அமைந்த ஓர் அரசு மட்டுமேதான்.
இரண்டாவதாக, உழைப்பாளி மக்களுக்கு வேண்டியது ஓர் "அரசு","அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி
வர்க்கம்".
அரசு என்பது பலத்தின் ஒரு தனிவகை ஒழுங்கமைப்பு; ஏதோவொரு வர்க்கத்தை அடக்குவதற்கான பலாத்கார ஒழுங்கமைப்பு.
பாட்டாளி வர்க்கத்தால் அடக்கப்பட வேண்டிய வர்க்கம் எது? சுரண்டும் வர்க்கம்தான், அதாவது முதலாளித்துவ வர்க்கம்தான் என்பதே இக்கேள்விக்கு
உரிய இயற்கையான பதில். சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்குவதற்கு மட்டுமே உழைப்பாளி
மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே சுரண்டுவோருடைய
எதிர்ப்பை அடக்கும் பணிக்குத் தலைமை தாங்க முடியும், அதனால் மட்டுமே இப்பணியைச் செய்து முடிக்க முடியும்.
ஏனென்றால், பாட்டாளி வர்க்கம்தான் முரணின்றி முற்றிலும் புரட்சிகரமான
ஒரே வர்க்கம்; முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அவ்வர்க்கத்தை அறவே அகற்றிவிடுவதில், உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோரையும்
ஒன்றுபடச் செய்யக் கூடிய ஒரே வர்க்கம்.
சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலை நிலைநாட்டிக்
கொள்வதற்காக, அதாவது மிகப்பெருவாரியான மக்களுக்கு விரோதமாய் மிகச்
சொற்பமான சிறுபான்மையினரது சுயநலத்துக்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும்
வர்க்கங்களுக்கு, எல்லாவிதச் சுரண்டலையுமே அறவே ஒழிக்கும் பொருட்டு, அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக வேண்டி, நவீன கால அடிமை உடமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும்
முதலாளிகளுமான மிகச் சொற்ப சிற்பான்மையினருக்கு எதிராய் அரசியல் ஆட்சி
தேவைப்படுகிறது.
குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாய் வர்க்க இசைவு பற்றிய
பகற்கனவுகளில் ஈடுபடும் இந்தப் போலி சோசலிஸ்டுகள், சோசலிச மாற்றத்தையுங்கூட கனவுலகப் பாணியில் சித்தரித்தனர்.
- சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாய்ச் சித்தரிக்காமல், பெரும்பான்மையினர் தமது நோக்கங்களை உணர்ந்துகொண்டு
விடுவதாகவும், சிறுபான்மையினர் சமாதானமாகவே அவர்களுக்கு கீழ்ப்படிந்து
விடுவதாகவும் சித்தரிக்கின்றனர். இந்த குட்டிமுதலாளித்துவக் கற்பனை, வர்க்கங் களுக்கு அப்பாற்பட்டது அரசு என்ற கருத்திலிருந்து
பிரிக்க முடியாதது.
நடைமுறையில் இந்தக் கற்பனை உழைப்பாளி வர்க்கங்களுடைய
நலன்களுக்குத் துரோகமிழைக்கவே செய்தது. உதாரணமாய்,
1848, 1871 ஆம்
ஆண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சிகளின் வரலாறும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல நாடுகளில் முதலாளித்துவ அமைச்சரவை களில்
"சோசலிஸ்டுகள்" பங்கு கொண்டதன் அனுபவமும் இதைத் தெளிவுபடுத்தின.
7). ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் போன்ற பலப்
பிரச்சனைகளும் தற்போதும் தீவிரமடைவதை நாம் பார்க்கிறோம். இந்தச் சூழலில் இந்த
பிரச்சனைகளை லெனினிய முறையில்தான் தீர்க்கமுடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் அரசியல் தலைவர்கள் இந்த லெனினிய
முறைகளை கற்று உள்வாங்கவும் இல்லை, அதன் அடிப்படையில் திட்டமிட்டு தங்களது அரசியல் வழியை
வகுத்துக்கொண்டு செயல்படத் தவறியதால் அழுகி செத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தை
வீழ்த்த முடியவில்லை. இவர்கள் லெனினைப் பின்பற்றுவதற்கு மாறாக சீர்திருத்தவாதத்தை
பின்பற்றுவதால், இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு மரணப்படுக்கையில்
இருக்கும் கிழடுதட்டிப்போன ஏகாதிபத்திற்கு இந்த ஆட்சியாளர்கள் உயிர் கொடுத்துக் கொண்டு
இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கம்யூனிஸ்டுகள் மார்க்சிய லெனினிது வழிகாட்டுதலைப்
பின்பற்றி உழைக்கும் மக்களைத் திரட்டிப் போராடினால் வெற்றி நிச்சயம். தற்போது அது
சாத்தியமில்லை என்றபோதும் வரும்காலத்தில் இளைஞர்கள் லெனினைப் பின்பற்றி ஏகாதிபத்தியங்களை சவக்குழிக்குள்
அனுப்புவார்கள்."
8). ருஷ்யாவில்
1917ம் அண்டு நடந்தேறிய மாபெரும் அக்டோபர்
சோஷலிஸப் புரட்சி மனிதகுல வளர்ச்சியில் புதுயுகக்தைத்
தோற்றுவித்துவிட்டது. முதலாளித்துவ அமைப்பு
அழிவதும் சோஷலிஸமும்
கம்யூனிஸமும் அமைப்பு நிலைபெறுவதும் தவிர்க்க முடியாதவை என்பதை உலக வளர்ச்சியின் அரை நூற்றாண்டு
வரலாறு காட்டிவிட்டது. பொருளாதார, அரசியல், சித்தாந்தத்
துறைகளில் மார்க்சிய லெனினியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே தற்போது தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
உழைக்கும்
மக்களை மா-லெ
சித்தாந்த அறிவுகளை
வகுற்கான போராட்டம் இது அமைய வேண்டும்.
நடக்கும் நிகழ்ச்சிகள் உழைக்கும் மக்களின் இதயங்களையும் வசப்படுத்திப் புரிந்தகொள்ள வேண்டும், சென்ற
காலத்தையும் நிகழ்காலதக்கையும் சரியாகத் தெரிந்தகொள்ள வேண்டும், தற்கால
வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும்
ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களை அதிக ஆழமாக காண்பதற்கு மா-லெ விஞ்ஞானக் கண்ணோட்டம் இன்றியமையாதது. இத்தகைய கண்ணோட்டமாக
விளங்குகிம் மார்க்சிய-லெனினிய தத்துவ கருத்துக்களின் முரணின்றிப் பொருளாகார, சமூக-அரசியல்
பொருந்திய தொகுப்பாக புரிந்துக் கொள்வோம், வருங்கால நோக்கதிற்காக.
கலைப்புவாதம்
குறித்து
அ. மார்க்சியத்தை மறுக்கும், எதிர்க்கும் பிற்போக்கு
கருத்துக்கொண்டவர்கள், மார்க்சிய தத்துவ அரசியலின் மீது
தாக்குதல்கள் தொடுக்கும் காலத்தில் மார்க்சிய கட்சிக்குள்ளேயே கலைப்புவாதம்
ஊடுருவும்.
ஆ. கம்யூனிச அமைப்புகள் எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு
நெருக்கடிகளை சந்திக்கும் போது கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் கலைப்புவாத கருத்துக்களை
கட்சிக்குள் உள்ள குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்கள் கொண்டுவருவார்கள்.
இ. கம்யூனிஸ்டுக் கட்சியானது பின்வாங்கிச் செல்லவேண்டிய சூழலில் கட்சிக்குள்
கலைப்புவாத கருத்துக்களை சிலர் முன்வைப்பார்கள்.
ஈ. தற்போது ரஷ்யா மற்றும் சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிச
ஆட்சி வீழ்த்தப்பட்டு, குருஷேவ், டெங்கும்பல்
போன்ற திருத்தல்வாதிகளால் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகள்
திருத்தல்வாதக் கட்சிகளாக மாறிய சூழலில் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளிடம்
கலைப்புவாதக் கருத்துக்கள் பரப்பட்டு கம்யூனிஸ்டுகளை கலைப்புவாதிகளாக
மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்துவருகிறது.
உ. அனைத்து கம்யூனிஸ்டுக் கட்சிகளும் ஏற்கனவே திருத்தல்வாதக் கட்சிகளாக
மாறிவிட்ட நிலையில் அந்தக் கட்சிகள் தற்போது கலைப்புவாத கருத்தின் செல்வாக்கு
உட்பட்டு கலைப்புவாத கட்சிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றன.
ஊ. பெரிய கம்யூனிஸ்டுக் கட்சிகளே கலைப்புவாதத்தில் வீழ்ந்துகொண்டிருக்கும்
போது சிறிய கம்யூனிச குழுக்களில் கலைப்புவாதம் செல்வாக்கு பெறுவது எளிதாகவே
நடந்துகொண்டிருக்கிறது.
எ. இந்தியாவில் வீரம் செறிந்த தெலுங்கான போராடம் தோல்விக்குப் பிறகு இந்திய
கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் திருத்தல்வாதிகளாக மாறி தேர்தல்பாதையை
தேர்ந்தெடுத்த பிறகு கட்சிக்குள் இருந்த புரட்சியாளர்கள் திருத்தல்வாத தலைமை
எதிர்த்துப் போராடி பிளவுபட்டு சிபிஎம் கட்சியை உருவாக்கினார்கள். அந்த சிபிஎம்
கட்சி தலைமையும் திருத்தல்வாதத்தையே பின்பற்றியதால் அந்தக் கட்சியிலிருந்து
வெளியேறிய புரட்சியாளர்கள் சிபிஐ(எம்.எல்) கட்சியை உருவாக்கினார்கள். அவர்கள்
திருத்தல்வாதத்தை எதிர்த்தும் ஆளும் வர்க்கங்களை எதிர்த்தும் பல புரட்சிகரமான
போராட்டங்களை நடத்தியும் தியாகங்கள் புரிந்தனர். அவ்வாறு தியாகங்கள் புரிந்த
கட்சியின் பாரம்பரியத்தில் வளர்ந்து வந்தவர்கள் அவர்களில் பலர் குட்டிமுதலாளிய
வர்க்கப் பின்னணி கொண்டவர்கள், தற்போது கலைப்புவாதக்
கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கலைப்புவாதிகளாகவே மாறிக்கொண்டும் கலைப்புவாதத்தை
நியாயப் படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஏ. கம்யூனிஸ்டுக் கட்சி பின்னடைவுக்குள்ளானதில் மிகமிக மோசமான பின்னடைவுதான்
சிபிஐ(எம்.எல்) கட்சி பல சிறுசிறு குழுக்களாகப் பிளவுபடுவதாகும். இந்த சிறு
குழுக்கள் மேலும் மேலும் பிளவுபடுவதைப் பயன்படுத்தியே ஏகாதிபத்தியவாதிகள்
அவர்களால் உருவாக்கப்படும் தொண்டுநிறுவன முகவர்களின் மூலம் இந்த சிறிய குழுக்களில்
ஊடுருவி அந்தக் குழுக்களையே கலைப்புவாதக் குழுக்களாக எளிதாகவே மாற்றிக்கொண்டு
இருக்கின்றனர்.
ஐ. சிறிய கம்யூனிச குழுக்களின் தலைவர்களை ஏகாதிபத்திய தொண்டுநிறுவன முகவர்கள்
விலைக்கு வாங்கி குழுக்களின் உறுப்பினர்களை ஏகாதிபத்தியங்களுக்கு ஊறுவிளைவிக்காத
முறையில் அமைப்பை வழிநடத்துகிறார்கள். அதனையும் மீறி அமைப்புக்குள் புரட்சிகரமான
சக்திகள் போராடும் போது, அத்தகைய புரட்சிகரமான சக்திகள் மீது
அவதூறு செய்து அதாவது அவர்களை தொண்டுநிறுவனத்தோடு தொடர்புபடுத்தி பொய்யாக குற்றம்
சாட்டி அவர்களை அமைப்பிலிருந்து வெளியேற்றி தங்களை புரட்சியாளர்கள் போல்
காட்டிக்கொண்டு புரட்சிக்கு துரோகம் செய்பவர்களோடு கூடிக்குலாவுகிறார்கள்.
ஒ. மார்க்சியத்துக்கு துரோகம் செய்யும் கலைப்புவாதத்தைப் புரிந்துகொள்ள
வேண்டும் என்றால் நாம் முதலில் மார்க்சியத்தை புரிந்துகொள்ள வேண்டும். மார்க்சியம்
முதன்மையாக மனிதர்களின் பொருளாதார வாழ்நிலையைப் பற்றி பேசுகிறது. அதனைத் தொடர்ந்து
அரசியலைப் பேசுகிறது, பின்பு விஞ்ஞான சோசலிசத்தைப்
போதிக்கிறது. இவற்றை அலசி ஆராய்வதற்கான கண்ணோட்டமான மார்க்சிய தத்துவத்தை நமக்கு
வழங்கியுள்ளது. இவற்றை படித்து உள்வாங்கிக்கொண்டால் தத்துவம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு
போன்றவற்றில் மார்க்சியத்துக்கு எதிரான கலைப்புவாதக் கருத்துக்களின் தீய
நோக்கங்களைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இங்குள்ள கம்யூனிச அமைப்புகளில் பல
மார்க்சியத்தை கற்றுக்கொடுத்து அதன் அடிப்படையில் கலைப்புவாதத்தின் தீய நோக்கங்களை
அணிகளுக்கு போதிக்காமலேயே கலைப்புவாதத்தை எதிர்ப்பதாக வீரவசனம் பேசிக்கொண்டு
இருக்கிறார்கள். ஏதோ இந்தத் தலைவர்கள் மட்டும் போராடி கலைப்புவாதத்தை
முறியடித்துவிட முடியும் என்பது போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்
மார்க்சியத்தையும் மக்களிடம் பரப்புவதில்லை, கலைப்புவாதத்தையும்
குறிப்பான முறையில் அம்பலப்படுத்துவதில்லை. அதன் காரணமாகவே இங்கே கலைப்புவாதிகள்
செல்வாக்கோடு வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களே செல்வாக்கு
பெற்ற கருத்தாக விளங்குகிறது. மேலும் சிறு குழுக்களிலுள்ள தலைவர்களின் அராஜகத்தை
எதிர்க்க முடியால் அமைப்பிலிருந்து வெளியேறி பலர் கலைப்புவாத அமைப்புகளில் இணைந்து
செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இவர்கள் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு
இவர்களிடத்திலுள்ள பலவீனம் ஒரு காரணம் என்ற போதிலும் சிறு குழுக்களிலுள்ள அராஜகவாத
தலைவர்களும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்களிலுள்ள தலைவர்களிடத்திலுள்ள
குட்டிமுதலாளித்துவ எதேச்சிகாரப் போக்கும் இங்கு கலைப்புவாதம் வளர்வதற்கு காரணமாக
உள்ளது.
9). பொதுவுடமை தத்துவத்தையும் அதன் சார்ந்த கட்சி கொள்கை
கோட்பாட்டுகளையையும் ஆளுகேற்ற வகையில் திருத்தி செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்
என்பேன். உண்மையாலுமே இவர்கள் நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழியில்
பயணிகிறார்களா என்பதனை ரசிய புரட்சிக்கு முன்னர் லெனின் மார்க்சிய விரோத போக்குகளை
அம்பலப்படுத்தி ஒரு சரியான கட்சியை கட்டினார். புரட்சியை சாதித்து உழைக்கும்
மக்களும் இச்சமுகத்தில் நன்றாக வாழமுடியும் என்பதனை நம் கண் முன் காட்டிவிட்டு
சென்றார். அதற்கு பின் தன் நாட்டில் புடசியை சாதிக்க மாவோவும் லெனினிய வழியை பின்
பற்றி தங்கள் நாட்டின் நிலைமைகேற்ப அணிகளுக்கு போத்திது ஒரு சரியான கட்சி
கட்டினார், புரட்சியையும்
சாதித்தார். ஆனால் இங்கு நாம் லெனின் அனுபவத்தையோ மாவோவின் அனுபவத்தையோ
வழிகாட்டுதல்களையோ ஏற்காமல் ஆளுக்கொரு விளக்கம் கொடுத்து ஏமாற்று வித்தை
காட்டுகின்றனர் என்பேன்.
இன்று நடிகர் விஜய் கட்சி தொடங்கிய உடனே அவர்
மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கின்றனர். அவரின் நோக்கம் இந்த ஆட்சியை பிடிக்க
வேண்டும் தானும் சொகுசா வாழனும் அதில் அவர் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும்
அன்றைய சூழல் நிர்ணயிக்கும். உண்மையில் விஜய் யார் அவர் கட்சியின் நோக்கம் என்ன? இதனை கூட நாம் புரிந்துக்
கொள்ளாமலா அவரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்? ஆக நமக்கான
அரசியலை பேச வர்க்க அரசியலை பேச…
10). ஏகாதிபத்தியம் வெறும் காகித புலிகளே என்றார்
மாவோ. அன்று பலமான கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது அவர் நாட்டில். சொன்னதோடு
சாதித்தார்.
இங்கு ஓட்டரசியல் கட்சியையும் வளர்சியையும் அதன்
எதிர் காலம் பற்றி பேசும் நாம் நமக்கான பணியை செய்யவில்லை என்பதனை புரிந்துக்
கொள்ள வேண்டும்.
எலிக்கு பூனைதான் உலகிலே பெரிய விலங்கு என்பார்
நமது ஆசான் லெனின். அதே
இடத்தில் அதன் எதிரி என்ற இடத்திலிருந்து. உண்மையில் உறங்கிக் கொண்டிருக்கும்
மக்கள் சக்தியை ஒன்று திரட்டி அவர்களின் விடுதலைக்கான பணியை செய்யாமல் ஒவ்வொருத்தன்
பின்னாலும் ஓடிக்கொண்டிருந்தால் எங்கே அவர்களின் பலம் புரிய போகிறது
இடதுசாரிகளுக்கு ???
இடதுசாரிகள் இடதுசாரியாக செயல்பட்டால் இந்த அவலங்கள் துடைத்தெறியப்படும் என்று கூறிக் கொள்கிறேன்..
அதாவது, தொழிலாளி
வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய
வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி
வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த
வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்;
பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின்
அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த
வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக்கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும்
இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது. அடிைமைத்தளைகளை உடைத்தெறியவும் பழைய
உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே, தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட்டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு
பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்; முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல்
என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். இவைதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின்
பணி இதை சாதிக்க இங்கு ஏதாவது கட்சி இருக்கிறதா? என்பதே
கேள்வி! அப்படி இருக்கும் பொழுது மார்க்சிய ஆசான்களின் அடியொற்றி நடக்க கட்சி
இல்லை என்பதுதானே உண்மையும்.
இங்குள்ள கட்சிகள் ஆளும் வர்க்கதிற்கு வெண்ணை அடிக்கும் வேலையை செய்கின்றனர்.
உண்மையாலும் ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச்
சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது
இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் இவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என்
கேள்வி!.
இங்குள்ள இருபோக்குகள் ஒன்று பாராளுமன்றம் மூலம் சோசலிசத்தை படைக்க
கிளம்பியவர்கள், இன்று எதிரி
வர்க்கத்துடன் சமரசம் செய்துக் கொண்டு உழைக்கும் வர்க்கதிற்க்கு
துரோகமிழைகின்றனர். இன்னொருபுறம் புரட்சி பேசுவோர் ஆளுக்கொரு அமைப்பை கட்சி என்று
நம்பி உழைக்கும் மக்களை குழப்பிக் கொண்டுள்ளனர்.
ஆக புரட்சிக்கான பாதை நமக்கு நமது ஆசான்கள் மிகத்தெளிவாக கூறியுள்ளனர் அதனை புரிந்துக் கொள்வதும் நடைமுறை படுத்துவதும் உண்மையானப்புரட்சியை நேசிப்போரின் பணியாகும் என்கிறேன் தோழர்களே.
No comments:
Post a Comment